ரஜினியின் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார் என இசையமைப்பாளர் டி .இமான் பெருமையாக பேசியுள்ளார். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தர்பார். இந்தப்படம் வரும் பொங்கல் அன்று வெளியிடப்படுகிறது .இதை தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்ற படம் தயாராகின்றது . ரஜினி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் பாடலும் துவங்கி இருக்கிறது. இப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி .இமான் இசையமைக்கிறார் . முதல் நாள் பாடலுடன் துவங்கிய தலைவர் 168 படப்பிடிப்பு குறித்து […]
Category: சினிமா
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் ‘Production Number 1’ திரைப்படத்தின் பாடல் காட்சிக்கான பிரமாண்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் நடிக்கும் ‘Production Number 1’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகியோர் இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி […]
பாலிவுட் இயக்குநர் லவ் ரஞ்சனின் புதிய படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பியார் கா பஞ்ச்நாமா, லைஃப் சஹி ஹை உள்ளிட்ட படங்களை இயக்கிய லவ் ரஞ்சன் தற்போது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கவிருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லவ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் அங்கூர் கர்க் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் 2021 மார்ச் 26ஆம் […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் அதனைப் பொதுவாக வன்முறை என ரஜினி கருத்து பதிவு செய்ததற்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நடிகர் ரஜினி, ‘ தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது ‘ […]
பாலிவுட் திரையுலகில் தனக்கு பிடித்த மிக ஸ்டைலிஷான இரு நடிகர்கள் பற்றி நடிகை யாமி கௌதம் மனம் திறந்துள்ளார். ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை யாமி கௌதம். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அமிதாப் பச்சன், ரித்திக் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலரது படங்களிலும் நடித்துள்ளார்.யாமி தற்போது ‘கின்னி வெட்ஸ் சன்னி’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் […]
பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்து தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்திட முடியாது என்று அவர் கூறியுள்ளார். வன்முறை செய்தது யார், குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் […]
சீனாவிலும் ” மாமாங்கம்” திரைப்படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நடிகர் மம்முட்டி நடிப்பில்தற்போது வெளியான படம் மாமாங்கம் .வரலாறு பேசும் படமாக உருவான இப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது .சுமார் 45 நாடுகளில் 2000 தியேட்டர்களில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக முன்னேறிவருகிறது . இந்நிலையில் மாமாங்கம் படத்திற்கு மற்றொரு சிறப்பு பெருமை ஒன்று சேர்ந்துள்ளது. ஆம்.. தங்கல்,பாகுபலி,2.0 படங்களை தொடர்ந்து […]
தனுஷின் 40வது படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் 40வது படம் எடுக்கப்பட்டு வருகிறது.இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்து வருகிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துமுடிந்து தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது .படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் சுருளி ,அதனால் இந்த பெயரே படத்தின் தலைப்பு என வதந்திகள் பரவின.ஆனால் இப்படத்தை இயக்கும் நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் அந்த தலைப்பை மறுத்துள்ளது . […]
வழக்கமாக பாலிவுட் பிரபலங்கள் ஆக்கிரமிக்கும் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் இந்த ஆண்டு பட்டியலில் தமிழ் பிரபலங்கள் பலர் இடம்பிடித்துள்ளனர். நியூயார்க்: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் தமிழ்ப் பிரபலங்கள் 10 பேர் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் டாப் பிரபலங்களின் பட்டியல்களைப் பல்வேறு பிரிவுகளில் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர். […]
அனிருத்,தனுஷ்சண்டையை சமாதானம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி: ரஜினி மகளின் கணவர் என்ற முறையில் தனுஷ் அவரது மருமகன். அதேபோல் ரஜினியின் மனைவி லதாவின் தம்பி மகன் அனிருத், அந்த வகையில் அவரும் ரஜினியின் மருமகனே. இந்த இரண்டு மருமகன்களும் இணைந்து 3 படத்தில் ஆரம்பித்து சில படங்களில் தாறுமாறான ஹிட்டுகளை கொடுத்தனர். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் இருவரும் பிரிந்தனர்… இந்த நிலையில் ரஜினி தனது நட்சத்திர பிறந்தநாளை சமீபத்தில் தனது போயஸ் இல்லத்தில் […]
நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். […]
அஜித்- ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இளம் தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் உடன் அஜித் இணைந்திருக்கிறார்.அஜித்தின் 60ஆவது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காவல் துறை […]
