Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இனி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை…. காவல்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், துறைமுகங்கள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், வழிபாட்டுத்தலங்கள்,தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பரபதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள்,கோவில் திருவிழா மற்றும் குறும்படம் தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்கு முறையாக காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் ட்ரோன்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் சென்னை…. அரசு போட்ட சூப்பர் திட்டம்…. செம குஷியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் வளர்ந்த மாவட்டமாக திகழும் சென்னையில் பல கிராம மக்களும் தற்போது தங்கள் ஊரை விட்டு கிளம்பி சென்னையில் வசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை குறைவான பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை நான்கு மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1189 சதுர கிலோமீட்டரில் இருந்து 5 ஆயிரத்து 904 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு தற்போது விரிவாக்கப்பட உள்ளதால் தற்போதைய 1189 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை வீடு மீது விழுந்த ராக்கெட் பட்டாசு”…. தீயில் சிக்கிய மூதாட்டி… நேர்ந்த சோகம்…!!!!!

குடிசை வீடு மீது ராக்கெட் பட்டாசு விழுந்ததால் தீயில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் மல்லிகா என்பவர் வீட்டின் மாடியில் இருக்கும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் சென்ற 24ஆம் தேதி காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் வந்து மல்லிகாவின் குடிசை வீடு மீது விழுந்தது. இதனால் தீ சிறிது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை”… இணையதளம் மூலம் பழகிய இளைஞர்… சிறையில் அடைப்பு….!!!!!

சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர்  கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மடிப்பாக்கம் ராம் நகர் 4-வது தெருவை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற இளைஞர் தனக்கு இணையதளம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகினார். ஒரே பகுதியில் வசிப்பதால் என்னை காதலிப்பதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட தேவாங்கு விலங்குகள்”… திருப்பி அனுப்ப நடவடிக்கை…!!!!

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அரிய வகை ஐந்து தேவாங்கு விலங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப இலாகா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலாகா அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் போலீசார் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த ஒரு பை லேசாக அசைவது போல இருந்தது. இதைத் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

விஷவாயு தாக்கி 3 பேர் பலி…. “இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு”….!!!!!

விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன் குமார், திருமலை உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி அன்று தீ விபத்து…. பற்றி எரிந்த மருந்து குடோன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மருந்து குடோனில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகர் 2-வது அவென்யூ பகுதியில் மருந்து குடோன் இருக்கிறது. நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு குடோன் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சனிடைசர், மாஸ்க், கையுறை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்த மருமகன்…. ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி…. நன்றி தெரிவித்த முதியவர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பாரதி நகரில் தயாளமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் பிரியா, மகன் டேனியல் சம்பத் ஆகியோரும் உயிரிழந்துவிட்டனர். இரண்டாவது மகளான தீபா அவரது கணவர் ரவி ஆகியோருடன் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார். தற்போது தயாளமூர்த்தி சென்னை நங்கநல்லூரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கி வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தயாள மூர்த்தி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ஐசக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபாகரன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது நண்பரான ஜீவா(19) என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்கள் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே சென்றபோது வேகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரம்…. நடுரோட்டில் கைகலப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரசு பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அண்ணா சதுக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் தீவுதிடல் நிறுத்தத்தில் இறங்குவதற்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் போர் நினைவு சின்னம் அருகே சிக்னலில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த பயணியை கீழே இறங்கச் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பயணி பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ALERT : “பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி…?” சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை…!!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது பற்றி சென்னை மாநகர காவல் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் பின்வருமாறு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும். கோர்ட் அனுமதித்த நேரமான காலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தீபாவளியின் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு செல்கின்றனர். கடைசி நேரத்தில் சிலர் ஆம்னி பேருந்துகளில் முண்டியடித்து செல்வதால் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கத்திப்பாரா, அசோக் நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த விதிமுறைகளை மீறிய 8 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“இனி இப்படி செய்யக்கூடாது” மீறினால் 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களை ஈடுபடுத்த கூடாது. இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ஒருவர் கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க்  சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்து விட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்பதோடு, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. புதுமண தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி ஜெய்சங்கருக்கும் தாய் மாமன் மகளான சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினர் தேனிலவுக்காக குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்று விட்டு கடந்த 14-ஆம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த டென்ஷன் இருக்காது…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

