Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் தெரியுமா ? … கண்டிப்பா வெளியேறப் போவது இவர்தான்… ரசிகர்கள் கமெண்ட்ஸ்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா என்ற போட்டியாளர் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் . இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக ஹவுஸ் மேட்ஸ் சக போட்டியாளர்களை நாமினேட் செய்வதற்கு கூறப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் ஆகும் இந்தி படம்…. திரிஷாவுக்கு கிடைத்த வாய்ப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

பாலிவுட் படத்தில்  2015-ம் ஆண்டு வெளியாகியுள்ள  “பிகு”படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா அவர்கள்  நடிப்பதாக உள்ளார். தென்னிந்திய திரையுலகத்தில்  18 வருடமக  கதா நாயகியாக இருக்கும் திரிஷா தெலுங்கு, மலையாளம் ஆகிய  பிற மொழிகளிலும்  நடித்திருக்கிறார் . தமிழில் தற்பொழுது  கைவசமான  கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் இவரிடம் இருக்கின்றன.  தற்பொழுது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும்  தீபிகா படுகோன் , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி ஒரு படமா…? “முருங்கைகாய் சிப்ஸ்” சாந்தனு, அதுல்யா இணையும் ரெஸிபி….!!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனுவும் அதுல்யாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ,ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் அவர்களுடைய தயாரிப்பில் , இயக்குநரான   ஸ்ரீஜர் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “முருங்கைக்காய் சிப்ஸ்” . இப்படத்தில் ஹீரோவாக   சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க இருக்கின்றனர். கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா போன்றோர்  இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ்ல மட்டுமில்ல…. இந்திலையும் தல கெத்து தான்…. ரசிகர் கூட்டத்தை பார்த்து…. தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு…!!

தமிழ் திரையுலகத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும்  நடிகர் அஜித் அவர்களின்  பழைய படத்திற்கு பாலிவுட்டில் திடீரென  மவுசு கூடியுள்ளது . தமிழ் திரையுலகத்தில்  முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்  கூட்டமே உள்ளது. அஜித் தமிழை தவிர்த்து பிறமொழியில்  நடித்திருக்கிறார் என்றால் அது இந்தியில் மட்டுமே . 2001-ம் ஆண்டு வெளியாகியுள்ள அசோகா ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்த அஜித் சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி அவர்களின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கவுரவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகலாவிய தலைசிறந்த அமைப்பு…. பல திறமைகளை கண்டறிய… இசை புயலுக்கு கிடைத்த வாய்ப்பு….!!

“பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் “அமைப்பில் சினிமாவின்  தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் நியமிக்கபட்டுள்ளனர் . “பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் ” என்பது இந்தியாவில் திரை துறையில் இருப்பவர்களின் அட்டகாசமான திறமைகளை வரவேற்கும் தனித்துவமான அமைப்பாக உள்ளது.  இந்த அமைப்பு சினிமாவில்  இருக்கும் திறமையான நபர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி வருகின்றது . தற்போது இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனிமைப்படுத்திக்கொண்ட சிவகுமார்…. கொரோனா உறுதியா….? வெளியான தகவல்…!!

நடிகர் சிவகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன . சிவகுமார் சென்னை தியாகராஜா நகரில் உள்ள அவருடைய வீட்டில் தன்னை  ஒரு வாரமாக தனிமைபடுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அறிகுறி ஏதும்அவருக்கு  இல்லை எனவும் , முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் உள்ளதாக தெரியஉள்ளது . மேலும் சிவகுமார்  நலமாக உள்ளதாகவும் , அவரின்  உடல்நிலையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரில் மர்டர் கதையில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்… வெளியான தகவல்கள்…!!

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான சாண்டி மாஸ்டர் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நடன இயக்குனராக அறிமுகமாகிய சாண்டி  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் திரில் மர்டர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்கிறார்.   மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டியுடன் கலந்துகொண்ட போட்டியாளர்களான சரவணன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமா அமைப்புக்கு தூதராக நியமிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்… ‘பாப்டா’வுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி..!!

இசையமைப்பாளர் ஏ. ஆர் . ரகுமான் இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சினிமா துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு ஒன்றை பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு  சினிமா , தொலைக்காட்சித் துறையில் திறமையான 5 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்தியா சார்பாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆர்யா 30’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் … ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு… ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் ஆர்யா நடிக்கும் ஆர்யா 30 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் , சர்வம், பாஸ் என்கிற பாஸ்கரன் ,ராஜா ராணி ஆகிய திரைப்படங்கள் ஹிட்டடித்தது . மேலும்  கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் ஆர்யா ‘டெடி’ திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியைக் காண குவிந்த மக்கள் … அதிர்ச்சியில் படக்குழு… பாதுகாப்புடன் தொடரும் படப்பிடிப்பு…!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை காண கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தை இயக்குனர் ஜனநாதன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை  ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு  கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட தகவல் அறிந்த கிராம மக்கள் கூட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பம்…!!