வயது முதிர்வின் காரணமாக பழம்பெரும் நடிகர் ஸ்ரீராம் லக்கு காலமானார். 92 வயதான ஸ்ரீராம் லக்கு பூனேவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஸ்ரீராம் லக்கு இந்தி சினிமாவிலும், மராத்தி சினிமாவிலும் புகழ் பெற்ற நடிகராவார். திரையரங்க நாடகங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 20க்கும் மேற்பட்ட மராத்தி நாடகங்களை ஸ்ரீராம் லக்கு இயக்கியுள்ளார். இவர் இறப்புக்கு பிரகாஷ் ஜவடேக்கர், ரிஷி கபூர், மதூர் பந்தர்கர் போன்ற திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘ஏக் […]
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் ஷாலு ஷம்மு நடிக்கிறார். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படம் ஆபாசம், டபுள் மீனிங் நிறைந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்,இந்த படத்தின் இரண்டம் பாகத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது அந்த […]
ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் செம மாஸ் யாரும் மிஸ்பண்ணாதிங்க…!! ஸ்பென்சர், மார்தா, பிரிட்ஜ், பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜியை விளையாடிவிட்டு இனிமேல் இந்த விளையாட்டில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று அதை உடைத்துவிட்டு அவரவர் வழியில் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் தவிக்கும் ஸ்பென்சர், மீண்டும் இந்த ஜுமான்ஜி உலகத்திற்கு போகவேண்டுமென்று உடைந்த வீடியோ கேமை சரி செய்து ஜுமான்ஜி உலகத்திற்கு சென்றுவிடுகிறார். ஸ்பென்சரை தேடி அவனது நண்பர்களும் ஜுமான்ஜி உலகத்திற்குள் போய்விடுகின்றனர். எதிர்பாராமல் ஸ்பென்சரின் தாத்தாவும் […]
காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை திறக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு போன்ற மொழி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் காஜல் அகர்வால்ஆவார் .இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துள்ளார் . இவர் மாற்றான்,துப்பாக்கி, ஜில்லா,விவேகம் போன்ற படங்களிலும், இந்த ஆண்டு2019 -ல் வெளியான கோமாளி, திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பாராட்டைப் பெற்றார் . இப்போது இவருக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் மெழுகால் ஆன சிலை ஒன்றை நிறுவ உள்ளனர்.மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியம் […]
பிரபல கிராமிய இசைப்பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமியின் மகளான மருத்துவர் பல்லவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது , அனால் தற்போது தான் எங்கும் தொலைந்து போகவோ, தன்னை யாரும் கடத்தவோ இல்லையென இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் . பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் […]
பிரபல கிராமிய இசைப்பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவத்தன்று இரவு அவருக்கும் அவருடைய சகோதரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அவர், […]
நடிகர் ரஜினிகாந்த் நிறைமாத கர்ப்பிணியான தனது ரசிகைக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் – ஜெகதீஸ்வரி. இவர்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாவர்.இந்நிலையில் கர்ப்பமாக இருந்த தன் மனைவியிடம், அவரது ஆசையை ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ஜெகதீஸ்வரி ரஜினியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் . இதனால் 4வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்காக நேரம் கேட்க முயன்றுள்ளார் ராகவா விக்னேஷ். இதனை அறிந்து கொண்ட […]
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ‘குயின்’ இணைய தொடருக்கு தடைவிதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘குயின்’ இணைய தொடருக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர் […]
தர்பார் ட்ரைலர் யூடூப்பில் லைக்கா புரோடக்ஷன் வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தர்பார் இசை வெளியீட்டு விழா விழாவில் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. அதிலும் சும்மா கிளி பாடல் வேற லெவல் ஹிட் என்றே கூறலாம். இதனை தொடர்ந்து தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தது. எப்போது படத்தின் ட்ரைலர் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது விருந்தாக இன்றைக்கு லைகா புரோடக்சன் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாக்ஷி அகர்வால் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் சமீபகாலமாக நாயகிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை தமிழ்த் திரையுலகில் அதிகரித்துவருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் பெரும்பாலானவை ஆக்ஷன் படங்களே ஆகும். அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். இதற்காக அவர் சிறப்புச் […]
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்று கிடைக்காத நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்.டபுள் […]
புதிய தோற்றத்தில் மன்மதன் …!!