சென்னையில் எப்போதுமே மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக தான் இருக்கும்.முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பல நேரங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதாவது சென்னையில் சாலை மூடல்கள் மற்றும் ஸ்டேட் டைவர்ஸன் போன்ற முக்கிய அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள உதவியாக தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு roadease என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். போக்குவரத்தை மேம்படுத்த அல்லது பராமரிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பரங்கிமலை மாணவி கொலை வழக்கு…. நேரில் பார்த்தவங்க தகவல் தெரிவிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சிபிசிஐடி அறிவிப்பு….!!!!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீஸ் அரை அணுகலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. அதன்படி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் 9498142484, காவல் ஆய்வாளர் ரம்யா 9498104698, சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-28513500 ஆகிய எண்கள் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் பிணமாக மிதந்த வாலிபர்…. கஞ்சா விற்பனையில் நடந்த விபரீதம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!

வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு அருகே உள்ள கூவம் ஆற்றில் சுமார் 20 முதல் 25 வயது உள்ள வாலிபரின் பிணம் ஒன்று உடலில் வெட்டு காயங்களுடன் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாலிபரின் உடலை மீட்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகள் பழமையான வீடு…. திடீரென நடந்த சம்பவம்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை….!

5௦ ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை. சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமாக 2 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. இந்த வீடு சுமார் 5௦ ஆண்டுகள் பழமையானது என்பதால் வீட்டின் மேல் பகுதியின் சுவர் பலவீனமான நிலையில் விரிசலோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென வீட்டின் 2வது மாடியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழக்கை முடித்து தருமாறு கோரிக்கை…. பெண் இன்ஸ்பெக்டர் செய்த செயல்…. கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்…..!

லஞ்சம் கேட்டு வற்புறுத்திய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யதுள்ளனர். சென்னை கொளத்தூரில் சேர்ந்த மருத்துவரான வினோத்குமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் 200 பவுன் நகை வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பேசியபடி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் மோனிகா ஸ்ரீ கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் பிணமாக கிடந்த தம்பதி…. கொலையா..? தற்கொலையா..? அதிரடி விசாரணையில் போலீசார்….!!!!

சென்னை மாவட்டத்தில் பூந்தமல்லி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி, பரிமளா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும் அவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.இந்த நிலையில் பாண்டியனும் பரிமளாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை அடுத்து மாலையில் பள்ளி முடிந்ததும் பிள்ளைகள் வீடு திரும்பி உள்ளனர். அப்போது தந்தை பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்குவதையும் பரிமளா தரையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி”…. தொடங்கி வைத்த கமிஷனர்….!!!!!

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சாலை வரைபட செயலி ஒன்றை அறிமுகம் செய்யப்படும் விழா நடைபெற்றது. போக்குவரத்து மாற்றம் செய்யும் சூழ்நிலையில் மாற்றங்கள் குறித்து விவரிக்கும் வரைபட விவரங்கள் 15 நிமிடங்களில் தற்போது வெளியாக தனியார் நிறுவனத்தின் உதவியோடு புதிய செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி சென்ற நான்கு நாட்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது வெற்றிக்கரமாக செயல்பட்டதால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயலியை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. இவ்விழாவில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு விதிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி..!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் மரணமடைந்தனர். தமிழக அரசு சார்பில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. அதற்காக பிரத்யேகமாக இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளிகள் இதுபோன்று கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது உயிரிழப்பு நடைபெற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாயை கொன்ற வழக்கு…. சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகர் திரு.வி.க தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமியின் மகன் மூர்த்தி(30) என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சாப்பாடு இல்லை எனக் கூறியதால் தனது தாயை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான மூர்த்தியின் தந்தை ராமலிங்கம்(57), தங்கை செல்வி(40) ஆகியோர் நீதிமன்ற விசாரணைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்…. திரளான மாணவர்கள் பங்கேற்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செந்தில்குமார் நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியானது பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் உயரம் மற்றும் நீளம் தாண்டுதலில் திரளான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பணமா….? மருத்துவ அலுவலகத்தில்… அதிரடி சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்….!!!!

