Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவ ஊர்வலத்தில் சண்டை…. போலீஸ்காரர் மனைவியை தாக்கிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை மாதவரம் பிருந்தா வனம் கார்டனில் வசித்து வருபவர் கோடீஸ்வரன் (32). இவர் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி யுவஸ்ரீ (24) என்பவருடன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னையன் தெருவிலுள்ள யுவஸ்ரீயின் தாய் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது எதிரே சவஊர்வலம் வந்ததால் கோடீஸ்வரன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தினார். அந்த சவஊர்வலத்தில் வந்த ஒருவர் கையிலிருந்த மாலையை கோடீஸ்வரனின் மோட்டார்சைக்கிள் மீது போட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை வாசிகளே!…. குப்பைகளை தரம் பிரித்து தந்தால் பரிசு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி துவக்கவிழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று “என் குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் எனும் போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். இதையடுத்து மேயர் தன் வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்த தன் புகைப்படங்களை இப்போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காதில் ஹெட்செட்…. சிறிய கவனக்குறைவால் ஐடி ஊழியர் பரிதாப மரணம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே விஜய் (27) என்பவர் நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தை கடந்து வீட்டிற்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. விபரீதமான ஆப் மோசடி…. 11 ரூபாய் மின் கட்டணம்…. 95 ஆயிரம் அப்பேஸ்…. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் செல்போனில் வந்த ஆப்மூலம் 11 மின்கட்டணம் கட்டி முடிந்தவுடன் பெண் மருத்துவரிடம் 95 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் மகேந்திரன் மற்றும் ஷோபனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். சோபனா தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ம் தேதி அன்று வீட்டில் இருந்துள்ளார். அப்போது மதியம் 12 மணியளவில் அவரது செல்போனில் நம்பர் ஒன்று வந்துள்ளது. அதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் வேலை நிறுத்த போராட்டம்… கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வாபஸ்…!!!

சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை உரிய இடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்பட லாரிகளுக்கு 80% வாடகை உயர்த்தி தரவேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்களுடன் சென்னை துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடப்பாவி…. கேமரா பொருத்தி மனைவியை கண்காணித்த கணவர்…. போலீசில் பெண் இன்ஜினியர் புகார்….!!!

சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் சந்தியா(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். இவர் வளசரவாக்கம் அனைத்தும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் 2011 ஆம் ஆண்டு வடபழனி சேர்ந்த சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு சஞ்சய் அவர் தோழியுடன் நெருங்கி பழகியதால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 13 மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!

சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு இடையில் 13 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுஎன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையில் இரவு 10 மணி, 10.20, 11 மணி, 11.20, 11.40, மற்றும் 11.59 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடற்கரை-செங்கல்பட்டு இடையில் இரவு 10.40 மணி, தாம்பரம்-கடற்கரை இடையில் இரவு 10.25 மணி, 10.45, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து.. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுனர்… பெரும் பரப்பு….!!!

சென்னை போரூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் தாம்பரம் கூட்டுச்சாலை அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பஸ்ஸில் முன்புற டயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து சுதாகரித்த கொண்ட டிரைவர் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் முன்புறம் கருப்பு புகையுடன் தீ பற்றி எரிந்தது. வெப்பத்தின் தாக்கத்தில் பஸ் கண்ணாடிகள் வெடிக்க தொடங்கியது. அந்த வழித்தடத்தில் வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த கார்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியின் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தாயின் கடைசி ஆசை….! நிறைவேற்றி வைத்த மகள்கள்….. பெரும் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

உடல் நலக்குறைவு காரணமாக இறந்த தங்களது தாயின் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர் அவரது மகள்கள். திருவொற்றியூர் ராமானுஜம் நகர் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த மீனா என்பவர் அச்சகத்தொழில் நடத்தி வருகிறார். இவரது கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த மீனா சிறுநீரகம் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார் . […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: பள்ளி தேர்தல் திருவிழா…. வகுப்பு தலைவியை தேர்ந்தெடுக்க ஓட்டுப் போட்ட மாணவிகள்….!!!!

