சமூக வலைதளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம் மீது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து கோயில்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் இந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு […]
Category: தமிழ் சினிமா
பிரேமம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான பின்பு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். இந்த ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே திரைப்படத்தைத் தொடர்ந்து எந்தப் படத்திலும் சாய் பல்லவியை காணவில்லை. இந்நிலையில் சாய் பல்லவி செய்த ஒரு காரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரத்தில் சாய் பல்லவி நடிப்பதற்கு மறுத்ததே பாராட்டுக்குக் காரணம். அந்நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் […]
தமிழில் ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பிகில்’ திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்த ரெபா மோனிகா ஜான், கன்னடத் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார். ‘பிகில்’ திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார் ரெபா மோனிகா ஜான். இவர் சென்ற ஆண்டு நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘ஜருகண்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ‘பிகில்’ படத்தில் நடித்தபின்புதான், தமிழில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் ஹரீஷ் கல்யாணுடன் ‘தனுசு ராசி நேயர்களே’, […]
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகர் ரியோ ராஜ், வீட்டில் அவரது மனைவி ஸ்ருதிக்கு வளைகாப்பு நிகழ்வு சிறப்பாக நடந்தது. இதில் முக்கிய நடிகர் ஒருவர் வளைகாப்புக்கு விருந்தினராக வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நடிகரும் முன்னணி ஆங்கருமான ரியோ ராஜ், தமிழ் சினிமாவில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே, தனது நெடுநாள் காதலியான ஸ்ருதியை […]
அப்பா கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் புதிய செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய செல்போன் கடையை திறந்து வைத்து, 1+ செல்போனின் புதிய மாடலை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி ஹாசன், கோவை […]
ஆதித்யா வர்மா திரைப்படம் குறித்து அப்படத்தின் கதாநாயகி பனிடா கருத்து தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியான இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தை ரீமேக் ஆக கொண்டு எடுக்கப்பட்டதாகும். ரீமிக்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாது என்று பலரும் கூறி வந்த நிலையில் இது அசாத்திய வெற்றி பெற்று பெரும் வரவேற்கத்தக்க விமர்சனங்களை பெற்று […]
இம்சை அரசன் 23.ம் புலிகேசி என்ற நகைச்சுவை காவியம் படைத்த இயக்குநர் சிம்புதேவன் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காலத்தால் அழியாத நகைச்சுவை சாம்ராஜ்ஜியத்தை தனது முதல் படைப்பின் மூலம் கட்டியெழுப்பியவர் இயக்குநர் சிம்புதேவன். மதுரையைச் சேர்ந்த வெங்கட்ராமன்-திரவியம் வெங்கட்ராமன் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் செந்தில்குமார் என்ற சிம்புதேவன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற சிம்புதேவன், திரையுலகின் மீது கொண்ட அளப்பறிய காதலால் கோடம்பாக்கம் நோக்கி கவர்ந்திழுக்கப்பட்டார். இயக்குநர் சேரனிடம் […]
அசுரன்’, ‘கைதி’ திரைப்படங்களின் வெற்றி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்தார். இயக்குநர் பா. ரஞ்சித், ‘காலா’ படத்தின் மூலம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து பழங்குடியின போராளி பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தையும், வட சென்னையில் நடக்கும் கிக்பாக்ஸிங் பற்றிய கதையை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளராக ‘பரியேரும் பெருமாள்’ படத்தை தயாரித்து […]
இயக்குநர் மோகன் ராஜா, விஜய் சேதுபதியின் புதிய படத்தில், நடிகராகக் களமிரங்கப்போகிறார். ‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மாகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தனி ஒருவன்’ போன்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா இறுதியாக ‘வேலைகாரன்’ திரைப்படத்தை 2017ஆம் ஆண்டு இயக்கினார். இயக்குநராக மட்டுமில்லாமல், 2014ஆம் ஆண்டு வெளியான ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்னும் திகில் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா […]
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துவந்த ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் சசிகுமார், மிருணாளினி ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் பாடகர் அந்தோனிதாசன் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]
யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மண்டேலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் ஓபன் விண்டோ புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஜுலையில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் மண்டேலாவில் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
தமிழில் மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, ரோமியோ ஜுலியட், குலேபகாவலி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில், மஹா, பார்ட்னர் உள்ளிட்ட ஐந்து படங்கள் வெளிவர இருக்கின்றன. ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ… காற்று வீசும் உன் வாசம்! சிவந்த கண்ணழகி வென்பணி மலரா […]
நடிகர் சதீஸ் தனது திருமண அழைப்பிதழை தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு வழங்கினார். காமெடி நடிகர் சதீஷ் ‘தமிழ் படம்’ மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர், கத்தி, ரெமோ, ஆம்பள, தமிழ் படம் 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டும் அல்லாமல், கிரேஸி மோகனுடன் எட்டு வருடங்களாக திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார். சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், நீண்ட நாட்களாக மணப்பெண் தேடியும் கிடைக்காமல் […]
