வடபழனி பணிமனையில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வறையின் அருகே உள்ள பேருந்து பழுது பார்க்கும் இடத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியது. இதில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர்கள் சேகர், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் […]
Category: சென்னை
சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது… சென்னையில் சமீபகாலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் மெட்ரோ வாட்டர் நிறுவனம் டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசியின் வாயிலாகவோ வரும் […]
இனி தவறு செய்யமாட்டோம் என்று ரூட் தல என்ற பெயரில் இனி குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் முன்பு உறுதி மொழி எடுத்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அரசு பேருந்தில் கத்தியால் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை முழுவதும் ரூட்டு தல என்ற பெயரில் அராஜகம் செய்து வந்த 90 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இனி எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் […]
மாதவரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் …..!!!! சென்னை மாவட்டம் ,மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரரில் உள்ள எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேந்தவரான சீனிவாசன்,கடந்த 16-ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தினார். மறு நாள் காலையில் தனது வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸில் புகார் அளித்தார். புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா […]
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம் 5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 14ம் தேதி அன்று 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் நிரப்ப பணம் தர மறுத்து கத்தியுடன் ரகளை செய்ததோடு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பொது மக்கள் மத்தியில் பயமின்றி பட்டாகத்தியை எடுத்து மீரட்டியவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் தைரியத்துடன் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு […]
சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த […]
சென்னை நெற்குன்றத்தில் காதல் கணவரை முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் தனது தோழியுடன் கைதாகி உள்ளார். சென்னை நெற்குன்றத்தை அடுத்த சக்தி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நாகராஜன் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு சண்டை ஏற்படவே, காயத்ரி […]
சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் டாக்டரிடம் 30 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்துள்ள ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்த பெண் டாக்டர் (வயது 28). திருமணமான இவர் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கோரிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெண் டாக்டருக்கும், பட்டாபிராம் பகுதியை […]
சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியார் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். இந்த மாரத்தான் போட்டியின் மூலம் கிடைக்கும் தொகையில் உடல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால், உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் என நிகழ்ச்சி […]
சென்னையில் 60லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த நந்தினி , அருள்ராஜ் தம்பதியினரின் 3 வயது மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தம்பதியினர் பணிக்கு சென்று வருவதால் சிறுமியை பராமரிப்பதற்கு பணிப்பெண்ணாக அம்பிகாவை நியமித்துள்ளனர் . இந்நிலையில் பணிப்பெண் அம்பிகாவிடம் சிறுமியை விட்டுவிட்டு நந்தினி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் […]
சென்னை நந்தனம் அருகே மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்த சுதா, நாகலெட்சுமி, பவானி ஆகிய மூவரும் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து, எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று காலை 9 மணி அளவில் ஒரே பைக்கில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்கள் பேருந்தை […]
சென்னை அருகே எஸ் ஆர் எம் கல்லூரியில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற மாணவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இளைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வாடகைக்கு அரை ஒன்றை எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீ ராகவ் கல்லூரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து […]
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தாம்பரம் அற்புதம் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் , இவர் தனது வீட்டிற்கு அருகே சேலையூரை சேர்ந்த சுரேஷ் என்ற நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளது.இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற தாம்பரம் காவல்துறையினர் […]
சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று இரவு சென்னை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் சில மர்ம கும்பல் பட்ட கத்தியுடன் வந்து அங்கிருந்தவர்களை சரமாரிய தாக்கினர். இது குறித்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர். ஆனால் அனைவரும் முகத்தில் துணி கட்டிருந்ததால் காவல்துறையினரால் அடையாளம் காண இயலவில்லை. இதையடுத்து சென்னையை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர பரிசோதித்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அய்யப்பா திரையரங்கம் […]
