Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது… இன்னும் மூணு வாரம் தான் இருக்கு… கமல் பேசிய அதிரடி புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஆரி ,அனிதா, ஷிவானி ,ஆஜித், கேபி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் யார் வெளியேற போகிறார்? என்பது நாளைய  எபிசோடில் தெரியவரும். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அதிரடியாக பேசிய கமல் ‘நீங்க தப்பு பண்றீங்க அப்படின்னு சுட்டிக்காட்டினா, நான் மட்டுமா தப்பு பண்ணுறேன்னு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் நானியின் ‘டக் ஜெகதீஷ்’… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

நடிகர் நானி நடித்துவரும் ‘டக் ஜெகதீஷ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நானி தமிழ் திரையுலகில் ‘வெப்பம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘நான் ஈ’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படத்திற்கு பின் நானிக்கு ரசிகர் கூட்டங்கள் பெருகிவிட்டனர் . இதையடுத்து 2017 ஆம் ஆண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல நடிகர்… இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நீரில் மூழ்கிய பிரபல மலையாள நடிகர் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . மலையாள திரையுலகில் பிரபல நடிகர் அனில் நெடுமங்காட்  ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் இவர் பாவாட, கம்மாட்டிபாடம் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் கடைசியாக நடித்த படம் ‘பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே ‘. இதையடுத்து இவர் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’… படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள ‘பூமி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும்  ஜெயம் ரவியின் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பூமி’ . இது இவருடைய 25வது படமாகும் . இந்த படத்தை ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ,ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . #BhoomiTeaser is […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சாலையோர ஹோட்டலுக்கு திடீர் விசிட்… ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் சோனு சூட் தனது ரசிகரின் சாலையோரப் ஓட்டலுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் .மேலும் தெலுங்கானா மாநிலத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு … இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்…!!!

நடிகர் சிம்பு சபரிமலைக்கு கிளம்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்புவிற்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் சமூகவலைத்தள பக்கத்தில் தான் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்களையும் , தனது புதிய போட்டோஷூட்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இவர் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது . தற்போது சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறியது அனிதா தான்… வலைத்தளங்களில் கசிந்த தகவல்கள்…!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவர் . அந்த வகையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது . இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற சிவானி, ஆஜீத், அனிதா ,ஆரி ,கேபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன..? திங்களன்று அறிக்கை தாக்கல்..!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக 250 பக்க விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தனியார் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கடந்த 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சித்ராவின் மர்ம மரணம் மர்மமாக இறந்த நிலையில் ஆர்டிஓ திவ்யாஸ்ரீ இன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அவரும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகப்படும் அனைவரிடமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா துறையிலிருந்து விலகப் போகிறாரா?… கணவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கிய காஜல்…!!!

நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  நடிகை காஜல் அகர்வால்  சமீபத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் . தற்போது இவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’, தமிழில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கோஸ்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமான பின்பும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் ‘சக்ரா’… படத்தில் மியூசிக்கல் மேஜிக் செய்த யுவன் சங்கர் ராஜா… வெளியான வீடியோ…!!!

நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தில் யுவன் சங்கர் ராஜா மியூசிக்கல் மேஜிக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா ‘. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இயக்குனர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘விக்ரம் வேதா’… மாதவன் -விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்கப் போவது யார் யார் தெரியுமா?…!!!

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் மாதவன் , விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் விஜய்சேதுபதி திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க குணமடைந்தால் போதும் ரஜினி அங்கிள்… அரசியலுக்கு வந்து கஷ்டப்படாதீங்க… வனிதா போட்ட ட்வீட்…!!!

‘ரஜினிகாந்த் அங்கிள் குணமடைந்தால் போதும் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட தேவையில்லை’ என நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாத்த படக்குழுவில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதே இளமையுடன்… கணவருடன் சேர்த்து போஸ் கொடுத்த மீனா… வைரலாகும் புகைப்படம்..!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றவர் நடிகை மீனா. இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி இடம் உண்டு. தற்போது பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மீனா சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தில் தன்னுடைய மழலை நடிப்பால் அனைவரையும் கவர்ந்து சிறந்த பெயர் பெற்றவர். ஆனால் மீனாவின் கணவர் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்போ வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ள போவிங்க?… ரசிகர் கேட்ட கேள்வி… பதிலளித்த பிக்பாஸ் அர்ச்சனா…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சனாவிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட கடுமையான போட்டியாளர்களில் ஒருவர் அர்ச்சனா . இவர் கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ரசிகர்களின் ஒரு சில கேள்விகளுக்கு அர்ச்சனா பதிலளித்துள்ளார். அதில் நீங்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக எப்போது செல்வீர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக நடித்தது போதும்…! இனிமேல் வில்லனாக… ஆர்யா புதிய அவதாரம் …!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் சசிகுமார்… ‘பகைவனுக்கு அருள்வாய்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா…!!!

