சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய குற்றத்திற்காக 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் எம்.ஆர் நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த சட்டக் கல்லூரி மாணவரான அப்துல் ரஹிம் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் வைத்து அப்துல் […]
Category: சென்னை
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமான நிலையத்தை நெருங்கிய போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பஷீர் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பணிப்பெண்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மருத்துவ குழுவை தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் தரை இறங்கிய உடனே மருத்துவ […]
கடற்கரையில் அரசு ஊழியரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மெரினா கடற்கரை நொச்சி நகர் பகுதியில் இருக்கும் மணல் பரப்பில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாப்பூர் காவல்துறையினர் இறந்து கிடந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]
போலீஸ் வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. மேலும் பணியிலிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், போக்குவரத்து போலீஸ்காரர் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த […]
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1 1/2 வயதுடைய பெண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பெருமாள் கோவில் தெருவில் லாரி டிரைவரான அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் அருளின் 2-வது பெண் குழந்தையான 1 1/2 வயதுடைய ருத்ரா வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ருத்ரா தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துவிட்டாள். இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]
போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஆர் நகர் சந்திப்பில் கொடுங்கையூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீஸ்காரர் உத்தரகுமார் மடக்கி பிடித்தார். அதன்பிறகு முக கவசம் அணியாமல் வந்த குற்றத்திற்காக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அபராத தொகை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் வாலிபருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாலிபர் போலீஸ்காரரின் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் ரவுடியான கிருபாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொன்னூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் […]
ஆட்டோவில் சென்ற போது மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் திருநகர் பகுதியில் டி.வி மெக்கானிக்கான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பிரபாகரன் என்பவரது ஆட்டோவில் பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவை ஒட்டிய பிரபாகரன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. அப்போது 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து […]
பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் மேற்கு 2-வது பிரதான சாலையில் பட்டதாரியான கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது தந்தையின் பெயரில் இருக்கும் வீட்டை அடமானம் வைத்து ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் பண பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் 25 லட்ச ரூபாய் வரை கார்த்திக்கிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டு […]
டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய அத்வைக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் திருப்பத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் சர்வீஸ் சாலையில் வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் […]
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் இருக்கும் ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுமார் 10 அடி ஆழமுள்ள தொட்டியில் இருந்த கழிவுநீரை ஓட்டுநர் முத்துக்குமார், கிளீனர் கதிரவன் போன்றோர் மோட்டார் மூலம் லாரிக்கு ஏற்றி கொண்டிருந்தனர். இதனை அடுத்து கிளீனர் கதிரவன் தொட்டிக்குள் இறங்கி இரும்பு கம்பியால் கழிவுநீரை கலக்கிய போது எதிர்பாராதவிதமாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை பல்கலைக்கழகத்தில் Ph.D., படிப்பில் சேருவதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அவகாசம் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு சளி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு இன்று முதல் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும் என்ற சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு முடிவு வருவதற்கு முன்பே […]
மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 பேர் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் வலையில் 12 அடி உயரமும், 1050 கிலோ எடையும் உடைய 3 மீன்கள் சிக்கியுள்ளது. இவை ராட்சத ஏமன் கோலா வகை மீன்கள் ஆகும். இதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து தகவல் […]
மது விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் இருக்கும் அண்ணாநகர் பகுதியில் மேகலா என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிபன் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது […]
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அஜய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் எம். ஏ.சி நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழிவுநீர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு திரு.வி.க நகரில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் சுவர்களுக்கு அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதமாக பரத் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பரத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரத்தின் சடலத்தை […]
என்ஜினீயர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் என்ஜினீயரான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சித்தார்த் என்ற மகனும், வர்ஷா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்ட வெங்கடேசன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது மூட்டுவலி […]
நேற்று போகி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் காற்று மாசு ஏற்படும் அபாயம் இருப்பதால் சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதற்கு தடை விதித்து மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு போகி பண்டிகையின் போது காற்று தரக்குறியீடு அளவு சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களில் மிதமாகவும், மூன்று மண்டலங்களில் மோசமான அளவுகளாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் (2022) 15 மண்டலங்களிலும் காற்று தரக்குறியீடு திருப்திகரமான அளவுகளில் இருப்பதாக […]
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியும் மற்றொரு மகளும் வெளியூர் சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த மகளை மதுபோதையில் பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்ற சிறுமியை மிரட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். […]
மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடி கொண்டிருந்த விமல்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் விமல் குமார் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த பெற்றோர் விமல் […]
சென்னையில் கேம் விளையாட செல்போன் தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்ணாரப்பேட்டையில் சிவா என்பவரின் மகன் விமல் குமார் (16) பிளஸ்-1 படித்து வந்தார். அவர் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதனை பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் விமல் அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதால் அவரது தாயார் செல்போனை பிடுங்கி மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து கதவை உள் பக்கமாக தாழிட்டு மாணவன் தூக்கு […]
கொரோனா சிகிச்சைக்கு பயந்து வாலிபர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேல் பரிசோதனைக்காக சுகாதார அலுவலர்கள் வாலிபரை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை முடிந்து […]