‘தம்பி’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் உலா வருகிறது. ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படமான ‘தம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரை சூர்யா வெளியிட்டிருந்தார். அதே போல் படத்தின் டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் ‘பேரலல் மைண்ட்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், […]
‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வுப் பணிகளில் இயக்குநர் ஹெச். வினோத் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனிடையே அஜித்தின் மனைவி ஷாலினி நேற்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பர்த் […]
50ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு ‘கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நவ.20ல் தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை 9 நாட்கள் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் […]
தெலுங்கு சினிமா எனக்கு ஒரு வீடு போலத்தான் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்துவரும் ஸ்ருதிஹாசன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அமெரிக்கன் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதன் மூலம் ஹாலிவுட்டிலும் காலெடுத்து வைத்துள்ளார். தற்போது இவர் ‘ஃப்ரோசன் 2’ படத்தில் ‘எல்சா’ என்னும் கதாபாத்திரத்திற்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகை, ட்ப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இவர் வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமா […]
நடிகர் விவேக் தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடம் குறித்து, தனது பாணியில் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். நடிகர் விவேக் நேற்று தனது 58-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சிக்கு நடிகர் விவேக் தலைமை தாங்கினார். அப்போது தனது பிறந்த நாளை பள்ளி மாணவ-மாணவிகளின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறகு அதிக மழை தரக்கூடிய சோலை மரக்கன்றுகளை நட்டார். பின் மாணவ மாணவியரிடம் உரையாடிய பின், […]
பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் தங்களது பெயர் என்ன என இளைஞர் ஒருவர் கேட்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தை கலக்கி வருகிறது. பாலிவுட் நடிகை சன்னி லியோன் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது ட்விட்டர் பக்கத்தை மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இவர் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் தனக்கென தனி இடம் […]
நடத்துநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று தனது கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு ரஜினியைத் தாக்கியுள்ளது. திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்யும் கமல்ஹாசனுக்கு ‘உங்களில் நான்’ என்ற பாராட்டு விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி, “எடப்பாடி பழனிசாமியின் அரசு நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. தடைகளைத் தாண்டி ஆட்சி நீடித்துக்கொண்டிருக்கிறது. […]
முறை மாப்பிள்ளையாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம் பதித்து வெற்றிநடைபோடும் பாக்ஸர் நாயகனுக்கு இன்று 42ஆவது பிறந்தநாள்…! விடா முயற்சியால் போராடி வெள்ளித்திரையில் முத்திரை பதித்து பயணித்துக்கொண்டிருப்பவர் இளம் நடிகர் அருண் விஜய். தொட்டது துலங்கும் என்ற வாசகத்தை 24 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் நிரூபித்துக் காட்டியிருப்பவர் இந்த கலையுலக நட்சத்திரம். நடிகர் விஜய குமாரின் மகனாகப் பிறந்து இன்று தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார். தந்தையால் சினிமா உலகில் அரங்கேறினாலும் தந்தையை மிஞ்சிய […]
அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் வசூல் சாதனையை நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் முறியடித்துள்ளது. விஜய் – அட்லி கூட்டணியில் வெளியான மூன்றாவது திரைப்படம் ‘பிகில்’. தீபாவளி ரிலீசாக கடந்த 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்ட இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, கதிர், ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து […]
’உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கமலும் ரஜினியும் இணைந்தால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லது நடக்கும் என்று கூறினார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, ‘உங்கள் நான்’ என்ற விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் கமல் குறித்து […]
சில வருடங்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும் போது என் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்பொழுது நான் அப்படியல்ல எனது முகத்தை நான் எதற்காக மறைக்க வேண்டும் என் முகத்தை இந்த நிலைக்கு செய்த சமூகம் தான் வெட்கப்பட வேண்டும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மணமகள் அலங்காரம் செய்து நடிகை சந்தோஷி அசத்தியுள்ளார். தமிழ் திரை படங்களில் குணச்சித்திர வேடத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து […]
‘மாஃபியா’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை அத்திரைப்படத்தின் கதாநாயகனான அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஹ்மான் நடிப்பில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ‘நரகாசூரன்’ திரைப்படம் வெளியாகவில்லை. இதனிடையே தனது மூன்றாவது ப்ராஜெக்டாக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘மாஃபியா: சாப்டர் 1’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா […]