சென்னை வேளச்சேரி அருகே ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய என்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அறப்போர் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தன்னார்வலர்கள் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி , ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேளச்சேரி அருகே கல்லுக்குட்டை ஏரியில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று அறப்போர் இயக்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கு வந்த […]
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட தண்ணீர் ரயில் 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை வில்லிவாக்கத்தை வந்தடைந்தது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில்,காலை 7 மணியளவில் மாலை அலங்காரங்களுடன் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னை […]
ஜோலார்பேட்டையிலிருந்து 50 வேகனில் தண்ணீர் நிரப்பப்பட்ட ரயில் மாலை அலங்காரங்களுடன் சென்னைக்கு புறப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று முடிந்தது. பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்த நிலையில், 50 வேகனில் தலா 54,000 லிட்டர் என மொத்தம் 27 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து குடிநீர் முழுவதும் நிரப்பப்பட்டதும், ஜோலார்பேட்டையிலிருந்து அலங்காரங்களுடன் ரயில் […]
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசின் அவசர திட்டங்களுக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்த வெளிப்படைத்தன்மை,மறுவாழ்வு மற்றும் நியாயமான இழப்பீடு சட்டம் 105 ஆவது பிரிவின்படி புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசின் இச்சட்டத்தை தொடர்ந்து மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தும் வகையிலும் நெடுஞ்சாலைகள் சட்டம்,தொழில் பயன்பாட்டிற்கான சட்டம்,ஹரிஜன் நல சட்டம் போன்ற […]
சென்னை போரூரில் ஏசியில் தீ பிடித்ததால் புகை மூட்டத்தில் சிக்கிய தம்பதியினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை போரூரில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக ஏசியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய தம்பதியினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தம்பதியினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களின் இரண்டு மகன்கள் எந்த வித காயமுமின்றி உயிர்தப்பினர். ஏற்கனவே சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த […]
சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே சேலையூரை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் நியூஸ் ஜே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் நள்ளிரவு நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவருடன் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் பூஜை அறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக […]
தற்போது சென்னையில் பல பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது பருவமழை பொய்த்ததால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மக்கள் தண்ணீரின்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், தென்மேற்கு வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்கும் என்றும், நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை […]
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் கரூர் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் […]
சென்னை புரசைவாக்கம் கோவிலில் மழை வேண்டி , தேவாரம் பாடி யாகம் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீருக்காக மக்கள் வீதிகளில் அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மழை வேண்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் முதல்வர் துணை முதல்வர் […]
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு, ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் கடந்த 14-ம் தேதி இரவு 8 மணி அளவில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த கூட்டுறவுத்துறை ஊழியரான தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் […]
சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் , பாஜக மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற யோகா தினத்தை பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யோகாசனம் செய்து கொண்டாடி வருகின்றனர்.நாட்டின் பல்வேறு இடங்களிலும் , பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற […]
நுங்கப்பாக்கம் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் சீனிவாசன் என்ற காவலர் போதையில் அங்குள்ளவரை அடிப்பதாக கூறி பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். காவல்துறை மக்களின் நண்பன் எனபர்கள்.ஆனால் அதே முழுமையாக பொருந்தாமல் போவதுதான் வேதனையின் உச்சமாக இருக்கின்றது. சமூகத்தை பொறுப்புள்ளதாக கட்டமைக்கும் பொறுப்பு, பாதுகாக்கும் பொறுப்பும் காவல்துறை அதிகாரிகளையே சாரும் . சில நேரங்களின் அவர்களின் செயல்பாடுகள் தான் பொது மக்களையே முகம் சுளிக்க வைக்கிறது. காவல் அதிகாரிகளின் இந்த செயல் சட்டத்தை பாதுகாக்கும் அவர்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் குடித்து […]