பொதுமக்கள் ஆர்டர் செய்த செல்போன்களை திருடிய குற்றத்திற்காக டெலிவரி பாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஞானசேகர் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த 11 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு ஞானசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஞானசேகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் […]
நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களின் கைப்பையில் நாட்டுத்துப்பாக்கி இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தென்காசியை சேர்ந்த சின்னதுரை, சாம்ராஜ் மற்றும் மாரிச்செல்வம் என்பது தெரியவந்துள்ளது. இதில் […]
கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பெரியார் நகர் பகுதியில் இருக்கும் முட்புதர்கள் நிறைந்த காலியிடத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் இந்து காலனி 2-வது மெயின் ரோட்டில் மனோ பட்நாயக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனன்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் பால்கனியில் வெயிலில் காய வைத்திருந்த சிறிய தலையணை அருகில் இருக்கும் புங்க மரத்தில் விழுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அனன்யா பால்கனியில் நின்று கொண்டு அலுமினிய குழாய் […]
ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அரிவாகுளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் டி பிளாக்கில் உள்ள 28 வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வல்லுனர் குழுவினர் கட்டிடத்தின் தரம் மற்றும் மண் வளம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் கழிவுகள் அனைத்தும் […]
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்த ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். அதே பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் கிஷோர் என்பவர் என்னை போல மாற்றுத்திறனாளி தான். நாங்கள் […]
பெயிண்டரை குத்தி கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் பெயிண்டரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் புழல் ஏரிக்கரை அருகில் 3 மர்ம நபர்கள் ஏழுமலையை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் அடையாறு காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வெட்டுவாங்கேணி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் […]
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்.பி சாலையில் சத்யா டைம்ஸ் என்ற கடிகார கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடையணிந்து சென்ற ஒருவர் 22 ஆயிரம் ரூபாய்க்கு 2 கை கடிகாரங்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும், அருகில் இருக்கும் வீட்டிற்கு ஊழியரை தன்னுடன் அனுப்பி வைத்தால் பணத்தை கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் இனி வார நாட்களில் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி […]
ஸ்டவ் வெடித்து சிதறியதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த மண்ணெண்ணை பம்ப் ஸ்டவ் அடுப்பை சந்தியா பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து சிதறியதால் அதிலிருந்த மண்ணெண்ணெய் சந்தியா மீது பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. […]
திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமீரா பேகம் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமீராவிற்கு ரேணிகுண்டாவை சேர்ந்த உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த அவரது பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இதனையடுத்து உசேன் திடீரென இறந்து விட்டதால் சமீராவின் திருமணம் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் சமீரா செல்போனில் […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர்-பூங்கா ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வேகமாக சென்ற மின்சார ரயில் அந்த வாலிபரின் மீது மோதியது. இதனால் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ […]
35 லட்ச ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 கடைகளுக்கு சில ஆண்டுகளாக வாடகை தராமல் 35 லட்ச ரூபாய் வரை பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தும்படி கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனாலும் கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தாததால் 7 கடைகளை […]
11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இவரை உதவும் கரங்கள் அமைப்பினர் மீட்டு திருவேற்காட்டில் இருக்கும் மையத்தில் வைத்து மனநல சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து 3 மாத சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் மனநல பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க […]
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை நாய் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அவர் வளர்த்து வந்த நாய் அதே குடியிருப்பில் வசித்து வரும் பக்கத்து வீட்டு 9 வயது சிறுமியை கடித்து குதறியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய் துரத்திச் சென்று கடித்து குதறிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனைக் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் கேரளாவை சேர்ந்த அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் அர்ஜூன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜூனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அர்ஜூன் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் […]
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் டிரைவர்ஸ் காலனி 4-வது தெருவில் அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அகிலனுக்கு உறவினர் பெண்ணான ரோஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ரோஷினி அண்ணா நகரில் இருக்கும் தனியார் கல்லூரியில் எம்.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி அண்ணா தெருவில் பவுலினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விமலா என்பவரது வீட்டில் மாவு அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது பவுலினா திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]
ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருக்கும் தனியார் கல்லூரியில் அந்தமானை சேர்ந்த சாயின்ஷா என்பவர் ராணுவம் தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் தாழங்குப்பம் பகுதியில் இருக்கும் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலை சாயின்ஷாவை கடலுக்குள் இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். இந்த சத்தம் கேட்டு […]
20 டன் பாரம் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூரில் இருக்கும் சரக்கு பெட்டக நிலையத்திற்கு 20 டன் எடையுள்ள எந்திரங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் துறைமுக வாயில் வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென சாலையில் கவிழ்ந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியை […]
லிப்ட் கொடுத்து பெண்ணிடமிருந்து தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பெண்கள் விடுதியில் சகிராபேகம் என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் எத்திராஜ் சாலையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்த சகிராபேகத்திடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் லிப்ட் வேணுமா என கேட்டுள்ளார். இதனை நம்பிய சகிரா பேகம் அந்த […]
கட்டுப்பாடுகளை மீறி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 31-ஆம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் அந்தரத்தில் இருக்கும் வகையில் தூக்கியபடி சாகசம் செய்துள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அறிந்த அடையாறு […]
டிக்கெட் எடுக்காததை கண்டித்து கீழே இறங்கி விட்டதால் பேருந்து கண்டக்டரை 2 வாலிபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆவடியில் இருந்து கீழ்க்கொண்டயார் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஈஸ்வரன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை அடுத்து கலரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 2 வாலிபர்களிடம் ஈஸ்வரன் டிக்கெட் எடுக்குமாறு […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான்வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]