Categories
சினிமா தமிழ் சினிமா

சாஹோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியானது…!!!!

 சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி  திரைக்கு வந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலாக பரவிய நடிகையின் புன்சிரிப்பு…!!!

நடிகை ஐஸ்வர்யா மேனனின் புன்னகை செய்யும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிரபல இந்திய நடிகையான ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துவருகிறார். https://www.instagram.com/p/B2HE29zlKEY/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again சமீபத்தில் இவர் புன்னகை செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட்…!!!

ஜோக்கர் படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜோக்கர் படத்தின் கநாயகியாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து அணைத்து இளைஞர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன. இந்த போட்டோஷூட் குறித்து பேட்டியளித்த இவர் “ஜோக்கர் படத்தை தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசம் வாய்ந்த மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது மீண்டும் புடவையில் போட்டோஷுட் செய்திருக்கிறேன். இந்த போட்டோஷூட் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்துடன் இணையும் நடிகர் ஆர்யா…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படத்திற்கு நடிகர் ஆர்யா நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தற்போது விரைவாக நடைபெற்று வருவதாகவும், குரங்கு பொம்மை படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்…!!!

நடிகர் அருண் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக நடிகர் அருண் விஜய் நடித்த “குற்றம் 23” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அருண் விஜய் தற்போது பாக்ஸர், மாஃபியா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

வைரலாக பரவிய ஸ்ரேயாவின் நடன வீடியோ…!!!

அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயாவின் நடன வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘இஷ்டம்’  தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது அரவிந்சாமிக்கு ஜோடியாக ‘நரகாசூரன்’, விமலுக்கு ஜோடியாக ’சண்டைகாரி தி பாஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் பிரபல நடிகர்…!!!

இயக்குனர் கௌதம் மேனனுடன் நடிகர் சூர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘சூரறை போற்று’ திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து  ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட  வெற்றித் திரைப்படங்களை  உருவாக்கினர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியீடு…!!!

வட சென்னை’ படத்தின் வெற்றிக்குப் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்  தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில்  வெளியாகியுள்ளது. ‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனத்துடன் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரைக்கு வரஉள்ளது. பூமணியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தனி ஒருவனை மிஞ்சிய கோமாளி” வசூல் சாதனை படைத்தது…..!!

ஜெயம் ரவியின் கோமாளி படம் தனி ஒருவன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் கோமாளி.பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால்  சம்யுக்தா ஹெக்டே ,யோகி பாபு  ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படம் ஆகஸ்ட் 15_ஆம் தேதி வெளியிடப்பட்டது. கோமாளி படம் வெளியாகியதில் இருந்து  இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.48 கோடியைத் தாண்டியுள்ளது. வசூல் ரீதியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PUBG-யில் இணையவுள்ள புதுமுக நடிகைகள்…!!!

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி-யின் பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் மூன்று புதுமுக நடிகைகள் நடிக்க உள்ளனர். தாதா 87 படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி-யின் புதிய படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார்.  நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன், பிக் பாஸ் ஜூலி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் மூன்று புதுமுக நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மித்தாலி ராஜாக மாறும் டாப்ஸி … எனக்கு வரும் வாய்ப்பை விடமாட்டேன் ..!!

நடிகை டாப்ஸி தான் விளையாட்டு துறை படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.   தமிழகத்தில் சிறந்த நடிகைகளில் ஒருவர் டாப்சி. இவருக்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க அதிகமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.  இவர்  ‘சூர்மா’ என்ற இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாகவும், ‘சாத் கி ஆங்க்’ படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகவும், ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் தடகள வீராங்கனையாகவும்    என தொடர்ந்து விளையாட்டுதுறை படங்களிலே நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலாறு காணாத சாதனை படைத்த தளபதி … ஒரே நாளில் YOUTUBE-யில் வெறித்தனம் ..!!

பிகில் படத்தில் தளபதி விஜய் பாடிய “வெறித்தனம் பாடல்” வரலாற்று சாதனை படைத்துள்ளது . இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்உருவான படம் “பிகில்”. மேலும் , விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த   படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கன்னிராசி” படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…!!!

நடிகை வரலட்சுமி மற்றும் நடிகர் விமல் இணைந்து நடித்துள்ள கன்னிராசி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘கன்னிராசி’. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘கன்னிராசி’  திரைப்படம்  நகைச்சுவை நிறைந்ததாகவும், காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் இன்று வெளியாகவிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுடன் இணையும் பிரபல ஹாலிவுட் நடிகர்…..!!!!

