சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாக நடிக்கஉள்ளார். 2017-ஆம் ஆண்டு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை அமைத்துக் கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக […]
Category: தமிழ் சினிமா
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் தொடங்கிய நிலையில், மதுரை, குற்றாலம் […]
கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் குறித்த செய்திக்கு நடிகை அமலாபால் கோபமாக பதிலளித்திருக்கிறார். ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் படமானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த படத்தில் தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலை போல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது எனறு அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் […]
விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் கொலைகாரன் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் […]
தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு ருசிகரமான ட்வீட்_டாக நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். இணையத்தின் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்தே வளர்ச்சியடைகின்றது. அதிலும் குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள் கலக்கி வருவதில் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் வீ டியோக்கள் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர். இதில் பல்வேறு சமூக […]
ஒரு பட விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், சிம்புவிற்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். சிம்புவின் சகோதரன் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நனைப்பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றும், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் கேள்வி எழுகிறது. இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார். இவர் சிம்புவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்புவின் நண்பரான சுரேஷ் சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர் […]
இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெயம் ரவி தற்போது நடித்து படம் அவரது 25-வது படம் ஆகும். இந்த படம் அவர் கூறுகையில், என்னுடைய 25வது படத்தை லக்ஷ்மண் இயக்கி வருகிறார். நான் ரொம்ப நாட்களாக பண்ண வேண்டுமென்று நினைச்ச விஷயத்தைப் படமாக பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமாகவும், மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமாகவும் இந்த படம் இருக்கும். இந்தப் படத்தில்நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. நானும் அரசியலை பாலோவ் செய்து கொண்டு தான் இருக்கிறேன். […]
தாய் என்று ஒரு அமைப்பை துவங்கியுள்ள ராகவா லாரன்ஸ், அந்த விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்துள்ளார். நடிகர் மற்றும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன்பு தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் ஒன்றை கட்டினார். தற்போது அவர் தாய் என்கிற அமைப்பு ஒன்றை துவங்கியுள்ளார். யாரும் தங்கள் பெற்றோர்களை கை விட்டுவிடக்கூடாது என்பதற்க இந்த அமைப்பை ராகவா லாரன்ஸ் உருவாக்கியிருக்கிறார். இனிமேல் எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக […]
இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் நிகிஷா படேல் ஆதிக்கம் செலுத்தும் வேடத்தில் நடித்துள்ளார். சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இப்படத்தில் தற்போது ஆரவ்வுடன் இணைந்து நிகிஷா படேலும் நடித்து வருகிறார். இதுகுறித்து நிகிஷா படேல் கூறுகையில், நான் இந்த படத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்துள்ளேன். மேலும் இந்தபடத்தில் நான் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடிந்துள்ள […]
சினிமா உலகில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ இந்த படம் திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் திரையுல வாழ்க்கை 17 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் […]
திலீப் நடிப்பில் உருவாகும் மலையாள படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் நடித்தால் ஹிரோவாகத்தான் நடிப்பேன் என்று சிலர் சுற்றித்திரிகின்றனர். ஆனால் அர்ஜுன் அப்படியில்லாமல், தமிழில் இரும்புத்திரை படத்தில் வில்லனாகவும், தெலுங்கில் நா பெரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மலையாளத்தில் திலீப் நடிபில் தயாராகிவரும் ஜேக் டேனியல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அர்ஜுன் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். குடும்பக் கதையாக உருவாகும் இந்த […]
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகிய 100 படம் வருகின்ற மே 9 _ம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 100. இந்த படத்தில் முதல் முறையாக ஹன்சிகாவும் அதர்வாவும் இணைகின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய […]
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ”கோமாளி”. ஜெயம் ரவியும், காஜல் அகர்வாழும் முதல் முறையாக இணையும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘‘இது ஜெயம் ரவிக்கு 24-வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, […]
சூர்யா 39 படத்தை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. இந்த படம் மே 31ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அக்டோபரில் வெளியிட போவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா 38 படத்திலும் நடித்து வருகிறார். […]
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சின்னதம்பி ரீமேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் ஆகிறது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்க வேண்டாம். வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழில் பேசியும், ஆடிப்பாடி சிரித்தும், அழுது புரண்டும் நடித்ததை அனைவரும் வியந்து பார்த்தனர். […]
ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து தயாரித்து வரும் ‘யோகிடா’ படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக தேர்வாகியுள்ளார். கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில், தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. இந்த படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து கபீர் துஹான் சிங், மனோபாலா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதை காதல் நிறைந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கும் தீபக் தேவ், மலையாளத்தில் […]
புதுமுக இயக்குனர் நார்தன் இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாகயிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிபில், சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்கள். சிம்புவுக்கு இது 45-வது படமாகும். இந்த படத்தை கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணியாற்றிய நார்தன் இயக்குகிறார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படம் குறித்து இயக்குனர் நார்தன் கூறுகையில், ஆக்ஷன் கலந்த […]
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தை கல்யாண் இயக்குகிறார். காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். And it is a wrap for the #Jyotika & #Revathi starrer #ProductionNo11 in […]
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். Happy to joining again with #SPJhananthan sir 😍😍#LaabamShootKickStarts@shrutihaasan @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @sathishoffl @KalaiActor @proyuvraaj […]
தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், அட்லி கதை சொல்வதில் கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள ஒரு பேட்டியில், அட்லி ஒரு துறுதுறுப்பான இயக்குநர். அவர் கதை சொல்வதில் கெட்டிக்காரர், அவர் சொல்கிற விதம் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திறத்தில் இருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர். […]
ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமை போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகியிருந்தது. கதாநாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவந்தன, தற்போது திரைக்கதையும் தயாராகி வருகிறது. இந்த படத்தை […]
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘அந்தாதுன்’ தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த்தும், திரிஷாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே போன்ற 3 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வசூல் ரீதியாக நல்ல […]
தேவராட்டம் மற்றும் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தீடீரென்று மே 17_ல் இப்படம் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற மற்றோரு படத்தை தயாரித்துள்ளது. இந்த […]
இணை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கவுள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் தற்போது வெளியாகி வெற்றி பெற்ற படம் பரியேறும் பெருமாள். இதைத்தொடர்ந்து அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படம் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில் ரஞ்சித்துடன் இணை இணயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்குகிறார். நீளம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் போன்ற பல பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ள […]
திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் திரிஷாவுக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கிறார் . ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது உருவாகும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ஷன் படமாக தயாராகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், அவருக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. […]
நடிகை ஸ்ருதிஹாசன் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பை தொடருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் 2 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில் இவர் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக போவதாக தகவல் பரவியது இதற்கு ஸ்ருதி மறுப்பு தெரிவித்தார். இது குறித்து தற்போது நடிகை ஸ்ருதஹாசன் விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க […]
எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் மெய் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக கதாநாயகனுடன் நடிக்கயிருக்கிறார். சித்திக், கமல்ஹாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறுகையில், படத்தில் நடிக்கும் கதாநாயகன் நிக்கி சுந்தரம் அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். படத்திற்கு எர்த்தாற்போல தன்னை தயார்படுத்திக் […]
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகும் படத்தில் பிரபல நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அருள்நிதி, இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அருள்நிதியின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணே கலைமானே படத்தை இயக்கிய சீனு ராமசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார். கிராமத்து […]
அழகு சாதன பொருள்களின் விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவி தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் தற்போது சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அந்த நிறுவனம் நடிகை சாய்பல்லவிக்கு சம்பளமாக ரூ.2 கோடி […]
நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க செல்லாமல் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் , நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது […]
திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார். காலை 7.15 மணிக்கு அஜித் , அவரின் மனைவி ஷாலினி தங்களது வாக்கை […]
நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பெருமளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க எதுவாக நாளை அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க […]
கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்துள்ளார். இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த ஊரில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளார்கள். இந்த கிரிக்கெட் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்ற அணியை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் சென்னைக்கு அழைத்து வந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் […]
அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மோடியின் ஆட்சி […]
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று டுவிட் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது, மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு தேர்தல் தேத்துதல் பணம், வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு… மாம்பழமோ? மாபெரும் பழமோ?பழம் தின்று கொட்டை போட்ட […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகைகளில் ஒருவரான சாய் பல்லவி தான் மேக்கப்பை விரும்பாத காரணத்தை கூறியிருக்கிறார். பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துயிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களையும் […]
மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘பியார்’ படத்தில் யோகிபாபு பேய்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராகவா லாரன்சின் உதவி இயக்குனரான மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் ‘பியார்’ என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன் வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், […]
கோபி நயினார் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கயிருக்கிறார். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்வெளிவந்த படம் அறம். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாக ஒரு படம் இயக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை விரைவில் துவங்க போவதாக கோபி நயினார் அறிவித்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த படம் பற்றிய […]
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய உச்சத்தை தொட்ட நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதல் முறையாக தயாரித்த படம் கனா இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2-வது முறையாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் சின்னத்திரை பிரபலமான ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராதா ரவி, நாஞ்சில் […]
இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ”காற்றின் மொழி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஜோதிகா அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த […]
பிரபுவின் 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. பிரபு 1982-ல் சங்கிலி என்ற படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். இவர் 37 வருடங்களில் 224 படங்கள் நடித்துள்ளார். தற்போது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகினர் பலரும் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகுல் விஜய்யும், கதாநாயகியாக பிரியாவட்லமனி நடிக்கிறார். எல்.பத்மநாபா […]
வீரகுமார் இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் நடிகை வரலட்சுமி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும் கன்னித்தீவு, கன்னிராசி, நீயா 2, காட்டேரி, தெலுங்கில் தெனாலிராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் […]
ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நித்யா மேனன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க ஆலியாபட், டெய்சி இருவரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலவிலகிவிட்டார் அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர். இந்நிலையில் நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா எனமூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் […]
அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 63_ல் நடிகை இந்துஜா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் விஜய் 63. படத்தில் விஜய் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இவருடன்நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்புக்காக ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் தயாரகிவருகிறது. இங்கு சுமார் 50 நாள்கள் படம் பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் […]
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் […]
தமிழ் படங்களில் திருநங்கை வேடத்தில் நடித்து பலர் பாராட்டு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து தேசிய விருது பெறவுள்ளார். காஞ்சனா படத்தில் சரத்குமார், சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக திருநங்கை வேடத்தில் நடிகர்கள் தான் நடிப்பார்கள் ஆனால், ஸ்ரீபல்லவி தன்னுடைய இமேஜ் […]
காப்பான் படத்தில் நடிகர் சூர்யா போராளியா அல்லது பாதுகாவலரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காப்பான்படத்தில் நடிகர் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார் […]
சூர்யா நடிப்பில் உருவாகும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற […]
நடிகர் கார்த்தி தற்போது அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மரக்கன்று நடுவதுக்கும் உதவியிருக்கிறார். கார்த்தி தனது படங்களில் அதிகமாக பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடு வருகிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்தும் வருகிறார். தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கும் நடிகர் கார்த்தி உதவி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார். இதுவரை 5 லட்சத்துக்கும் […]
ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் […]