Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

20-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-25). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பால்கனி…. இடிபாடுகளில் சிக்கிய பெண்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் சத்திவேல், ஞானசேகர், ராஜேஷ், ஆகியோருக்கு சொந்தமான இரண்டு மாடிகள் கொண்ட வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருக்கும் நான்கு வீடுகளில் சுதா மற்றும் மோகன் உட்பட நான்கு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மொட்டை மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்து விட்டது. அப்போது முதல் மாடியில் பால்கனியில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

19-வது நாளாக இன்றும்…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-25). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றாடியை பறக்க விட்ட சிறுவன்…. உடல் கருகி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சகுபர் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் வாசிம் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் வாசிம் தனது வீட்டு மாடியில் நின்று கொண்டு காற்றாடியை பறக்க விட்டுள்ளார். அப்போது திடீரென காற்றாடியின் நூல் அறுந்து வீட்டிற்கு பின்புறம் இருக்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BIG ALERT: மீண்டும் சென்னை மக்களுக்கு ஆபத்து…. சற்றுமுன் அலர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. அதனால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தென்மேற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு…. தலை நசுங்கி பலியான பெண்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் சங்கீதா வேளச்சேரியில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வேளச்சேரி 100 அடி சாலையை சைக்கிளில் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் மாணவிகள் தற்கொலை…. மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

பாலியல் தொல்லைக்கு எதிராக கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது மாணவிகள் மீதான பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு வாரத்திற்கு முன்பாக கோவையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். மேலும் கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையால்  மாணவிகளின்  தற்கொலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கண்டித்து சென்னையில் உள்ள ஆர். கே . நகரில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“மாஸ் காட்டும் சென்னை மக்கள்”…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்…. மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்…. கவனமா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை இடைவிடாது வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு வெயில் எட்டிப் பார்த்துள்ளது. சென்னையில் அடிக்கடி கிளைமேட் மாறுவதால், காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனைகளை கூறிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துணி எடுக்க சென்ற தம்பதியினர்… கணவன் கண் முன்னே நடந்த விபரீதம்… சென்னையில் கோர விபத்து …!!…

இருசக்கர வாகனம்  மீது பேருந்து மோதி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் அப்துல் வாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்சயா பார்த்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் துணிக்கடைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அப்துல் வாஜித்தின் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளை காலை 9 – மதியம் 2 மணி வரை…. மின்தடை அறிவிப்பு….!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி தாம்பரம் பகுதி: பெருமாள் கோயில் தெரு, திருச்செந்தூர் நகர், திருத்தனி நகர், பல்லவ கார்டன், பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் ரோடு, ஆழகப்பா நகர், ஏ.ஆர்.ஜி நகர், இராணுவ குடியிருப்பு, தாஜ் ஃபிளைட் கிட்சன், பி,பி,சி,எல், எல் & டி மற்றும் இந்தூஸ்தான் பெட்ரோலியம் சோழிங்கநல்லூர் பகுதி; தேவராஜ் நகர், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா…! மாணவர்கள் போராட்டமா ? பெரும் பரபரப்பு …!!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏழையின் வீட்டில் கஞ்சி காய்ச்சிய…… எதிர்கால முதல்வர் சசிகலா என கோஷம் …!!

மழை வெள்ளத்தால் சென்னை மாநகர மக்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், தானும் தனது இல்லத்திலிருந்து நீந்தி வரக்கூடிய சூழல் இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஒரு பிரிவு தொண்டர்களால் தியாகத் தலைவி சின்னம்மா எனப் போற்றப்படுபவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா. சிறையில் இருந்து விடுதலையான பின் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிக்கை விடுத்த சசிகலா, தற்போது படிப்படியாக தனது அரசியல் நகர்வுகளை நிகழ்த்தி வருகிறார். இதன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சங்கீதா – சென்னை 100 அடி சாலையில்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னை வேளச்சேரி 100 அடி சாலை குருநானக் கல்லூரி சந்திப்பில் சங்கீதா (37) என்ற பெண் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது 100 அடி சாலையில் தனியார் பேருந்து ஒன்று யூ டர்ன் செய்தபோது கவனிக்காமல் அந்தப் பெண்ணின் மீது ஏற்றி இறக்கியதில் பேருந்துக்கு அடியில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மசாஜ் பெயரில் மஜா! திடீரென உள்ளே புகுந்து… ஷாக்கிங்…. சென்னையில் பரபரப்பு….!!!

சென்னையின் பிரதான பகுதிகளில் இருக்கும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் போலீசார் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சென்னையில்  தி நகர், வடபழனி, அடையாறு, அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் 151 மசாஜ் சென்டர்களில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுபடி சோதனை நடந்தது. நள்ளிரவு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நம்பி ஏமாந்த சந்தியா.. முகத்தை அடித்தே வீங்கவைத்த “ஆணழகன்” … பரபரப்பு சம்பவம்….!!!