நடிகர் சசிகுமார் நடித்துவரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து நடிகர் சசிகுமார் நடித்து வரும் திரைப்படம் ‘பகைவனுக்கு அருள்வாய்’ . இந்த படத்தை திருமணம் என்னும் நிக்கா படத்தை இயக்கிய அனிஷ் இயக்குகிறார் . மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் கேள்விக்கு என்ன பதில்’ டாஸ்க்… பரிசுகளை அள்ளிய போட்டியாளர்கள்… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக போட்டியாளர்கள் ஆடல் ,பாடல் ,கேக், உணவுகள் , பரிசுகள்  என உற்சாகத்தில் இருந்தனர். இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் ஆரி வெற்றி பெறுகிறார். தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு ‘என் கேள்விக்கு என்ன பதில்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 80 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஜூலியின் வித்தியாசமான நிழற்புகைப்படங்கள்… வலைதளங்களில் வைரல் …!!!

பிக்பாஸ் பிரபலம் ஜூலியின் நிழல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என பெயர் வாங்கியவர் ஜூலி . ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தன் பெயரை முழுமையாக கெடுத்துக் கொண்டார் . அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது தனது ஒட்டுமொத்த இமேஜையும் இழந்துவிட்டார். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அவருக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் அதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் வசந்த்தின் ‘மை டியர் லிசா’ … படத்தின் திரில்லான ட்ரெய்லர் ரிலீஸ்…!!!

நடிகர் விஜய் வசந்த் நடித்துள்ள ‘மை டியர் லிசா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் வசந்த் சென்னை-28 படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நாடோடிகள், அச்சமின்றி, வேலைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள த்ரில்லர் திரைப்படம் ‘மை டியர் லிசா’ . இந்த படத்தில் சாந்தினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் ரஞ்சன் கிரிஷ்ணதேவன் இயக்கியுள்ள இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா ‘… வில்லனாகிறாரா தமிழ் ஹீரோ ? … வெளியான தகவல்கள்…!!!

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக பிரபல தமிழ் ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்திற்க்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் ‘பகவான்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆரி… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் ஆரி நடித்துள்ள ‘பகவான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக்பாஸ் வீட்டில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘ரெட்டைச்சுழி’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் . இதன் பின் நடிகை நயன்தாராவின் ‘மாயா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . ஆனால் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்… வெளியான தகவல்கள்…!!!

ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார் . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: ரஜினி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!

நடிகர் ரஜினிகாந்த் திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் பதவி போட்டியில் ஆரி, ரியோ, சோம் … வெற்றி பெற்றது யார் தெரியுமா?… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட பால் கேட்ச் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். நேற்றைய எபிசோடில் தங்க நிற பந்துகளை பிடிக்க போட்டியாளர்கள் போராடினர். பின்னர் தங்க நிற பந்தை பிடித்தவர்கள் போர்டில் வைக்கப்பட்ட சக்திகளைப் பயன்படுத்தி மதிப்பெண்களை மாற்றியமைத்துக் கொண்டனர். இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்று வெளியான முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… படத்தை இயக்கும் தயாரிப்பாளர் … வெளியான தகவல்கள்..!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘ருத்ரன்’ பட தயாரிப்பாளரே அந்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும் , நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகங்களும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை ஹிந்தியில் ‘லட்சுமிபாம்’  என்ற டைட்டிலில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்தார் . பிரபல நடிகர் அக்ஷய்குமார் ,கியாரா அத்வானி ஆகியோர் நடப்பில் தயாரான இந்த திரைப்படம் சமீபத்தில் ஓடிடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… கலகலப்பா வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட பால் கேட்ச் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். நேற்றைய எபிசோடில் தங்க நிற பந்துகளை பிடிக்க போட்டியாளர்கள் போராடினர். பின்னர் தங்க நிற பந்தை பிடித்தவர்கள் போர்டில் வைக்கப்பட்ட சக்திகளைப் பயன்படுத்தி மதிப்பெண்களை மாற்றியமைத்துக் கொண்டனர். இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா ‘… அசத்தலான செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலை வழக்கு…” 250 பக்க அறிக்கை ரெடி”… கம்பி என்ன போவது யார்..?