புதிதாக உருவாக இருக்கும் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்ததில் வைரலாகி வருகிறது. தன்னுடைய சின்ன வயதிலேயே தமிழ் சினிமாவில் தனித்திறமையின் மூலம் புகழைப் பெற்றவர் நடிகர் சிம்பு . அதற்குப் பிறகு சிம்புவின் கோவில், மன்மதன்,வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் மிகவும் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. இந்த ஆண்டில் சுந்தர். சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்தது . இதனைத்தொடர்ந்து […]
மும்பையில் உள்ள ஆங்கில பத்திரிகையான வோக் சார்பில் பாலிவுட் பிரபலங்களுக்கு பேஷன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவர் மனைவி கவுரிகான் தம்பதிகள் சிறந்த தம்பதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில் நடிகர்களில் ஹிருத்திக் ரோசனும், அக்சய் குமாரும் இந்த ஆண்டுக்கான ஸ்டைலிஸ் விருதுகளைப் பெற்றனர். நடிகைகளில் விராட்கோலி மனைவியான அனுஷ்கா சர்மாக்கு ஸ்டைல் ஐகன் விருது வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூருக்கும், நடிகை கத்ரினா […]
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கர் மீண்டும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தளபதி விஜய் – டரைக்டர் சங்கர் கூட்டணியில் கடைசியாக 2012-ல் வெளிவந்த நண்பன் படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனினும் அது நேரடியான தமிழ் படம் கிடையாது. ஹிந்தி மொழியில் அமீர்கான் நடித்து வசூல் அடித்த 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்கி இருந்தனர். இருவரும் இன்னொரு […]
கே.ஜி.எப். படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எப். சாப்டர் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான […]
டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காய கம்மலை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பரிசளித்துள்ளார். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கின்றது. விலை அதிகரித்து கொண்டே செல்வதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து தயார் செய்யும் உணவு வகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கின்றது. சென்னை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை 150ரூபாயை தாண்டியது. மேலும் விளைச்சல் இல்லாததால் வெங்காயம் […]
காஜலுக்கும் , தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 2004-ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளி வந்த கோமாளி படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பாரிஸ் பாரிஸ் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தணிக்கை குழு நடவடிக்கையால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 […]
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, தனக்கு ஹிந்தி படத்தில் நடிக்க விருப்பமில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் அனுஷ்கா ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார். ஏனென்றால் தனக்கு தென்னிந்தியத் திரைப்பட நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருகிறார். அதைபோல் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் சமந்தாவும் தன்னை தேடிவந்த ஹிந்தி திரைப்பட வாய்ப்பை மறுத்துவிட்டார். சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘யு-டர்ன்’ […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியாவிற்கு தனியார் தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் அறிமுகமானவர் லாஸ்லியா .இவர் பிக்பாஸில் இருந்தபோது இவர் மீது காதல் கொள்ளாத இளைஞர்களே கிடையாது .சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இவர்தான் வலம் வந்து கொண்டிருந்தார் .இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் . இவருக்காக ரசிகர்கள் மன்றத்தையும் ஏற்படுத்தினர் . இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் […]
பழம்பெரும் தெலுங்கு நடிகரும், எழுத்தாளருமான கொல்லபுடி மாருதி ராவ் உடல்நலக் -குறைவால் சென்னையில் காலமானார். சுவாதி, முத்தியம், பிரேமா, லீடர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் கொல்லபுடி மாருதி ராவ் (வயது 80). 1939ஆம் ஆண்டு ஆந்திரமாநிலம் விஜயநகரம் என்ற இடத்தில் பிறந்த இவர், தெலுங்கு திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான மாருதி ராவ் ஆந்திர அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் […]
அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக “யாமி கெளதம்” நடிக்கவுள்ளார். எச்.வினோத் இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் வெளியான “சதுரங்க வேட்டை” என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சமீபத்தில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இவர் தற்போது தல_யின் வலிமை படத்தையும் இயக்க இருக்கின்றார். கடந்த மாதம் அக்டோபர் 10-ந் தேதி இப்படத்திற்கான பூஜை நடத்தபட்டது. […]
நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் “கடைசி விவசாயி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் “கடைசி விவசாயி” திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை அளவில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை மணிகண்டன் இயக்கி உள்ளார். இவர் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “கடைசி விவசாயி” படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் . கலை இயக்குனர் தொட்டா […]
ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி நடிகை ஆலியா பட் முதல் இடத்தை பிடித்துள்ளார் . பிரிட்டன் வாரா இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக ஹிந்தி நடிகை ஆலியாபட் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .ஈஸ்டன் ஐ என்ற வார இதழ் ஆன்லைனில் கருத்துக்கணிப்பு நடத்தி அதன் விவரத்தை வெளியிட்டுள்ளது .இதில் ஆலியா பட் முதல் இடத்தையும் ,தீபிகா படுகோன் 2வது இடத்தையும் ,தொலைக்காட்சி நடிகை ஹினா ஹான் 3வது இடத்திலும் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். பி.எஸ்.மித்ரன இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது இயக்கியுள்ள படம் “ஹீரோ”. இவர் இதற்குமுன் 2018-ஆம் ஆண்டில் இரும்புத்திரை என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர்,இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா […]