பாலவாக்கத்தில் சேர்ந்த சந்தியா மோகன் (31) என்ற பெண், ஜிம் நடத்தி வந்த மணிகண்டனுடன்(29) நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்றவர். உடற்பயிற்சி டிப்சில் தொடங்கிய நட்பு நாளடைவில் கட்டில் வரை நீண்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருக்கும்போது அதனை மணிகண்டன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டுள்ளார். தற்போது அந்த வீடியோக்களை காட்டி சந்தியாவை பலமுறை சரமாரியாக தாக்கி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 17-வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-22). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் ;காவல் நிலைய அதிகாரிகள் உடந்தை- பகீர் தகவல் …!

சென்னையில் புற்றீசல் போல் பெருகி உள்ள ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாகவும், அதற்கு காவல் நிலைய அதிகாரிகள் சிலர் துணை போவதாகவும், புகார் எழுந்தது. புதிதாக ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் துவங்குவதற்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரின் சான்றிதழ் கட்டாயம். அதில் ஏராளமான அளவில் லஞ்சம் புரல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த வாரம் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய 2 காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 மணி நேரமாக தவித்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

அறைக்குள் சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் தம்பி துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 1/2 வயதில் முத்துச்செழியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்துச்செழியன்  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அதன் பின் சிறுவன் படுக்கை அறைக்கு சென்று உள்புறமாக கதவை பூட்டி துங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து குழந்தை காணாமல் போனதை  அறிந்த  பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மழைநீர் தேங்க இதுதான் காரணம்.. அமைச்சரின் விளக்கத்தால் ஆடிப்போன அதிமுக …!!

கடந்த ஆட்சியின் போது  சென்னையில் வடிகால் அமைப்புகள் சீர்குலைக்க பட்டதே மழைநீர் தேங்கியதற்கு காரணம் என அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையின் உறுதி தன்மை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் சரியாக சீரமைக்க படவில்லை. இதனால்தான் சென்னையில் பல இடங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடற்கரைக்கு செல்ல தடை…. சென்னை காவல்துறை திடீர் உத்தரவு…!!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று காவல்துறை தடை விதித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வுகள் தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் பரவியது. அதனால் கடற்கரை முழுவதும் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு…. தற்காலிக பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பள்ளி கல்வி துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான கலந்து ஆய்வுகள் நடத்த தொடர்ந்து அறிவிப்புகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொய்யான அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம்…. மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் இருந்தால் அதற்கான அறிவிப்புகள் அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் மற்ற இணைய தளத்தில் பொய்யாக வெளியாகும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள துறைகளில் ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தால், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழ்,ஆங்கில நாளிதழ்களிலும் மெட்ரோ ரயில்வே […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 16-வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-21). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தேடுதல் பணி தீவிரம்…!!

குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி சிறுவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  அரசு பண்ணை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு  10 வயதான  சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் ஹரிஷ் என்பவருடன் அடையாறில் இருக்கும்  ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆற்றில்  அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள்   உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சத்தியம் வாங்கிக் கொண்ட கணவர்…. கணவனை உயிருடன் புதைத்த மனைவி…. மகள் பரபரப்பு புகார்….!!!

சென்னை பெரும்பாக்கத்தில் தந்தை ஜீவசமாதி அடைந்து விட்டதாக கூறிய தாய் மீது மகன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதி 8வது தெருவில் நாகராஜ்(60) லஷ்மி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். மகள் தமிழரசி (25) ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாகராஜ் குறை சொல்லி சாமி ஆடுவார். இவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்த சிறப்பான திட்டம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்கு சிறப்பு படை அமைக்குமாறு மாநகர காவல் ஆணையர் அங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் சட்டவிரோதமாக அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி குரோம்பேட்டை புதுவை நகர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிபதி, வணிக நிறுவனங்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த போலீஸார் சிலர் அனுமதிப்பதாகவும், இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சாலையில் தூக்கி வீசப்பட்ட உடல்…. சென்னையில் பெரும் பரபரப்பு….!!!!!

