நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்போம் என்று கூறி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோவெளியிட்டுள்ளார். இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டை விட்டு […]
Category: தமிழ் சினிமா
ஊரடங்கு உத்தரவால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் சாலைகளும் அனாதையாக வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மிக அமைதியாக காணப்படுகிறது. இது குறித்து பல பிரபலங்கள் […]
கொரோனா வைரஸ் பரவி வருவதால் மெத்தனமாக இருக்க வேண்டாம் என திரௌபதி பட இயக்குனர் மோகன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் மக்கள் அரசின் அறிவுரையை கேட்காமல் அலட்சியமாக சிலர் சுற்றி வருகின்றனர். இது குறித்து பல பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]
கொரோனோ தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் டேனியல் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் டேனியல் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனாவின் வீரியம் தெரியாமல் […]
காமெடி நடிகா் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவிய வருகிறது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து பலரது பாராட்டினையும் பெற்றார். சமூக வலைத்தளங்களில் எப்போது பிசியாக இருக்கும் இந்திரஜா அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், அண்மையில் மேக்கப் போட்டு போட்டோ ஷூட் செய்து பதிவிட்ட புகைப்படம் […]
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இது குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கொரோனா வைரஸ் நாம் நெனச்சதை விட, ரொம்ப வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. […]
திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு (74) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1945ஆம் ஆண்டு பிறந்தவர் விசு.. இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்ட இவர் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் முதலில் நடித்தார். பின்னர் மணல்கயிறு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் உழைப்பாளி, மன்னன், அருணாச்சலம் உள்ளிட்ட படங்களிலும் விசு நடித்துள்ளார். விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன. […]
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார். 1945ம் ஆண்டு பிறந்த விசுவுக்கு 74வயதாகிறது . இயக்குனர், கதாசிரியர், நடிகர், வசனகர்த்தா என பல பரிமாணங்களை கொண்டவர். திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். சமீப காலமாக வயது முதிர்வு மற்றும் சிறு நீரக […]
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட லட்சுமி மேனன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் இவர் நடித்தது மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படம் வெற்றி கண்டதை தொடர்ந்து தமிழ் திரை உலகின்பக்கம் இவரது பார்வை திரும்பியது. தமிழில் இவர் நடித்த சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி திரைப்படங்களின் மூலமாக தமிழ்த் திரைப்படவுலகில் பிரபலம் ஆனார். லட்சுமி மேனன் கடைசியாக 2016ஆம் ஆண்டு விஜய் […]
தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் தலைவா படம் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். விவகாரத்திற்கு பின்பு […]
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் தயாரிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின. இவ்வாறு இருக்கையில் இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது என்ற கேள்வி அனைவரிடம் இருந்து வந்தது. அதற்கு பதிலாக தற்போது தகவல் ஒன்று […]
திரௌபதி பட வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கும், ஈசனக்கும் நன்றி என் தெரிவித்துள்ளார். நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரௌபதி திரைப்படம் வெளியான நாள் முதல் 18 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது. அதன்பின் கொரோனோ எதிரொலியால் அந்த படம் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு பின், திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் 18 நாளில் ரூபாய் 14.58 கோடி வசூலாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் […]
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து செய்து காட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் ஷுட்டிங் சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி […]
விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைத்து காவல்துறையினர் தன்னை டார்ச்சர் செய்வதாக நடிகர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியன்2 படப்பிடிப்பின் போது கிறேன் கீழே விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து டைரக்டர் ஷங்கர், நடிகர் கமலஹாசன் மற்றும் புரடக்ஷன் நிறுவன ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நடிகர் கமல்ஹாசனிடம் இரண்டு முறை விசாரணை மேற்கொண்டு […]
இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தின் விசாரணை தொடர்பாக கமல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் […]
தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்த போது, கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானதில் உதவி இயக்குனர் உட்பட 3பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசேடனை அதிகாரியான நாகஜோதி முன்னிலையில் கமல் ஆஜராகி விளக்கமளித்து வந்தார். இந்நிலையில் விசாரணைக்கு […]
கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் 19-ம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைப்பு தென்னிந்திய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக […]
பெப்சி எடுத்துள்ள திடீர் முடிவால் அஜித்தின் வலிமை , ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட […]
