சென்னையில் பெய்த திடீர் மழையால் மின்சார ரயில் சேவைகள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை முடங்கியது. சென்னை மாவட்டத்தில் அசானி புயலின் தாக்கத்தினால் நேற்று முன்தினம் திடீர் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில் மின்சார ரயில் சேவைகளும் நேற்று முன்தினம் காலை 10 முதல் 20 நிமிடங்கள் வரை முடங்கியதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், ரயில்வே […]
Category: சென்னை
சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மெட்ரோ ரயில் பயணிகளுக்காக தனியார் நிறுவனங்களின் நிலங்களை கையகப்படுத்தாமல் கோவில் நிலங்களை அதிகம் கையகப்படுத்துவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் வேகமாக நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் தற்காலிகமாக நின்று போக வாய்ப்புள்ளது. இன்று வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் தீர்ப்பு என்னவாக இருக்கும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வங்கியிலிருந்து பேசுவது போல நடித்து ஆன்லைன் மூலமாக பணம் சுருட்டும் கும்பல் அதிகரித்துள்ளது. அவர்கள் ஏதாவது ஒரு மொபைல் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது அல்லது வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று கூறி அனைத்து தனிநபர் விவரங்களையும் கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். இது போன்ற மக்கள் யாரும் மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன் பின் […]
விமான நிலைய பாதுகாப்பு பணியில் சேர்க்கப்பட்ட இரண்டு பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய் குட்டிகளுக்கு வீரா, பைரவா என பெயர் சூட்டப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற்படை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள். இந்த மத்திய தொழிற் படையினரின் உடமைகள், வாகன சோதனைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு மத்திய தொழிற்படை காவல்துறையினர் 2 நாய்க்குட்டிகளை சேர்த்தனர். இந்த மோப்ப நாய் குட்டிகள் பிறந்து […]
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் உயிரை ரயில்வே போலீசார் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் இபி காலனி பகுதியை சேர்ந்தவர் புரான் பாஷா (54). இவர் கடந்த 9ஆம் தேதி கூடுவாஞ்சேரி செல்வதற்காக செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார். இதனால் சமநிலை தவறி ஓடும் ரயில் மீது விழுவதை போல் சென்றுள்ளார். அப்போது மீனபாக்கம் செல்வதற்காக […]
கண்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன் தங்கை இருவரும் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில் சீனிவாசன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அண்ணா நகரில் இருக்கும் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சகோதரியான நிவேதா(45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி எம்.எப்.எல் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது […]
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ம.க நிர்வாகி தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரிலுள்ள இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் பொது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 29ஆம் தேதியன்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகளை அதிகாரிகள் ஆரம்பித்தனர். இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் […]
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஆயிரம் பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலணியில் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். தொழிலதிபரான ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன்அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவர்களை கார் ஓட்டுனர் கிருஷ்ணா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இருவரும் கொடூரமாக தங்களது கார் ஓட்டுநர் கொலை […]
குடோன்களில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மலையம்பாக்கம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து சேகரித்து தரம் பிரிக்கும் குடோன்கள் அமைந்துள்ளது. இங்கு யோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடோனில் […]
குடும்ப தகராறில் தீக்குளித்த தாயை காப்பாற்ற சென்ற மகனும் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் சேவியர்(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செந்தில்(35), மாரி(33) என்ற 2 மகன்களும், ராணி(32) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் திருமணமான ராணி தனது தாய் வீட்டின் மேல் தளத்தில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தாய்க்கும், மகளுக்கும் […]
பஸ் டிரைவரை கொலை செய்த வழக்கில் கைதான ஐடி நிறுவன ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கின்றார். சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் அருகே இருக்கும் பாலவாடியில் வசித்து வந்த பொன் குமார் என்பவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக சம்மட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீஸார் அதே ஊரில் வசித்து வரும் குமார் என்பவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்வகுமார் என்பவரை நேற்று முன்தினம் கைது […]
தீ விபத்து ஏற்பட்டதால் ரோந்து படகுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் அம்பி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அம்பி சென்னை கடலோர காவல்படைக்கு சொந்தமான பயன்படுத்த முடியாத பழைய 3 ரோந்து படகுகளை ஏலம் எடுத்தார். இந்த படகுகள் எண்ணூர் கடற்கரை சாலையில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று படகுகளுக்கு அருகிலிருந்த குப்பையில் திடீரென […]