சென்னையை அடுத்துள்ள மணலியில் டாக்டர் சிவந்திஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவிகளுக்கு இடையே ஒரு தலைமையை நிர்ணயம் செய்ய மற்றும் தேர்தல், ஓட்டுரிமை பற்றி பள்ளி பருவத்திலேயே அவர்கள் தெரிந்துகொள்ள வசதியாக “பள்ளி தேர்தல் திருவிழாவானது” நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியையான ஜெகஜோதி முன்னிலை வகித்தார். இதையடுத்து நாடார் உறவின் முறை மூத்த உறுப்பினர் சவுந்திரபாண்டி தேசியகொடி ஏற்றினார். சமத்துவம் மக்கள் கட்சி மாவட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காணாமல் போன சாலையை கண்டுபிடித்து தாங்க”…. வினோத புகார் கொடுத்த நபர்…. பரபரப்பு…..!!!!

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (54). இவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது “சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூரிலுள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலைகள் தொடர்பாக தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டேன். அதற்கு அம்பத்தூர் செயற்பொறியாளர் சார்பாக பதில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதாவது , அந்த சாலைகள் சென்ற பிப்ரவரி மாதம் போடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆகவே போடாத சாலையை போட்டதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துப்புரவு பணியின்போது இறந்த 2 தொழிலார்கள்…. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்ற மாதம் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர் எந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றிவந்தனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்ற கட்டாரி (26) எந்திரத்தின் துளையில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயற்சி செய்த மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரும் (35) எந்திரதுளையில் தவறிவிழுந்தார். இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சூழ்நிலையில் அந்த 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் பணத்தை தந்திடுங்க”…. தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அஜித்குமார் (24). இவர் சென்னை ஆவடி அடுத்த மோரை ராகவேந்திரா நகரில் உள்ள ஒரு கடையை ரூபாய் 6 லட்சம் கொடுத்து லீசுக்கு எடுத்து சென்ற 8 மாதமாக பேக்கரி கடை நடத்தி வந்தார். இதனிடையில் சென்றசில மாதங்களாகவே கடையில் சரியாக வியாபாரம் நடைபெறவில்லை. இதன் காரணமாக அஜித்குமார் கடையை மூடிவிட நினைத்தார். அதன்படி அஜித்குமார் நேற்று காலை கடை உரிமையாளர் சுந்தரிடம் தான் லீசுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு” அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!!

பொதுமக்கள் திடீரெனபோராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டேன்” நீட் தேர்வினால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனை…. டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை….!!!

வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள வேளச்சேரியில் குருநானக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த பாடப்பிரிவினையை தேர்ந்தெடுப்பது, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

13 மின்சார ரயில்கள் இன்று(ஜூலை 8) ரத்து…. பயணிகள் தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

சென்னை எழும்பூர்-விழுப்புரம் மார்க்கத்தில், கிண்டி யார்டில்பொறியியல் பணி நடைபெறவுள்ளதால் 13 மின்சார ரயில்கள் இன்று (ஜூலை 8) ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு இரவு 10.25, 10.45, 11.25, 11.45 மணி ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு இரவு 10.15,11.00 மணி ரயில்கள் ரத்தாகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு இரவு 10.00, 10.20, 11.00,11.20, 11.40, 11.59 மணி ரயில்களும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு இரவு 10.40 மணி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை வாசிகளே…..! போக்குவரத்து மாற்றம்….. எந்தெந்த பகுதிகளிலினு தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பெருகி வரும் வாகன போக்குவரத்து காரணமாக காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாகத் திருப்பிவிடப்படும் எனவும், இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நேற்று ஒரே நாளில்….. “முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்”……!!!!!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரை கொலை செய்த மனைவி…. குடிபோதையில் உயிரிழந்ததாக நாடகம்…. சென்னையில் பரபரப்பு….!!!

கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலைப் பார்க்கும் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் 2 பேரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிஸ்கட் வாங்க சென்ற 4 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் சோக சம்பவம்….!!!!