நடிகர் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பல்வேறு இடங்களிலும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், கோயில்களில் […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ரோகிணி, மகாகவி பாரதியாரின் கவிதைகளை பாடிய சிறுவர்களுக்கு பாரதியார் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோகிணி, பாரதியார் பாடல்கள் டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது. ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தில் தனக்கு உடன்பாடு இல்லை […]
பிரம்மாண்ட திரைப்படமான எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனின் முதற்கட்ட பட பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது . மணிரத்னம் இயக்கத்தில் 800கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப் பட்டு வரும் இந்த படத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த 14முன்னிலை நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்திற்கு தேர்வாகியுள்ளார் .ஆதித்தகரிகாலனாக விக்ரம் ,வந்தியத்தேவனாக கார்த்தி ,அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி ,சுந்தர சோழனாக அமிதா பச்சன் ,நந்தியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளனர் . இதற்கான முதற்கட்ட படப்பிடிப்புதாய்லாந்தில் உள்ள […]
படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு, எப்படி தயாராக வேண்டும், என்பதில் தெளிவாக இருந்ததால் தான் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ படத்தை 12 நாட்களில் முடித்தாக இயக்குநர் நவீன் மணிகண்டன் கூறியுள்ளார். இயக்குநர் நவீன் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விகாஷ், நடிகை மதுமிதா நடித்திருக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’. மேலும் இப்படத்தில் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா உள்ளிட்டோர் […]
பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்க்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று சினிமா துறையில் உச்சம் தொட்ட நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே தலைவா என்று பதிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மருமகன் […]
1950 ஆம் ஆண்டு சிவாஜி ராவாக பிறந்து தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் மக்களைத் தனது கலையை ரசிக்கும் வண்ணம் கட்டி வைத்திருக்கும் தலைவர் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஸ்டைல் மன்னன்…எல்லா வயசு ரசிகர்களின் கண்ணன் கண்ணா பன்னி தான் கூட்டமா வரும் “சிங்கம்” சிங்கிளாத்தான் வரும் என் வழி… தனி… வழி சும்மா கிழி நடிப்பின் எந்திரன்..! பாத்தாலே பச்ச மோகம்..ஆனா ஆக்டிங் அல்டி…! வயசானலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையால அதான் ரஜினி […]
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இயக்குனர் சிவா இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 28 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்புவும் 24 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ் ,சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்,மீனா,குஷ்பூ,இயக்குனர் சிவா,இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இது தொடர்பான […]
ட்விட்டர் இந்தியா #This happened2019 என்ற ஹேஸ்டேகில் 2019ஆம் ஆண்டு ட்விட்டரில் நடந்த சாதனை பட்டியல் வெளியீடு . அதேபோல் விஜயின் பிகில் திரைப்படத்தின்1st லுக் போஸ்டர் தான் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது . Twitter India ✔@TwitterIndia · 8h Replying to @TwitterIndia As always, Tamil entertainment was The most Retweeted Tweet in entertainment was this Tweet from @actorvijay about #Bigil […]
நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கும் 168வது படத்தில் முதல்முறையாக விஜய் பட நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் “தர்பார்”. இத்திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளிவரஇருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். நிவேதா தாமஸ் ,சுனில் ஷெட்டி, நயன்தாரா,யோகிபாபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். மூக்குத்தி அம்மன் என்னும் புதிய திரை படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நயன்தாரா இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுப்பிரமணியசாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இதனை […]
தமிழ், மலையாளம் திரை உலகில் பிரபல நடிகையான நித்யா மேனன்,தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார் . தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது,தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார் இப்படம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாகும். இதற்காக ஜெயலலிதாவை போன்று மாறுவதற்கு பல சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் , தான் எதிர்பாராமல் சினிமாவிற்கு வந்ததாகவும் […]
40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். தாய்லாந்திலிருந்து திரும்பிய நடிகர் சிம்பு, கடந்த 6ந் தேதி சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்தார். 40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். பயணத்தை முடித்து திரும்புவதற்கு 10 நாட்களாகும். கடைசியாக அவர் “வந்தா ராஜாவா தான் வருவான்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் […]
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து , அஜித் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட இரு படங்களுமே வெற்றியடைந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் இணைந்து வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார்கள்.இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது . மேலும் இந்த படத்தில் தல […]