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் தனது 10 மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக இந்த பெண் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் அயாத் பாஷா என்பவர் புதிய […]
ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் பூபொழில் நகரில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழக ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரவணகுமாருக்கு சுவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சரவணகுமார் பணியில் இருந்துள்ளார். அப்போது சரவணகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
இ.எஸ்.ஐ மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன வசதியுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் சி.கே. சரஸ்வதி எம்எல்ஏ கூறினார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சி.கே. சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் கூறியதாவது, அறநிலையதுறையின் கீழ் அமைந்துள்ள கோவில் பணியாளர்களுக்கு ஆலய ஆன்மிக சேவை பயிற்சி கொடுக்க வேண்டும். பல கோவில்களில் செயல் அலுவலர் அலுவலகங்கள் கோவில் வளாகத்திற்கு உள்ளே தள்ளி அமைந்துள்ளது. இதனால் பல செயல் அலுவலர்கள் காலணிகளை அணிந்து […]
ரம்ஜான் பண்டிகைக்கு வந்த வாலிபர் நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் தாட்சாயினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சாரா என்பவரை ரம்ஜான் பண்டிகைகாக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் சாரா தனது நண்பரான சையத் முகமது அபுபக்கர் என்பவருடன் சேர்ந்து தாட்சாயணியின் வீட்டிற்கு வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தாட்சாயணி தனது லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த தங்கம் மற்றும் வைர […]
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்துள்ளார். இதுகுறித்து மேயர் பிரியா பேசியதாவது, சென்னை மாநகராட்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை 3300 இடங்களில் மெகா கொரோனா […]
ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை மாணவிகள் சிலர் தன்னை தாக்கியதாக தடவியல் துறை அலுவலர் லோகநாதன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன்(53). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தடயவியல் துறை அலுவலகராக வேலை செய்து வருகின்றார். அதே மருத்துவமனையில் மருந்தியல் முதலாம் ஆண்டு படிக்கும் முதுகலை மாணவி சரஸ்வதி என்பவர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடும்போது லோகநாதன் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் வருகைப்பதிவேட்டில் முறைகேடு […]
12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் லிங்கம் தெருவில் தையல் தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மாதவரத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களாக பிருந்தா பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதுகுறித்து தந்தையிடம் கேட்டதற்கு […]
தம்பி தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் எல்லையம்மன் பிரதான சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவரின் அண்ணன் சேட்டு. இவர்கள் இருவரும் கொரட்டூரில் உள்ள ரயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். சேட்டு சென்ற நான்கு ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தம்பி சுரேஷ் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகின்றார். சுரேஷ் தனது மனைவி மகனுடன் வாழ்ந்து வருகின்றார். சுரேஷ் குடிபோதைக்கு […]
கார் வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மின்வாரிய அதிகாரி குழந்தையுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள படூரிலிருக்கும் மின் வாரிய அலுவலகத்தில் ஷர்மிளா(31) என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஜித் பாபு என்ற கணவரும், நயோமிகா(5), யுவந்திகா(1) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் சர்மிளா தனது தம்பி சாம்கணேஷ் மற்றும் 2 குழந்தைகளோடு சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். இந்நிலையில் […]
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவரை கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலாளர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் ராஜ்(45). இவருக்கு கலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள். ராஜ் ஆட்டோக்கு மேற்கூரை அமைக்கும் பணி செய்து வந்துள்ளார். ராஜ்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள மெட்ராஸ் மறுவாழ்வு மையம் […]
வெள்ளை புலி தாக்கியதில் பூங்கா ஊழியர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நகுலன் என்ற வெள்ளை புலிக்கு பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது திடீரென கோபமடைந்த வெள்ளைப்புலி […]
போக்குவரத்து போலீஸ்காரர் ரோட்டின் நடுவில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களை வாரி சாலை ஓரம் கொண்டு போட்டு சரி செய்தார். சென்னை, மதுரவாயல் சிக்னல் அருகில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது லாரியில் இருந்த கொஞ்சம் ஜல்லி கற்கள் ரோட்டின் நடுவில் கொட்டியது. இதைப் பார்த்தும் பார்க்காமல் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களின் மீது வண்டிகளை ஏற்றி இறக்கி சென்றுள்ளார்கள். இதனையடுத்து சிதறி கிடக்கும் […]
மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற உத்தரப்பிரதேச வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, அம்பத்தூர் நேரு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் பிரம்மா(26). இவருடைய மனைவி 22 வயதுடைய ரஷியா கத்துனா. இவர்கள் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் திருமணமாகி சென்னைக்கு வந்துள்ளார்கள். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஹரிஷ் பிரம்மா வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி அன்று ரஷியா கட்டிலில் இருந்து […]
சென்னை மெட்ரோ ரெயில் கடந்த மாதம் கியூ. ஆர் வசதி மற்றும் பயண வசதி மூலம் 35 1/4 லட்சம் பேர் டிக்கெட் பெற்று பயணம் செய்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, சென்னையில் மெட்ரோ ரெயில் இயங்கி வருகிறது. இந்த ரெயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த ஜனவரி மாதம் 25,19 252 பேரும், பிப்ரவரி மாதம் 31,86,653 பேரும், மார்ச் மாதம் 44,67,756 பேரும் […]
வாலிபரிடம் பண மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான ரமேஷ், சுரேஷ் ஆகிய 2 பேர் தங்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அடமானத்தில் இருப்பதாகவும், அதனை மீட்டு தாங்களே விலைக்கு வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய கோவிந்தராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு 64 லட்ச ரூபாய் பணத்தை ரமேஷ் மற்றும் சுரேஷ் […]
பொதுமக்களின் தேவைகளை கூற கட்டணமில்லா தொலைபேசி, “வாட்ஸ்அப்” எண்ணை தாம்பரம் மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார். சென்னை மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மேயர் வசந்தகுமாரி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு, குப்பைகளை அகற்றுவது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அப்போது மேயர் வசந்தகுமாரி கூறியதாவது, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் மிக […]
ஆன்லைனில் ரம்மி விளையாடி 35 லட்ச ரூபாய் பணத்தை இழந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் விக்னேஸ்வரா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜனனி என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்த பிரபுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜனனி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு […]
வாலிபர் நண்பர்களை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் நடுக்குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்த செல்வி என்பவர் கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது 16வது நாள் காரிய நிகழ்ச்சிக்கு நெருங்கிய நண்பர்களான மீனவர்கள் பாபு, தினேஷ், அருண் ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்டனர். இவர்கள் 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உணவு பரிமாறும்போது அருணும், பாபுவும் ஒரு […]
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல்- அரக்கோணம், கடற்கரை- செங்கல்பட்டு, சூலூர்பேட்டை, வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்கும் […]
இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் சேலஞ்ச் பற்றி சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இன்றைய நவீன காலகட்டத்தில் நிறைய இடங்களில் சேலஞ்ச் நடைபெறுகிறது. அதாவது இந்த காரியத்தை செய்தால் உங்களுக்கு பரிசுப் பொருள் அல்லது பணம் கிடைக்கும் என்கிறார்கள். இந்நிலையில் சில நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் சில காரியங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்தால் அதற்கு தகுந்தார்போல் பரிசு மற்றும் பணம் கிடைக்கும் என்ற தகவல்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் சென்னையில் அமைந்துள்ள […]
சினிமா துறையை சேர்ந்த ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். சினிமா துறையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் தென்னிந்திய திரைப்பட சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கில்டு தலைவராக இருக்கிறேன். எங்க சங்கத்தில் இருந்து 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரின் தூண்டுதலின் மூலமாக எனக்கு அடிக்கடி செல்போன் மூலமாக கொலை மிரட்டல் வருகிறது. […]
வட்ட செயலாளர் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வட்டச் செயலாளராக இருந்துள்ளார். இவர் கடந்த 1-ம் தேதி மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த விசாரணையின் போது விக்ரவாண்டி அருகே தனிப்படை காவல்துறையினரால் சஞ்சய், விக்னேஷ், கிஷோர், புவனேஸ்வர், விக்னேஷ் ஆகிய 5 […]
வாலிபரை கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளிவாயல் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களாக ரவிசந்திரன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கீர்த்தனா ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் எனக்கும் மதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு வந்த மதன், பப்லு, ஜெயபிரகாஷ், பரத் ஆக்கிய […]
சொத்தை அபகரித்த குற்றத்திற்காக 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நாவலூர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இவர் தனது தாய் வீட்டின் மூலம் கிடைத்த 11 சென்ட் நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் சொத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு போலி பத்திரங்கள் தயார் செய்துள்ளார். இந்த போலி ஆவணங்களை காட்டி சாந்தகுமாரியின் வீட்டின் சுற்றுச்சுவரை பொக்லைன் இயந்திரம் […]
வீட்டில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி விளையாட்டு பொருளில் இருந்த பேட்டரியை முழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அயனாவரம் பி.ஈ.கோவில் வடக்கு மாடவீதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனுஸ்ரீ வீட்டில் விளையாட்டு ஜாமான்களை வைத்து விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விளையாட்டு பொருளில் இருந்த சிறிய பேட்டரியை சிறுமி வாயில் போட்டு முழுங்கியதாக தெரிகிறது. இதனை […]
