Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி பறிமுதல்..!!

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 70 வெள்ளிப் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உத்தம் சந்த் என்பவரிடமிருந்து, சுமார் 70 கிலோ வெள்ளிக் கொலுசு, வெள்ளிக் கட்டிகள் ஆகியவற்றை ஒரு கும்பல் வாங்கியுள்ளது. அதனுடன் நான்கு லட்சம் ரூபாயுடன் சேலம் செல்வதற்காக சவுகார்பேட்டையிலிருந்து ஆட்டோவில் (TN04 AF 6870) கோயம்பேடு வந்துள்ளார். மெட்ரோ அலுவலகம் அருகில் கே.பி.என். டிராவல்ஸ் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவ்வழியே ரோந்து சென்ற கோயம்பேடு காவல் துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குட்கா வைத்திருந்த இருவர் கைது.!!

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லிஸ் சாலையில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் அந்தப்பகுதியில், சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ. 5,000 மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் நாகேஷ், ராஜ்குமார் துபேவை கைது செய்தனர்.

Categories
சென்னை பல்சுவை

தங்கம் கிடுகிடு சரிவு…. ”1 பவுன் அதிரடி குறைவு” …. பொதுமக்கள் கொண்டாட்டம் …!!

தங்கம் விலை அதிரடியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 34 ரூபாயும், சவரனுக்கு 272 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 272 குறைந்து  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“துப்பாக்கி சூடு வழக்கு” குற்றவாளி விஜய் நீதிமன்றத்தில் சரண்….!!

சென்னை தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளியான விஜய் என்பர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் விஜய். இன்று வீட்டிற்கு  பாலிடெக்னிக் மாணவர் முகேஷ்  சென்றுள்ளார். இருவரும் நண்பர்கள்  என்பதால் வீட்டில் இருந்து இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது திடீரென்று வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டு உடனடியாக  அங்கிருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று  பார்த்த போது முகேஷ் தலையில் குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். இதையடுத்து குரோம்பேட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாதி மாறி திருமணம்…… இளைஞரை துடிதுடிக்க கொன்ற மர்மகும்பல்….. சென்னையில் பரபரப்பு….!!

சென்னையில்  சாதி மாற்றி  திருமணம் செய்ததால் இளைஞர் துடி துடிக்க கொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரத்தை அடுத்த கரப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் முரளி. இவர் பணி முடித்து விட்டு வருகையில் தேனீர் கடை ஒன்றில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட மர்ம கும்பல் தப்பி ஓடியது. படுகாயமடைந்த முரளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன் விரோதம்… துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுட்ட மாணவர்..!!

பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்களுக்கு இடையே இருந்த முன்விரோதத்தால் துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டதில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன்-பார்வதி தம்பதி மகன் முகேஷ் (19). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே ஊர் பார்கவி தெருவைச் சேர்ந்தவர் விஜய் (19). இருவரும் ஒரே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாயை காப்பாற்ற எண்ணி…… பெண்ணை கொன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது…….. சென்னையில் பரபரப்பு….!!;

சென்னை சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உறங்கியவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சென்ட்ரலிலிருந்து மூலபக்கம் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அஞ்சல என்ற பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கஞ்சா விற்பனை” தப்புடா தம்பி…… தட்டி கேட்ட ஓட்டுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….!!

சென்னை அருகே கஞ்சா பயன்படுத்தியது குறித்து தட்டிக் கேட்டவர் வீட்டிற்குள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில் அதே பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் முருகன். இவர் வீட்டின் மாடியில் இருந்த குடிசை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் குடிசை வீடு மற்றும் அதிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

+2 மாணவி பாலியல் பலாத்காரம்……. இளைஞன் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…….. சென்னையில் பரபரப்பு…..!!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை  திருமுல்லைவாயில் பகுதியை அடுத்த அரிக்கமேட்டுப் பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவன் பிளஸ்டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் வீட்டை விட்டு வருமாறு அழைத்த பொழுது மாணவி வர  மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த மாணவியை கடந்த மாதம் முப்பதாம் தேதி குருபிரசாத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலி…. 2 பேரை கைது செய்தது போலீஸ் …!!