JFW வின் திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடிகைகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு விருது வழங்கப்பட்டது, அதில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகாவுக்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சிலம்பம் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் […]
மாஸ்டர் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் இளைய தளபதி விஜய் அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான காரணம் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவின் போதும் நடிகர் விஜய் மக்களுக்கு தேவையான விஷயம் குறித்தும், அரசியல் குறித்தும் பேசுவார். தற்போது அவருக்கு […]
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மெருக்கொண்டு வருகிறது. அதை கண்டு நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் , செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர், அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினார். இந்த வைரஸைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]
நடிகர் அஜித் மகளாக நடித்த அனிகாவின் வைரல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றும், நல்ல வசூலையும் வாரி குவித்தது. இதில் நடிகர் அஜித் , அனுஷ்கா , த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் அஜித்தின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அனிகா. இதுதான் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம். இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் […]
ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா பாலியல் தொழில் செய்யும் நாயகியாக நடித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. மாஞ்சா வேலு ,அரவான் ,பரதேசி ,பேராண்மை ரஜினி நடித்த கபாலி போன்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. இவர் விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான குறும்படம் சீனம் , உலகம் முழுவதும் 36 இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான திரை விழாவில் இடம்பெற்ற இப்படத்தில் தன்ஷிகா முழுக்கமுழுக்க விபச்சார அழகியாக நடித்துள்ளார். 20 […]
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவார் என்று அவருக்கு தெரியாது.நமக்கு மீண்டும் நடிகர் வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக நன்மைக்காக சுவாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒரே தலைமை என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு நான் முதல்வராகலாம் என்று நினைத்து உள்ளதாகவும், அதை அதிகமானோர் தடுப்பதாகவும் , 2021ல் […]
நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , அரசியலிலும் இது பெரும் விவாதத்தை […]
“ஓ மை கடவுளே ” திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் “ஓ மை கடவுளே” என்னும் திரைப்படம் வெளியானது. இத்திரைபடத்தில் ரித்திகா சிங், அசோக் செல்வன், வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை வாணி போஜன், அசோக் செல்வனிடம் செல்போன் நம்பர் பரிமாறிக் கொள்ளுவது போன்று ஒரு போல் காட்சி இடம் […]
வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது , திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். […]
நடிகர் விஜய்க்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் நிலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து […]
பிரபல நடிகர் ராகவா லாரன்சின் தம்பி தெலுங்கு படத்தில் நடிக்கும் துணை நடிகை ஒருவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்தது மட்டுமல்லாமல் கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கூறி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நடிகர் ராகவா லாரன்சின் தம்பியான என்பின் வினோத் தெலுங்கு படத்தில் நடித்து வரும் துணை நடிகை ஒருவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதற்கு அந்த நடிகை மறுக்கவே அவரை பல்வேறு […]
மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள இன் டு தி வைல்ட் நிகழிச்சியின் ப்ரோமோ விடியோவை பீயர் கிரில்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பியர் கிரில்ஸ் உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக காட்டுக்குள் மேற்கொண்ட சாகச பயணம் தொடர்பான இன் டு தி வைல்ட் நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 23ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.தமிழக மக்கள் இந்த நிகழ்ச்சியை காண பெரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதற்கான புரோமோ வீடியோ […]
நடிகர் அஜித் குறித்து எழுந்த தகவல்கள் பொய் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடிகர் அஜித் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கடிதம் போலியானது என்று நடிகர் அஜித் தரப்பில் இருந்து மறுப்பு அறிக்கை வந்துள்ளது. மேலும் இந்த கடிதத்தை வெளியிட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை […]
வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற ரேஸ் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் உடன் இணைந்த அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி திரைப்படமாக தயாராகும் வலிமையில் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் அஜித்குமார். இத்திரைப்படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிரடி சண்டை படமாக […]
திரைப்படத்தை முழுதாக பார்த்த பின்னரே இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இசைஞானி இளையராஜா உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் சாமி. அக்காக் குருவி என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மாஹின் என்ற சிறுவனும் டாவியா என்ற சிறுமியும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவுத் தொழிற்சாலை இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரெக்கார்டிங் வேலைகள் போய்க் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் […]