குப்பை வளாகத்தில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை வளாகம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகையை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று கமிஷனர் […]
உடலில் தீப்பிடித்து எரிந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் கொத்தனாரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த சேகர் உடல் வலிக்காக கை, கால்களில் மண்ணெண்ணெய் தேய்த்துக்கொண்டு அமர்ந்துள்ளார். இந்நிலையில் பீடி பற்ற வைக்கும் போது எதிர்பாராத விதமாக சேகரின் உடலில் தீப்பொறி விழுந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அலறி துடித்த சேகரை அவரது […]
லஞ்சம் வாங்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் திருவஞ்சேரி கிராமத்தில் பியூலா சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் தீபா பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்ட பியூலா சார்லஸ் உடனடியாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் […]
கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை கைது செய்த போலீசார் அவர்கள் அளித்த தகவலின் அடிப்பையில் மேலும் 30 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மணலி அருகே உள்ள புதுநகரில் ஒரு வீட்டில் வைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை போலீசார் கடந்த 12ஆம் தேதி பிடித்துள்ளனர். இதன் பிறகு அங்கிருந்த 16 லட்சம் கள்ளநோட்டுகள், 3 கலர் பிரிண்டர்கள் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்த போலீசார், புதுநகரை சேர்ந்த யுவராஜ்(37), திருவொற்றியூரை சேர்ந்த ஜான்ஜோசப்(31), செங்குன்றத்தை […]
சென்னை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று (ஏப்ரல் 29) முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், வெங்கட் நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலை செல்லும் வாகனங்கள்,அண்ணா சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை சிக்னல் இடது புறம் சென்று அங்குள்ள யூ டர்ன் வழியாக திரும்பி செல்ல வேண்டும். செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை […]
1 1\2 கோடி ரூபாய் மோசடி செய்த பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி அருகே செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எஞ்சினியரிங் முடித்துவிட்டு கனடாவில் உள்ள ஒரு ஆயில் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பச்சையப்பனும், அவரது மனைவியும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக இணையதளத்தில் கணவரை […]
சென்னை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை (ஏப்ரல் 29) முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், வெங்கட் நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலை செல்லும் வாகனங்கள்,அண்ணா சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை சிக்னல் இடது புறம் சென்று அங்குள்ள யூ டர்ன் வழியாக திரும்பி செல்ல வேண்டும். செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை […]
தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஐஸ் அவுஸ் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபருடன் சிறுமி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து […]
போக்குவரத்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து விதிமீறல் அபராத விதிப்பு பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. மேலும் ஆரம்ப காலகட்டத்தில் அபராதம் செலுத்துவது நன்றாக இருந்தபோதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் அபராதம் செலுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி சென்னையில் அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசி மூலம் எச்சரிப்பதற்காக 10 அழைப்பு மையங்களை கமிஷனர் […]
குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் புகை பிடித்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குவைத்திலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் 164 பேர் பயணம் செய்தார்கள். விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்த போது அதில் பயணித்த தஞ்சாவூரில் வசித்த 54 வயதுடைய சேவியர் என்பவர் விமானம் கழிவறைக்கு சென்று திடீரென்று சிகரெட் பிடித்தார். இதைப்பார்த்த மற்ற பயணிகள் அவரை புகைபிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன்பின் […]
ஓடுகின்ற ரயிலில் சிக்கிய பயணியை காப்பாற்றிய பெண் போலீஸை ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரிகள் பாராட்டினார்கள். சென்னை மாவட்டம், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 24-ம் தேதி ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் இரவு வண்டி எண் 12653 கொண்ட மலைக்கோட்டை ரயில் திருச்சியை நோக்கி நான்காவது நடைமேடையில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்தபோது, திடீரென்று ரயிலில் பயணித்த 45 வயதுள்ள ஆண் ஒருவர் போகின்ற ரயிலிலிருந்து கீழே தவறி […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அதிக புகை இருப்பதால் […]
மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள வானுவம்பேட்டை பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் விடுதியில் தங்கி தனியார் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சக மாணவிகள் நந்தினியிடம் வகுப்புக்கு செல்லலாம் என அழைத்துள்ளனர். அப்போது தான் சிறிது நேரம் கழித்து வருவதாக நந்தினி கூறியுள்ளார். […]