குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியில் இளந்தமிழன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய வன்னிமலர் என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கோகிலா தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கோகிலா திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளந்தமிழன் தனது மனைவி மற்றும் குழந்தையை பல்வேறு […]
Category: அரியலூர்
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு அந்த கண்ணன் தனது மனைவி வீட்டில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த […]
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் சந்திராபுரத்திலிருந்து செரங்காடு செல்லும் சாலையில் உள்ள ஹோட்டல் அருகே சென்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி முன் விரோதம் காரணமாக சுரேஷ்குமார் என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரின் நண்பர்களான இதயக்கனி, மணிகண்டன், பிரகாஷ், பிரவீன் குமார், குணா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் […]
தனது தலையில் பேருந்து ஏறியும் உயிர்தப்பிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. அரியலூர் ஒட்ட கோவிலூர் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் சத்தியசீலன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லியம்மன் கோவில் வளைவில் திரும்பிய போது எதிரே மினி பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவர் திடீரென பிரேக் பிடித்து பைக்கை நிறுத்த முயன்று உள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்துள்ளது. இதனிடையே பேருந்து அருகில் வர […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் வடக்கு தெருவில் கூலித்தொழிலாளியான கலியன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் கலியன் சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் விவசாயம் நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆதிச்சனூர் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நீலமேகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை […]
அரியலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 28ம் தேதி, உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்வாய்ந்த கோயில்களில் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழரின் பிறந்த நாளை […]
தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. பள்ளிகள் நடக்காது, என்று கூறினார். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இதுபோல் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் […]
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில்வே நிலையம் அருகே எத்திராஜ் நகரை சேர்ந்த நடராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி கடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் […]
தண்ணீரில் மூழ்கி இறந்த நபரின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் விளந்தை திலகர் நகரில் உத்திராபதி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் உத்திராபதி அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் கிராமத்தில் கலியபெருமாள்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கலியபெருமாள் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வலி தாங்க முடியாமல் கலியபெருமாள் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]
மரத்திலிருந்து கீழே விழுந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமமூர்த்தி என்பவரது நிலத்தில் இருக்கும் பலா மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழை வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமலிங்கம் மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராமலிங்கத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]
பொது தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தில் விவசாயியான சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இவர் அரியலூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு அபினா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பொது […]
கோவிலில் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள பரணம் கிராமத்தில் இருக்கும் முந்திரி காட்டில் புகழ்பெற்ற ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து வெண்கல மணிகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சாக்கு மூட்டையுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து […]
காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அருகே இருக்கும் ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்த செல்லப்பெருமாள் மற்றும் கஸ்தூரி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் செல்ல பெருமாளுக்கும் கஸ்தூரிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கஸ்தூரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு […]
வாலிபர் கைது செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பாளையத்தில் இருக்கும் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 23-ஆம் தேதி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது உடையார் பாளையத்தைச் சேர்ந்த இளவரசன், அஜித்குமார், பழனி, வீராச்சாமி, தமிழரசன் உள்பட 10 வாலிபர்கள் கோஷமிட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கரன், ஆகாஷ் ஆகியோருடன் இளவரசன் உள்பட 10 பேரும் தகராறு செய்ததாக […]
2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கொத்தனாரான இளவரசன்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் இளவரசனை கைது செய்தனர். இவர் […]
வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தர்ம சமுத்திரம் கிராமத்தில் இருக்கும் செங்கால் ஓடை அருகே பல ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வீடு அமைந்துள்ள பகுதியை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆண்டிமடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி […]
அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு மாதம்தோறும் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று அஷ்டமியை முன்னிட்டு வைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் மஞ்சள், குங்குமம், வெட்டிவேர், நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு யாகம் நடைபெற்றது. இந்த […]
வாலிபரை தாக்கிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருவிழாவில் நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள் முருகேசனிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் முருகவேல், ஜோதிமணி, சண்முகம், தண்டபாணி உள்ளிட்ட 6 பேர் […]
நீதிபதி ஆனந்தன் வாலிபர் ஒருவருக்கு 17 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அரியலூர் மாவட்டம், சடையப்பர் தெருவில் வசித்து வருபவர் ஆராமிர்தம். இவருடைய மகன் 20 வயதுடைய மாரிமுத்து. இவர் கடந்த 2018 -ஆம் வருடம் அக்டோபர் 13ஆம் தேதி அதே பகுதியில் வசித்த 8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இது தொடர்பாக […]
தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் எண்ணெய் வியாபாரியான சண்முகம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா(19), நிவேதா(17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஸ்வேதா கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியில் படிக்கும் தோழி மதுபாலா என்பவரை அழைத்துக்கொண்டு ஸ்வேதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது […]
இந்திய விமானப்படை தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் இருக்கின்ற இந்திய விமானப்படை தேர்வு மையம் சார்பாக இந்திய ஏர்மேன் பணிக்கு விரைவில் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யப்பட உள்ளது. மேற்கண்ட பணிக்கு சேர விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விவரங்களை https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKvsNW8mW Flk0jcOIVm என்ற Google Form-ல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். […]
மாற்று திறனாளிகளுக்கு நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தசை சிதைவு , முதுகு தண்டுவடம், கை கால் பாதிப்பு போன்ற நோயாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பள்ளி கல்லூரி படிப்பு சான்றிதழ், 2 […]
மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் வைத்து பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குழந்தை திருமணம் […]
தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் கூலி தொழிலாளியான ராமர்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி(48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் இருக்கும் மளிகை கடைக்கு அருகே ராமர் விழுந்து கிடப்பதாக ராணிக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ராணி தனது குழந்தைகளுடன் அங்கு சென்று பார்த்தபோது ராமர் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