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரின் மனைவி நீலாம்பரி மூன்றாவதாக கர்ப்பமாகியுள்ளார். இதை எடுத்து அவர் பிரசவத்திற்காக எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இவரின் மூத்த மகன் நான்கு வயது பிரிண்ஸ் பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளான். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த புருசோத்தமன் மகனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பையை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் சேகர் (50) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் குப்பைகள் அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் அடையாறு மண்டலம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின் தெருவில் குப்பை தொட்டியை தூய்மை செய்துகொண்டு இருந்தார். அப்போது புதைமின் வட கேபிள் சரியாக புதைக்கப்படாததால் தூய்மை செய்தபோது சேகருக்கு மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கிவீசப்பட்ட சேகர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனே அங்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…… காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இன்று செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு இன்று காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜாஜி சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடடே சூப்பர்….. புற்றுநோய் உருவாக்கும் அணுக்களை கண்டறியும் கருவி…. சென்னை ஐஐடி அதிரடி….!!!!

புற்றுநோய் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தியில், பொதுவாக புற்றுநோய் என்பது கட்டுப்படுத்த முடியாத ஜீன்களால் உருவாகும் ஒரு ஆபத்தான நோய். இதன் அணுக்கள் பல்கி பெருகுவதால் நோயாளிக்கு கடும் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் புற்றுநோயை உருவாக்கக்கூடிய அணுக்களை முன்கூட்டியே கண்டறியக்கூடிய செயற்கை அறிவு கருவியை சென்னை ஐஐடி கெமிக்கல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கருவியானது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் நாளை செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நாளை காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜாஜி சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லிப்ட் சரியா வொர்க் ஆகல” அடித்து உதைத்த ஸ்விக்கி டெலிவரி பாய்…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை அடுத்த பெருகம்பாக்கத்தில் ஒரு தனியார் குடியிருப்பில் வளாகத்தில் 500 குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி பாய் ஒருவர் சம்பவத்தன்று உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட் சரிவர இயங்காததால் எமர்ஜென்சியை டெலிவரி பாய் அழுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வெளியில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஒடிசாவை சேர்ந்த 33 வயதான பிரதீப் குமார் ராவத் லிப்ட்டை சீக்கிரம் திறக்கவில்லை என்பதால் டெலிவரி பாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டி காரை நிறுத்திய மர்ம கும்பல்…. ஓட்டுனரிடம் வழிப்பறி…. சென்னையில் பரபரப்பு…!!

கார் ஓட்டுநரிடம் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயில்-தாம்பரம் பைபாஸ் ரோட்டில் போரூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவர் சாலையில் வரும் ஒரு காரை நிறுத்தி தனக்கு லிப்ட் தருமாறு கேட்டுள்ளார். உடனே கார் ஓட்டுனரும் அந்த இளம் பெண்ணை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல் கார் ஓட்டுனரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு வர வேண்டிய விமானம்…. துருக்கியில் தரையிறங்கியதால் பரபரப்பு…. 3 மணி நேர தாமதத்தால் பயணிகள் அவதி…!!!

விமானம் தாமதமானதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்பர்ட் நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் 292 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்னையை நோக்கி கிளம்பியது. இது இரவு 11.50 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடையும். ஆனால் திடீரென சென்னைக்கு வரவேண்டிய விமானம் துருக்கியில் தரை இறங்கியுள்ளது. அங்கிருந்து மீண்டும் கிளம்பிய விமானம் அதிகாலை 2:55 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலகின் 2-வது பழமையான கண் மருத்துவமனை…. 203 ஆண்டுகள் நிறைவு…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்…!!!

பழமையான கண் மருத்துவமனை குறித்த சில  தகவல்களை பார்க்கலாம். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் கடந்த 1809-ம் ஆண்டு மார்பீல்டு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை கடந்த 1819-ம் ஆண்டு சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையை டாக்டர் ராபர்ட் ரிச்சஸ்டன் என்பவர் தொடங்கினார். இந்த மருத்துவமனையானது தற்போது எழும்பூரில் இருக்கிறது. இந்த மருத்துவமனையை ஆங்கிலேயர் ஆட்சி முடிவடைந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது உலகின் 2-வது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் மாத்தி யோசி” சிரட்டையில் டீ கப்…. அசத்தும் டீ கடை உரிமையாளர்….!!!!