சென்னை விமான நிலையத்தில் அரை மணி நேரமாக சாலையோரம் போடப்பட்டிருந்த உடலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக தீபக் பால் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று 3.55 மணிக்கு விமானம் கிளம்ப தயாராகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆன்லைன் கேமிற்காக மாணவன் செய்த அந்த செயல்… ஷாக் நியூஸ்….!!!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆன்லைனில் கேம் விளையாட அனுமதிக்காததால் விரக்தியடைந்த பிளஸ் 1 மாணவர் 213 பவுன் நகை, 33 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எந்நேரமும் செல்போனில் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடி வந்த அந்த மாணவரை, பெற்றோர் கண்டித்தனர். ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்துள்ளனர். அதனால் விரக்தி அடைந்த அந்த மாணவர் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியேறினார். உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை எங்கும் காணாததால், […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 15-வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-20). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவர்களே! இந்த மாவட்டத்திற்கு லீவு கிடையாது…. வெளியான திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் சென்னை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம்போல செயல்படும் விடுமுறை கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: நாளை லீவு கிடையாது…. அரசு திடீர் உத்தரவு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேற்றும் இன்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வங்கக் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேற்றும் இன்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வங்கக் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று இங்கெல்லாம் `மின்தடை’ அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து சென்னை முழுவதும் மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் இன்று குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரம் பகுதிகளில் இன்று மின்தடை வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 14-வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-19). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘குளிக்க போன சிறுவர்களுக்கு’…. ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினர்….!!

ஆற்றில் காணாமல்போன சிறுவனை  தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஹரிஷ் என்ற  சிறுவர்கள் நேற்று முன்தினம் காலை அடையாறு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரும் ஆற்றில் குளிக்கும் பொழுது காணாமல் போயுள்ளனர். இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தீயணைப்பு படையினர் விரைவாக வந்து ரப்பர் படகுகள் மூலமாக காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இந்த நம்பருக்கு கால் பண்ணா போதும்…. உங்க வீடு தேடி வரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னையில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்ததால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று 9 வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 15-வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-18). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஜவுளி வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஜவுளி வியாபாரியான முகமது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இந்நிலையில் முகமது அலி தனது மோட்டார் சைக்கிளில் வடக்கு உஸ்மான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். அப்போது வடபழனி நோக்கி வேகமாக சென்ற மாநகர பேருந்து முகமது அலியின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே கனமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதி கனமழை எச்சரிக்கையால் சென்னை மாவட்டத்தில் நாளை(18.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்…. பொதுமக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான பால், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீர் உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொள்ளையர்களை தடுத்த வாலிபர்…. சரமாரியாக தாக்கிய நால்வர்…. போலீஸ் விசாரணை….!!

செல்போன் மற்றும் பணத்தை பறிக்க விடாமல் தடுத்த வாலிபரை 4 பேர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஹரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மகேஷிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். அதனை மகேஷும், அவரது நண்பரும் தடுத்ததால் இரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை’…. தூக்கி கட்டப்பட்ட வீடு…. மகிழ்ச்சியில் உரிமையாளர்….!!

35 ஆண்டுகள் பழமையான வீட்டை ஊழியர்கள் எந்த விரிசலும் ஏற்படாமல் ஐந்து அடி உயரத்திற்கு தூக்கி கட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் 9வது தெருவில் ராமகிருஷ்ணன்- பிரீத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அந்த தெருவில் பலமுறை மாநகராட்சி சார்பில் சாலைகள் போடப்பட்டுள்ளது. மேலும் இவரின் வீட்டிற்கு அருகே புதியதாக வீடுகளும் கட்டப்பட்டன. இதனால் இந்த தம்பதியினரின் வீடானது தாழ்வானது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கழிவு நீர் அகற்றும் வாகனத்தின் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அம்மா, அப்பா சண்டை போடுறாங்க” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் தந்தைக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா சாலை, புரா சாகிப் தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லோகேஷின் தாய் தந்தைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை…. அனைத்து ஏற்பாடுகளும் தயார்….. மாநகராட்சி ஆணையர்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அது மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 18ம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சார வயர் என நினைத்து…. பாம்பை இழுத்த முதியவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஏ.சி எந்திரத்தை சுத்தம் செய்த போது நல்ல பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் இருக்கும் ஏ.சி எந்திரத்தின் உள்ளே இருந்து இறந்த நிலையில் எலி ஒன்று கட்டிலில் வந்து விழுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் இறந்து கிடந்த எலியை தூக்கி போட்டுள்ளார். அதன்பிறகு ஸ்ரீதரன் ஏ.சி எந்திரத்தின் உள்ளே சுத்தம் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 14-வது நாளாக மாற்றமின்றி…. பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-17). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 13-வது நாளாக மாற்றமின்றி…. பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-16). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா உணவகத்தில் இலவச உணவு நிறுத்தம்…. அரசு அறிவிப்பு….!!!!

சென்னையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அம்மா உணவகங்களில் 3 வேளையும் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மழை காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிரமப் படுவதால் அம்மா உணவகத்தில் […]

Categories

Tech |