Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் பிறந்தநாள்… ‘கோப்ரா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..‌!!!

ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளை முன்னிட்டு ‘கோப்ரா’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் . கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விக்ரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா வரதட்சணை கொடுமையால் இறக்கவில்லை – திடீர் திருப்பம்…!!

நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் இறக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதியன்று நட்சத்திர ஓட்டலில் தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரீபெரும்புதுார் ஆர்டிஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிபிராஜின் ‘கபடதாரி’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!!!

நடிகர் சிபிராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘கபடதாரி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ படம் தயாராகியுள்ளது ‌. இந்த படம் கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் நாசர் ,ஜே சதீஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கே ஜி எஃப் 2… 8-ஆம் தேதி வெளியாகும் டீசர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிக்கெட் டு ஃபினாலே… ஐந்தாம் சுற்று… அசத்தலாக விளையாடிய ரியோ… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது . இதில் நடந்த நான்கு டாஸ்க்குகளிலும் போட்டியாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர் . அனைத்து போட்டிகளிலும் ரம்யா அசத்தலாக விளையாடி பட்டியலில் நல்ல இடத்தை பிடித்திருந்தார் . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ஐந்தாம் சுற்று நடைபெறுகிறது . அதில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சுற்றி பேலன்ஸ் செய்ய வேண்டும் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் கண்டிப்பா உதவி செய்வேன்…அட்வான்சை திரும்ப கொடுத்தாச்சு… நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு அவர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வண்ணம் விஷால் உறுதி மேற்கொண்டார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து, “சின்னத்தம்பி” திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் பெரும் சாதனை படைத்த கே.பி.பிலிம்ஸ் பாலு என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷால், சரவணன் இயக்கத்தில், மறைந்த தயாரிப்பாளர் பாலு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் காப்பாத்திட்டாரு” டாஸ்கில் எதுவுமே செய்யாத ரம்யா…. டாப்புக்கு தூக்கி விட்ட மாஸ்டர்…!!

பாடல் பாடும் டாஸ்கில் ரம்யா பாண்டியனை தளபதி விஜய் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டி சற்று கடினமாகவே இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு TICKET TO FINALE என்பதால் மும்முரமாக விளையாடுகிறார்கள். தற்போது வரை நான்கு டாஸ்குகள்  நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் அதில் பலவற்றில் ரம்யா நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி… முதல் முறையாக இணையும் கூட்டணி… வெளியான தகவல்…!!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ,விசாரணை ,அசுரன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்ததாக காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் . எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் ‌. சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பத்து தல’ படத்தில் இணைந்த ‘அசுரன்’ நடிகர்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்…!!!

அசுரன் படத்தில் நடித்திருந்த நடிகர் டீஜே சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இவர் ‌அடுத்ததாக ‌இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க பேராசைக்கு நாங்க இரையா?… விஜய், சிம்புவுக்கு அதிரடி கேள்வி… வைரலாகும் உருக்கமான கடிதம்…!!!

நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவுக்கு அரவிந்து சீனிவாஸ் என்ற மருத்துவர் எழுதிய உருக்கமான கடிதம் முகநூலில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாஸ்க்கில் கேபியை முரட்டுத்தனமாக தள்ளிவிட்ட பாலா… வெளியான அதிரடி அன்சீன் புரோமோ…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரோமோவில் டாஸ்க்கின்போது கேபியை பாலா தள்ளி விடுகிறார் . பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் தகுதிபெற மிகத் தீவிரமாக டாஸ்கில் ஈடுபட்டு வருகின்றனர் . பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒலிபரப்பாகிறது . இதனால்  விஜய் மியூசிக்கில் பிக் பாஸ் அன்சீன் எபிசோடுகளை போட்டு வருகின்றனர். #BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆன்மீகத்தில் ஐக்கியமான அமலா பால்.‌‌.. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை அமலாபால் ‘ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்’ என பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை அமலாபால் தற்போது அதோ அந்த பறவை போல, கடாவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் கன்னடத்தில் ஒரு வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் . மேலும் இவர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஆந்தாலஜி சீரிஸிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் நடிகை அமலாபால் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் டான்ஸ்…. பின்னி எடுத்த தளபதி…. இணையத்தை தெறிக்க விடும் மாஸ்டர் புரோமோ…!!

மாஸ்டர் படத்தின் முதல் புரோமோவானது இணையத்தில் 100 மில்லியன்களை கடந்து தெறிக்க விட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். படத்தின் வெளியீட்டிற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளிக்கும் விதமாக 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழுபடத்தின் போஸ்டர்களையும், அப்டேட்களையும் வெளியிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் குறித்து ஒரே வார்த்தை… நடிகை ராஷ்மிகா மந்தனா என்ன சொன்னார் தெரியுமா?…!!!

நடிகர் விஜய் குறித்து ஒரே வார்த்தையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . நடிகர் விஜய் குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் வேகமாக பரவும் . நடிகர் விஜய் பற்றிய செய்திகள் வெளியாகாத நாளே இல்லை என்றும் சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மழையில் நண்பர்களுடன் ஆட்டம் போடும் ஆர்யா… ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ…!!

நடிகர் ஆர்யா அவரது நண்பர்களுடன் கொட்டும் மழையில் உடற்பயிற்சி செய்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படம் தயாராகியுள்ளது . வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி உருவாகிய இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியிருந்தார் . சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ வாத்தி கம்மிங் ஒத்து‌… தெறிக்கவிடும் புரோமோ… இணையத்தில் செம வைரல்…!!!

விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் புரோமோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . Nanba! 😎 Ready […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனர் பூஜையுடன் தொடங்கிய ‘ருத்ரதாண்டவம்’… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக  ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது . இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்  குவித்தது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#100MViewsForVaathiComing… விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டம்…!!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடல் யூடியூப் தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆற்றுப் பகுதியில் போட்டோ ஷூட் … தடுக்கி விழுந்த நடிகை… வைரலாகும் வீடியோ…!!

ஆற்றுப்பகுதியில் போட்டோ ஷூட் நடத்திய போது நடிகை தடுக்கி விழுந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . மலையாள திரையுலகில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘பாய் ஃபிரெண்ட்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹனி ரோஸ் . இவர் மலையாள பிரபல ஹீரோக்கள் மோகன்லால் ,மம்முட்டி ,சுரேஷ்கோபி ,ஜெயராம், திலீப் உட்பட பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் . இவர் தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கனவே படத்தில் நடித்துள்ளார் . இதையடுத்து சிங்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் போட்டியாளர்களால் நிரம்புமா பிக்பாஸ் வீடு?… வெளியான தகவல்கள்…!!!

இதுவரை வெளியேற்றப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எகிறியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களில் குறைவான வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் இந்த வாரம் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரவீனா ரவி… எதற்காக தெரியுமா?…!!!

நடிகையும் பின்னணி குரல் கொடுப்பவருமான ரவீனா ரவி பொங்கல் தினத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம் . தமிழ் திரையுலகில் படங்களில் நடிக்கும் முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுப்பவர் ரவீனா ரவி . இவர் நயன்தாரா ,சமந்தா ,அமலாபால், எமி ஜாக்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . இதையடுத்து அனைவரின் பாராட்டை பெற்ற ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்திலும் சமீபத்தில் வெளியான ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்தவர் . தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி… இது தற்கொலை முயற்சி… டாக்டர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!

‘தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி’ என டாக்டர் ஒருவர் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க நேற்று தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது . திரையுலகைச் சேர்ந்த பலர் இதை வரவேற்றாலும் அரவிந்த்சாமி, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘டியர் விஜய் சார் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படத்துல எம்ஜிஆர் தூக்கி வச்சுருக்க பையன் யாரு தெரியுமா..? கரெக்டா சொல்லுங்க..!!

எம்ஜிஆரின் பழைய புகைப்படத்தில் உள்ள சிறுவன் தற்போது எவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார் தெரியுமா அதை குறித்து இதில் பார்ப்போம். சினிமாவில் மிகப் பெரிய ஆளுமையாக இருந்து எம்ஜிஆர் 1977 முதல் 1987 வரை 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றினார். அண்ணாதுரை இறந்த மூன்று ஆண்டுகளில் திமுகவை விட்டு பிரிந்தார். எம்ஜிஆர் அதை அடுத்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அது இப்போது அதிமுக என்ற மாபெரும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்யராஜின் ‘சூது கவ்வும் 2’… படத்தில் நடிக்கவுள்ள மாஸ் நடிகர்… வெளியான சூப்பர் தகவல்..!!!

‘சூது கவ்வும் 2’ படத்தில் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூதுகவ்வும்’ . இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது . சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி விஜய்சேதுபதியாக விரும்புகிறேன்… நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்டி…!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘லேடி விஜய் சேதுபதியாக விரும்புகிறேன்’ என கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என் மனசு தங்கம் ,ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் ,விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல், விஜய் ஆண்டனியின் திமிருபிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் தமிழில் ஜெகஜால கில்லாடி தெலுங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரி கேட்டது தப்பு… கேமராவில் புலம்பும் பாலாஜி… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என அனைத்து போட்டியாளர்களும் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். இன்றைய 2-வது புரோமோ வில் ஆரி ,பாலா இருவரும் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ‘நீ ஆம்பள பையன் தானே’ என ஆரி கேட்க பாலாஜிக்கு கோபம் ஏறுகிறது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் -செல்வராகவன் கூட்டணியின் புதிய படம்… வெளியான படப்பிடிப்பு புகைப்படம்…!!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தயாரிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . மேலும்  ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக பதிவு செய்து டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று  தயாராகிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ … ட்ரெய்லர் எப்போ ரிலீஸ் தெரியுமா ?…!!!