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக 250 பக்க விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தனியார் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கடந்த 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சித்ராவின் மர்ம மரணம் மர்மமாக இறந்த நிலையில் ஆர்டிஓ திவ்யாஸ்ரீ இன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அவரும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகப்படும் அனைவரிடமும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆலியாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்… அதிரடியாக அறிவித்த ரன்பீர் கபூர்… பாலிவுட்டில் பரபரப்பு…!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது நீண்ட நாள் காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடா பிறந்தநாள்… ‘இடியட்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்…!!!

நடிகை அக்ஷரா கவுடாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘இடியட்’படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அக்ஷரா கவுடா 2011 ஆம் ஆண்டு வெளியான ‘உயர்திரு 420’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ‘ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து துப்பாக்கி, போகன் , இரும்பு குதிரை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். Here it's a spl birthday […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டருக்கு U/A… சான்றிதழ் கிடைச்சாச்சு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

மாஸ்டர் திரைப்படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். பிரிட்டோ தயாரித்து இந்த படத்தின் வெளியீட்டு உரிமை லலித் குமாரிடம் இருக்கின்றது. கொரோனா அச்சுறுத்தலால் திரைக்கு வர இருந்த மாஸ்டர் திரைப்படம் 8 மாதங்கள் தள்ளிப்போன நிலையில் படத்தின் மொத்த பணிகளையும் முடித்து குழுவினர் தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனால் மாஸ்டர் படத்திற்கு என்ன சான்றிதழ் வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். தணிக்கையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு கிடைத்த சான்றிதழ்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹைதராபாத்திலிருந்து ரஜினி எப்போது சென்னை திரும்புவார்?… வெளியான தகவல்கள்…!!!

ஹைதராபாத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு  கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . மேலும் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க வந்தாங்க” சித்ரா ஆவியோடு பேசிய சார்லி…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!

ஆவி நிபுணரிடம் சித்ராவின் ஆவி பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. ஆனால் சித்ரா மிகவும் தைரியமானவர். தற்கொலை செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை  என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் சித்ராவின் மரணத்தில் மர்மம் நீடித்துள்ளது. சித்ராவின் திடீர் மரணத்தில் இருந்து இன்று வரை அவருடைய ரசிகர்கள் மீளாத்துயரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வெளியிட்ட ரகசியம்… ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டிக்கு வாய்ஸ் கொடுத்தவர் இவர் தான்…!!!

விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘பாவக் கதைகள்’ . இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலி, கல்கி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள நரிக்குட்டி என்ற வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு…. புதிய முல்லையால்…. புதிய பிரச்சினை…!!

கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுக்கு தற்போது புதிய பிரச்சினை உருவாகியுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலைவழக்கில் அவருடைய வருங்கால கணவர் ஹேமந்த் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த நாடகத்தில் அவருடைய முல்லை கதாபாத்திரத்திற்கு தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவாக நடித்த காவியா புது முல்லையாக நடித்து வருகிறார். என்னதான் புதிதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ‘குரூப்பிசம்’ பற்றி பேசிய ஆரி… டென்ஷன் ஆகும் ரியோ… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவற்றில் சிறப்பாக மற்றும் மோசமாக செயல்படும் போட்டியாளர்களை தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ஆரி மோசமான போட்டியாளராக  ரியோவை தேர்வு செய்கிறார் . இதன்பின் நடைபெற்ற வாக்குவாதத்தில் ஆரியிடம் ‘குருப்பிஸம்’ என்ற வார்த்தையை ஏன் சொன்னீர்கள் ? என்று ரியோ கேட்கிறார். #Day81 #Promo3 of […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடுத்த அப்டேட் வந்தாச்சு…! இனி மாஸ் தானே…. கொண்டாடும் விஜய் ரசிகர்கள் …!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி என்னும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அப்பாடல் தெலுங்கில் “சிட்டி ஸ்டோரி” என்னும் தலைப்பில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… புதிய பரபரப்பு… ஆர்டிஓ அறிக்கை…!!!

நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ நடத்திய விசாரணையில் 250 பார்க்க விசாரணை அறிக்கை போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சித்ரா. அவர் கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அதனால் சித்ரா மரணம் தொடர்பாக பத்தாம் தேதி முதல் விசாரணை நடத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் ரிலீஸ் தேதி மாற்றம்?… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு திரைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் நடிக்கும் மாஸ்டர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல மலையாள இயக்குனர் ஷாநவாஸ் மரணமடைந்தார்… ரசிகர்கள் இரங்கல்…!!!

பிரபல மலையாள இயக்குனர் ஷாநவாஸ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் இயக்குனர் ஷாநவாஸ் ‘கரி’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்றவர். சமீபத்தில் நடிகர் ஜெய சூர்யாவை வைத்து ‘சூபியும் சுஜாதாவும்’ படத்தை இயக்கியிருந்தார். நடிகை அதிதி ராவ் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டிருந்த இயக்குனர் ஷானவாஸ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிறுத்திவைக்கப்பட்ட ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… விக்னேஷ் சிவனை பார்க்கக் கிளம்பிய நயன்தாரா… வெளியான புகைப்படம்…!!!

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவருக்குமிடையே ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பின்போது காதல் மலர்ந்தது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிகைகள் நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தயாராகிறது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் ஓய்வறைக்கு செல்லப் போவது யார்?… பாலாவை குறிவைத்த அனிதா… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகள் அடிப்படையில் சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் அடிப்படையில் போட்டியாளர்கள் சிறப்பான மற்றும் மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர் . அதில் மோசமாக செயல்பட்ட போட்டியாளராக பாலாவை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புரட்சித்தலைவர் லுக்கில் அசத்தும் அரவிந்த்சாமி… எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு வெளியான ‘தலைவி’ பட புகைப்படங்கள்…!!!

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ‘தலைவி’ பட புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தயாராகியுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘தலைவி’ . இதில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவியின் ‘பூமி’ ஓடிடியில் ரிலீஸ் … வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவிக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பூமி’. ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் டிரைலரால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது . #Bhoomi coming […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் … இணையத்தில் தீயாய் பரவும் மாஸ்டர் பட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் இந்தப்படத்தில் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. #master […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிவைக்கப்பட்ட ‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் … படக்குழு எடுத்த முடிவு…!!!

‘காட்டேரி’ படத்தின் ரிலீசை தற்காலிகமாக தள்ளி வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகியுள்ள காமெடி திரில்லர் திரைப்படம் ‘காட்டேரி’ . இயக்குனர் டீகே இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் ,சோனம் பஜ்வா ,கருணாகரன் ,ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் . இந்தப் படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில்  (டிசம்பர் 25) வெளியிட திட்டமிட்டிருந்தனர் . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாஸ்கின் நான்காம் பகுதி … கோல்டன் பாலை பிடிக்க போராடும் போட்டியாளர்கள்… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ‘பால் கேட்ச்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது . நேற்றைய எபிசோடில் இந்த டாஸ்க்கின் அடிப்படையில் போட்டியாளர்கள் பேசி முடிவெடுத்து தங்களை வரிசைப்படுத்திக் கொள்ளுமாறு பிக்பாஸ் அறிவித்தார் . இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு  சிறப்பு சலுகை வழங்கப்படுவதாகவும்  பிக்பாஸ் அறிவித்திருந்தார் . இதனால் முதல் 3 இடங்களைப் பிடிக்க ரியோ, ஆரி, சோம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இறுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தலாக வெளியான சிம்பு பட டைட்டில் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புதுப்பேட்டை 2” ரெடியாகுது போல..? 8வது முறையாக கூட்டணி… செல்வராகவன் – யுவனின் மாஸ் போட்டோ..!!

தனுஷிற்காக செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் முதல் நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே வரை இசையில் அசாத்தியமான மாயாஜாலங்களை நிகழ்த்திய செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது. எட்டாவது முறையாக இணையும் இந்த கூட்டணியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்க, யுவன் அதற்கு இசை அமைக்கிறார். தமிழ் சினிமாவில் தனுஷ் என்னும் அற்புதமான […]

Categories

Tech |