மாணவியை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக வடமாநில வாலிபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அடையார் கஸ்தூரிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டிற்குள் நிர்மல் குமார் நுழைந்து விட்டார். பின் நிர்மல் குமார் அங்கிருந்த கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கப்படுத்தியுள்ளார். இதனால் மாணவியின் […]
Category: சென்னை
நண்பரிடம் 30 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லிகாபுரம் பகுதியில்சதிஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோதி நகரில் உள்ள தனது நண்பரான சுந்தர் என்பவரிடம் தொழில் செய்வதற்காக 30 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். இந்த பணத்தை 3 மாதத்தில் திருப்பி தருவதாக சதீஷ்குமார் கூறியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் சுந்தர் அதனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். கடந்த […]
தமிழகத்தின் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி புதிய தலைமை செயலகம் காலனி 2-வது தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஊழல் செய்ததாகவும், சொத்து சேர்த்ததாகவும் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதியன்று […]
அரவை இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் முகமது அஸ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் அஜ்மா தண்டையார்பேட்டை பகுதியில் இருக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அஜ்மா அணிந்திருந்த துப்பட்டா அரவை இயந்திரத்தில் சிக்கிவிட்டது. மேலும் அரவை இயந்திரம் […]
சகோதரர்கள் இணைந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருவான்மியூர் சிக்னல் அருகே இருக்கும் எல்.பி சாலையில் விக்கி நடந்து சென்ற போது 2 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பிறகு மர்ம நபர்கள் விக்கியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த விக்கி […]
தூங்கி கொண்டிருந்த போது கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் மழை நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி சின்னசேக்காடு தேவராஜன் தெருவில் ஜெயகோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கோபியின் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் கோபி பக்கத்து தெருவில் இருக்கும் தனது […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (டிசம்பர்-4). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கு வரும் மாணவிகளுக்கு தமிழ்ச்செல்வன் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நேற்று முந்தினம் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு துணையாக பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுகுறித்து […]
மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் வினோத்குமார் கொளத்தூரில் இருக்கும் விளம்பர நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஹேமாவதி விவாகரத்து கேட்டு […]
மின்சாரம் பாய்ந்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவிலம்பாக்கம் சத்யா நகர் 7வது தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷியாம் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து வாட்டர் ஹீட்டர் மூலம் அதனை சூடு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து தண்ணீர் சுட்டு விட்டதா என விரலை வைத்து […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு ரவி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் […]
கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கே.சி கார்டன் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. மேலும் அந்த மழைநீருடன், கழிவுநீரும் கலந்து விட்டதால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 நாட்களாகியும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் பேப்பர் மில் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (டிசம்பர்-3). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து கியாஸ் ஏஜென்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நன்மங்கலம் பாரத் தெரு பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கியாஸ்ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர்களை டெலிவரி கொடுக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரான்சிஸ் நேசமணி நகரில் மாடியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி தோளில் வைத்திருந்த கேஸ் சிலிண்டருடன் பிரான்சிஸ் கீழே விழுந்து படுகாயமடைந்தார். […]
குடும்ப தகராறில் கணவன் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த செல்வராஜ் கண்ணகியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கண்ணகியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் வினோத்குமார் கொளத்தூரில் இருக்கும் விளம்பர நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஹேமாவதி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்பிறகு […]
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பகுதியில் குப்புசாமி-கலையரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் விளையாட சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்தின் பெற்றோர் மகனை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் […]
தாய் கண்முன்னே மகன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் இரட்டை டேங்க் 2-வது குறுக்கு தெருவில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஷ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் புழல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் கதிர்வேடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனுஷ்வரனின் மோட்டார் சைக்கிள் […]
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தரமணி பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ.ஆர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர், தரமணி, கானகம் மெயின் ரோடு, வி.வி கோயில் தெரு ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (டிசம்பர்-2). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
விமானத்தில் வந்த பயணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மதுரையில் இருந்து வந்துள்ளது. அந்த விமானத்தில் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உட்பட 93 பயணிகள் வந்துள்ளனர். இந்த விமானம் சென்னையை வந்தடைந்ததும் பயணிகள் இறங்கினர் ஆனால் சண்முக சுந்தரம் என்பவர் இறங்காமல் இருந்ததை பார்த்த பணிப்பெண் அவரை தட்டி எழுப்பியுள்ளார். ஆனால் சண்முகசுந்தரம் எழுந்திருக்காததால் உடனடியாக மருத்துவ குழுவினரை வரவழைத்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போது விமானம் நடுவானில் […]
சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என்று 2ஆவது நாளாக இன்றும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்ட […]
சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 8:30 மணியிலிருந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.. கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத […]