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை இறந்த விவகாரத்தில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார். நேற்று மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது . இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மாஞ்சா நூல் காமராஜர் பகுதியில் இருந்து பறந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜ் என்பவரையும் ,  15 வயது சிறுவன் ஒருவனையும்  காவல்துறையினர் கைது செய்கிறார்கள். 2 பேரிடமும் காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட விடல…… பெட்ரோல் குண்டு வீசினோம்….. கைதான 3 பேர் பகீர் வாக்குமூலம்….!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை கோவில் தெரு மேற்கு மாட வீதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட பொழுது பொதுமக்கள் பார்த்து கூச்சலிட்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து  பெட்ரோலை திருடவிடாத ஆத்திரத்தில் அவர்கள் கடந்த 28ம் தேதி நள்ளிரவு அப்பகுதிக்கு சென்று தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் இருசக்கர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பஞ்சர் ஆன லாரி மீது மோதிய டூவீலர்…… கல்லூரி மாணவர்கள் 2 பேர் மரணம்….. சென்னையில் நிகழ்ந்த சோகம்…!!

சென்னை அம்பத்தூர் அருகே பாடி சாலையில்  பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த  பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிரசாந்த், சதீஷ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பின்  சனிக்கிழமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் காவலரிடம் அடிதடி…… அத்துமீறல் வழக்கு…… முன்னாள் காவல் ஆய்வாளர் கைது….!!

சென்னை ஆலந்தூரில் பெண் காவலரை அடித்து துன்புறுத்திய புகாரின் பேரில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  சென்னை ஆலந்தூர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் உமா மகேஸ்வரி என்பவருக்கும், டில்லிபாபு என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டில்லி பாபு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சமயத்தில்  சரிவர பணிக்கு வராததால் காவல்துறை சார்பில் அவருக்கு விருப்ப ஓய்வு கொடுத்து பணியில் இருந்து நீக்கி விட்டனர். இந்நிலையில் டில்லி பாபு காவலராக பணிபுரிந்து வரும்  உமா மகேஸ்வரியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசுப் பேருந்து லாரி மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 12 பேர் படுகாயம்..!!

சென்னையில் அரசுப் பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் பலத்த காயமடைந்தனர்.  சென்னை 200 அடி சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று பாடியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, கண்டெய்னர் லாரியின் பின்னால் நெல்லூரிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசுப் பேருந்து வேகமாக வந்தது. அப்போது, லாரியை முந்த அரசுப் பேருந்து முயன்றபோது நிலைதடுமாறி லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தின் நடத்துநர் வீரமுத்து (42) என்பவர் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் குழந்தை பலி……. 5 வகுப்பு மாணவி மரணம்……. சென்னையில் சோகம்…!!

சென்னை திருவொற்றியூரில் பள்ளி குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியை அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் அதிகமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் காய்ச்சல் சரியாகாமல் போக, மேற்கொண்ட சோதனையில் சிறுமிக்கு டெங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் போலீஸ் மீது கல்லெறிந்த இளைஞர் கைது….!!

காவல்துறை உதவி ஆய்வாளரை மதுபோதையில் கல்லால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளர். சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை(37). இவர் பணியில் இருக்கும் போது, அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக அரும்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் சென்று விசாரணை செய்யும் போது, போதை ஆசாமி ஒருவர் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கியதில் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தீபாவளிக்கு செம வேட்டை……. 17 மாவட்டங்களில்……. ரூ19,00,000 பறிமுதல்……. அரசு அலுவலர்களுக்கு ஆப்படித்த லஞ்ச ஒழிப்புதுறை…!!

தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்குவதாக அரசு ஊழியர்கள் மீது புகார்கள் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஆங்காங்கே பட்டாசு கடைகள் அமைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் பணம் பரிசுப் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல அரசு அலுவலகங்களுக்குள் திடீர் சோதனை நடத்தப்பட்டது. […]

Categories
சென்னை டெக்னாலஜி பல்சுவை மாவட்ட செய்திகள்

பழைய ஆயிலிலிருந்து……….. புதிய பொருள் கண்டுபிடிப்பு……. சென்னை ஐஐடி சாதனை…..!!

எந்திரங்கள் மற்றும் வாகனங்களில் உராய்வு காரணமாக ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் லூப்ரிகண்ட் ஆயிலை மறுசுழற்சி செய்து கிராபீன் என்ற புதிய பொருளை உருவாக்கி ஐஐடி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பொதுவாக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் இந்தியன் மற்றும் பிற பகுதிகளில் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கான லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது இந்த ஆயில் பயன்படுத்தப்பட்ட பிறகு அதனை மிக குறைந்த விலையில் வியாபாரிகள் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்தி நிறுவனம்தான் அதாவது வாயிலில் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அக்டோபர் 28” இறைச்சி கடையே இருக்க கூடாது……… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு……!!

