நடிகர் சங்கத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு அரிசி வழங்கியுள்ளார் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்கள் வீட்டில் அடை பட்டுள்ளனர். வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். ஆனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது தொடர்ந்து தங்களால் முடிந்த உதவியை பல நடிகர்களும் வழங்கி வருகின்றனர். […]
Category: தமிழ் சினிமா
கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் தற்போது இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பிற்கு ரூ. 3 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுபோலவே நடன கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலார்களுக்கு ரூ.50 லட்சமும், மாற்று திறனாளிக்குரூ. 25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ. 75 லட்சமும் நிதி வழங்கி உதவி புரிந்தார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்களால் முடிந்த நிதி அளிக்கலாம் என மக்களிடையே கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், பெரிய நிறுவனங்கள் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி […]
தொகுப்பாளினி பாவனா ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. கடந்த சில காலமாக தமிழர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை […]
5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதியின் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள். இதனால் அவர் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இப்பொழுது அவருக்கு தெலுங்கு திரையுலகில் […]
மனோரமாவின் மகன் மது கிடைக்காத வேதனையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல மொழிகளில், பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்து தற்போது மறைந்த பழம்பெரும் நடிகையான மனோரமாவின் ஒரே மகன் பூபதி. இவர் இரவு நேரங்களில் மாத்திரை போடுவார். அதில் நேற்று இரவு வழக்கமாக உள்ளதை விட கூடுதலாக ஒரு மாத்திரையை சாப்பிட்டு விட்டார். இதனால் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு உண்டானது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிக்சை […]
மறைந்த நடிகை மனோரமாவின் மகன் திடீரென்று தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான மது பிரியர்கள் விபரீதமான […]
நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, முகத்தைமூட துணியை பயன்படுத்துங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, என அனைத்து மொழி படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் கொரோனா குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். […]
அஜித்துடன் அடுத்த படத்திற்கான கூட்டணி அமைக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்திய அஜித்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து அஜித் யாருடன் அடுத்து கூட்டணி வைக்க உள்ளார் என்பதே அணைவரது எதிர்ப்பார்ப்பும். அஜித்தின் படங்களை தற்போது தயாரித்து வருபவர் போனிகபூர். எனவே அவரது அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க முயற்சித்து வருகிறார். அதே சமயம் விஸ்வாசம் […]
திருமனத்தை பற்றி பேசுவதை விட கொரோனாவை விரட்டி அடிப்பதே முக்கியம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் […]
நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவின் காதலை மறுத்ததாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். இதனால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன் என தெரிவித்துள்ளாராம் . சமீபகாலமாகவே கீர்த்தி ஒருவரை காதலிக்கின்றார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவியது. இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய சித்ரா லக்ஷ்மணன் அந்த நடிகர் […]
நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளதால் அவரது ரசிகர்கள் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியானாலோ அல்லது படம், டிரைலர், டீசர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் போதும் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் இன்று […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதுவரை இந்த வைரசால் 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா […]
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, நடிகர் அஜித்குமார் ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். அதிலும் […]
தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார். லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பு பெற்று கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தையும் இயக்கினார். அப்படமும் நல்ல வசூல் பெற்று வெற்றி படமானது. ஆனால் தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இவர் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு […]
அனைத்து மொழிகளிலும் நடித்த சமீரா ரெட்டி தன்னுடைய குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி கடந்த ஆண்டு 2014ல் தொழிலதிபரான அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சமீரா தன்னுடைய குடும்பத்தை குடும்ப தலைவியாக நின்று கவனித்து வந்தார். இதனால் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த போதிலும் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டுதான் இருந்தார். […]
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாரம்பரிய பழக்கம் எனக்கு கை கொடுக்கிறது என நடிகை ஜெனிபர் கூறினார். வெள்ளித்திரையில் நடித்து முடித்து சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஜெனிபர் கூறுவதாவது, வீட்டிற்குள் வேலை செய்யும் பழக்கம் வழக்கமானது தான். ஆனால் தற்போது குடும்பத்தினரோடு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே இருக்கும் இந்த அனுபவமானது புதிதாகும். இருந்தும் மருந்து என்ற ஒன்று அறியப்படாத நிலையில் பரவும் இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக […]
ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் யோகி பாபு, சுவாரஸ்யமான பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார். வீட்டில் இருப்பது பற்றி நடிகர் யோகி பாபு கூறியது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி இவர்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நான், இப்பொழுது என்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விசுவின் சம்சாரம் அது மின்சாரம், சிவாஜியின் கர்ணன், […]
நடிகை பிந்து மாதவி காதலில் விழுந்ததாகவும், அந்த அனுபவம் பற்றியும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். பிந்து மாதவி ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு சமூக வலைதளத்தில் ஏற்பாடு செய்த்திருந்தார். அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் காதலில் விழுந்த அனுபவம் பற்றி கூறுங்கள் என கேட்டார். அதற்கு அவர் அதை காதல் என்று சொல்வதா என தெரியவில்லை. ஆனால் ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் இருக்கிறது எனவும் அதை யாரிடமும் சொன்னது இல்லை […]
ஊரடங்கு உத்தரவை மீறி தனது ஆண் நண்பருடன் காரை ஓட்டிச் சென்று கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே (Sharmila Mandre) விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான ‘சஜ்னி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷர்மிளா மந்த்ரே. அதைத்தொடர்ந்து இவர் 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்தார். இவர் தமிழிலும் ‘மிரட்டல்’ படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வரவேற்பைப் […]
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். […]
பிரதமர் மோடி விளக்கை ஏற்ற சொல்கிறார், சற்று பயமாக தான் இருக்கிறது” என மேயாத மான் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் வேகமாகப் பரவிவருகின்றது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு (இந்தியா) நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்.3) காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலமாக மக்களுக்கு […]
பெண் காவலர்களுக்கு உதவி செய்யுமாறு பிரபல நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா அச்சத்தால் 144 தடை விதிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். மக்கள் 144 தடை உத்தரவை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா என்பதை பார்வையிடும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இடைவிடாது தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு காவலர்களின் பணி குறித்து […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும், தன்னலமற்ற மனதுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக […]
துப்பறிவாளன் பாகம் 2ல் மிஷ்கின் இல்லாமல் திரைப்படம் எப்படி இருக்கும் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகர் பிரசன்னா பதில் அளித்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்துப்பறிவாளன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விஷால், பிரசன்னா மற்றும் வினய் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயாராகி உள்ளனர். தற்போது திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ரகுமான், கவுதமி ஆகியோர் நடித்த முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் […]
நடிகை இலியானா தனது உறவினர் உயிரிழந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்தவர் இலியானா. அதை தொடர்ந்து ’கேடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யுடன் ’நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இந்நிலையில் இலியானாவின் மாமா சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உங்களின் அதிகமான படங்கள், […]
‘மாஸ்டர்’ படத்திலிருந்து சமீபத்தில் ’வாத்தி கமிங்’ பாடல் வெளியானதை தொடர்ந்து தற்போது ’பொளக்கட்டும் பரபர’ பாடலின் லிரிக் (Lyrics) வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடலான ‘பொளக்கட்டும் பர பர’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் – விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம், ‘மாஸ்டர்’. இப்படத்தின் இசைவெளீயிட்டு விழா கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த மாதம் 14 ஆம் தேதி […]
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் இயக்குநர் கெளரவ் நாரயணன் தன்னுடைய மகனுக்கு தானே முடிவெட்டிய புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ‘தூங்காநகரம்’ படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானவர் கெளரவ் நாரயணன். இதையடுத்து அவர் சிகரம் தொடு, இப்படை வெல்லும் ஆகிய படங்களை இயக்கினார்.தற்போது கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் கெளரவ் நாரயணன் தனது […]
கொரோனா வைரஸ் எதிரொலியாக வீட்டிலிருக்கும் நிதி அகர்வால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்திய நிலையில், தற்போது தனது சமையல் கலையையும் வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட ஏதாவது ஒன்றை செய்து ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் அறிவிக்கும் விதமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் […]
காமெடி நடிகர் யோகி பாபு ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகள் வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக அடுத்த ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ […]
கொரோனா தடுப்பு நவடிக்கைக்காக நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]
சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகிவரும் ‘அருவா’ படத்தில் இளம் கதாநாயகியான பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதையடுத்து அவர் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் யாரையெல்லாம் […]
தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதாவிற்கு, தனது அம்மா நடனம் கற்றுக்கொடுத்ததாக நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். காயத்ரி ரகுராம் நடிகையாக இருந்து பின் நடன இயக்குநராக அவதாரம் எடுத்தவர். இவர் தற்போது இயக்குநர் ஏல்.எல். விஜய் இயக்கிவரும் ‘தலைவி’ படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகின்றது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் […]
நடிகை டாப்சி முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கியுள்ளனர். ஓய்வில்லாமல் எப்போதும் கடிகாரம் போல் தொடர்ந்து சுற்றித் திரிந்த அவர்கள், தற்போது வீட்டில் முடங்கியுள்ளதால் ஏதாவது செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். […]
மூச்சுத்திணறல் காரணமாக மறைந்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான பரவை முனியம்மா. நாட்டுப்புறப் பாடல்கள் பாடிவந்த இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘தூள்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இதுவரை இவர் 25 படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட […]
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்போடு இருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டு தீயைப்போல் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை (21 நாள்) ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டுமக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். அதேபோல திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆனால் சிலர் அத்தியாவசிய தேவையின்றி நமக்கு […]
நடிகர் ஜீவா, கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியது அனைவரையும் கவர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து கொலை நடுங்கச் செய்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
கொரோனா எதிரொலியாக நடிகை மஹிமா படப்பிடிப்பு இல்லமால் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், ஓவியம் வரைந்து தனது நேரத்தை செலவழித்து வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு துறைகள் மூடங்கி கிடக்கிறது. அதேபோல அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த […]
கொரோனா அச்சத்தால் பெற்றோர் கெஞ்சி கேட்டும் வேலையை விட்டு விலகாத 108 ஆம்புலன்ஸ் டிரைவரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகனான பாண்டித்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் […]
கொரோனா வைரஸ் தொற்றால் வேலையிழந்துள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் முடங்கி கிடப்பதால் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. அதிலும், குறிப்பாக அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் […]
கோரோனா வைரஸில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் அறிவுரை வழங்கி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழ் உட்பட அனைத்து மொழி திரைப்படப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு […]
நான் வீட்டில் தனிமைப்படுத்தியதாக வெளியான செய்தி உண்மையில்லை என நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக வசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. வரும் முன் தடுக்கும் நடவடிக்கையாக 2 வாரங்களாக நானே தனிமைப்படுத்தி கொண்டேன். அன்புள்ளம் கொண்ட அனைவருமே அவ்வாறே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் கமலஹாசன் தனிமையில் இருக்க வேண்டுமென அவர் வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஏப்ரல் 6ம் தேதி வரை அவரை […]
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தேடி கண்டறிந்து அவர்களது வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியும் மாநகராட்சி அந்த வீட்டில் […]
நெருங்கிய நண்பரான சேதுராமனின் இழப்பு நடிகர் சந்தானத்திற்கு பெரும் இழப்பாக இருந்த நிலையில் அவரது உடலை தன தோளில் தூக்கி சென்று பார்ப்போரை நிலை குலைய வைத்தது..! ஒருவருக்கொருவர் நண்பனாக இருக்கும் பொழுது உண்மையான நண்பர் என்ன செய்வார், தன்னுடைய நண்பனை எப்படியாவது ஒரு உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவர் வாழ்க்கையில் பல கட்டங்களில் சேதுராமனை தூக்கி விட முயற்சி செய்தார். அப்படி தூக்கிவிட்டு உயரத்திற்கு கொண்டு வந்தவர் நடிகர் சந்தானம். […]
இயக்குனர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைசியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் 36 வயதான சேதுராமன். அதை தொடர்ந்து வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை 4 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் […]
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க என் வீட்டை நான் தருகின்றேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா அறிகுறியுடன் இருந்த 110 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நெருக்கடி […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நடிகர் கமல் ஹாசனின் குடும்பம் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நோய்த்தொற்று இருப்பவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தங்களைதாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்ற நடிகை ஸ்ருதிஹாசன் தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். அதேபோல், அவரது தாயார் சரிகா மும்பையில் […]
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ரூ 83,52,000 நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் குடியேறி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வைரஸ் தமிழகத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை […]
நடிகை மதுமிதா கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 530க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் இருக்க, இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று மக்களிடம் உரையாற்றும் போது வலியுறுத்தியுள்ளார். இதனை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்று திரைத் […]