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ஏற்கனவே  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு… பெரும் பரபரப்பு…!!!

திரைப்பட நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் திருவான்மியூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இன்று அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர்கள் அனைவருக்கும் பழக்கம் போல மிரட்டல் விடும் மாரகாணத்தை சேர்ந்த நபரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் அஜித் படங்களுக்கு வரவேற்பு… பழைய படங்களை டப் செய்து வெளியிட முடிவு …!!

நடிகர் அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் ஹிந்தியில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘அசோகா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகை ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டில் ரசிகர்கள் உருவானார்கள் . இதனால் அவரது படங்கள் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா?… வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் தகவல் …!!

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை மற்றும் நடிகருமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள சிவக்குமார் வீட்டில் ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நலமுடன் உள்ளதாகவும், அறிகுறி ஏதும் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது . மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தின் ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்… சிறப்பு தோற்றத்தில் நடிக்க முழு சம்பளம் …!!

ரீமேக் படத்தின்  சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஹிந்தியில் வெளியான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகர் அஜித் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிங்க் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு மனைவி கிடையாது ஆனால் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 65 க்கு இசையமைப்பாளர் இவரா? ‌‌… அப்போ கண்டிப்பா ஹிட் தான்…!!

தளபதி விஜயின் 65வது திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது  ‘மாஸ்டர்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து விஜய்யின் 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஜயின் கத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா … குடும்பத்தினருடன் கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்…!!

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 -வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்நிலையில் நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சம்யுக்தா என்ற போட்டியாளர் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். வெளியே வந்த சம்யுக்தா கமலிடம் உரையாடும்போது இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது வருத்தம்தான். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேன்டா… அன்று விவேக் சொன்ன காமெடி இன்று நிஜமானது…!!

நடிகர் விவேக் நடித்த காமெடி காட்சி ஒன்று இன்று நிஜமாகியுள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். இவர் குறிப்பாக மரம் நடுவதை பல வருடங்களாக செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ் எதுவாக இருந்தாலும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு பகிரும் பழக்கம் அவருக்கு உண்டு. அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் பகிர்ந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ஹீரோயின் இவர்தான்… வெளியான தகவல்…!!

நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஆதிபுருஷ் ‘திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானாவர். இதையடுத்து இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது. மேலும் தமிழ், மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் சுமார் ரூ .500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டேன்… நடிகை ஐஸ்வர்ய லட்சுமி பேட்டி..!!

நடிகை ஐஸ்வர்ய லட்சுமி அளித்த பேட்டியில் தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி அளித்துள்ள பேட்டியில் ஜகமே தந்திரம் படத்திற்கு முன்னதாக இன்னொரு படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாயிடமிருந்து கிடைத்த ‘அன்பு பரிசு’… இன்ப அதிர்ச்சியில் சிம்பு …!!

நடிகர் சிம்புவிற்கு அவரது தாயார் உஷா ராஜேந்திரன் அன்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். தற்போது இவர் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தான்  நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்களை அவ்வப்போது அவரே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி… அட்ராசக்க… வெறித்தனம்…!!!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அவர்கள் வெற்றியின் ரகசியம் இதுதான்’… பிரபல ஹீரோக்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி…!!

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபல நடிகர்களின் வெற்றி ரகசியம் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல  நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பலரால் பாராட்டப்பட்டார். மேலும் சீதக்காதி திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார். விக்ரம் வேதா , பேட்ட ஆகிய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரள வைத்தார். இதையடுத்து தற்போது தளபதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பிகு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை இவர்தான்… வெளியான தகவல்..!!

ஹிந்தியில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிகு’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 18 வருடங்களாக நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் கர்ஜனை, பரமபத விளையாட்டு, 1818, சதுரங்க வேட்டை 2, ராங்கி, சுகர் ஆகிய திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல கன்னட நடிகையின் கார் விபத்து … மோதிய காரிலிருந்த மூவர் பரிதாபமாக பலி…!!

