Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்த போது பனிக்குல்லா அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் தேவகியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது கண்விழித்த தேவகி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன் மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனாலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட பெண்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனூர் கிராமத்தில் ராசாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட முனியப்பன் சில மாதங்களிலேயே இறந்து விட்டார். இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் உயிரிழந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணனின் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 11 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது. அதன் பிறகு ராசாத்தி 11 லட்சம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டி…. 8-ஆம் வகுப்பு மாணவிக்கு குவியும் பாராட்டுகள்….!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தினக்குடி கிராமத்தில் ராமு-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8- ஆம் வகுப்பு படிக்கும் லக்ஷனாதேவி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பதோடு, விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த சிறுமி உறை வாள் சண்டை கலையையும் கற்று வந்துள்ளார். இந்நிலையில் கும்பகோணத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெடரேஷன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற லக்ஷனாதேவி தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு […]

Categories
அரியலூர் மதுரை மாவட்ட செய்திகள்

“இதுதான் எனது ஆசை”….. செஸ் போட்டியில் சாதனை படைத்த மதுரை மாணவியின் பேட்டி…!!

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகளில் 17 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில் மதுரை சொக்கலிங்கம் நகரை சேர்ந்த 10- ஆம் வகுப்பு மாணவி கனிஷ்கா 16 வயது உட்பட்டவர்களுக்கான பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாணவி கனிஷ்கா கூறியதாவது, கடந்த 6 வருடங்களாக செஸ் விளையாடி வருகிறேன். தினமும் 10 முதல் 15 மணி நேரம் இதற்காக பயிற்சி பெற்று மாநில அளவில், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உடனே கிளம்புங்க…. இன்று இங்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் அரசு சார்பாக அரசு துறை வேலைவாய்ப்புகளும் மூன்றாவது வாரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவி…. அரியலூரில் உற்சாக வரவேற்பு….!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஷர்வாணிகா 2- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி இலங்கையில் நடைபெற்ற ஆசிய செஸ் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் 7 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நடைபெற்ற 3 பிரிவு போட்டிகளிலும் ஷர்வாணிகா வெற்றி பெற்று 6 தங்க பதக்கங்களையும், சுழற்கோப்பையையும் வென்றார். நேற்று குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஷர்வாணிகா அரியலூருக்கு வந்தார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பாட்டி” வெளியே சென்ற நேரத்தில்…. சிறுமியின் வாழ்கையை சீரழித்த உறவினர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்த சிறுமையின் மாமா முறையான காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த செங்கதிர்(32) என்பவர் அதே வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் பாட்டி இல்லாத நேரத்தில் செங்கதிர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிலர் வீட்டிற்கு வந்த பாட்டியிடம் நடந்தவற்றை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களை வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க சொல்றாங்க”…. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி….!!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலமாக அழித்தனர். இதில் ஏலாக்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஏழக்குறிச்சியில் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர்…. விபத்தில் சிக்கி 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருங்காலக்குறிச்சியில் வசிக்கும் வாலிபர், ஒரு பெண் உள்பட 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வாசலில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கொடிக்குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சித்தப்பாவால் ” 9 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்” நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் அக்காளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் தனது முதல் மகளான 9 வயது சிறுமியை தங்கையின் வீட்டில் விட்டு சென்றுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாலிபரின் மனைவி வெளியூர் சென்ற நேரத்தில் சித்தப்பாவான அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் கழுத்தை அறுத்து கொலை…. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜியாபத்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரியாஷ்பி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயம்கொண்டத்தில் இருக்கும் வாடகை வீட்டிற்கு சென்று வசிக்கலாம் என ரியாஷ்பியிடம் அவரது கணவர் கூறியுள்ளார். அதற்கு ரியாஷ்பி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு…. பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

இரு தரப்பினர் மோதி கொண்டதில் பெண்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை புது தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருமைதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமியும் அருமைதுரையும் தனித்தனியாக காவல் நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி காலனி தெருவில் தீபன்ராஜ்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்கள்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனது நண்பரான சேனாதிபதியுடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கழுவந்தோண்டி பாலம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேனாதிபதி, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த பணம்…. மூதாட்டியிடம் 4 1/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் அதிரடி….!!!