வருகின்ற அக்டோபர் 28ம் தேதி மகாவீரர் நிர்வாண்  தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து ரசிகர்களையும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மகாவீரர் நிர்வான் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் என்றால் அனைவருக்கும்  ஞாபகம் வருவது என்னவென்றால் அவர் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்க மனதளவில் நினைக்காதவர். ஆகையால் தான் வாழ்நாள் முழுவதும் இறைச்சியை வெறுத்தவர். அவரது தினத்தில் சென்னையில் பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டாசு கடை போட ரூ1,00,000 லஞ்சம்……… தலைமை அதிகாரரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை அமைப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறை அதிகாரி ராஜேஷ்கண்ணா அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகத்தில் பணி புரியும் பலருக்கு லஞ்சம் பரிசுப்பொருட்கள் மூலமாகவோ பணம் மூலமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. ஆகையால் சென்னையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பின்னால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இயற்கை காதலன்” 35 வருடம்…… 350 வகையான மருத்துவ செடிகள்…… பட்டைய கிளப்பிய நபருக்கு மாநகராட்சி விருது….!!

சென்னையில் இயற்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குண செடிகளை 35 வருடங்களாக வளர்த்து வீட்டை பசுமைகுடிலாக மாற்றியுள்ளார் ஜஸ்வந்த்சிங். சென்னை முகப்பேர் அருகே வசித்து வருபவர் ஜஸ்வந்த் சிங். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த செடிகளை பராமரித்து வளர்த்து வருகிறார். மருத்துவச் செடிகளோடு, பழம், காய்கறிகளை வழங்கும் செடிகளையும் அவர் வளர்த்து வருகிறார். மேலும் வீட்டின் மாடியில் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி ரைடு” கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்…… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி….!!

அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனை நடத்தியதில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர் லாவண்யா தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொது மக்களிடமும் அலுவலர்களிடமும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் காட்டப்படாத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பொதுமக்களிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான குன்றத்தூர் சாலை…….. அச்சத்தில் வாகனம் ஓட்டி திரியும் வாகன ஓட்டிகள்….!!

குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ள போரூர் to குன்றத்தூர் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். சென்னை நகரத்தின் மிக முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படுவது போரூர் டு குன்றத்தூர் சாலை. இந்த சாலையை சென்னையைச் சுற்றியுள்ள நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறுகளத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சுத்திகரிப்பு குடிநீர் கொண்டு செல்வதற்காக கோவையில் பிரபல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்கிக்கோங்க …”கையும் , களவுமாக சிக்கிய ஆய்வாளர்” லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி …!!

வில்லிவாக்கம் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தீபாவளிப் பண்டிகையின் நெருங்குவதையொட்டி அரசு அலுவலர்கள் நன்கொடை பெறுவது , லஞ்சம் பெறுவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருக்கக்கூடிய தமிழழகன் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் காவல்நிலையம் வந்தனர். பின்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலில் ….. செல்போன் , பைக் ….. சிக்கிய தீபாவளி திருடர்கள் …!!

வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன், கைப்பை திருடும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் துணி வாங்குவதற்காக குவிகின்றனர்.அந்த நேரத்தில் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் அவர்களுடைய நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு போன்ற திருட்டுச் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்காக பழைய வண்ணராப்பேட்டை காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.மேலும் கூட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில்…. பக்கத்து வீட்டுக்குள் புகுந்த இளைனருக்கு தர்ம அடி..!!

அசோக் நகர் அருகே கஞ்சா போதையில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னை அசோக் நகர் அம்பேத்கர் குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் கைலாசம். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் லலிதா(35). கைலாசம் நேற்றிரவு ஆட்டோ ஓட்டச் சென்றபின், லலிதா தனது மகளுடன் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தனியாக இருந்த லலிதாவின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் கஞ்சா போதையில் ஒரு இளைஞர் வந்துள்ளார். அவரைக் […]

Categories
சினிமா சென்னை மாவட்ட செய்திகள்

“சினிமா ஆசை” கல்லூரி கட்டணம் ரூ1,20,000 மோசடி….. படிப்பை பாதியில் நிறுத்தி பரிதவிக்கும் மாணவன்….!!