சென்னை மாவட்டத்தில் ஜமாலியா பகுதியில் இயங்கி வரும் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தின் வேலை தங்களுக்கு கீழ் செயல்பட்டு வரும் 35 மருந்தகங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் வழங்குவதே ஆகும். இந்த நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் மருத்துவ மண்டல அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு அலுவலக அறையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஆறு லட்சம் பணமும் 28 தங்க காசுகளும் சிக்கி உள்ளது. இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு….. சென்னையில் இரவு 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்…. வெளியான அறிவிப்பு..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிடத்திற்கு குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மட்டுமே என மெட்ரோ ரயில் நிறுவனம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி இப்படி செய்தால் அவ்வளவுதான்…. மக்களுக்கு திடீரென எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

இன்றளவும் கழிவு நீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய துப்புரவு பணியாளர்களை தான் அனைவரும் நாடுகிறோம். கழிவு நீர் தொட்டியில் இறங்கும் அந்த நபர் விஷ வாயு கசிவால் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இந்த வாயுவை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கிறது.இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய எந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் புதிய ரூல்ஸ்…. இனி இப்படி பயணித்தால் அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று நள்ளிரவு முதல் அமலானது. அதன்படி பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.    

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாட்டு பாடி கலாட்டா…. படிக்கட்டில் தொங்கிய படி வந்த மாணவர்கள் கைது…. போலீஸ் அறிவுரை….!!!

படிக்கட்டில் தொங்கியபடி ரயிலில் கலாட்டா செய்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பாட்டு பாடிய ரகளை செய்து பயணிகளை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினந்தோறும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. அதிரடி நடவடிக்கை…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்….!!!

சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் தானா தெருவில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த சாலையை பூக்கடைகளும், பழ கடைகளும் ஆக்கிரமித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், போக்குவரத்து போலீசாரம் இணைந்து அந்த பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் விசாலமான சாலையில் வாகன ஓட்டிகள் தற்போது நிம்மதியாக செல்கின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பாகங்கள்….நடுரோட்டில் பற்றி எரிந்த கார்….. பரபரப்பு சம்பவம்….!!!

சொகுசு கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள உள்ள கோயம்பேடு பகுதியில் இருந்து கதிரவன் என்பவர் பிஎம்டபிள்யூ கார் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கதிரவன் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண் இன்ஜினியர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி….கதறும் குடும்பத்தினர்….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் மகாலிங்கம் அம்மன் கோவில் தெருவில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் பொன்மார் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஹோட்டலை மூடச் சொல்லி மிரட்டிய சப் இன்ஸ்பெக்டர்…. அதிரடி நடவடிக்கையில் டிஜிபி….!!!!

சென்னை மாவட்டத்தில் ஒரகடம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரிடம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அம்பத்தூர் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தசரதன் கடையை மூடும்படி கூறியுள்ளார். அதற்கு பிரேம்குமார் அரசு 24 மணி நேரமும் கடை மற்றும் வணிக வளாகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டிருக்கும் இந்த நிலையில் நீங்கள் ஏன் கடையை மூட சொல்கிறீர்கள்? என்று தசரதனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வாலிபர்…. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி பின்னணி….!!!!

சென்னை மாவட்டத்தில் மவுலிவாக்கம் பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அலமேலு என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் ஏல சீட்டு கட்டி வந்துள்ளார். மேலும் அலமேலு தனது உறவினர்களையும் ஏலச்சீட்டுக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏல சீட்டு முடிந்த பிறகு சீட்டு கட்டியவர்களிடம் பணத்தை கொடுக்காமல் கார்த்திகேயன் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து அலமேலு பல முறை கார்த்திகேயனிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கார்த்திகேயன் பணத்தை தர மறுத்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாழ்நாள் முழுக்க தண்டனை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போச்சோ கோட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் மணிகண்டன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை போச்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தின் மேற்கூரை மீது நடனம் ஆடிய கல்லூரி மாணவர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் காட்சிகள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடியே தொங்கியபடியோ பயணம் செய்ய வேண்டும் என போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாத பள்ளி கல்லூரி மாணவர்கள் அலட்சியத்தோடு ஆபத்தான முறையில் இவ்வாறு பயணம் செய்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிகட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்துள்ளனர். மேலும் சிலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த மாடு…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஆலடி அம்மன் கோவில் தெருவில் குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குமார் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் முடிச்சூர் சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கோர விபத்து…. தலை குப்புற கவிழ்ந்த கார்…. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் மரணம்….!!!!

சென்னையை அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ் பாபு ஆகிய இரண்டு சகோதரர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் பழுதானதால் தங்களது சொந்த ஊரிலிருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்கு திரும்பினர். அந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை….!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் என்பவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜேம்ஸ் மரிய ஞானராஜ் அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த பிரபல ரவுடி…. தட்டி கேட்ட போலீசாருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெ.ஜெ நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஜீப்பில் அங்கு சென்றனர். இதனை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதால் போலீசார் அங்கிருந்து கிளம்பினர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் மீண்டும் தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீஸ் ஏட்டுகள் ராயப்பன்(42), […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே…. 21 ஆம் தேதிக்குள் பட்டாசு வாங்கினால்…. 25 சதவீதம் தள்ளுபடி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது .இதனால் அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.சிவகாசியை சேர்ந்த 20 முன்னணி நிறுவனங்கள் தீவுத்திடலில் ஸ்டால் அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன. அங்கு அக்டோபர் 21ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எந்த கடையில் பட்டாசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற விமான நிலைய ஊழியர்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் தனியார் விமான நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். இவர் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை-காந்தி சாலை சந்திப்பு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம்….. சிக்கிய ஆதாரம்….!!!

சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். . ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார். இதையடுத்து கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் என்பவரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொள்ளையடிப்பதற்கு 5 டிப்ஸ்” 1000 செல்போன்களை திருடிய அபூர்வ சிகாமணி கைது….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

1000 செல்போன்களை திருடிய குற்றவாளி பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 10 வருடங்களாக பாலாஜி என்பவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். சுமார் 1000 செல்போன்களையாவது பாலாஜி திருடி இருப்பார். இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருடுவதற்காக 5 முக்கிய விதிமுறைகளை பின்பற்றியதாக கூறியுள்ளார்‌‌. அவர் கூறியதாவது, ஆள் இல்லாத வீட்டில் திருடக்கூடாது, யாரையும் தாக்க கூடாது, லேப்டாப் மற்றும் செல்போன் மட்டுமே திருட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை வேலை செய்ய சொல்கிறார்கள்” திருமணமான 1 1/2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

திருமணமான 1 1/2 வருடத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொத்தூர் செல்வகணபதி நகரில் கிஷோர்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் குன்றத்தூர் பகுதியில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிஷோர் ரோஜா(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மாதத்தில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பெற்றெடுப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரோஜா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்து…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

கோவிலுக்கு சொந்தமான இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரூர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் 15 கிரவுண்டு மனை சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு அறிவிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியில் ஜானகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(19) என்ற மகளும், பாபு என்ற மகனும் இருக்கின்றனர். இதில் செல்வி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பாபு அம்பத்தூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்து செல்வி தூக்கிட்டு […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

20 மாவட்டங்களுக்கு அலெர்ட்..! வெளுத்து வாங்கப் போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் …!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories

Tech |