Categories
கன்னியாகுமாரி சினிமா தமிழ் சினிமா

மாவு பாக்கெட்டுக்காக சர்க்கார், 2.O பணியாற்றிய எழுத்தாளர் மீது தாக்குதல்…..!!

மாவு பாக்கெட் தகராறில் சர்க்கார், 2.O பணியாற்றிய எழுத்தாளர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவின் அருகே இருக்கும் பார்திவபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் . திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பல்வேறு முகங்களாக ஜொலிக்கும் இவர் பாபநாசம், நான் கடவுள், சர்க்கார், 2.O உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் படங்களில் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் இவர் நேற்று தனது வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் தோசை மாவு வாங்கி சென்றுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பார்த்த மாவு கெட்டுப்போய் காலாவதியாகிவிட்டது  என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டவர் அணி “அடக்கத்தோடு செயல்படுங்கள்” ராதிகா ஆவேசம் ..!!

அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் பாண்டவர் அணியினருக்கு நடிகை ராதிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு ,  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு _ ள்ளார்கள். அதில் நடிகர் சரத்குமார் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்ட அறிக்கையில் , பாண்டவர் அணியினரை நோக்கி குறிப்பாக நடிகர் விஷாலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மீண்டும் பொய் சொன்னால் உண்மையாகிவிடுமா..? விஷாலுக்கு ராதிகா கேள்வி..!!

முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? என்று நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி எழுப்பி உள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.  வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ்  பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு […]

Categories
அரசியல் சினிமா திருநெல்வேலி மாநில செய்திகள்

ரஜினி ஒருவர்தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா?..சீமான் கேள்வி ..!!

ரஜினிகாந்த் ஒருவர் தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா? என்று நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு நெல்லை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு அனுமதி மறுத்ததை அடுத்து  நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க தேர்தல்….நடிகர்கள் ரமேஷ் கண்ணா , விமல் வேட்புமனு நிராகரிப்பு..!!

ரமேஷ் கண்ணா மற்றும் விமல் தென்னிநிதிய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.  வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ்  பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதிப்பட்டியலில்  பாக்யராஜ் அணியை சேர்ந்த நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் விமல்  ஆகியோரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம் “மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்” வைரமுத்து கண்டனம்..!!

தமிழ் பேசக்கூடாது என்று கூறியதற்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

தல அஜித்தின் “நேர் கொண்ட பார்வை” படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நடிப்பினால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக தல என்று இவர் அழைக்கப்படுகிறார். இவரது படம் மற்றும் ட்ரெய்லர் ஏதாவது ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் படம் குறித்த எதையாவது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது ரசிகர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள “நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள்” அதிமுகவில் இணைந்த ராதாரவி பேட்டி..!!

திமுகவில் என்னை முழுமையாக ஒதுக்கிவிட்டார்கள் என்று எண்ணியதால் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்  கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திமுகவில் இருந்து நீக்கம்” அதிமுகவில் இணைந்த ராதாரவி..!!

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்  கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கிரேஸி மோகன் மறைந்தது பெரும் இழப்பு” நடிகர் சித்தார்த் இரங்கல்..!!

நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்  பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனுக்கு  நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பால் அவதிப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த கிரேஸி மோகனுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில், “கிரேஸி மோகன்  […]

Categories
சினிமா

பிரபல நடிகர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி ..!!

பிரபல நடிகர் க்ரிஷ் கர்னாட் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார் . கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்னட் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார் .81 வயது பூர்த்தி அடைந்த இவர்  திரைப்பட காலங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலன், செல்லமே ,ரட்சகன் உள்ளிட்ட படங்களிலும் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெங்களூரில் உயிரிழந்தார். இவர் ஞானபீட விருது மற்றும் நாட்டின் உயரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராய் லட்சுமி நடிக்கும் அடுத்த படம்….!!!