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களுள் ஒருவர் நடிகை நயன்தாரா. தற்போது த்ரில்லர் கதாபாத்திரத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . “அவள்” படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ள இப்படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்புதிய படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சகுனமே சரியில்ல … தனுஷக்கு சோதனை … ரசிகர்களுக்கு வேதனை ..!!

தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மீண்டும் சிக்கலை சந்தித்ததால் ரிலீஸ் தேதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.  இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல்  ராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் , படத்தை ரிலீஸ் செய்வதில் பல தடைகள் ஏற்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக “என்னை நோக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

நம்ம அனுஸ்காவா இது….இப்டி ஆகிட்டாங்களே…!!!

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட  முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அருந்ததி, பாகமதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை அனுஷ்கா ஐதராபாத் விமானநிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்  ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த புகைப்படத்தில் அனுஷ்கா உடல் எடை […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

அதிரடி ஆக்சனுடன் வெளியானது ”காப்பான்” ட்ரெய்லர்..!!

”காப்பான்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதால்  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.    தமிழகத்தின் முன்னனி  நடிகர்களுள் ஒருவரான   சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தினை அயன், மாற்றான் படத்தை இயக்கிய  கே.வி.ஆனந்த்  இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் மற்றும் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.   இந்நிலையில் காப்பான் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீ ராம் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி.!!

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீ ராம் மாரடைப்பால் மரணமடைந்தார்.   ஆலயம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து உருவாக்கியவர்  60 வயதான  ஸ்ரீராம். அந்நிறுவனம் சார்பில் முதல் படமாக விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படம் உருவானது. அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘திருடா திருடா’, ‘பாம்பே’ ஆகிய படங்களை தயாரித்தது. நடிகர் தல அஜித் குமாருக்கு ஆரம்ப காலத்தில் முக்கியமான  படமாக அமைந்த ”ஆசை” படத்தை  தயாரித்து ஆலையம் நிறுவனம் தான். இந்நிறுவனம் கடைசியாக தயாரித்து வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராட்சசி கட்டாயம் பார்க்க வேண்டும் … மலேசிய கல்வி அமைச்சர் புகழாரம் ..!!

ஜோதிகா நடித்த ராட்சசி படத்திற்கு மலேசிய கல்வி அமைச்சர்  மஸ்லி மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார் . கவுதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “ராட்சசி”. மேலும் இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 5ந்தேதி வெளியானது. மேலும், இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு படைக்கவில்லை. இந்நிலையில்,  “ராட்சசி” படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இப்படத்திற்கு தன் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சாலை விபத்தில் கேமரா மேன் சிவா உயிரிழப்பு… கருப்பன் பட நடிகருக்கு காயம்..!!

தேனி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோம்பையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப் படப்பிடிப்பிற்கு வந்தவர்கள் அனைவரும் கோம்பை ரெங்கநாதர் கோவில் சாலை வழியாக வாகனத்தில் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஸ்டில் கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் பெயரா இது ????

நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் யோகிபாபுவின் புதிய திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டியுள்ளனர். நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவின் நடிப்பில் உருவாகவுள்ள புது  திரைப்படத்தின் தலைப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கவுள்ள இந்த புதிய  திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபுவுடன் கருணாகரன், சுனைனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி-யின் புதிய படத்திற்கு இசை அமைப்பது இவரா???

 “கோமாளி” படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய  படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார். இயக்குனர் அகமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் இப்புதிய படத்தில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஆக்ஷன் திரில்லராக  உருவாகும் இந்த புதிய படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி இந்த காட்சிகள் இடம்பெற கூடாது”….இயக்குனர்களிடம் தல அஜித் கோரிக்கை…!!!

பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் தன் படத்தில் இடம்பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம் அணைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் தந்தைக்கும், மகளிற்கும் இடையேயான பாச போராட்டம் அழகாக முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் வரும் தந்தையின் கதாபாத்திரம் தனது மகளிற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதனால் இனி தான் நடிக்கும் அணைத்து படங்களிலும் பெண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் லீக்கான சாஹோ….படக்குழுவினர் அதிர்ச்சி…!!!

 சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று திரைக்கு வந்தது. அதிரடி ஆக்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 வேடத்தில் நடிக்கும் சந்தானம் படம் என்ன தெரியுமா ?

சந்தானம் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் 1 லுக் போஸ்டர் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த நடிகர் சந்தானம் . தற்போது அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2″ போன்ற படங்களும் மேலும் சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களிடையே   நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் , விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’ படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2” வேண்டாம் அஜித்தின் “தல60” வேண்டும் … வில்லனாக முதல் தமிழ் படம் ..!!