நடிகர் சிம்புவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ,நந்திதா ,பாரதிராஜா ,பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் தியேட்டர்களில் வெளியாக இருப்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பு, கடும் மோதல் – சூடு பிடிக்கும் பிக்பாஸ்…!!

பிக்பாஸ் இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருப்பது போன்று புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-4 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஒரு சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். போன வாரத்தில் ஆஜித் வெளியேறியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஒரு போட்டியாளராக இருப்பவர் பாலாஜி. டாஸ்கில் வேற லெவலில் பெர்பார்ம் செய்யும் இவர், இன்றைய புரோமோவில் கேபியுடனும், ஆரியுடனும் சண்டை போட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பண மோசடி வழக்கு”… மீண்டும் கைதான சித்ராவின் கணவர்… பரபரப்பு..!!

சென்னையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் பண மோசடி காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பளம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தொழிலதிபர் ஹேம்நாத் உடன் திருமணம் நடந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சித்ராவின் தற்கொலைக்கு கணவர்தான் காரணம் எனக்கூறி நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து 6 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100% இருக்கைகளுடன் தியேட்டர் – எதிர்க்கும் பிரபலம்…!!

தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதிக்கு நடிகர் அரவிந்த்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் புதுப்படங்கள் அனைத்தும் ஓடிடி வெளியானது. ஆனால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் மட்டும் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என்று படக்குழுவினர் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் மற்றும் சிம்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மையா ?வதந்தியா?… விக்னேஷ் – நயன்தாரா ஜோடிக்கு அடுத்த மாதம் திருமணம்…!!!

காதல் ஜோடிகளாக வலம் வரும் நயன்தாராவும் ,விக்னேஷ் சிவனும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா . தற்போது இவர் அண்ணாத்த, நெற்றிக்கண் ,காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் மலையாளத்திலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார் . இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகின்றனர் . ‘நானும்  ரவுடிதான்’ படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பான டாஸ்க்… பாலாவை வெறுப்பேற்றும் கேபி… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் நேற்றைய எபிசோடில் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் மூன்றாம் சுற்று நடைபெறுகிறது. இதில் டாஸ்க் பஸர் அடித்தவுடன் யார் முதலில் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் மேடையை தொடுக்கிறார்களோ அவர்கள் அந்தப் பாடலுக்கான பல்லவியை பாட வேண்டும். இதில் முதலாவதாக சிவானி பாட்டு பாடி முடிக்கிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தை பாருங்கள் – STR ரசிகர்களுக்கு அன்பு கட்டளை…!!

விஜய்யின் மாஸ்டர் படத்தை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து திரைப்படங்கள் அனைத்துமே ஓடிடியில் வெளியானது. ஆனால் மாஸ்டர் திரைப்படக்குழுவினர் தியேட்டரில்தான் வெளியிடுவோம் என்று பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பொங்கலை முன்னிட்டு 100 சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் சிம்புவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விதார்த்தின் ‘ஆற்றல்’… படத்தில் கார் நடித்துள்ளதா?…!!!

நடிகர் விதார்த் நடித்துள்ள ‘ஆற்றல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கார் நடித்துள்ளது. தமிழ் திரையுலகில் மைனா படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் வித்தார்த் தற்போது ‘ஆற்றல்’ என்ற படத்தில் நடித்துள்ளார் . செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே எல் கண்ணன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரிதாவும் ,வில்லனாக வம்சி கிருஷ்ணாவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சார்லி, வையாபுரி, விக்கி ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் மாஸ்டர் இயக்குனர்… பிரபல தெலுங்கு நடிகருக்கு கதை கூறியுள்ளாரா?…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருக்கு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’  என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படமும் வெற்றி பெற்றது . இந்த இரண்டு வெற்றிக்குப் பின்னர் மூன்றாவதாக தளபதி விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு  கிடைத்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைக்கு வருவதற்கு முன் இவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா..? மாகாபா ஆனந்தின் திரைப்பயணம்..!!

மாகாபா ஆனந்த் திரைக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார என்பதை குறித்து இதில் பார்ப்போம். விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமானவர் மாகாபா ஆனந்த். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. காமெடி கலந்த அவரது பேச்சுக்கு தனி இடம் உண்டு. அவர் இந்தத் துறை வருவதற்கு முன்பு சுவற்றில் போஸ்டர் ஓட்டும் தொழில் எல்லாம் செய்து வந்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. ரேடியோ மிர்ச்சியில் ஒரு ஆர்ஜேஆர் பணியாற்றிவந்த ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்புல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன் ‘..‌. படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள ஐஸ்வர்யாராய்…!!!

இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக நடிகை ஐஸ்வர்யாராய் ஹைதராபாத் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி உட்பட சில மொழிகளில் தயாராகிறது . பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் ,ஜெயராம் ,திரிஷா ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ,லால் உட்பட ஏராளமான நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகின்றனர் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் உயிரிழந்த பிரபல கன்னட நடிகர்… திரையுலகினர் சோகம்…!!!

பிரபல கன்னட நடிகர் மகாதேவப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார் . கன்னட திரையுலகில் பிரபல நடிகர் மகாதேவப்பா சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . இவர் சங்கர் குரு, குரு பிரம்மா, ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணா ,கவிரத்னா காளிதாசா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து நீண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆன்லைனிலேயே உடற்பயிற்சி செய்த சூர்யா… இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்…!!!

நடிகர் சூர்யா அவரது உடற்பயிற்சியாளர்  மூலம் ஆன்லைனில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் . நடிகர் சூர்யா கொரோனா ஊரடங்கிலும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் . அவரை அவரது உடற்பயிற்சியாளர் நிர்மல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி… நடிகர் சிம்பு போட்ட ட்வீட்…!!!

கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு  நடிகர் சிம்பு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் . கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது . வருகிற பொங்கல் தினத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதனால் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்குமாறு நடிகர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிபி சத்யராஜின் ‘ரேஞ்சர்’… படப்பிடிப்பு நிறைவு… வெளியான தகவல்…!!!

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி வந்த ‘ரேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள  திரைப்படம் ‘ரேஞ்சர்’ . ஜாக்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,மதுஷாலினி ,காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர் . மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி என்னும் புலி பல மனிதர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேங்ஸ்டராக கெத்து காட்டும் சாண்டி மாஸ்டர்… ‘ஹெட் புஸ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

கேங்ஸ்டராக சாண்டி நடித்துள்ள கன்னட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து தற்போது படங்களில் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார் . அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கும் ஹாரர் த்ரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் கன்னடத்தில் கேங்ஸ்டர் படம் ஒன்றில் நடித்து வருகிறார் . தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ஹெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… படத்தின் முக்கிய காட்சி…படப்பிடிப்பில் திடீர் மாற்றம்…!!

நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் ‘வலிமை’ படத்தின் முக்கிய காட்சியை படமாக்குவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திரா நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் 20 வருடங்களுக்குப் பின் இணையும் பிரபல நடிகர்… யார் தெரியுமா?…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுடன் பிரபல நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் . இவர் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று ரசிகர்களாலும் , விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது . இதையடுத்து நடிகர் சூர்யா ‘நவரசா’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார் . மேலும் இவர் சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்… இறுதிச்சுற்றில் நுழையப் போவது யார்?… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகிவிட்டது . இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறுவார் . இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. #Day92 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷுடன் கதை பேசும் பிரபுதேவா… இணையத்தில் வெளியான புகைப்படம்…!!!

சுவரில் அமர்ந்து நடிகர் தனுஷுடன் பிரபுதேவா கதை பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ,நடன இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகள் கொண்டவர் பிரபுதேவா . தற்போது இவரும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷும் ஒரு சுவரில் அமர்ந்து கதை பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு… உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா?… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

பிரபல காமெடி நடிகர் சாம்ஸ் தனது மகன் யோஹன் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் நடிகர் சாம்ஸ் . இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவரது மகன் யோஹன் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ‌. அதில் ‘இனிப்பான செய்தி என் மகன் யோஹன் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும், தனியார் திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பயிற்சியையும் முடித்து விட்டு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரி பயமுறுத்துகிறார்… அவர் மேல கோபம் வருது..‌. கேபியிடம் புலம்பும் ரியோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று கடைசி நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது . முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை போட்டியாளர்கள் அனைவரின் முன் தேர்ந்தெடுக்கின்றனர் . அதில் ஆரி மற்றும் பாலா இருவரும் நாமினேஷனில் உறுதியாக சிக்கி உள்ளனர் என்பது தெரிகிறது . மேலும் ரியோ இந்த வார கேப்டனாக இருந்தாலும் அவரையும் நாமினேட் செய்ய போட்டியாளர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆன்மீக பயணம் செய்ய ரஜினி முடிவு… வெளியான புதிய தகவல்…!!!

ஆன்மீக அரசியலுக்கு விடை கொடுத்த ரஜினி ஆன்மீக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories

Tech |