ஜென்டில்மேன் படத்தில் டிக்கிலோனா விளையாட்டை அறிமுகப்படுத்தி கவுண்டமணியிடம் உதை வாங்கி சிரிக்கவைத்தார் நடிகர் செந்தில். தற்போது அந்தத் தலைப்பை தனது புதிய படத்துக்கு வைத்துள்ள நடிகர் சந்தானம் தன்னுடன் இணைந்து டிக்கிலோனா ஆடவிருக்கும் நடிகர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார். சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரங்களை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் ‘டிக்கிலோனா’. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் […]
நடிகை அமலா நீண்ட நெடிய இடைவெளிக்குப் பின் திரைத்துரையில் அடி எடுத்து வைக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க நடிகை அமலா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கடந்த 1980-ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் […]
நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தனிப்பட்ட முறையில் அவருக்கு அமைச்சர் பாண்டியராஜன் விருதை வழங்கினார். ஆனால் இன்று வெளியாகவிருந்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசு நடிகர் விஜய் சேதுபதி உள்பட சில திரைத் துறையினருக்கு கலைமாமணி விருதை அறிவித்தது.ஆகஸ்ட் மாதமே இந்த விருது கொடுக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் விஜய் சேதுபதி அவ்விருதை பெற […]
‘சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் எனக்குப் பிடித்த ஆக்ஷன் ஜானரில் இந்தப் படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளேன்’ என்று ஆக்ஷன் படம் பற்றி சிலாகித்துக்கொண்டார் தமன்னா. அவெஞ்சர்ஸ் பிளாக் விடோ கேரக்டர் பாணியில் என்டரி கொடுத்து ஆக்ஷன் படம் பார்க்க அழைப்பு விடுத்துள்ளார் தமன்னா. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. […]
தமிழ்த் திரையுலகின் சிறந்த காதல் காவியமாக திகழ்ந்த தேவதாஸ் படத்தின் கதாநாயகனாகவும், சிவாஜி கணேசனின் லேண்ட்மார்க் திரைப்படமான நவராத்திரி தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தவர் அக்கினேனி நாகேஷ்வர ராவ். அவரது பெயரில் ஏஎன்ஆர் தேசிய விருதுகள் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் ஜாம்பவான் நடிகராகத் திகழ்ந்த அக்கினேனி நாகேஷ்வர ராவ் பெயரில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பழம்பெரும் நடிகை ரேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் […]
ஹீரோ படம் திட்டமிட்டப்படி டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு உறுதி தெரிவித்துள்ளனர். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ளது ‘ஹீரோ’ திரைப்படம். இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட 24 ஃபிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. சிவகார்த்திகேயன் – ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் […]
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தீபாவளி ரேஸில் ‘பிகில்’ படத்துடன் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கைதி’. கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால் இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்ஷன், செண்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால் ஸ்கோர் செய்து ‘டில்லி’ கார்த்தி கைதட்டல் வாங்கியுள்ளார். ‘மாநகரம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் […]
கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் படங்களை சமூக வலைதளம் மூலமாகக் கொண்டுசேர்க்கும் பங்கு தற்போது மகத்தானதாகத் திகழ்கிறது. அந்தவகையில் விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்கள் இந்த ஆண்டு மற்றொரு கிரீடத்தை சூடியுள்ளனர். சென்னை: 2019ஆம் ஆண்டு ட்விட்டரில் நிகழ்ந்த செல்வாக்குமிக்க தருணங்களில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் குறித்து பதிவுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளது.சமூக வலைதளமான ட்விட்டர் இந்த ஆண்டில் நிகழ்ந்த செல்வாக்கு மிகுந்த டாப் தருணங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் […]
நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘தபாங்-3’ திரைப்படத்தின் பாடலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சல்மான் கானின் நடிப்பில் ஆக்ஷன் பாணியில் ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படம் ‘தபாங்-3’. இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் சல்மான் கான் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தில் உள்ள அவாரா என்னும் காதல் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகிள்ளது. படத்தில் சல்மானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கின்றார். எனினும் இக்காதல் பாடலுக்கு சல்மானுடன் மற்றொரு நடிகையான சாயி மஞ்ச்ரேகர் தான் […]
கடந்த மாதம் வளைக்காப்பு முடிந்த நிலையில் பாபி-ரேஷ்மி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.பிறகு அடுத்த ஆண்டு மூத்ரா சிம்ஹா என்ற பெண் குழந்தை பாபி-ரேஷ்மி தம்பதியினருக்குப் பிறந்தது. இதைத்தொடர்ந்து நடிகை ரேஷ்மி நடிப்பிற்கு கேப் விட்டார். அதே வேளையில் நடிகர் பாபி சிம்ஹா பல படங்களில் கமிட் ஆனார். ரஜினியுடன் பேட்ட படத்திலும் காணப்பட்டார். இந்நிலையில் […]
இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ திரைப்படத்தின் ரிலிஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் பா. ரஞ்சித். அட்டகத்தி தினேஷ், ஆனந்தி நடிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’. இப்படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித், தனது நீலம் புரெடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் […]
தனது மகன் காளிதாஸை திரையுலகில் களமிறக்கியுள்ள நடிகர் ஜெயராம், அடுத்து தனது மகளை களமிறக்க தயாராகியுள்ளார். அவரது மகள் மாளவிகா தற்போது மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். கொச்சி: மலையாள வாரிசு நடிகர்களின் பட்டியலில் புதிதாக திரையுலகில் களமிறங்க தயாராகி வருகிறார் நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் ஜெயராம். நன்கு தமிழ் பேசும் இவர் ஏராளமான தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். மலையாள நடிகை பார்வதியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு […]
தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு முதல் முறையாக அவருடன் இணைந்து தளபதி64 படத்தில் நடிக்கிறார். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சாந்தனு, தனது காதல் மனைவி கீர்த்தியுடன் தாஜ்மஹாலுக்கு குட்டி விசிட் அடித்துள்ளார். மனைவி கீர்த்தியுடன் தாஜ்மஹால் சென்றுள்ள நடிகர் சாந்தனு, க்யூட் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இளம் வயதிலேயே தந்தையின் இயக்கத்தில் ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்தில் நடித்த இவர், தற்போது ஹீரோவாக பல […]
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படப்பிடிப்பு கங்கனா ரனாவத் நடிப்பில் இனிதே தொடங்கியுள்ளது. ‘தலைவி’ படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ளதாக கிளப் போர்டுடன் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சாயிலேஷ் ஆர் சிங் […]
நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த படமான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் ‘மூக்குத்தி அம்மன்’ என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பேசி நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் பிரபு […]
‘ஆக்ஷன்’ சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. இதுவரை பெண்களை அடிக்காத நான் இந்தப் படத்தில் நடிகை அகன்ஷாவை பல தடவை அடித்தேன். இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆக்ஷன்’ படத்தில் இணைந்து நடித்த நடிகை அகன்ஷா பூரியை அடித்ததற்காக மேடையில் வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் விஷால்.அதிரடி சண்டைக் காட்சிகள், கண்ணைக் கவரும்விதமான பிரமாண்ட காட்சிகளுடன் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஆக்ஷன்’. படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா பூரி என […]
பாகுபலியில் தான் விரும்பியது நிறைவேறாமல்போன நிலையில் ‘ஆக்ஷன்’ படத்தில் அதனை நிறைவேற்ற வாய்ப்பளித்து தனது கனவை சுந்தர். சி நனவாக்கியதாக நடிகை தமன்னா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சுந்தர். சியுடன் பணியாற்ற மிகவும் விருப்பமாக இருந்தாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ‘ஆக்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், நடிகை தமன்னா பேசுகையில், “ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்துவருகிறீர்கள். இயக்குநர் சுந்தர். சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா […]
சன்னி லியோன் ‘லைலா’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்ட சில மணிநேரத்திலே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதை வைரலாக்கியுள்ளனர். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூகுளில் அதிகம் தேடப்படுவோர் பட்டியலில் மோடி, ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளி சன்னி முதலிடத்தை பிடித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது. மேலும் […]
அமலாபால் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படம் வெளியானயதையடுத்து ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர். நடிகை அமலாபால் விவாகரத்திற்குப் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது. ரத்னகுமார் இயக்கியிருந்த ஆடை திரைப்படத்தில் அமலா பால் மேலாடை இல்லாமல் நடித்திருந்தால் அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அமலா பால் தற்போது இந்தியில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ வெப் […]
உங்கள் மீது அக்கறையோடு இருங்கள், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இலியானா, அங்கு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். ‘கேடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இலியானா. அதன்பின் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தார். பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் இவர், தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார். நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் தவறாமல் ஏதாவது […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் பாடலான ‘மால்டோ கித்தாப்புலே’யின் அர்த்தத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் – ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் […]
பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலராக பி.வி. கீதா நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் தீர்ப்பு வரும்வரை, சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை அரசு நியமித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. தேர்தலின் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதையடுத்து தற்போது நடிகர் சங்க விவகாரங்களை […]
தன் பிறந்தநாளை உணர்வுப்பூர்வமாக தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கழித்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும், மகிழ்ச்சியுடன் சென்றதாகவும் தெரிவித்தார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஆன்லைன் வர்த்தகம் விளம்பர விவகாரத்தில் நடிகர் […]
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய படம் தர்பார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழில் முன்னனி நடிகர் கமல்ஹாசன் , தெலுங்கில் மகேஷ்பாபு , மலையாளத்தில் மோகன்லால் , இந்தியில் சல்மான்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து வெளியிட்டிருக்கிறது.AR. முருகதாஸ் ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்து இருப்பதாலும் , ரஜினிகாந்த் நீண்ட […]
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிப்புக்கென்று தனி முத்திரை பதித்த உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து […]