Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OMG: 15 கல்யாணம், 2 கொலை….. 8 ஆண்டுகள் தலைமறைவு…. சிக்க வைத்த சிக்கன்பக்கோடா….!!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இவருக்கு 7 வயதில் மகன் ஒருவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை குணசுந்தரி இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாகவும், இதில் ஒரு கட்டத்தில் சுந்தரிமீது சந்தேகம் அடைந்த ராஜா, அவரையும், அவரது 7 வயது மகனையும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர் போலிஸார் வழக்குப்பதிவுசெய்து குற்றவாளி ராஜாதான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொள்ளையடிக்கப்பட்ட 2 1/2 நகை- பணம்”…. சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்த கமிஷனர்…!!!!

கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட எல்லையில் கொள்ளையடிக்கப்பட்ட 2 1/2 கோடி நகை- பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கமிஷனர் வழங்கினார். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து கமிஷனர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கோடியே 72 லட்சம் மதிப்புள்ள 718 பவுன் நகைகள், செல்போன்கள், 74 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம் போலீஸ் முன்னிலையில் வழங்கினார். இதன்பிறகு ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெடிபொருள் எடுத்து சென்ற இலங்கை தமிழர்கள்”…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சட்டவிரோதமாக வெடி பொருள் வைத்திருந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள  பூக்கடை, பெரியமேடு ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்கள் எடுத்து செல்வதாக கடந்த 2007-ஆம் ஆண்டு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த இலங்கை தமிழர்களான சிவகரன், வேலுச்சாமி, கிரிதரன், முத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிக வட்டி கொடுப்பதாக மோசடி செய்த “ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்”…. 26 இடங்களில் அதிரடி சோதனை… ரூ 3 1/2 கோடி பறிமுதல்…!!!!

அதிக வட்டி கொடுப்பதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் 26 இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை அமைந்தகரையில் “ஆருத்ரா கோல்டு” என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.  இதன் கிளைகள் தமிழகத்தில் பல இடங்களில் அமைந்துள்ளன. இந்த நிறுவனம் தங்க நகைகள் மீது கடன் வழங்கியுள்ளது. மேலும் பொதுமக்களிடம் முதலீடு தொகையும் வசூலித்து வந்துள்ளது. ரூ ஒரு லட்சம் முதலீடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரட்டைக் கொலை செய்துவிட்டு…. 8 வருடம் தலைமறைவு… ஆந்திராவில் சிக்கிய கொலையாளி..!!!!

இரட்டைக் கொலை செய்துவிட்டு கடந்த 8 வருடங்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த கொத்தனார் ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டார். சென்னை, புதுவண்ணாரப்பேட்டை வா.உ.சி நகரில் வசித்து வருபவர் குணசுந்தரி(27). இவர் அப்பகுதியில் வசித்த மாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏழு வயதில் மகேஷ்குமார் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கணவர் மாரி இறந்துவிட்டார். இதனை அடுத்து குணசுந்தரி கடந்த 2014-ஆம் வருடம் ஆந்திரா மாநிலம் சூலூர் பேட்டையில் வசித்த கொத்தனார் ராஜ்(40) என்பவரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே…. சென்னையில் வருகின்ற மே 27-ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகின்ற மே 27 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதை 30 வயதுக்குட்பட்ட 8,10,12, ITI , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சினிமா பார்த்து விட்டு வந்த குடும்பத்தினர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் முத்தம்மன் நகர் முதல் தெருவில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திலீப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திலீப்குமார் தனது குடும்பத்தினருடன் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அறைக்குள் தூங்குவதற்காக சென்ற திலீப்குமார் காலை நீண்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்கள்…. திடீரென பற்றி எரிந்த தீ…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சென்னீர்குப்பம் பைபாஸ் சர்வீஸ் சாலையை வட்டி விபத்தில் சிக்கிய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதனருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென குப்பைகளில் தீப்பிடித்து அங்கு நின்ற வாகனங்களில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யும் கடைகள் …. அதிரடி ஆய்வு செய்த உணவுத்துறை அதிகாரிகள்….!!!!

கெட்டுப்போன  மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில்  மிகவும் பிரபலமான  மீன் சந்தை  ஒன்று அமைந்துள்ளது. இந்த  சந்தையில்  கெட்டு போன   மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக  உணவு  துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார்  கடைகளில் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தையில்  சோதனை செய்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோர விபத்து…. சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய கார்….ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…!!!

கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அண்ணாநகர் பொன்னி காலனி பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால். இவருடைய மகன் 41 வயதுடைய கார்த்திகேயன். இவர் சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்கள். இவர் தனது மனைவி 35 வயதுடைய லட்சுமி பிரியா, மகள்கள் 11 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிக வெப்பம் காரணமாக… “தலைமை செயலகத்தில் விரிசல் விட்டு உடைந்த டைல்ஸ்”…!!!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சென்னை தலைமைச்செயலகத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கின்றது. இதனால் சென்னையில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு வெளியே சென்று வருகிறார்கள். இந்நிலையில் தலைமைச் செயலகத்தின் நாலாவது நுழைவாயில் பதிக்கப்பட்டுள்ள 15-க்கும் அதிகமான டைல்ஸ்கள் நேற்று பிற்பகல் சட சட என்ற சத்தத்துடன் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவை தரையிலிருந்து பெயர்ந்து மேலே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவர் அனுப்பிய நோட்டீஸ்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் செந்தில் நகர் 8-வது குறுக்கு தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் ராகதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக ராகதேவி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் சதீஷ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

வீட்டிற்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அடையாறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்டதாரி பெண் தனியாக வசித்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி அந்தப் பெண் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப்பெண் வீட்டிற்குள் நுழைந்த உடன் வாலிபர் அத்துமீறி உள்ளே சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து வாயில் துணியை வைத்து, கைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. பிறந்த நாளில் கணவன் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் பிறந்த நாளன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குமனஞ்சாவடியில் ஜீவானந்தம்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கோமதி (22) என்ற பெண்ணை ஜீவானந்தம் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தரக்குறைவாக பேசிய போலீஸ் ஏட்டு” வீட்டில் கிடந்த பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மர்மமான முறையில் இறந்து கிடந்த போலீஸ் ஏட்டின்  சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.சி.எப். பகுதியில் போலீஸ் ஏட்டான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரியும் ஜெயபிரகாஷ் என்பவரை தரக்குறைவாக பேசி, கிண்டல் செய்துள்ளார். இதனால் ஜெயபிரகாஷ் ஆரோக்கியசாமியை  கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆரோக்கியசாமி ஜெயபிரகாசிடம்   தகராறு செய்துள்ளார். மேலும் ஆரோக்கியசாமி  தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜெயபிரகாசை  சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம்  அடைந்த  அவரை அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தவறி விழுந்து படுத்த படுக்கையான மாணவி” அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர்…. மருத்துவ குழுவினரின் ஆலோசனை….!!!!

மாடியில் இருந்து  தவறி விழுந்த மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் சக்தி-தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிந்து என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிந்து  கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்   மாடியில் இருந்து நிலைதடுமாறி  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த  சிந்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணீர் ஊற்றியதால் தகராறு…. பெண் போலீஸ் தற்கொலை முயற்சி…. சென்னையில் பரபரப்பு…!!

பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லியில் இருக்கும் காவலர் குடியிருப்பில் பாபுஜி- பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாபுஜி பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதே குடியிருப்பில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்க்கும் அமுதா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பானுமதி கீழே தண்ணீர் ஊற்றுயதால் வழுக்கி விழுந்து ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தங்கம்,வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக குத்துச்சண்டை வீரருக்கு”…. அபூர்வ அறுவை சிகிச்சை…!!!

தமிழக குத்துச்சண்டை வீரருக்கு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அபூர்வ அறுவை சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கடலூரைச் சேர்ந்தவர் பாலாஜி(21). இவர் சென்னையில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவருக்கு குத்துச்சண்டை மீது மிகுந்த ஆர்வம். அதனால் சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து சேம் எபனேசர் என்ற பயிற்சியாளர் மூலம் குத்துச்சண்டை முறையாகக் கற்றுக் கொண்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருடு போன ரூ 1 கோடி மதிப்பிலான பொருட்கள்”… மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் கமிஷனர்…!!!

திருட்டுப்போன ரூ 1 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி கடந்த ஐந்து மாதங்கள் மட்டுமல்லாது 2021 ஆம் வருடம் முதல் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும் கண்டுபிடித்தார். திருட்டுப்போன ரூ ஒரு கோடி மதிப்புள்ள நகைகள், பைக்குகள், செல்போன்கள் அனைத்தையும் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் காமினி, துணை கமிஷனர்கள் சிபிசக்கரவர்த்தி, குமார், சுப்புலட்சுமி, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…..தந்தையை கொன்று புதைத்த மகன் தலைமறைவு… தேடி வரும் 5 தனிப்படை போலீசார்…!!!!