நடிகை ராய்லட்சுமி தனது அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். நடிகை ராய் லட்சுமி கடைசியாக ஜெய், வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் ஆகியோருடன் தமிழில் நீயா 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றாலும் கூட நடிகை ராய்லட்சுமி சோர்வடையாமல் தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். சிண்ட்ரெல்லா என்னும் இப்படத்தில் நடிகை ராய்லட்சுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

 “அழகிய தீர்வு” இந்தி கட்டாயமல்ல – வரவேற்ற ஏ.ஆர். ரஹ்மான்..!!

இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட புதிய வரைவு கொள்கைக்கு “அழகிய தீர்வு” என்று ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் புதியவரைவு கல்வி கொள்கையின் படி மும்மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும். அதேபோல இந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஏதேனும் மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிரட்டும் தன்ஷிகா..!!

நடிகை தன்ஷிகா “யோகி டா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நடிகை தன்ஷிகா ரஜினிகாந்த் நடித்த `கபாலி’ படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், தன்ஷிகா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தன்ஷிகா நேர்மையாக இருப்பதால் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் கதை. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மனோபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-3’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

`”வல்லவனுக்கும் வல்லவன்” 4 வேடத்தில் அசத்தும் பிரபல நடிகர்..!!

பாபிசிம்ஹா “வல்லவனுக்கும் வல்லவன்”என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜிகணேசன் ‘நவராத்திரி’ என்ற படத்தில் 9 வேடங்களிலும், உலக நாயகன் கமல்ஹாசன் `தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களிலும்  நடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களைப் போலவே  பிரபல நடிகர்கள் 2 , 3 வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பாபிசிம்ஹா,”வல்லவனுக்கும் வல்லவன்” என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருடன்  ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோர்  நடித்துள்ளனர்.  விஜய் தேசிங் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வெற்றி நடைபோடுகிறது ப்ரைம் மினிஸ்டர் மோடி திரைப்படம் “

தீ பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படம் மே 24 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்களது கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகன் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தப் படமானது ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு திரைப் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் NGK திரைப்படத்தின் இமோஜி “ரசிகர்கள் மகிழ்ச்சி !!..

என்.ஜி.கே திரைப்பட வெளியிடை முன்னிட்டு திரைப்படக்குழு இமோஜி ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது . நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன்  நடிகர் சூர்யா rakul-preet-singh சாய் பல்லவி ஆகியோரைக் கொண்டு என் ஜி கே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் வரவிருக்கும் இத்திரைப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள். அதன் ஒரு பகுதியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வெளியானது சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் “உற்ச்சாகத்தில் ரசிகர்கள் !!..

பிரபல நடிகர் பிரபாஸின் சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் பாகுபலி மூலம் மக்களிடையே அதிக பிரபலம் ஆனவர் பிரபாஸ் . இவர் தற்பொழுது பாகுபலியை விட பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வரும் சகோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று  வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் .அதில்,  சகோ படத்திற்கான அபிஷியல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரங்களில்  வெளியிடப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது ”ராங்கி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!

இயக்குனர் சரவணன் இயக்கத்தில், திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள்ளது.  ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இப்படத்தை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் சரவணன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்சன் படத்தை தற்போது இயக்கவுள்ளார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து திரிஷாவின் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக  உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

“ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும்” – கமல் ஹாசன்.!!

ஒரு செருப்பு வந்து விட்டது , இன்னொரு செருப்பு விரைவில் வரும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசினார். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.  இந்த விழாவில் இயக்குனர் சங்கர், கே.பாக்கியராஜ், கே. எஸ் ரவிக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில்  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சியில் களமிறங்கும் நடிகை அடா சர்மா…!!!!

நடிகை அடா சர்மாவின் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில்  டிரெண்ட் ஆகிவருகிறது.  நடிகை அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ”இது நம்ம ஆளு” படத்தில் நடனமாடி திரையில் அறிமுகமான நடிகை அடா சர்மா சமீபத்தில் வெளியான  சார்லி சாப்லின் 2 படத்தில் நடித்துள்ளார். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடும் நடிகை அடா சர்மா தற்போது ”மேன் டூ மேன்” என்னும் படத்தில் நடித்து வருகிறார். நடிகை அடா சர்மா இந்த படத்தில் பெண்ணிலிருந்து ஆணாக மாறும் கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலாக பரவும் ராணாவின் புதிய வேடம் …!!!

பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் படத்தில் நடிக்கும் ராணாவின் வேடம் இணையத்தில் வைரலாக பரவுகிறது . பிரபல இயக்குனர் பிரபு சாலமன் தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் லாடம், கிங், உசிரே, கொக்கி, கண்ணொடுகாண்பதெல்லாம், லீ, மைனா, கயல், கும்கி  போன்ற  படங்களை இயக்கியுள்ளார். இதில் சில படங்களுக்காக விருதுகளும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் பிரபு சாலமன் ஒரே படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற 3 மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த மூன்று படங்களிலும் நடிகர் ராணா கதாநாயகனாகவும், சோயா ஹுசைன்  கதாநாயகியாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவுக்கும் எனக்கும் தகறாரா…. கடிதம் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா…!!!

பொய்யாக பரவிய தகவலுக்கு கடிதம் மூலம் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா.   தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று அழைக்கப்படும் சமந்தா வளர்ந்து வரும் பிரபல நடிகை ஆவார். சமந்தாவுக்கும்  அவரது அம்மாவுக்கும் தகராறு என்று சமீபத்தில் தகவல் பரவியது. இந்த தகவலை பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்க  தனது தாய்க்கு நடிகை சமந்தா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது தாய் செய்யும் வழிபாடுகள் எப்பொழுதும் எனக்கு நம்பிக்க்கையை தரும். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் சில மாயங்கள்  செய்துள்ளன. நான் சிறுமியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பிறந்த நாளன்று வெளியாகும் ”தளபதி 63”_ன் டைட்டில்…!!

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 63_ல் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தளபதி  63. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிதுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக நடிகை அம்ருதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் 60_வது படத்தில் இணையும் இசையமைப்பாளர்..!!

எச். வினோத் இயக்கும் தல அஜித்தின் 60_வது படத்தில்  பிரபல  இசையமைப்பாளர் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த ஜனவரி மாதம் தல அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிகண்ட  படம் விஸ்வாசம். அதிக வசூல் கண்ட இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், இப்படம் வருகின்ற ஆகஸ்ட்-10_ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தல அஜித்தின் 60_வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்” பிரபல பாடகி பாலியல் புகார்….!!

தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவராக வளம் வரும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட பல படங்களில் பாடி புகழ் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனரான ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சினிமாவில் நான் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ராந்த் நடிப்பில் உருவாகும் “பக்ரீத்” படத்தின் புதிய அறிவிப்பு….!!

இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இந்த படைத்த எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இசையை மே 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மற்றோரு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்…!!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றோரு கவர்ச்சி புகைப்படம் வெளிட்ட மாளவிகா மோகனன்.  தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் அறிமுகமாகி வருகின்றனர். இந்த வரிசையில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்த படம் தான் ”பேட்ட”. இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இவர் இந்த படத்தில் நன்றாகவே நடித்துள்ளார். இந்நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் தனது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு உடை அணியாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தில் இணையும் அம்மு அபிராமி….!!

இயக்குனர்  ஜித்து ஜோசப் இயக்கும்  திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து  நடிக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்மு அபிராமி நடிக்கவுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதா நடிக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால் நடிக்கிறார். இந்நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி…!!

சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாக நடிக்கஉள்ளார். 2017-ஆம் ஆண்டு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை அமைத்துக் கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் “லாபம்” படத்தின் புதிய அப்டேட்….!!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் தொடங்கிய நிலையில், மதுரை, குற்றாலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராட்சசன் படம் குறித்த செய்திக்கு அமலா பால் ஆதங்கம்….!!