கல்லூரி மாணவனுக்கு சினிமா ஆசை காட்டி ரூ1,20,000 பணத்தை தந்தை , மகன்  இருவரும் சேர்ந்து சுவாகா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ் எஸ் கண்ணன். இவர் சென்ற வருடம் நம்ம கதை என்ற தலைப்பில் தனது மகன் கவித்திறன், நிகாவித்திறன் ஆகியோரை வைத்து படம் ஒன்றை தயாரித்தார். அந்தப்படம் திரையரங்கில் ஓரிரு நாட்களே  ஓடிய நிலையில் ரூட் பொருள் போன்ற அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளதாகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”மழை வந்தாலும் பள்ளிக்கூடம் உண்டு” சென்னை மாவட்ட ஆட்சியர் …!!

சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுமென்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, செங்குன்றம், […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை….!!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொன்னேரி, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்க வீட்டுல கொசு இருக்கா…? ரூ10,00,000 அபராதம்….. சென்னை மாநகராட்சி அதிரடி…..!!

டெங்கு மலேரியா சிக்குன்குனியா போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ள கட்டிட  உரிமையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் சூழலில் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். என்னுடைய மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தப்பட்ட அபராதத் தொகை கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரச்சனை காதுல…… ஆப்ரேஷன் தொண்டைல…… அதிர்ச்சி அறுவை சிகிச்சை…… சென்னையில் பரபரப்பு….!!

சென்னையில் காதில் பிரச்சனை என்று  சென்ற சிறுமிக்கு மருத்துவர்கள் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காது மடல்களில் சிறிய கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை  அம்பத்தூரில் உள்ள சர் ஐவன் ஸஃபோர்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி அன்று சீரமைக்க தொடர் பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலைத்தில் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

சர்வதேச விமான நிலைத்திற்குக் கடத்தி வரப்பட்ட, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நபில் (24), சென்னையைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம்(35) ஆகியோரை சுங்கத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் தனியறைக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் வானிலை

மழை வந்தா என்ன ? ”விடுமுறை கிடையாது” மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு …!!

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி , சிவகங்கை , கோவை மாவட்டத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது .அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் , கோவை மாவட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோடி வந்த பின் சோதனை….. இனி ஒவ்வொன்னுக்கும் கட்டணம்…… அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டையைப் பார்வையிடவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று மாமல்லபுரம். இங்கு பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த கலைச் சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது.குறிப்பாக வெண்ணை உருண்டை பாறையை மக்கள் ஆர்வமுடன் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலில் திக்குமுக்காடும் தி.நகர்…… ஆங்காங்கே கேமரா…போலீஸ்…. தீவிரமாகும் தீபாவளி பணி…..!!

தீபாவளி பண்டிகைக்காக தி.நகரில் பொருள்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர். இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” மக்கள் 100% நீதி…… அரசு 100% அநீதி…… சென்னை கருத்தரங்கில் அதிரடி பேச்சு…!!

சென்னையில் கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் காஷ்மீர் 370 கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசினார். அதில்,காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்பட்டது உண்மை தான். ஆனால், அதை செய்தவர்கள் அங்கிருந்த அமைப்பைச் சார்ந்தவர்கள். ஈழத்தில் மக்கள் சாவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அமைப்புகள் என்று குறிப்பிடாமல் இஸ்லாமியர்கள் தான் பண்டிதர்களைக் கொன்றார்கள் என்று கூறுகிறார்கள். இதை நாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அத்தனை இறைச்சிகளும் ஒரே இடத்தில்…. இன்னும் கொஞ்சம் வேணும்…. புரட்டாசி மாத முடிவை கொண்டாடும் அசைவ பிரியர்கள்…!!

ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு மீன் வளத்துறை நடத்தும் மீன் உணவுத் திருவிழாவில், உணவுகளை ருசி பார்க்க அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அம்மாதம் முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அசைவு பிரியர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது மீன் உணவு திருவிழா. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு மீன்வளத்துறை நடத்தும் இந்த விழாவில் பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கஞ்சா கடத்தல் – இருவர் கைது ……!!

அண்ணா நகரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து சென்னை அடுத்துள்ள அண்ணா நகரில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர்களை திருமங்கலம் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பீர் என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து முகமது ரியாஸிடம் கொடுப்பது தெரியவந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொய் வழக்கு” இளம்பெண்ணை பூட்ஸ் காலால் உதைத்து டார்ச்சர்….. ரூ3,00,000 அபராதம்….. மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு…!!

பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்கிய கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பார்வதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பூட்ஸ் கால்களால் தாக்கி, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் கனகராஜ், உதவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவுற்றேன்…. நம்பி வந்தேன்…. கருவை கலைத்து , மீண்டும் கற்பமாக்கினான் ….!!

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழை தொடக்கம்” சென்னைக்கு நெருங்கும் ஆபத்து…… பீதியில் சென்னை வாசிகள்….!!

வடகிழக்கு  பரவுமழையால் சென்னையில்  வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால் சென்னை வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.  சென்னை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் சென்னை தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் ஆபாச வீடியோ….. வாட்ஸ் அப்பில் பரப்பிய இளைஞர்கள்…. சென்னையில் சிபிஐ திடீர் சோதனை….!!

குழந்தைகளின் ஆபாச காணொலிகளை பரப்பியதாகச் சென்னையைச் சேர்ந்த இருவரது வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். ஜெர்மனியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பெயரில் ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதையும் காணொலிகளாக எடுத்து அதை 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1கோடி கொடு 2 ஆக மாத்தி தாரேன்…”கமிஷனுக்கு ஆசை” ரூ80,00,000 மோசடி….. பணத்தை இழந்து தவிக்கும் பேன்ஸி ஸ்டார் ஓனர்…!!

சென்னை வேப்பேரியை சேர்ந்த தினேஷ் என்பவர் அதே பகுதியில்  ஒப்பனை மற்றும் பேன்சி பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.  அவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகமது என்பவர் நேரில் சந்தித்து  தமக்கு தெரிந்தவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 100 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், அதை 500 மட்டும் 2,000 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் இரண்டு விழுக்காடு கமிஷன் கிடைக்கும் என்றும்  ஆசை வார்த்தை கூறியுள்ளார். கூடுதல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தினேஷும் 80 லட்சம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை பிரபல பிரியாணி கடை சிக்கனில் புழு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!

சென்னை அருகே சிக்கன் பிரியாணியில் புழுக்கள் இருந்ததால் சிக்கன் கடை உரிமையாளர் மீது நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை  ஆவடி அடுத்த திருநின்றவூரில் 99 பிரான்ஹிட் என்ற ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணி ஒன்றில்   சிக்கனில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் சிக்கனில் புழு இருந்ததை படமெடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் இரட்டைக்கொலை” கண்டிப்பால் ஏற்பட்ட விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சென்னையில்  6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரை ஒரே நேரத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டிபன் இவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். இவரது நண்பர் ஆனந்த் இவர் இந்திரா நகரைச் சேர்ந்தவர். நெருங்கிய நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெரும்பாக்கத்தில் உள்ள மதுபான கடை ஒன்றுக்கு சென்று மது வாங்கி சற்று தொலை தூரம் சென்று அவர்களது சொந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” 1 வாரம்…… 100 பேர்….. ரூ25,00,000 மோசடி….. 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது…!!

சென்னையில் மோசடி  கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள்  ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு  கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை….. காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னையில் நர்சிங்  மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் பகுதியை அடுத்த அண்ணாமலை நகர் ராஜுவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மகள் நந்தினி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரம் வீட்டில் தனது அறையில் நந்தினி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் உறங்குகிறாள் என்று அவரது பெற்றோர் அவரை எழுப்ப […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்க , வாங்க ….. ”நிலவேம்பு கசாயம் கொடுத்த போலீஸ்” குவியும் பாராட்டு ….!!

சென்னை துரைப்பாக்கத்தில் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் போக்குவரத்து காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு கிடைக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் வரை காவல் துறையினரை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான குழு, சாலையில்  சிக்னலில் போது நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வந்துள்ளார். காவல்துறையினரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்…. “அம்மாவ பாத்துக்கோ நண்பா” வைரலாகும் ஆடியோ…!!

சென்னை மாதவரம் அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பொன்னிஅம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரக்கூறி வற்புறுத்தியதாகவும், ஆகையால் நான் சாக  போவதாகவும் தனது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்…… பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்….!!

உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டிர்கள் என்று சுப ஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதால் அவர் உடல் நசுங்கி பலியானார். இதையயடுத்து பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் […]

Categories

Tech |