மின்சாரம் தாக்கி தலைமை செயலக ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளை சாலைத் தெருவில் முரளி கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தித் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டு வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடந்துள்ளது. இந்நிலையில் முரளிகிருஷ்ணன் தேங்கி கிடந்த மழை நீரில் நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக வழுக்கி […]
நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை போல சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் ஜெகதீஷ் தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி ஜெகதீஷ் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வரவேற்பறைக்குள் 10 அடி ஆழத்திற்கு திடீர் […]
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக சிறிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன் முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் 210 சிறிய பேருந்துகள் உள்ளது. இருந்தாலும் பல்வேறு காரணங்களால் 66 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு மற்றும் திருவெற்றியூர் ஆகிய மெட்ரோ […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-30). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனம், தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படித்து வந்தபோது சமூகவலைதளங்களில் ரவுடி பேபி சூரிய ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. அதனால் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு பேசியபோது தன்னை ஆபாசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் தனது நம்பரை […]
தமிழகத்தில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று சென்னையில் உள்ள பொன்னேரி பகுதி, பூந்தமல்லி வடக்குப் பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 4 மணிக்குள் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல் பூந்தமல்லி வடக்குப் பகுதியில் […]
தமிழகத்தில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை சென்னையில் உள்ள பொன்னேரி பகுதி, பூந்தமல்லி வடக்குப் பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 4 மணிக்குள் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. அதே போல் பூந்தமல்லி வடக்குப் பகுதியில் […]
மருத்துவமனையை சூழ்ந்த தண்ணீரால் நோயாளிகள் அவதி. கன மழை பெய்து வரும் நிலையில், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆற்றுநீர் போல் மழைநீர் ஓடுகிறது. மேலும் மழைநீர் மருத்துவமனையை சூழ்ந்துள்ளதால், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-29). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 100 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் தொடக்கம் முதலே கனமழை பெய்தும் வருகிறது. நவம்பர் மாதத்தில் 27 நாட்களில் 1,003 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதாவது 100 செ. மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையில் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் 100 செ.மீட்டர்க்கு மழை பதிவாகி இருப்பது இது 4-ஆவது முறையாகும். நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு […]
தமிழகத்தில் மாதம் தோறும் அந்தந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும். மின் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிவடைந்தவுடன் மின் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பியம், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தெருக்களிலும், வியாசர்பாடி, பெரியார் நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை, திருவிக […]
குற்றவாளியுடன் சேர்ந்து மது குடித்து ரகளையில் ஈடுபட்ட போலீசை கமிஷனர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் விமல்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காசிமேட்டில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை போலீசாராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22-ஆம் தேதி கீழ்பாக்கம் பகுதியில் வைத்து குற்ற வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ், சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து விமல்குமார் மது குடித்து விட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது […]
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியை பிரம்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் முத்துபாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் இமானுவேல் என்ற மகன் உள்ளார். இமானுவேல் பம்மதுகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் இந்திரா என்பவர் இமானுவேலை பிரம்பால் அடித்ததால் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலியில் அலறி துடித்த அந்த மாணவனை […]
தமிழகத்தில் மாதம் தோறும் அந்தந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும். மின் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிவடைந்தவுடன் மின் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பியம், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தெருக்களிலும், வியாசர்பாடி, பெரியார் நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை, திருவிக […]
தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து […]
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் அளவை பொருத்து பாதிப்பை கருதி மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். நாளை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-28). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 15 இடங்களில் மிக கன மழையும், 34 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. இதையடுத்து 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இருந்தாலும் பல சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து கொண்டு செல்கின்றன. இதனிடையே 8 முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தால் முடங்கியுள்ளன. அந்த சாலைகளில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதன் பிறகு சற்று மழை குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 29ஆம் தேதி வரை மழை நீடிக்கும் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-27). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]
சிவன் சிலையை திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் சுரேஷ்பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 2 1/2 அடி உயரம் உடைய மரத்தினால் ஆன சிவன் சிலை வைத்துள்ளார். அந்த சிலை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் பிரபாகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணியை பகுதியில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]
சென்னையில் இருக்கக்கூடிய பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணி நேரமாக கனமழை பெய்தது. அந்த வகையில் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.முன்னதாக விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. புதுச்சேரி காரைக்காளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, […]