பெத்த மகன் தந்தையை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் குடியிருந்து வந்தவர் 75 வயதுடைய குமரேசன். இவர் மத்திய அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளார்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மகன் குணசேகரன் தனது மனைவி, பிள்ளைகளுடன் முதல் தளத்திலும், குமரேசன் தனது மூத்த மகள் காஞ்சனமாலாவுடன் இரண்டாவது தளத்திலும் வசித்து வந்துள்ளார். கடந்த 15ஆம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 2 நாளைக்கு தண்ணீர் வராது…. எந்தெந்தப் பகுதியில் தெரியுமா?…. நோட் பண்ணிக்கோங்க….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் முக்கியமான வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் இடையே , பரங்கிமலை -எம்ஜிஆர் சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அவ்வகையில் சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாவது கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்தப்பாதையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. “இதை நான் பெரும் பாக்கியமாக பார்க்கின்றேன்”…. சேவை செய்த தமிழ்…!!!!!!

உக்கிரேன் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த  தமிழர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாவரம் பகுதியில் கோவிந்தராஜன்- மேரி மார்க்ரெட் டயஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு டோனி கோவிந்தராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜன் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த பிரான்ஸ் நாட்டு மாணவி கரோலின் என்பவரை காதலித்து கடந்த 2013- ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.  இவர்கள்  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வசித்து வருகின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 மாதங்களாக பூட்டி கிடந்த கடை…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளானூர் 2-வது தெருவில் பிரசாந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான துரித உணவு கடை வெள்ளனூர் சந்திப்பில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் மாஸ்டர் இல்லாததால் பிரஷாந்த் கடந்த 3 மாதங்களாக கடையை பூட்டி வைத்துள்ளார். நேற்று மாலை இந்த கடையின் மேற்கூரையில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியுடன் பேசி கொண்டிருந்த வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வடகரையில் இருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழன் பெண் தோழியான தீபிகா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் அருகே சாலை ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூரியர் டெலிவரி செய்யும் வாலிபர் பை திருட்டு… மர்ம நபர்களை தேடி வரும் போலீஸ்…!!!

கூரியர் டெலிவரி செய்யும் வாலிபரின் பையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை, முகலிவாக்கம் பட்டம்மாள் நகர்த் தெருவில் வாலிபர் ஒருவர் அந்தப் பகுதியில் இருக்கின்ற வீட்டிற்கு வந்த கூரியரை டெலிவரி செய்வதற்கு பைக்கை கொண்டு வந்து அங்கு நிறுத்தி உள்ளார். அந்த வீட்டிற்கு வந்த பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதம் இருக்கின்ற கூரியர் அடங்கிய பையை பைக்கின் மீது வைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அதன்பின் டெலிவரி செய்துவிட்டு வந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. தூக்கில் தொங்கிய வாலிபர்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்….!!!!

தூக்கில் தொங்கிய வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அரிகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக குடியிருப்புக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த  சக ஊழியர்கள் அரிகிருஷ்ணனின்  குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது  குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அனல் மின் நிலையத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எலி மருந்து கலந்த உணவு… சாப்பிட்ட பெண் என்ஜினீயர் இறப்பு…!!!

எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் ஜோதி நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவருடைய மனைவி என்ஜினியரான 23 வயதுடைய சில்வன மேரி. இவர் சென்னையில் இருக்கின்ற ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால் எலிகளைக் கொல்வதற்கு உணவில் எலி மருந்தை கலந்து வைத்துள்ளார்கள். இது தெரியாமல் சில்வன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதிய பைக்… தந்தை கண்ணெதிரே 6 வயது மகன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சாலை தடுப்பு சுவரில் பைக் மோதிய விபத்தில் தந்தை கண் எதிரே ஆறு வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருவொற்றியூரில் சரஸ்வதி நகர் 12வது தெருவில் வசித்து வருபவர் அர்ஜுன். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். தனியார் தொழிற்சாலையில் இரவு நேரம் வேலை பார்த்து வருவதால் பகல் நேரத்தில் பகுதிநேர வேலையாக தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை”…. போலீசார் விசாரணை…!!!!

சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியை சேர்ந்த முனுசாமி நகரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் ஏழு வருடங்களாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் இவர் சரியாக வேலைக்கு வராமல் இருந்திருக்கின்றார். இதனால் சென்ற 5-ஆம் தேதி இவருக்கு அலுவலகத்திலிருந்து மெமோ கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்துள்ளார். நற்பகலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் குத்திக்கொலை…. போலீசில் சரணடைந்த மூவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டையில் ராகுல்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் ராகுல் பழைய கிளாஸ்பேக்டரி சாலையோரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகுலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு…. கரை ஒதுங்கிய வாலிபரின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ்(24), மனோஜ்(22) ஆகியோருடன் கடந்த 17-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென ராட்சத அலை வந்தது. இதனால் படகு கவிழ்ந்து 3 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதுகுறித்து அறிந்த மத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உள்ளூர்காரர்களுக்கு குலோப் ஜாமுன் விலை இவ்வளவா? குறையுங்கள் என்று சொல்லி”…. கடையின் உரிமையாளரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர் கைது…!!!