மூதாட்டியிடம் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் பவானி என்பவர் ரசித்து வருகிறார். அதே பகுதியில் அருள்ஜோதி, சரண்யா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அருள்ஜோதியும், சரண்யாவும் இணைந்து பவானியின் பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். இதுவரை அவர்கள் கடனை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பணத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பார்வையற்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பார்வையற்ற பெண்ணின் வீட்டிற்குள் ராஜ்மோகன் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிந்த போலீசார் ராஜ்மோகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் ராஜ்மோகனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறந்த விளையாட்டு வீரர் யார்….? வாலிபரை கொலை செய்த நண்பர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

வாலிபரை நண்பர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் விக்னேஷ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிட்கோ தொழில்பேட்டை அருகே திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விக்னேஷின் நண்பரான தர்மராஜ்(21) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறந்தவர் யார் என்பது தொடர்பாக விக்னேஷுக்கும் தர்மராஜுக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அனுமதியின்றி உண்ணாவிரதம்” முதியவர் உள்பட 7 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!!

அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த தொடக்க பள்ளி நுழைவு வாயில் முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் மாணவரான தமிழ்மணி(80) சிலருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறல்…. 18 கனரக வாகனங்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி….!!!

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி கள்ளங்குறிச்சி ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல், தார்ப்பாய் சரியாக போடாமல், பிரதிபலிப்பான் ஒட்டாத 18 கனரக வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில்…. வெட்டு காயங்களுடன் வாலிபரின் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சிட்கோ தொழில்பேட்டை அருகே தலையில் வெட்டு காயத்துடன் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கிராமத்தைச் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டுக்கு சென்ற பெண்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சித்துடையார் காலனி தெருவில் மூக்காயி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் மூக்காயிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மணிகண்டன் என்ற மகன் உள்ளார். சிறு வயதிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டதால் மூக்காயி மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணமான 6 மாதங்களில் மூக்காயியின் கணவர் அவருடன் வாழ பிடிக்காமல் அவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மயிலை துரத்தி கடித்த நாய்கள்….. விவசாயி அளித்த தகவல்….. வனத்துறையினரின் செயல்….!!

நாய்கள் கடித்து காயமடைந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெளிப்பிரிங்கியும் கிராமத்தில் வசிக்கும் விவசாயி தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது நாய்கள் ஆண் மயிலை கடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி வாலிபர்களுடன் இணைந்து நாய்களை விரட்டி அடித்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 வயதுடைய ஆண் மயிலை மீட்டனர். இதனை அடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு மயிலை கொண்டு சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தங்கை….. சகோதரி அளித்த புகார்….. போலீஸ் விசாரணை….!!

மாயமான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் ரேவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா(26) என்ற தங்கை உள்ளார். இவர் கைத்தறி நெசவாளர் நல வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட ரேணுகா மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரேணுகாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் ரேவதி தனது தங்கையை காணவில்லை என ஜெயம்கொண்டம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“3 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் மரணம்” தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!

கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூக்குழி கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(28) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வினோதினிக்கும், பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய பவிஷி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது வினோதினி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வேறொரு பெண்ணுடன் பாலாஜிற்கு பழக்கம் ஏற்பட்டதால் வினோதினியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த காதலன்….. காதலி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடராஜனும், ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்ய நடராஜன் மறுப்பு தெரிவித்ததால் ரம்யா ஜெயம் கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி புகார் அளித்தார். இதனால் போலீசார் இரு விட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் ஜெயம்கொண்டதில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை….. கல்லூரி மாணவரின் விபரீத முடிவு….. கதறும் குடும்பத்தினர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தில் ராமையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த முத்துக்குமாரை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முத்துக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இந்திய ராணுவ கல்லூரி”… மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் ஆரம்பம்….!!!!!!

இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இத்தேர்வானது சென்னையிலும் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதன்படி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும். விண்ணப்பதாரர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை….. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…..!!

மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில்வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதோடு, சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் காடுவெட்டாங்குறிச்சி, உடையார்பாளையம், ஆதிச்சனூர், சோழங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உனக்கு பெண் கொடுக்க மாட்டோம்” எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவில் ஆட்டோ ஓட்டுனரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இளந்தமிழனும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான மகேஸ்வரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளந்தமிழன் மகேஸ்வரியை பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் மகேஸ்வரியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி உடையார்பாளையம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்கள் மீது நம்பிக்கை….. சிறுவனுக்கு நடந்த விபரீதம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்வெலியில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார்(17) என்ற மகன் இருந்துள்ளார். 10-ஆம் வகுப்பு வரை படித்த அருண்குமார், ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் அருண்குமார் பட்டி போட்டுள்ளார். மேலும் நாய் தொந்தரவுகளை கட்டுப்படுத்துவதற்காக அருண்குமாரும், அவரது நண்பர்களும் மின்சார வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. நேற்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் அளித்த புகார்…. அரசு பேருந்து ஓட்டுநருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொடுக்கூர் குடிகாடு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம்(53) என்ற மகன் உள்ளார். இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ராமலிங்கம் வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுழிபள்ளம் கிராமத்தில் சின்னதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சகோதரரான கலியபெருமாள் என்பவருக்கும் வயலில் ஆடு மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலியபெருமானின் பேரன் மணிகண்டன் என்பவர் சின்னதுரையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். நேற்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….?? கன்னியாஸ்திரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியாஸ்திதியான அன்பு விஜய் ஞான ஜோதி(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் அருகே இருக்கும் மடத்தட்டுவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக வேறு சில கன்னியாஸ்திரிகளுடன் ஞானஜோதி ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஞான […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கருவை கலைத்து விடு” கணவரால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நதியா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு கருவை கலைக்குமாறு கூறியதால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நதியா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பேய் பிடித்திருப்பதாக கூறிய மக்கள்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 3 மாதங்களாக வேளாங்கண்ணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வேளாங்கண்ணிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறியதால் குடும்பத்தினர் அவரை பூசாரியிடம் அழைத்து சென்று பூஜை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உலகம் உள்ளவரை உயிரோட்டமாக இருக்கும்”…. அரசு உயர்நிலைப்பள்ளியில்…. பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு….!!!!

அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரின் நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சிறுவயலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மகாகவி பாரதியாரின் நினைவு தினமானது தலைமை ஆசிரியர் சின்னத்துறை தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் மகாகவி பாரதியாரின் படத்திற்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உரையாற்றினார். அதில் அவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

10 வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர்….. கணக்கு வாத்தியார் கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

அரியலூரில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி உரிமையாளரின் உறவினரான தினேஷ் அதேப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் போனிலும் நேரிலும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் பெற்றோர்கள் மாணவியை பள்ளியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலில் கும்பாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சென்னிவனம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பழைமை வாய்ந்த கோவில் இதுவாகும். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்த கோவிலை சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பழைமை மாறாமல் சீரமைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் சீரமைப்பு பணி நிறைவடைந்து நேற்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உடனே இதை பண்ணி கொடுங்க”….. மழையால் அணைந்த சிதை…. வேண்டுகோள் விடுத்த பொதுமக்கள்….!!!!

 Vமயான கொட்டகை இல்லாததால் எரிந்து கொண்டிருந்த சிதை மழையில் அணைந்தது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குடிகாடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். சக்திவேல் மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த சில நாட்களாக சக்திவேல் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். இதனை அடுத்து நேற்று முன்தினம் மாலை அவரது உடல் கொள்ளிடக்கரையில் இருக்கும் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்குள்ள மயானமானது கொட்டகை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான்கு வருட காதல்…. பட்டதாரி பெண்ணின் துணிச்சல் செயலால்…. கைகூடிய திருமணம்….!!!!