பிரபல கன்னட நடிகைக்கு சொந்தமான கார் மற்றொரு காருடன் மோதி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியாகியுள்ளனர். பல திரைப்படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ கர்நாடக மாநிலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை உமாஸ்ரீக்கு சொந்தமான கார் கர்நாடக மாநிலம் உள்ள உப்பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் இந்த காரில் நடிகை உமாஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனிகாவை தேடி வந்த அதிஷ்டம் … ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு … வெளியான தகவல்..!!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகாவிற்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். மேலும் நானும் ரவுடி தான்,மிருதன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான அனிகாவின் விதவிதமான புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்ட கமல்… அதிரடியாக வந்த இரண்டாவது புரோமோ…!!

பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் சம்யுக்தாவிற்கு கமல் குறும்படம் போட்டுக்காட்டியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மேலும்  நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலாஜி இருவரும் சேஃப் என  கமல் தெரிவித்தார். இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டியுள்ளார். அதாவது ஆரியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ வலம்வரும் வாகை சூடும்… விளக்கமளித்த தயாரிப்பாளர்…!!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடி வாசல்’ திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்த நாளான ஜூலை 23 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மெகா மாஸ் கூட்டணி” மீண்டும் அண்ணனுடன் இணையும் தனுஷ்….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல், ஹிந்தி அதையும் தாண்டி, உலக அளவில் ஹாலிவுட் படம் வரை ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை அவரது அண்ணன் செல்வராகவன் அவர்களுக்கு தான் சேரும். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய திரைப்படங்கள் இன்றளவும் பாராட்டி பேச வைக்க கூடியதாக இருக்கும். செல்வராகவன் அவர்கள் இயக்கிய அனைத்துப் படங்களும் பிரம்மிக்க வைக்க கூடிய வகையில் தான் எடுப்பார். நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷுடன் இணையும் பிரபல இயக்குனர்… டைட்டில் என்ன தெரியுமா? …!!

நடிகர் தனுஷ் பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது  ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இதையடுத்து இவர் பாலிவுட்டில் ‘அத்ரங்கிரே’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள  திரைப்படத்திற்க்கு ‘வால் நட்சத்திரம்’ என தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புள்ளைங்கோ வேர லெவல் … ‘மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாகனும்’ … இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலக பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என தகவல் பரவி வருகிறது. இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று அபாயத்தால் கடந்த மார்ச் 25ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படம் கண்டிப்பா இதுலதான் ரிலீஸ்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ, லலித் குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்டன் லுக்கில் மனதைக் கவரும் மன்மதன்… வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் உடையிலும் எப்போதும் அப்டேட்டாக இருப்பவர். இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் உடல் பருமனான தோற்றத்தில் காட்சியளித்தார். பின் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார். சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. மேலும் படப்பிடிப்புகளையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கன்னிராசி’ படத்திற்கு வந்த சிக்கல்… இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்… காரணம் என்ன தெரியுமா?…!!

நடிகர் விமல் நடிப்பில் நேற்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ் திரையுலக நடிகர் விமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கன்னி ராசி’. இந்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியாக இருந்த இந்த திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வினியோக உரிமைக்காக 17 லட்சத்தை கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்குள் திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்கில் ‘மாஸ்டர்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் படக்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகிய போது, மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினோம். திரையரங்கில் மாஸ்டர் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மதுபான நிறுவனத்திடமிருந்து வந்த வாய்ப்பு… விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை…!!

நடிகை லாவண்யா அதிக சம்பளம் தருவதாக கூறியும் மதுபான  விளம்பரத்தில் நடிக்க  மறுத்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை லாவண்யா பிரம்மன் மற்றும் மாயவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து  இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக அக்கறையுடன் தனது பணிகளை மேற்கொள்கிறார். மேலும் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை லாவண்யாவிற்கு மதுபான நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் விளம்பரத்தில் நடிக்க லாவண்யா மறுத்துள்ளார். அதிக சம்பளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சின்னத்திரை நடிகையின் நிலமை கவலைக்கிடம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல சின்னத்திரை நடிகை கௌசல்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை நடிகை கௌசல்யா தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல தொடர்களில் பாட்டியாக வரும் இவரது கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இவர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நான்கு முன்னணி இயக்குனர்களின் ‘பாவ கதைகள்’…. டீசர் ரிலீஸ்…!!

நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியிருக்கும் ‘பாவ கதைகள்’ ஆந்தாலஜி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன்,வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவ கதைகள்’ . இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 18 அன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. ‘பாவ கதைகள்’ காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குட்டித் தூக்கம் போட்ட கீர்த்தி… செல்பி எடுத்த ஹீரோ… வைரலாகும் புகைப்படம்…!!

நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தூங்கும்போது பிரபல ஹீரோ செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அசத்தியவர். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும்  கீர்த்தி சுரேஷ் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் இயக்குனர் செல்வராகவனுடன் ‘சாணி காயிதம்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் நடிகர் நிதினுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறுபவர் இவரா?… வெளியான தகவல்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சுசித்ரா வெளியேறினார். இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அனிதா, ஆரி, சனம், நிஷா, சோம், பாலாஜி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் மக்களில் குறைவான வாக்குகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற ‘அந்தகாரம்’ படக்குழு… அட்லீ ட்வீட்…!!

‘அந்தகாரம்’ படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசனிடம் ஆசி பெற்றதை இயக்குனர் அட்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் அட்லி ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது அட்லி தயாரிப்பில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான ‘அந்தகாரம்’ திரைப்படம் பலரது பாராட்டை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் இயக்குனர் விக்னராஜனின் முதல் படம். இவரது வித்தியாசமான கதைக்களத்தால் முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘மாஸ்டர்’… ஓடிடி- யில்… ரசிகர்களுக்கு ஷாக்…!!!

மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவதை தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாஸ்டர் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு மாஸ்டர் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை காலமானார்… திரையுலகினர் சோகம்…!!

பிரபல இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சிவா ‘சிறுத்தை’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதையடுத்து நடிகர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இதையடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் இயக்குனர் சிவாவிற்கும் அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்.. நெட்பிளிக்ஸில் வெளியாகும்… தயாரிப்பாளர் அறிவிப்பு..!!

மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்ன தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் லலித் கைப்பற்றியுள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போனதால் பலரும் OTT யில் திரைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளனர். தற்போது தியேட்டர்கள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் படம் எப்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது வெறும் டீசர் தான் நண்பா ‘… மாஸ்டர் அப்டேட்… ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் டிரைலர் குறித்து தயாரிப்பு நிறுவனம் ஹிண்ட் கொடுத்துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நடிக்கத் தகுதி இல்லாத நடிகை’ … விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி …!!

சமூக வலைத்தள பக்கத்தில் ‘நடிக்க தகுதி இல்லாத நடிகை ‘என விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை டாப்ஸி. தமிழ் திரையுலகில் நடிகை டாப்ஸி ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர். தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்ஸி கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து  இவர் துணிச்சலாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும் போதைப்பொருள் விவகாரம், வாரிசு அரசியல் ஆகியவற்றை விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்க்கு எதிர்ப்பு தெரிவித்தார் . இதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நீங்கள் வில்லனாக இருப்பதால் தான் நான் நாயகியாக இருக்கிறேன்’… நடிகை கங்கனா வெளியிட்ட வீடியோ…!!

ஹைதராபாத்தில் நடைபெறும் தலைவி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ திரைப்படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மும்பை பாந்த்ராவின் பாலிஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் பங்களாவின் ஒரு பகுதியை சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்.வி.ஜி.பி திரை அரங்கம் …’என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர்’… மிஷ்கினின் உருக்கமான பதிவு…!!

சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் புகைப்படத்துடன் உருக்கமான பதிவை இயக்குனர் மிஸ்கின் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் சிறுவயதில் என் தந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி திரையரங்கில் ப்ரூஸ்லீ நடித்த ‘என்டர் தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தலான கெட்டப்பில் ராஜ்கிரண்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகர் ராஜ்கிரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ராஜ்கிரண் ‘ராசாவே உன்ன நம்பி’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தடம் பதித்தவர் . இதையடுத்து ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார் . இவரது கம்பீரமான தோற்றத்தால் ரசிகர்கள் மனதில் நீங்கா  இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவர் நீண்ட தாடியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்டிவி தான் டாப்பு… வெளியான டி.ஆர்.பி விவரம் … ரசிகர்கள் உற்சாகம்…!!

தொலைக்காட்சிகளுக்கான கடந்த வார டி.ஆர்.பி விவரங்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பல வருடங்களாக தொலைக்காட்சி வரிசையில் முன்னிலையில் இருப்பது சன் தொலைக்காட்சி . இதையடுத்து சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி , ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகள் வந்தன. தொலைக்காட்சிகளை வரிசைப்படுத்துவது அதன் டி.ஆர்.பி விவரங்களை வைத்து தான். இந்நிலையில் கடந்த வாரம் டி.ஆர்.பி யில் சன் தொலைக்காட்சி முதல் நான்கு இடத்தை பிடித்துள்ளது . மேலும் விஜய் தொலைக்காட்சி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. இதனை சன் […]

Categories

Tech |