சென்னையில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குண்டடிபட்டு 10 நாட்கள் கழித்து ரவுடி செந்தில் மருத்துவமனையில் அட்மிட்டாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு தரப்பு ரவுடி கேங்குகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ரவுடிகள் நாட்டு துப்பாக்கியை வைத்து துப்பாக்கிசூடு நடத்தி சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையில் ஒரு ரவுடி குண்டடி பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த ஜூன் 8ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் கழித்து குண்டடி பட்ட ரவுடி […]
தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை சென்னை தற்போது சந்தித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மக்கள் தொகையானது இருந்துவருகிறது ஆகையால் சென்னையில் நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ஆனால் தற்போது அது குறைந்து வெறும் 525 லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சத்தை […]
போலி விமான டிக்கெட்டை தயாரித்த சீன இளைஞரை காவல்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சீனாவைச் சேர்ந்த கலிஸூ என்ற இளைஞர் சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டை வைத்திருந்ததால் சந்தேகத்திற்கு உட்பட்டு விமான நிலைய காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ஹாங்காங் செல்லவிருந்த தனது காதலிக்கு போலி விமான டிக்கெட் அவரே தயார் செய்ததாக தெரியவந்துள்ளது . போலி விமான டிக்கெட் தயார் செய்ததன் […]
சென்னை எண்ணூரில் ரவுடிகள் இடையேயான மோதலில் துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷ் கைது செய்யப்பட்டார். சென்னை எண்ணூரில் ஒரு வாரத்திற்கு முன்பு ரவுடி ரமேஷ் மற்றும் செந்திகுமார் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் செந்தில்குமாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது இடுப்பு பகுதியில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தேடி வந்த போலீசார் எண்ணூரில் இன்று ரவுடி செந்தில் குமாரை சுட்ட ரவுடி ரமேஷை கைது செய்தனர். ரவுடி […]
சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் சென்னையில் பிரபல ரவுடி வல்லரசும் அவனது கூட்டாளிகளும் எம்.எம் கார்டன் பகுதியில் அரிவாளுடன் அட்டகாசம் செய்வதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வியாசர்பாடி காவல்நிலைய போலீசார் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் வல்லரசை பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவலர் பவுன்ராஜை வல்லரசு அரிவாளால் வெட்டினார். உடனே படுகாயமடைந்த காவலரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மாதவரம் […]
சென்னை ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவன் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்பெண்ணை வெட்டினான். கழுத்தில் காயம் பட்ட அப்பெண் கீழே விழுந்தார். இளம்பெண்ணை வெட்டிய பிறகு அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் […]
தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணின் முகத்தில் வெட்டிய சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரத்தை அடுத்த அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுபாஷினி மற்றும் மோகன் இவர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் இவர் தலைமைச் செயலக பணியாளர் மற்றும் சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார் […]
சென்னை நுங்கப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு வரமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பல இடங்களில் ஓட்டல்களிலும் உணவு சமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் கடந்த ஒரு வாரமாக முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு வாரமாக எந்த உணவும் சமைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் குடிநீர் காரணம் […]
வறட்சியால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் கொடூர தாக்கத்தினால் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வறட்சியால் விவசாயிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். முக்கியமாக காய்கறிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிக குறைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் […]
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று உயிரியல் பூங்கா நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உயிரினங்களை காண வருகின்றனர். இதன் படி கோடை காலங்களில் அதிகப்படியான பார்வையாளர்களை கவரும் விதமாக ஒரு சில புதிய உயிரினங்களையும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிமுகம் செய்தது. இதனை அடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சலுகை திட்டம் ஒன்றை வண்டலூர் உயிரியல் பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. […]
காவல்துறையினர் ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் . தற்பொழுது ஹெல்மெட் கட்டாயமாக போடும் சட்டமானது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் ஹெல்மெட் போடாமல் இருப்பது மக்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சென்னையில் காவல் துறையில் பிறர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஹெல்மெட் […]
புகையிலை போடுவது குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார் . புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போஸ்டர்கள் போன்றவை வெளியிடப்பட்டன புகைப்பழக்கம் குழந்தை இன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறினார். இதை தடுக்க சுகாதாரம் மற்றும் கல்வி துறை […]