குலோப் ஜாமுன் விலையை குறைக்கச் சொல்லி கடையின் உரிமையாளரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஸ்வீட் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு இரண்டு பேர் வந்து உள்ளார்கள். அவர்கள் குலோப்ஜாமுன் விலையை கேட்டார்கள். அதற்கு கடையின் உரிமையாளர் லோகேஷ்கான் ரூ 100 என்று தெரிவித்தார். உடனே அந்த இரண்டு பேரும் உள்ளூர்க்காரர்கள் எங்களுக்கு ரூ 100 என்று கூறுகிறீர்களே? குலோப்ஜாம் விலையை குறைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது…. ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயம்…. தேடும் பணி தீவிரம் …!!!

கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி வாலிபர் மாயமானார். சென்னை மாவட்டம், எண்ணூர் காமராஜர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முகம்மது ஆசிப்(22). இவர் வீடுகளுக்கு பால்சீலிங் போடும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 18ஆம் தேதி மாலை தனது குடும்பத்துடன் தாழங்குப்பம் அருகில் கடலில் குளித்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராதவிதமாக கடலில் தோன்றிய ராட்சத அலை முகம்மது ஆசிப்பை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. உடனே பக்கத்தில் இருந்த மீனவர்கள் கடலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பு வகுப்புக்கு சென்று வந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் மடுவின்கரை பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த விசைப்படகுகளின் கழிவுகள்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளின் கழிவுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. இந்நிலையில் உரிமையாளர்கள் அந்த விசைப்படகுகளை கடலிலிருந்து வெளியே எடுத்து உதிரி பாகங்களை அகற்றினர். அதன்பின் காசிமேடு பழைய யார்டு பகுதியில் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் விசைப்படகுகளின் கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீ காற்றின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. காரில் மோதியதால் பரபரப்பு…. அதிஷ்டவசமாக தப்பிய டிரைவர்….!!

லாரி கட்டுபாட்டை இழந்து காரில் மோதி சாலையில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பள்ளியந்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் லாரி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் காரில் வந்தவர்கள் காயமின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் வளர்ப்பதற்கு கொண்டு வந்தேன்” ஆய்வு செய்த அதிகாரிகள்…. கிடைத்த வித்தியாசமான அணில் குட்டிகள்….!!!!

வெளிநாட்டில்  இருந்து கொண்டு வந்த அணில் குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு நேற்று  தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் இலாகா அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் பொருட்களையும்  சோதனை செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு சிறிய கூடையில் 9 அரியவகை அணில் குட்டிகளை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு!!…. மது குடித்ததால் பெயிண்டரை தீர்த்துக்கட்டிய குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெயிண்டரை  கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  ஆலப்பாக்கம் பகுதிகள்  பெயிண்டரான  ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  அவரது மனைவி வசந்தா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கையில்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா”… தீ குண்டத்தில் தவறி விழுந்த பெண் பலி…சோக சம்பவம்….!!!!

வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள புழல் காவாங்கரை திருமலை நகரில் வசித்து வருபவர் முனிசாமி. இவர் மனைவி 45 வயதுடைய சந்திரா. இவர் கடந்த மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற்ற புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் இருக்கின்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் தீ மிதித்துள்ளார். அப்போது திடீரென்று தீக்குண்டத்தில் சந்திரா தவறி விழுந்துட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள்” கலந்து கொண்ட மருத்துவ குழுவினர்….!!!!

மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவ குழுவினர் சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கத்தில் அரசு மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு  சிகிச்சை பெற்று வரும்  மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை   காப்பகத்தின் சார்பில் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதைப்போல் நேற்று 80  மனநலம் பாதிக்கப்பட் ட  நோயாளிகளை பேருந்தில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா   அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில்  குழுவினர் புராதன சின்னங்கல்  உள்ளிட்ட இடங்களை  சுற்றி காட்டியுள்ளனர். இந்த சுற்றுலாவில் மருத்துவர்கள், ஊழியர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை தடுப்பு சுவரில் விபத்தை தவிர்த்த ஓட்டுநரை பயணிகள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டிலிருந்து அரசு பேருந்து ஒன்று போளூர் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்து செங்கல்பட்டு பச்சை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் திருச்சி நோக்கி சென்ற மற்றொரு பேருந்து வேகமாக சென்றது. இதனால் பக்கவாட்டு சாலையில் இருந்து வந்த டிராக்டர் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றுவிட்டது. இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சொகுசு டாய்லெட்…. என்னென்ன வசதிகள் தெரியுமா?…. விரைவில் தமிழகம் முழுவதும்….!!!!