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் குறித்த செய்திக்கு நடிகை அமலாபால் கோபமாக பதிலளித்திருக்கிறார். ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் படமானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த படத்தில் தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலை போல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது எனறு அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொலைகாரன்” படத்தின் புதிய அப்டேட்…..!!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் கொலைகாரன் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது  விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா? நடிகர் விவேக்_கின் ருசிகர ட்வீட்…!!

தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு ருசிகரமான ட்வீட்_டாக நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். இணையத்தின் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்தே வளர்ச்சியடைகின்றது. அதிலும் குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள்  கலக்கி வருவதில் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் வீ டியோக்கள் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர். இதில் பல்வேறு சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் திருமணம் எப்போது என்று எனக்கு தெரியும் கூல் சுரேஷ் டாக்…!!

ஒரு பட விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், சிம்புவிற்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். சிம்புவின் சகோதரன் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நனைப்பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றும், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் கேள்வி எழுகிறது. இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார். இவர் சிம்புவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்புவின் நண்பரான சுரேஷ் சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவியின் ஆசை நிறைவேறியது….!!!

இயக்குனர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெயம் ரவி தற்போது நடித்து படம் அவரது 25-வது படம் ஆகும். இந்த படம் அவர் கூறுகையில், என்னுடைய 25வது படத்தை லக்‌ஷ்மண் இயக்கி வருகிறார். நான் ரொம்ப நாட்களாக பண்ண வேண்டுமென்று நினைச்ச வி‌ஷயத்தைப் படமாக பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமாகவும், மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமாகவும் இந்த படம் இருக்கும். இந்தப் படத்தில்நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. நானும் அரசியலை பாலோவ் செய்து கொண்டு தான் இருக்கிறேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன் தாயை பாட வைத்து அழகு பார்த்த ராகவா லாரன்ஸ்….!!

தாய் என்று ஒரு அமைப்பை துவங்கியுள்ள ராகவா லாரன்ஸ், அந்த விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்துள்ளார். நடிகர் மற்றும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன்பு தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் ஒன்றை கட்டினார். தற்போது அவர் தாய் என்கிற அமைப்பு ஒன்றை துவங்கியுள்ளார். யாரும் தங்கள் பெற்றோர்களை கை விட்டுவிடக்கூடாது என்பதற்க இந்த அமைப்பை ராகவா லாரன்ஸ் உருவாக்கியிருக்கிறார். இனிமேல் எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரவ் நடிக்கும் படத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிகிஷா படேல்…!!

இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் நிகிஷா படேல் ஆதிக்கம் செலுத்தும் வேடத்தில் நடித்துள்ளார். சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இப்படத்தில் தற்போது ஆரவ்வுடன் இணைந்து நிகிஷா படேலும் நடித்து வருகிறார். இதுகுறித்து நிகிஷா படேல் கூறுகையில், நான் இந்த படத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்துள்ளேன். மேலும் இந்தபடத்தில் நான் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடிந்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ன பையன் நான்…. இதை நான் எதிர் பார்க்கவே இல்லை…!! நடிகர் தனுஷ்…!!

சினிமா உலகில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ இந்த படம் திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. தனுஷின்  திரையுல வாழ்க்கை 17 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

நடிகர் அக்க்ஷய் குமார் ஒடிசாவுக்கு நன்கொடை!!!

ஒடிசாவுக்கு  புயல் பாதிப்பு நிவாரண நிதியாக  நடிகர் அக்க்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை வழங்கினார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்  பானி புயலால் ,  பலத்த சேதம் அடைந்த நிலையில் புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ,முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  1 கோடி ரூபாயை  நன்கொடையாக கொடுத்துள்ளார் .  

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியீடு !!

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியானது. மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனின் புதியபடமான Spider-Man, Far From Home வெளியாகியுள்ளது . ஸ்பைடர் மேனாக நடித்துள்ள டாம் ஹாலந்து லண்டன் வெனிஸ் நகரங்களில் தமது புதிய படத்தின் டிரெய்லர் பற்றிய  ரசிகர்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளார்  . இந்த  படம் ஜூலை 2ம் தேதிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது .

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உடல் நலக் குறைவு !!!

 நடிகர் அமிதாப் பச்சன் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  76 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது துல்லியமான நடிப்பால் ரசிகப்பெருமக்களை கட்டிப்போட்டவர் . அவருக்கு  திடீரென நேற்று உடல்நிலை  பாதித்ததால் ,  அவருடைய  ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.   அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால்  படுக்கையில் இருக்கிறேன். கவலைப்பட  ஒன்றும் இல்லை. இதை அனைவரிடமும் தெரிவியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார் .

Categories
அரசியல் இந்திய சினிமா விமர்சனம்

நடிகர் அக்க்ஷய் குமார் வாக்களிக்காதது ஏன் ????

நடிகர் அக்க்ஷய் குமார், வாக்களிக்காததால்  சர்ச்சை எழுந்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த திங்கள் அன்று  வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது , இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் மனைவி வாக்களித்துவிட்டு சென்றார் . ஆனால் அக்க்ஷய் குமார் வரவில்லை. இது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது .   அக்க்ஷய் குமார், டுவிட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை பற்றி ஏன் தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும்  பரப்பப்படுகின்றன’ என்று கேள்வி எழுப்பினார் . தேசத்தின் மீதான பற்றை  யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம்  இல்லை என்றும் , ‘இந்தியாவை வலிமையாக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜேக் டேனியல்” படத்தில் இணையும் ஆக்சன் கிங் அர்ஜுன்…!!!!

திலீப் நடிப்பில் உருவாகும் மலையாள படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    திரையுலகில் நடித்தால் ஹிரோவாகத்தான் நடிப்பேன் என்று சிலர்  சுற்றித்திரிகின்றனர். ஆனால் அர்ஜுன் அப்படியில்லாமல், தமிழில் இரும்புத்திரை படத்தில் வில்லனாகவும், தெலுங்கில் நா பெரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மலையாளத்தில் திலீப் நடிபில் தயாராகிவரும் ஜேக் டேனியல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அர்ஜுன் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். குடும்பக் கதையாக உருவாகும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மே 9_ம் தேதி திரைக்கு வரும் அதர்வாவின் 100 …!!!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகிய 100 படம் வருகின்ற மே 9 _ம்  தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில்  உருவாகியிருக்கும் படம் 100. இந்த படத்தில் முதல் முறையாக ஹன்சிகாவும் அதர்வாவும் இணைகின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்….!!!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ”கோமாளி”. ஜெயம் ரவியும், காஜல் அகர்வாழும் முதல் முறையாக இணையும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே  நடித்துள்ளார். மேலும் இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘‘இது ஜெயம் ரவிக்கு  24-வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 39 அதிகாரப்பூர்வ தகவல்…!!

சூர்யா 39 படத்தை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. இந்த படம் மே 31ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அக்டோபரில் வெளியிட போவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா 38 படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் குஷ்பு வேண்டுகோள்….!!

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சின்னதம்பி ரீமேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் ஆகிறது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்க வேண்டாம். வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழில் பேசியும், ஆடிப்பாடி சிரித்தும், அழுது புரண்டும் நடித்ததை அனைவரும் வியந்து பார்த்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன்ஷிகா படத்தில் இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்….!!

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து தயாரித்து வரும் ‘யோகிடா’ படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக தேர்வாகியுள்ளார்.  கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில், தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. இந்த  படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து கபீர் துஹான் சிங், மனோபாலா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதை காதல் நிறைந்த ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கும் தீபக் தேவ், மலையாளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைத்து நடிக்கும் புது ஆக்‌ஷன் படம்….!!

புதுமுக இயக்குனர் நார்தன் இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாகயிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிபில், சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்கள். சிம்புவுக்கு இது 45-வது படமாகும். இந்த படத்தை கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணியாற்றிய நார்தன் இயக்குகிறார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படம் குறித்து இயக்குனர் நார்தன் கூறுகையில், ஆக்‌ஷன் கலந்த […]

Categories

Tech |