அஜித்குமார் நடிக்க இருக்கும் “தல60” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார் . ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் சமீபத்தில்  வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் , அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாகும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 இந்தி இல்லை தமிழனே … யார் என தெரியுமா ?

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக இந்தி நடிகர்களுக்கு பதிலாக தமிழ் நடிகரே நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது . இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் கமல்ஹாசனும் , அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளனர் . மேலும்,  அதிக பொருள் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், விவேக் , பிரியா பவானி சங்கர், ரகுல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்சர் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரபல காமெடி நடிகர்…!!!

வைபவ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘சிக்சர்’ பட தயாரிப்பாளருக்கு பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ள சிக்சர் திரைப்படம் இன்றுமுதல் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அனுமதி பெறாமல் தன்னுடைய புகைப்படத்தையும் சின்னத்தம்பி பட வசனத்தையம் சிக்ஸர் படத்தில் தவறான முறையில் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றம் சுமத்தியுள்ளார். கவுண்டமணியின் நற்பெயருக்கு கெடுதல் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள காட்சியை நீக்கி, மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் இல்லையேல் சட்டபூர்வமாக நடவடிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் சூப்பர்ஸ்டார்…. விஜய்க்கு அம்மா….. அஜித்துக்கு திரிஷா… மோதிக் கொள்ளும் ரசிகர்கள்…!!

விஜய் vs அஜித் யார் சூப்பர்ஸ்டார் என்ற விவாதம் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. தமில் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் எலியும் , பூனையும் போன்று எப்போதும் விஜய் , அஜித்_க்காக சண்டை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையை நாம் சமூக வலைதளத்தில் பார்க்கலாம். அஜிதோ , விஜய்யோ ஏதேனும் படம் நடிக்க போவதாக தகவல் வந்தாலே இவர்களின் சண்டை தொடங்கி விடும். பின்னர் படம் வெற்றி , தோல்வி என வசூல் வேட்டை […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அது கற்பனையே வேண்டாம் பின்பற்றாதே த்ரிஷாவின் அட்வைஸ் ..!!

நடிகை திரிஷா சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் . பிரபல நடிகை திரிஷா தற்போது யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் அமைப்பின் சார்பில் “குழந்தைகள் உரிமைகள்” தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்றும், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காஞ்சனா” இந்தி ரீமேக் “லட்சுமிபாய்” படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா ?

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் நடித்து இயக்க்கிய “காஞ்சனா 3” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ,  “லட்சுமிபாய்” என்ற இந்தி படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகியதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை எதிர்த்து நிற்கும் கார்த்தி , விஜய் சேதுபதி ஜெயிக்கப்போவது யார் ?

கார்த்தி நடித்து வரும் “கைதி படத்தின்” ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள  படம்  கைதி. இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது . மேலும் , முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். இந்நிலையில் , , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் , ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வார்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியீடு…!!!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்’ திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ஹ்ரிதிக் ரோஷன் நடித்திருக்கும் ‘வார்’ படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைகர் ஷெராஃப், வாணி கபூர்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைபடத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது . ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி 20 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை  வெளியிட்டுள்ளது .  தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட  பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் படத்திற்கு தடை…சுட்ட கதையா..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

காப்பான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் கதைகளை எழுதி வருவதாகவும், 2014 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் சரவெடி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியதாகவும், காப்பான் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜான்சி ராணியாக நடிக்கவிருக்கும் அனுஷ்கா…!!!

‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில்  நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளார். நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’  திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் இத்திரைப்படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார். வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துவருகிறார் மேலும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் அமித்தா பச்சன், நயன்தாரா, விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விளையாட்டு அகாடமியை தொடங்கவிருக்கும் தல அஜித்…!!!

நடிகர் அஜித்குமார் அர்ஜுனா விருது பெற்ற குற்றாலீஸ்வரனுடன் இணைந்து விளையாட்டு அகாடமி ஒன்றை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தல 60 என அழைக்கப்படும் புதிய படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்நிலையில், இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் வென்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதோடு இந்தியாவின் அர்ஜுனா  விருதையும் பெற்ற குற்றாலீஸ்வரனை தனது வீட்டுக்கு அழைத்து அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கார்த்தி நடிக்கும் கைதி” வெளியீடு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்திக்கை வைத்து இயக்கும் படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்_க்கு  ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கின்றார். இதற்க்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது கார்த்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கைதி படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடித்துள்ள புதிய படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷ் நடித்துள்ள “என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. “என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரிக்கும் இப்படத்தை தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 2016-ம் ஆண்டு தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரானது. ஒருசில காரணங்களினால் இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “தளபதி 64” யில் அனிருத் … மிரட்டி வரும் படக்குழு ..!!