துல்கர் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் சமீபத்தில் துல்கர் மற்றும் ரித்து வர்மா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இத்திரைப்படத்தில் துல்கருக்கு நண்பராக ரக்ஷன் நடித்துள்ளார். காவல் அதிகாரியாக கௌதம் மேனன் நடித்துள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் திரைப்படக் குழுவினர் நேற்று கமலா திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் கலந்துரையாடி திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் […]
விஜயின் ‘வெறித்தனம்’ பாடலை பார்த்து ரசித்து விட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அமெரிக்க பெண். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தும் […]
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு. முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது டாப் ஹீரோவுடன் நடித்து அசத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. முன்னணி நடிகர்களான ரஜினி , அஜித் , விக்ரம் , சூர்யா , தனுஷ் , விஜய் சேதுபதி , சிவகார்த்திகேயன் ஆகியோர் ஹீரோவாக நடித்த படத்திலும் தனக்கான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா துறையில் தனக்கென ஒரு […]
தமிழ்திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரை வைத்துள்ளனர் நடிகை ராதிகா. நடிகர் சரத்குமாரின் மனைவியான இவருக்கு இன்றுவரை மார்க்கெட்டை திரைத்துறை மார்க்கெட் இருந்து வருகின்றது. அதற்க்கு காரணம் தமிழகத்தில் தற்போது வெளியாகும் சீரியலில் ராதிகா தொடர்ந்து நடித்து வருவதுதான். இந்த காலகட்டத்தில் சினிமாவில் நடித்து பெயர் பெற்றதைவிட இவருக்கு நாடகங்களில் நடித்ததன் மூலமாக பெயர் பெற்று தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி எங்கும் இவர் பெயர் சென்று புகழ் உச்சிக்கு சென்றுள்ளார். இவர் நடித்த சீரியல்களால் டிஆர்பி ரேட் அதிகமாக […]
கௌதம் மேனன் இயக்கிய திரைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் எழுதியுள்ளார் கௌதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் ஜோஷ்வா இமைபோல் காக்க. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஹே லவ் ஜோஸ்வா என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது. கௌதம்மேனன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் உணர்வுகளை கட்டி இழுக்கும் விதமாகவே அமையும். அதுபோன்று பேச்சுவழக்கு மாறாத வரிகளை வைத்து காதலை கூறும் இந்தப் பாடலை எழுதியவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
அரண்மனை 2 பாகங்களை கொடுத்து மிரட்டிய சுந்தர் சி தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தை தயார் செய்து வருகிறார் சுந்தர் சி இயக்கிய அரண்மனை திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆனது குஜராத்தில் இருக்கும் வான்கெனர் பேலஸ் எனும் பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் […]
ஆதித்யா வர்மா திரைப்படத்தில் அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது அடுத்த திரைப்படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இந்நிலையில் துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதைத் […]
நாங்களும் நல்லவங்கதான் படத்தில் நடத்து வருபவர் நடிகர் விஜய் ஹரீஸ். இவர் சென்னை கல்லூரி மனைவியை காதலித்து ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நடிகர் விஜய் ஹரீஸ்ஷை மகளிர்போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருவா திரைப்படத்தில் சூர்யா அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த வருடம் என் ஜி கே மற்றும் காப்பான் திரைப்படத்தில் நடித்த சூர்யா அவர்கள் தற்போது ஹரியுடன் இணைந்து படம் நடிக்க உள்ளார். திரைப்படத்திற்கு அருவா என பெயரிட்டுள்ளனர். ஆறு, வேல், சிங்கம் 3 பாகங்கள் போன்ற படங்களிலும் ஹரியும் சூர்யாவும் இணைந்து அதிரடி திரைப்படங்களை கொடுத்தமையால் அருவா திரைப்படமும் அதிரடியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இத்திரைப்படத்தில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக […]
சூர்ப்பனகை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்து கார்த்திக் ராஜு இயக்கும் திரைப்படம் சூர்பனகை. இத்திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ளது. தமிழில் ராவணனின் தங்கையின் பெயரான சூர்ப்பனகை எனவும் தெலுங்கில் NENENAA என்ற […]
நடிகை ரகுல் பிரீத் சிங், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான் என்று தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இப்போது ரகுலுக்கு பட வாய்ப்புகள்மிகவும் குறைந்து விட்டன. ஆம், இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத்தி சிங் உருக்கமாக கூறியதாவது: “நான் தொடர்ந்து படங்களில் மிகவும் […]
சூரரைப்போற்று திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கும் தகவலை கேட்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் மே மாதமே வெளிவரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படமும் மோத வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகிய […]
“எஸ்.ஜே சூர்யாவையும், தன்னையும் பற்றி வெளியான வதந்தி உண்மை கிடையாது என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானதால் அவருக்கென ரசிகர்கள் கூட்டமே உருவானது. அதை தொடர்ந்து இவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் நல்ல வரவேற்பை […]
நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சுமார் 129 நாட்கள் இடைவெளி ஏதுமின்றி நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த பயணமானது என் மனதை விட்டு நீங்காது […]
ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தற்போது ரஜினியின் படமான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் பாலிவுட் […]
3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி படப்பிடிப்பில் நடந்ததை கூறினேன் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் […]
சக்ரா திரைப் படத்தின் சண்டைக்காட்சி புகைப்படங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத். விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத். அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். எம் எஸ் ஆனந்தன் இயக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது […]