பிளிப்கார்டில் இ-காமர்ஸ் மளிகை சேவைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் மளிகை பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் கொரோனாவின் காரணத்தால் அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருள்களை வாங்குவதற்கு பழகிக் கொண்டனர். இதில் பிளிப்கார்ட்டில் இ-காமர்ஸ் வலைதளங்களிலும் மளிகை சாமான்களை மக்கள் வாங்க தொடங்கினர். பிளிப்கார்ட்டில் அதிக சலுகைகள் வழங்குவதால் மக்கள் பொருள்களை வாங்க விரும்புகின்றனர். இங்கு மொத்தமாக சாமான்கள் வாங்கினால் நமக்கு லாபம் கூட இதனால் சேமிக்கவும் முடியும் என்பது மக்களின் […]
Category: வணிக செய்திகள்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம்: சர்வதேச சந்தை கச்சா […]
கேப்டன் தோனி அவர்கள் ஐபிஎல் தொடரில் திரும்பவும் வருவேன் என உறுதியாக கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அவர்கள் இந்த 2020”- ஆம் ஆண்டு மட்டும் எனது கடைசி ஐபிஎல் தொடர் கிடையாது அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடுவேன்” என தெரிவித்திருக்கிறார். 13-வது ஐபிஎல் சீசன் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சிஎஸ்கே அணி விளையாடியது . […]
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜி எஸ் டி நிலுவைத் தொகைக்காக மத்திய அரசு கடன் வாங்க முடியாது என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு தரப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கொடுத்து பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சரியான முடிவு எட்டப்படாததையொட்டி நேற்று திரும்பவும் விவாதிக்கப்பட்டது. மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜி எஸ் டி […]
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமிற்கு 31 ரூபாய் உயர்ந்து. சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 881 ரூபாய்க்கும், ஒரு சவரன் 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி […]
ஃப்லிப்கார்டு நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றி புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக ப்லிப்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக ப்லிப்கார்டு நிறுவனம் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் தொடங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்லிப்கார்டின் இந்த புதிய திட்டம் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனத்தின் ஜியோ நெட் சேவைக்கு கடும் போட்டியாக அமையும் என […]
விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் பல காரியங்கள் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது ஊழியர்கள் 6000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் பல துறைகள் இழப்பை சந்தித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வாகனத் துறையில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். ஜெர்மனி நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான […]
இந்தியாவின் இணையம் மற்றும் அலைபேசி கூட்டமைப்பு மற்றும் நீல்சன்( Nielson) நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி கிராமப்புறங்களில், 227 மில்லியன் மக்கள் இணையத்தை ஆக்டிவ்வாகப் பயன்படுத்தி வருவதாகவும், நகர்ப்புறத்தில் 205 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் ஆக்டிவாகப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதில் நகரத்தைவிட 10 சதவிகிதம் அதிகமாக கிராமப்புறத்தில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் & மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) வெளியிட்டுள்ள ‘டிஜிட்டல் இன் இந்தியா’ அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் இணைய பயனர்கள் முதன்முறையாக நகர்ப்புறங்களில் இருப்பவர்களை விட […]
ஃபேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்து இருப்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனமாக மாற்றுவதே தனது ஒரு இலக்கு என முன்பு தெரிவித்திருந்தார். அதற்கேற்றார்போல் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்சின் தொலைத் தொடர்புநிறுவனமான ஜியோவில் 9.9 சதவீதம் பங்குகளை ரூபாய் 43,574 கோடிக்கு கொடுப்பதாக அறிவித்தது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் […]
குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 1,999 ரூபாய்க்கான பிளான் பயன்படுத்துவோர், அப்பிளானின் வேலிடிட்டியை 345 நாட்களிலிருந்து 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இந்த பிளானில் ஏற்கனவே தினமும் 3 ஜி.பி டேட்டாவும், அளவில்லா அழைப்புகளும், தினமும் 100 குறுஞ்செய்திகளும் இருந்து […]
2020 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் அடுத்த ஆண்டு (2020) முழுவதும் வரம்பற்ற (அன்லிமிடெட்) சேவை வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அவ்வப்போது அதிரடி ஆஃபர்கள் அள்ளித் தெளித்து வாடிக்கையாளர்களைத் திணறடித்துவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 2020 புத்தாண்டை முன்னிட்டு ‘ஹேப்பி நியூ இயர் ஆஃபர்’ என்ற சலுகையை அறிவித்துள்ளது. 2020-க்கு 2020! இந்தச் சலுகை மூலம், 2020 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர், அடுத்த ஆண்டு (2020) முழுவதும் வரம்பற்ற டேட்டா […]
பல்வேறு அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வால் மருந்துகளின் விலையையும் உயர்த்த, தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலவாணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மருந்துகளின் விலையை உயர்த்த தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority – NPPA) அனுமதியளித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய மருந்துகளான ஆன்டிபயாடிக், அலர்ஜி, மலேரியா மருந்துகள், பிசிஜி தடுப்பூசி (BCG Vaccine), வைட்டமின் சி உள்ளிட்ட 12 […]
டெல்லி: வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தித் தேவையைவிட குறைவாக உள்ளது. இதனால் பெரும்பாலும் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் சமையல் எண்ணெய் விலைகளை அதிகரித்துவிட்டன. […]
டெல்லி: டிசம்பர் 18ஆம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி பாக்கி, வரி வருவாய் ஆகியன கருத்திற்கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை கணிசமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மத்திய அரசு எதிர்பாா்த்த அளவைவிடக் குறைந்து வருகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் […]
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை சதம் அடித்துள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு வெங்காயம் ரூ .70 முதல் ரூ .80 வரை விற்பனை ஆனது .ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையோ ஏறுமுகமாக உள்ளது . ஆந்திரா வெங்காயம் ரூ 60 முதல் 70ரூபாயாக உள்ளது சாம்பார் வெங்காயம் ரூ 80 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது . கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ .90 முதல் 100 வரை உயர்ந்துள்ளது .இதனால் தெருவோர கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் […]
டெஸ்லா (Tesla) நிறுவனம் தமது புது விதமான உயர் ரக கார்களுக்கான விலையை உயத்தப் போவதாக அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க், மாடல் 3 என்ற கார்களை 35 ஆயிரம் டாலர்களுக்கு விற்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க், முன்பு திட்டமிட்டதை விட குறைவான கார் விற்பனையகங்களை மட்டுமே மூட உள்ளதாகவும், அதிக விற்பனை நடைபெறும் நகரங்களில் குறைந்த பணிகுழுவோடு விற்பனையகங்களை மீண்டும் செயல்படுத்தவுள்ளதாகவும் டெஸ்லா நிறுவனம் தரப்பில் […]