விஜய்யின்  அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது  . இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் . மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்நிலையில் ,  இந்த படத்திற்கு பின்பு தளபதி விஜய் “மாநகரம்” படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி […]

Categories
சினிமா டெக்னாலஜி தமிழ் சினிமா தேசிய செய்திகள் பல்சுவை வைரல்

ஹேஷ்டேக் பட்டியலின் முதலிடத்தில் தமிழ்ப்படம் … தல யின் விஸ்வாசம் அடிச்சு தூக்கியது ..!!

டீவீட்டரின் ஹேஷ்டேக் பட்டியலில் தமிழ் சினிமா திரைப்படம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது . ஹேஷ்டேக்கின்  12 ஆவது பிறந்த தினமான நேற்று , பிறந்தநாளையொட்டி  சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டிவீட்டர்  வெளியிட்டது . இந்த பட்டியலில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்துள்ளது . இந்நிலையில் , தமிழ் சினிமாவின்  திரைப்படமான விஸ்வாசம் இந்த […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

யோகி பாபு-வின் ‘ஜாம்பி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு…!!!

அறிமுக இயக்குனர் புவன் நல்லன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாம்பி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஒரு இடத்தில் ‘ஜாம்பி’க்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போன்ற கதையம்சத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பணிகள் ஆரம்பம்…!!!

இளைய தளபதி விஜயின் 64-வது திரைப்படத்தின் பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் வைக்காத விஜயின் 64-வது படத்தில் விஜயுடன் நடிக்க ராஷ்மிகாவும், ராஷி கண்ணாவும் இணைந்துள்ளனர். இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கவுள்ளார். அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் தனது 63-வது படமான ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும்  நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால்…!!!

நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் நடிகர் சூர்யாவின் 39-வது திரைப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று வரும் கிறுஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில் சூர்யாவின் 39-வது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். சூர்யா நடிக்கும் இப்படத்திற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுளளார். இதற்குமுன் மற்றான் படத்தில் சூர்யாவும் காஜலும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்… “#Viswasam” முதலிடம்….!!

2019 -ம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் இந்திய அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் #Viswasam என்று ட்விட்டர் அறிவித்துள்ளது.   சமூக வலைத்தளங்களுள் ஒன்றான ட்விட்டரில் தினந்தோறும் பல்வேறு விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ட்விட்டரின் முக்கிய அம்சமே ட்ரெண்டிங் தான். ஏதாவது முக்கிய விஷயங்கள், பிரபலங்கள் பிறந்த நாள், புதிய படம், படம் குறித்த ஏதாவது அறிவிப்பு, அரசியல் பிரபலங்கள் பெயர்கள் என நாள் தோறும் ஏதாவது ஓன்று ட்ரெண்ட் ஆகி கொண்டே இருக்கும். இப்படி […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. கன்னட உலகில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப், ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘பயில்வான்‘ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஒரு மல்யுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா ஸ்டார் ஆக வேண்டுமா..? பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க அறிய வாய்ப்பு..!!

தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரப்பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பிரபலஇயக்குனர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்ற வருடம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தேசிய அளவில் அனைவரிடமும் பாராட்டு பெற்றது. மேலும் தேசிய விருதிற்க்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளார். இந்த படப்பிடிப்புக்கு தேவையான நடிகர்கள், நடிகைகள் தற்போது தேர்வு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘சிக்சர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிக்சர்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் வைபவ் நடிப்பில் இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்ஸர்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு ‘U’ தரச்சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும் இப்படம் வரும் 30-ம் தேதி  வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்த பாலக் லால்வாணி நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, சதிஷ், ராமர் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

leftல வடசென்னை Rightல புதுப்பேட்டை … “அசுரனுக்கு” புகழாரம் சூட்டிய பிரபலம் ..!!

பிரபல ஆன்கர் ஜாக்லின் அசுரன் படத்தின் செகண்ட்லுக் குறித்து ட்விட்டரில் கருத்து  தெரிவித்துள்ளார் . வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தூத்துக்குடி மாவட்டம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெற்றது.  மேலும் ,  படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த  நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்றுவருகிறது . இதன்பின்  அசுரன் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில்  இன்று  இரண்டாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசூரனின் தாறுமாறான செகண்ட் லுக் … ரவுடிசத்தில் படம் பட்டையை கிளம்பும் ..!!

தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வட சென்னையின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அடுத்த படம் அசுரன் . இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ்,  பசுபதி , சுப்பிரமணிய சிவா, யோகிபாபு , ஆடுகளம் நரேன், பவண்  உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தை […]

Categories

Tech |