சென்னையில் முதல் ஆடம்பர கழிப்பிடம் இந்திரா நகரில் “லூகாஃபே தூய” என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள்,மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த கழிவறையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் இதேபோல் சென்னையில் 50 கழிவறைகளும்,தமிழகம் முழுவதும் 100 கறி வகைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் பெரிய பெரிய நகரங்களில் கழிப்பறை வசதி இன்னும் குறைவாக இருப்பதால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதனால் மக்களின் சிரமத்தை போக்க சிறப்பு வசதிகளுடன் கூடிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்காமல் வரைபடம் வரையலாமா…? மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்னகோலடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜனனி(11) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி சரியாகப் படிக்காமல் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா படிக்காமல் எப்படி வரைபடம் வரைந்து கொண்டிருக்கிறாயே? என கூறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணி நீக்கம் செய்ததால்… மேலாளரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயற்சி… தொழிலாளி கைது..!!!!

துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்த முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை எழும்பூரில் வசித்து வருபவர் அசோக்குமார்(53). இவர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மது அருந்திவிட்டு சரிவர வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனால் இவரை துப்புரவு பணி மேலாளர் பாஸ்கர்(31) பணி நீக்கம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அசோக் குமார் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு மாதவரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைமேடைக்கு வந்த ரயில்…. திடீரென நடந்த விபரீதம்….. சென்னையில் பரபரப்பு….!!!!!

 தண்டவாளத்தில் ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள 3-வது நடைமேடைக்கு நேற்று 22637  என்ற எண்  கொண்ட வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று  வந்துள்ளது. இந்த  ரயில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பணிமனை நோக்கி சென்றுள்ளது. அப்போது திடீரென ரயில் நிலை தடுமாறியுள்ளது. இதனால்   2 பெட்டிகள்   தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு!!…. தந்தையை அடித்து கொன்ற மகன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தந்தையை அடித்து கொன்ற வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எம். எம். டி. 2-வது பிரதான சாலை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மூத்த மகனான சிவக்குமார் என்பவர் கொரோனா   தொற்றின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து  தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி பாலசுப்பிரமணியனுக்கும்  சிவகுமாருக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. கொழுந்து விட்டு எரிந்த துணிக்கடை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

துணிக்கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  கவுரிவாக்கம்  பகுதியில் பஞ்சாபில் இருந்து  கைத்தறித் துணிகள், கைவினை பொருட்கள், பஞ்சு மெத்தைகள், படுக்கைகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் துணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு….!!!!

கல்லூரி பேருந்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.   சென்னை மாவட்டத்தில் உள்ள பரணிபுத்தூர்  சாலையில் தனியார் கல்லுரி பேருந்து ஒன்று  35 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென  பேருந்தின் முன்பகுதி தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் பேருந்தில் இருந்து  இறங்கியுள்ளனர். இதனையடுத்து  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ 6 1/2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மாத்திரைகள்”… வயிற்றுக்குள் கடத்தி வந்த உகண்டா வாலிபர் கைது…பரபரப்பு… !!!

ரூ 6 1/2 கோடி மதிப்பில் ஹெராயின் போதை மாத்திரைகளை வயிற்றுக்குள் கடத்தி வந்த உகண்டா வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வரும் விமானத்தில் பெருமளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சார்ஜா விமானத்தில் வந்த உகண்டா நாட்டில் வசித்த 21 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் மின்சார ரயிலில்… சிக்கயிருந்த பயணியை நடைமேடை பக்கமாக தள்ளி காப்பாற்றிய ரயில்வே போலீசார்…!!!

மின்சார ரயிலில் ஏற முயன்ற விபத்தில் சிக்கயிருந்த பயணியை ரயில்வே காவல்துறையினர் நடைமேடை பக்கமாக தள்ளி காப்பாற்றினார்கள். சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம் இ.பி காலனி பகுதியில் வசித்து வருபவர் பாஷா(54). இவர் கடந்த 10ஆம் தேதி கூடுவாஞ்சேரி செல்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது மின்சார ரயில் கிளம்பியதால் பதற்றமடைந்த அவர், ஓடுகின்ற ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது மீனம்பாக்கம் செல்வதற்கு பெட்டியில் பயணித்த ரயில்வே காவல்துறையினர் அனுஷா, சுமேஷ் ஆகியோர் இதைப் பார்த்து உடனே […]

Categories

Tech |