ஆக்கி போட்டியில் இந்திய அணியின் முன்கள ஆட்டக்காரராக விளையாடுவதற்கு அரியலூர் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரியலூர் நகரில் வசித்து வருபவர் ஆக்கி விளையாட்டு வீரர் கார்த்திக் (21). இவர் ஆசிய கோப்பைக்கான ஆக்கி போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் மிகவும் ஏழ்மை நிலை குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை செல்வம் வங்கியில் இரவுநேர காவலராக பணிபுரிந்தார். அதன்பின் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவருடைய தாய் வளர்மதி வீடுகளில் […]
காணாமல் போன முதியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான குருநாதன் என்பவர் முதியவரை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடை வீதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் குருநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
அரசு உயர்நிலை பள்ளி அருகில் மதுபான கடை வைக்க கூடாது என்று மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் பரணம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் முந்திரி தோப்பு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஊர் பகுதிக்குள் கொண்டுவர மதுபான கடை ஊழியர்கள் திட்டமிட்டு, பரணத்திலிருந்து பிலாக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள ரோட்டின் ஓரத்தில் மதுபான கடையை அமைக்க முடிவு செய்தார்கள். இந்த ரோட்டின் […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலரும், காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் […]
தாயை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான அழகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பச்சைமுத்து என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பச்சைமுத்து தனது தாயிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். மேலும் அழகம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து அழகம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சங்கர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சங்கரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 28 […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவன் என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் இளங்கோவன் தனது வீட்டிற்கு பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் இளங்கோவனை கைது செய்ததோடு […]
இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட 7 பேரை கதண்டுகள் கடித்தது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் காலனி தெருவில் நாகப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகப்பன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் நாகப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டும் பணியில் அதே பகுதியில் வசிக்கும் சத்தியசீலன், சேகர், முருகானந்தம் உள்பட 7 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டமாக வந்த கதண்டுகள் ஏழு பேரையும் துரத்தி துரத்தி […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளரான பிரபாகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
வேலை பார்த்துக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் அழகப்பன் என்பவரது கடலை வயலில் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வயல் வெளியில் இருக்கும் கல்லுக்கு அடியில் இருந்து வந்த பாம்பு சிந்தாமணியை கடித்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ராயர் தனது மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
சொத்து தகராறில் முதியவரை தாக்கிய தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக கலியபெருமாளுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் கலிய பெருமாளுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கலியபெருமாளின் சகோதரரான மனோகரன் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகிய இருவரும் இணைந்து வயலுக்கு சென்றனர். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த […]
எள் செடிகளை சாலையில் காய வைத்து விபத்துக்கு காரணமான விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சுவெளி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்நிலையில் சாலையில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை குவியலாகக் குவித்து வைத்திருந்தது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா போக்குவரத்திற்கு இடையூறாக தானியங்களை சாலையில் […]
மாட்டு வியாபாரியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணக்குடி தெற்கு தெருவில் மாட்டு வியாபாரியான செந்தில் என்பவர் வசித்துவருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான பசு மாட்டை செந்தில் 17 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி வாங்கியுள்ளார். அப்போது முன்பணமாக 1,700 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மீதமுள்ள 15 ஆயிரத்து 300 ரூபாயை செந்தில் தரவில்லை […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் ராதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
அறிவியல் கண்காட்சியில் மீன்சுருட்டி அரசு மகளிர் பள்ளி மாணவி மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அரியலூர் அரசு மாதிரி பள்ளியில் கடந்த 8ஆம் தேதி பள்ளி கல்வித் துறை சார்பாக மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று படைப்புகளை உருவாக்கி காட்சியளித்தனர். அதில் மீன்சுருட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெய் அபிநயா “நம்மை சுற்றி […]
மாட்டு வியாபாரியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம், மணக்குடி தெற்கு தெருவில் வசித்து வருபவர் மாட்டு வியாபாரி செந்தில் (43). இவர் பெரிய நாகலூர் வடக்கு தெருவில் வசித்து வந்த தேவேந்திரன் என்பவரது பசுமாட்டை கடந்த 8 மாதங்களுக்கு முன் ரூ 17,000-க்கு விலை பேசி வாங்கினார். அப்போது முன்பணமாக ரூ 1,700 கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 15,300 கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று […]
பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அடுத்த பொன்பரப்பி அருகில் சேடக்குடிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவருடைய மகன் அஜித்குமார். இவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பலரும் பார்க்கும் வகையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை அறிந்த முகநூல் நிறுவனம் சென்னையில் இருந்து அரியலூருக்கு புகார் அளித்துள்ளனர். அதன்பின் அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புகாரின்பேரில் அஜீத் குமாரை […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோரைக்குழி தெற்கு தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இதில் மணிகண்டன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டதால் சித்ரா தனது மாமியார் சுசிலாவோடு வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் சுசிலா தனது மருமகளை கடலை செடி பிடுங்குவதற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு சித்ராவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாமியார் மருமகளுக்கு […]
திடீரென காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தினகுடி கிராமத்தில் ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற ராஜீவ் காந்தி மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பாத்திமா வீட்டில் இல்லாததால் ராஜீவ் காந்தி அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் ராஜீவ்காந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாத்திமாவை […]
குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சுவெளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் முத்துவாஞ்சேரி-அரியலூர் சாலையில் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள சோழமாதேவி கிராமத்தில் மிகவும் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு […]
திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. அதன்பிறகு 3 மணி நேரம் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இந்நிலையில் கடலை அறுவடை செய்யும் சூழலில் இருக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் […]
வியாபாரியின் வீட்டில் தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் அதிகாலை நேரத்தில் வீட்டை பூட்டாமல் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வந்தனர். அப்போது வீட்டில் இருந்த பெட்டி திறந்து கிடந்ததை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதில் […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த முதியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சம்பந்தம் மற்றும் முனியசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து […]