ராகுல் காந்தி பதவி விலக கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அனுமதியின்றி பேரணி நடத்தியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மக்களவை தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின . இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக […]
எளிதாக ஆங்கிலம் பேச சென்னையில் பிரபல ஆசிரமத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது . சென்னையில் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் ஆங்கிலம் பேச வைப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஜூன் 13க்குள் தங்களது பெயரை உன் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜூன் 16 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த பயிற்சி […]
சென்னை கோட்டூர்புரத்தில் பண பைகளை வீசி சென்றது மர்ம நபர் யார் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கோட்டூர்புரம் அருகேயுள்ள வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் சதேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சுற்றி வருவதாக சொல்லப்பட்டதைஎடுத்து போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்றிரவு சுமார் 2.30 மணியளவில் சந்தேகப்படும் அந்த நபர் போலீஸ் கண்களில் சிக்கியதால் அவரின் வாகனத்தை நிறுத்த போலீசார் முயன்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட அந்த நபர் போலீஸ் நிறுத்தியும் […]
காய்கறி விலை வழக்கத்தை மீறி 50% உயர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் . காய்கறிகளின் வரத்து குறைந்ததன் காரணமாகவும், கோடை காரணமாகவும் கோயம்பேடு சந்தையில் புடலங்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் தக்காளி உள்ளிட்ட நாட்டு வகை காய்கறிகளின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ கணக்கின்படி காய்கறிகளின் விலை தக்காளி ரூ60, பீன்ஸ் ரூ110, இஞ்சி ரூ140, பச்சை மிளகாய் ரூ55, மற்றும் பெரிய வெங்காயம்ரூ18 ஆக உயர்ந்துள்ளது காய்கறிகளின் விலை உயர்வால் […]
சென்னையில் பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா இவர் ஐயப்பாட்டை ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முஸ்தபாவின் கடையில் ஷட்டரை உடைத்து 3 பேர் கொண்ட கும்பல் கடையின் உள்ளே இருந்த 94 ஆயிரம் பணம் மற்றும் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் கடைகளில் […]
தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள், பீர்க்கன்காரணையில் நேற்று ஆய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 400 க்கும் அதிகமான பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ் குமார் மற்றும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய மோட்டார் வாகன சட்டம் 2012ன் விதி படி வாகனத்தில் முதல் […]
அண்ணாநகர் பணிமனையில் ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகர், சத்யாநகர், 2வது தெருவில் வசிப்பவர் உமாபதி ( 52 வயது). இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவர் வழக்கம் போல் நேற்று காலை பேருந்தை எடுப்பதற்காக அண்ணாநகர் பணிமனைக்கு சென்றார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். உடனே அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என […]
தேர்தல் காலங்களில் நடந்த முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை அடுத்த ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி இவர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆவார் இந்நிலையில் தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளின் போது இவருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து தன்னை தாக்க முயற்சி செய்வதாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தெய்வசிகாமணி காவல் நிலையத்தில் […]
சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை முக்கிய மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. மாதம் ஒருமுறை மின்சார இணைப்பின் பராமரிப்பில் மின் சேவை நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மேலும் அதன் பராமரிப்பு பணிகளை சீர்படுத்திவிட்டு மீண்டும் அதின் சேவையை தொடர்வார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ளசோத்துபெரும்பெடு,சிறுனி,சோழவரம் பகுதி, காரனோடை ஆத்தூர் & தேவநேரியம் & ஆங்காடு, ஓரக்காடு & புதூர், கிண்டி : தொழிற்பேட்டை […]
சென்னை மெரீனா கடற்கரையில், அரிய வலம்புரி மற்றும் மாட்டு சங்குகளை சட்டவிரோதமாக விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினர், மெரீனா கடற்கரை பகுதியில், தடைசெய்யப்பட்ட அரிய வகையான சங்குகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி , ஆய்வு செய்தனர். அப்போது அரிய வகை வலம்புரி மற்றும் மாட்டு சங்குகள் விற்பனை செய்யப்பட்டதை உறுதிசெய்து 136 சங்குகளை பறிமுதல் செய்தனர் . சங்கு விற்பனை செய்த 3 பேரை கைது செய்து,போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் , செயற்கையாக சுண்ணாம்புக் […]
சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கப்போவதாக வந்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது இதனையடுத்து தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் குறிப்பாக சென்னை மதுரை விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் மேலும் இலங்கையில் இருந்து வரக்கூடிய […]
விரோதமும் துரோகமும் அதிமுகவிற்கு எதிராக ஒருங்கிணைத்துள்ளது என்று ஸ்டாலின் மற்றும் ttv தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புதிய ஆட்டோ சேவையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்டோவை சிறிது தூரம் ஓடிச்சென்று தொடங்கிவைத்தார் இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது ஆனால் […]