சென்னையைச் சேர்ந்தவர் தினகரன் இவர் சென்னையில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு ஏராளமான நபர்கள் டீ குடிக்க வருவது வழக்கம். எனவே வாடிக்கையாளர்களை கவர ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று யோசித்தார் தினகரன். பெரும்பாலும் டீக்கடைகளில் கண்ணாடி டம்ளர்களில் தான் டீ கொடுக்கப்படும். ஆனால் இவர் அதை மாற்றி யோசித்து கண்ணடியுடன் ஒப்பிடுகையில் சிரட்டை தான் இயற்கையானது என்பதனால் சிரட்டையை டீ கப்பாக பயன்படுத்துகிறார். இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூலை 6) முதல் அமல்…. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய செய்தி குறிப்பில், பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும்போது தவறாமல் முக கவசம் அணிந்து சமூக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. 7-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோனிகா(11) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சோனிதாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண் நோயாளி…. தூய்மை பணியாளர் செய்த வேலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் 49 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் கடந்த மாதம் 27-ந்தேதி சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த 30-ந்தேதி அறுவை சிகிச்சை முடிந்து இரவு படுக்கையில் இருந்த பெண்ணிடம், தூய்மை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை TO எத்தியோப்பியா…. இனி நேரடி விமான சேவை…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானம் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் சேவையை துவங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா காலத்திற்கு முன்னதாக பயணிகள் விமான சேவையை துவங்க திட்டமிடப்பட்டது. எனினும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் எத்தியோப்பியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் குளிக்க சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அய்யாசாமி தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்ரப் அலி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சாந்தோம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அஷ்ரப் அலி தனது நண்பரான டேனியல் என்பவருடன் வெற்றி நகர் அருகே இருக்கும் மெரினா கடற்கரை குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கடலில் குளித்து கொண்டிருக்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி ஆன்லைனில் சொத்து வரி செலுத்தினால்…. கேஷ்பேக், சினிமா டிக்கெட்?…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தினால் குறிப்பிட்ட வங்கிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ் பேக், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை தற்போது சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த ஜூன் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் தபால் மூலமாக வழங்கப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை (ஜூலை 5) முதல் ஜூலை 8 வரை மின்சார ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

சென்னையில் தாம்பரம் மற்றும் கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11:25 மணி, 11.45 மணிக்கு புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றது. அதனைப் போலவே மறுமார்க்கமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை(ஜூலை 5)…. காலை 9-2 மணிவரை….. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!

சென்னையில்  நாளை(ஜூலை 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், ஆவடி, வேளச்சேரி, அடையாறு, வியாசர்பாடி, கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் பகுதி : முண்டக்கண்ணியம்மன் கோயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்துவரி: ஆன்லைன் மூலம் செலுத்துவோருக்கு சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொது சீராய்வு அறிவிப்புகள் தபால்துறை வாயிலாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது. சென்ற மாதம் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் அதிகமான சொத்து உரிமையாளர்களுக்கு பொதுசீராய்வு அறிவிப்புகள் சார்வு செய்யப்பட்டு உள்ளது. முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துவரி போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது பொது சீராய்வின் அடிப்படையில் சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தாம்பரம்-கடற்கரை இடையில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “பராமரிப்புபணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் “தாம்பரம்-சென்னை கடற்கரை இடையில் இரவு 10:;25 மணி, 11:25 மணி மற்றும் 11:45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை -தாம்பரம் இடையே இரவு 11:20 மணி, 11:40 மணி மற்றும் 11:59 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் நாளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியும் போதைப்பொருள் கடத்துறீங்களா…. வசமாக சிக்கிய நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியிலுள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு சென்ற 2013 ஆம் வருடம் மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 2 பார்சல்கள் வந்தது. அந்த பார்சல்களில் ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுப்புவது போல் முகவரி இடம் பெற்றிருந்தது. இதனிடையில் இந்த பார்சல்கள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் இது தொடர்பாக கூரியர் நிறுவனத்தினர் போதைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பார்சல்களை காவல்துறையினர் பிரித்து பார்த்தபோது அதில் இருந்த காலணியில் 82 கிராம் எடையுள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள 4 அடுக்குமாடி கட்டிடத்தின் வளாகத்தில் முதல் மாடியில் தனியார் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் ஒன்று இருக்கிறது. இந்நிறுவனத்திற்கு தரையை அழகுப்படுத்தும் வேலையான தரைவிரிப்பு போட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத்(34) மற்றும் சத்தியமூர்த்தி(41) ஆகிய 2 கட்டிட தொழிலாளிகள் வந்தனர். இதையடுத்து இரவு பணியை முடித்துவிட்டு கட்டிட தொழிலாளிகள் இருவரும் அதே அறையில் தங்கி உறங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3:45 மணியளவில் அறை முழுதும் திடீரென்று கரும்புகை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மெரினாவில் இனி ரோப் கார் வசதி…. மாநகராட்சி போட்ட பலே திட்டம்….!!!!

சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தலைநகரை அழகு படுத்துவதற்கு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் எழில் கொஞ்சும் மெரினா கடற்கரையை ஆகாயத்தில் சென்றவரே பார்த்து ரசிக்க கூடிய வகையில் ரோப் கார் வசதி ஏற்பாடு செய்யப்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி முனை வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் வசதி போன்று வருவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதனைப் போலவே நேப்பியர் பாலத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“அம்மா உணவகங்களில் இனி சப்பாத்தி இல்லை”?…. சென்னை மாநகராட்சி அதிகாரி முக்கிய தகவல்….!!!

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை தொடர்பாக மாநகராட்சி அதிகாரி வெளியிட்ட செய்தியில்,சென்னையில் உள்ள 400 அம்மா உணவகங்களில் வழக்கம் போல உணவுகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டதால் சப்பாத்தி தயாரிப்பது தற்காலிகமாக தடைப்பட்டது. அதன் பிறகு பிரச்சனை சரி செய்யப்பட்டு மீண்டும் சப்பாத்திகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென சாலையில் ஒருவருக்கு வலிப்பு….. உதவி செய்த அண்ணாமலை….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களிடம் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் துணைத் தலைவர் சக்கரவர்த்தி அகியோர்கள் விமான நிலையத்தில் இருந்த ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிண்டி சாலையில் ஒருவர் வலிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு வேலை கிடைக்கவில்லை…. “மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை” தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

வேலை கிடைக்காததால் மாடியில் இருந்து குதித்து  பெண் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த இந்த குடியிருப்பில்  வில்லியம் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாப்ட்வேர் என்ஜினியரான ஜெனிபர் என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெனிபருக்கு கொரோனா காலத்தில் வேலை பறிபோனது. இதனையடுத்து   ஜெனிபர் பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேரை திருமணம் செய்து மோசடி…. வசமாக சிக்கிய ஆந்திர பெண்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை ஆவடியில் உள்ள முத்தாபுதுப்பேட்டை ராஜீவ் நகர் 11ஆம் தெருவில் இந்திரா ராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி(44). இவர் சென்னை தரமுணியில் உள்ள ஐடிஐ நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த போது கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து ஹரி 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. மெட்ரோ ரயிலில் அதிகபட்சமாக பயணம் செய்த பயணிகளுக்கு…. குலுக்கல் முறையில் பரிசு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி 2 மாதம் குலுக்கள் பரிசு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 3 வது மாதாந்திர அதிர்ஷ்ட குழலுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா கலந்து கொண்டுபரிசுகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பு…. வசமாக சிக்கிய அண்ணன் தம்பி…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை வேளச்சேரி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு வருவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து அடியாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் படி கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, வேளச்சேரி குற்ற பிரிவில் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை நடத்திய விசாரணையின் போது, கண்ணகி நகர் எழில் நகரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: பயங்கர தீ விபத்து…. இருவர் பலி….. சென்னையில் உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஊழியர்கள் இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் அதிகாலை 3 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் நைட் ஷிப்டில் வேலை பார்க்க வந்த சதீஷ் மற்றும் கோபி என்ற இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே […]

Categories

Tech |