பெண் ஒருவர் வாலிபரை போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரண் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஒலிபெருக்கி நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவரும் வீர சோழபுரத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகளான நந்தினியும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தினியிடம் கரண் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் நெருங்கி பழகி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சோழர்களின் கலையை பின்பற்றி…. யானை தந்தத்தினாலான சிற்பம்…. அரியலூரில் மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு….!!!!

யானை தந்தத்தினால் செய்யப்பட்ட சிற்பத்தின் பாகம் கிடைத்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகில் மளிகை மேடு பகுதியில் தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மார்ச் 25ஆம் தேதி மண்ணால் ஆன கெண்டி செம்பின் மூக்கு பகுதி, பழங்கால மண் பானை மற்றும் 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம் வெயிட் பண்றோம்!…. தினசரி தொடரும் மருத்துவரின் அட்டுழியம்…. பரபரப்பு….!!!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்ற 4 வருடங்களாக குமாரி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தினசரி காலை வழக்கம்போல பணிக்கு வரும் குமாரி, வெகு நேரமாக வரிசையில் காத்துநிற்கும், நோயாளிகளுக்கு உரியநேரத்தில் மருத்துவம் பார்க்காமல் அலட்சியப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதனை தட்டிக் கேட்கும் நோயாளிகளை மருத்துவர் குமாரி தரக் குறைவாக பேசுவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அடிக்கடி சலசலப்பு ஏற்படுவது வழக்கமாக மாறி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல்”…. போலீசார் பேச்சுவார்த்தை…!!!!!!

விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது மகனுடன் ஆடுகளை மேய்த்துக்கொண்டு திருச்சி-சிதம்பரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் உடன் வந்த மகன் பாலமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த வாலிபர்!…. பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்…. அப்படி என்ன பண்ணாங்க?…!!!!!

அரியலூர் தா.பழூர் அருகேயுள்ள சோழமா தேவி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாய கூலிதொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்தி (24). இவர் திருவள்ளூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சென்ற 20ஆம் தேதி இரவு திருவள்ளூரிலிருந்து வந்தவாசி நோக்கி தன் நண்பர் செந்தில் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணவரின் கள்ளத்தொடர்பு….. இளம் பெண் இறந்தது எப்படி….?? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…….!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவருடைய மகன் தினேஷ் (27) கடந்த 2 வருடங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்திலுள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகள் வைஷ்ணவியை (24) திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இதில் தினேஷ் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினேசுக்கும், வைஷ்ணவிக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்வி உதவித்தொகை: இன்றே கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 15ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமானது மத்திய அரசு வாயிலாக செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் ஆக இருக்க வேண்டும். இதையடுத்து பெற்றோர், பாதுகாவலர்கள் ஆண்டு வருமானம் ரூபாய்.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 (அல்லது) 11-ம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. நண்பரை பார்க்க சென்ற வாலிபர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தகுமார்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஆனந்தகுமார் தனது நண்பரான விஸ்வநாதன் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் காமராஜர் தெருவில் சுமை தூக்கும் தொழிலாளியான கார்த்திக்(27) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சப்- இன்ஸ்பெக்டர் மகள்…. குவியும் பாராட்டு….!!

தங்கப்பதக்கம் என்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான பழனி ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி இலஞ்சியம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு நிவேதா என்ற மகள் இருக்கிறார். இவர் இந்தோனே நேபால் சர்வதேச விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் நிவேதா தங்கப்பதக்கம் என்றார். இந்நிலையில் ஊருக்கு திரும்பிய நிவேதாவுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட கார்…. ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்….!!!

சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மூவர்ண நிறத்தில் கார் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை கட்டிடம் உட்பட பல்வேறு அரச கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறத்தில்  மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் […]

Categories

Tech |