பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் 22.3% மாணவர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியக் குறைவு […]
Category: சென்னை
சென்னையில் மருமகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாமியார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார். சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவர். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். சென்னை மற்றும் மதுரையில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆவடி அடுத்த காட்டூர் அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பிரகாஷை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் […]
சென்னையில் வீட்டிலேயே துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் வளர்ப்பு நாய்களை விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் துப்பாக்கி பயிற்சியையும் மேற்கொள்கிறார்.அதற்காக இவர் இரண்டு உயர்ரக ஏர்கன் உள்பட மூன்று ஏர்கன்களை வாங்கி வீட்டிலேயே பயிற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வன் வீட்டிலிருந்து நிஜ துப்பாக்கி வெடிக்கும் சத்தம் வந்துள்ளது. அச்சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அம்பத்தூர் உதவி ஆணையரிடம் புகார் […]
தந்தை மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவில்பதாகை கலைஞர் நகர் 2வது தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசாங்கத்தின் ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் உள்ளார். பரத் அவரது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி தொந்தரவு செய்துள்ளார். அதற்கு அவரது தந்தை இப்போது வாங்கி தர முடியாது எனவும், ஓய்வுபெற்ற […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
இரு சக்கர வாகனங்களை ரயிலில் அனுப்புவது குறித்த புதிய வழிமுறைகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே துறையானது இருசக்கர வாகனங்களை ரயில்கள் மூலம் அனுப்புவதற்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனங்களின் பெட்ரோல் டேங்குகளில் இருக்கும் மொத்த பெட்ரோலையும் முதலில் நீக்க வேண்டும். அதன் பிறகு வாகனங்களை இயக்கி டேங்கில் பெட்ரோல் ஒரு துளி கூட இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் […]
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மெட்ரோ ரயில்களில் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கின்றனர். இதனையடுத்து வருகிற 22-ஆம் தேதி அகரம் கலைக்குழுவுடன் மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து […]
பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் விஜய் – விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு பல தரப்புகளில் இருந்து வரவேற்பு குவிந்து வருகிறது. படத்தின் தொடக்க நாளில் கொரோனா இருந்தும் கூட ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படத்தை கண்டுகளித்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது சென்னை நெற்குன்றத்தில் […]
2021 ன் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தேர்தல் அலுவலரான சத்யபிரதா சாகு, தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் 13, 09, 311 நபர்கள் முதன்முதலாக வாக்களிக்கவுள்ளார்கள். மேலும் கொரோனா தாக்கத்தினால் 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை […]
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அதிமுக பாஜகவின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்களின் கூட்டமானது நேற்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றியுள்ளனர். அதன்பிறகு கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் […]
வரி ஏய்ப்பு புகாரில் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. கிறிஸ்தவ மத போதகரான பால் தினகரன் இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் உலகம் முழுவதும் மதப்பிரச்சார கூட்டங்கள் நடத்தி வருகிறார். தந்தை டிஜிஎஸ் தினகரன் வழியில் மத போதனையில் ஈடுபட்டுவரும் பால் தினகரன் மீது வரி ஏய்ப்பு தொடர்ந்து அவரது வீடு மற்றும் […]
சிபிஐ வசமிருந்த இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கு சிபிஐ ஆய்வாளர் திரு மாணிக்கவேல் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இருந்து சிபிஐ 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. சிபிஐ வசம் இருந்த 400 கிலோ தங்கதில் 103 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக திருட்டு வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு […]
சென்னையில் ஆசிரியர் மாணவரை முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அரும்பாக்கம் விநாயகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் ஆசையாக முடி வளர்த்துள்ளார். இப்போது பள்ளிகள் திறந்து உள்ள காரணத்தினால் சஞ்சயை அவரது ஆசிரியர் தலைமுடியை வெட்டி வர சொல்லி இருக்கிறார். அதன்பின் பள்ளி முடிந்து […]
சென்னையில் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் குழந்தை நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் அருகில் குழந்தைகளும் தாய்மார்களும் பிச்சை எடுப்பதை நாம் கண்டுள்ளோம். அவர்களில் சிலர் தங்களது குடும்ப வறுமையினால் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு […]
சென்னையில் பக்கத்து வீட்டுக்காரர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, அவரின் கன்னத்தை கடித்து குதறிய ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை முத்து இருளாண்டி காலனியை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். பக்கத்து வீட்டை சேர்ந்த ஊழியருக்கு 50 வயதாகும். அவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். போதைக்கு அடிமையான அவர் என் மீது ஆசை கொண்டார். […]
சென்னையில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]
சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் இரண்டு கண்களை நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கே மெரினா கடற்கரையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த […]
திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பாவதி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான யசோதா என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறாத காரணத்தால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் யசோதாவின் அறையில் திடீரென அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது யசோதா உடலில் மண்ணெண்ணையை […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 27-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். அவரின் உடலானது எம்.ஜி.ஆர் சமாதி அருகில் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தமிழக அரசு ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்தது. இந்த நினைவிடமானது பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]
பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்மின் அழுத்த கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள செல்லியம்மன் நகரில் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக தனது உறவினர் பிரபு என்பவருடன் அங்குள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் வெளிப்புற சுவரில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக அஜய்யின் […]
புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவரான டாக்டர் சாந்தா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக டாக்டர் சாந்தா பணிபுரிகிறார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணராக இவருக்கு 93 வயது ஆன போதிலும் ஏழை, எளிய மக்களுக்காக புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்கும் வண்ணம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். இந்நிலையில் மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தா சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்து விட்டார். […]
கைக்குழந்தை விடாமல் அழுததால் பெண் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு அதன் பின்னர் மற்றொரு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 106 பயணிகளுடன் பகல் 12:15 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் டெல்லியில் வசித்து வரும் லட்சுமி தேவி-ராகுல் தம்பதியினரும், அவர்களது நான்கு மாத பெண் குழந்தையுடன் அந்த விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டனர். இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு அதன் பின்னரே டெல்லி செல்வதற்காக […]
நீட் மதிப்பெண் சான்றிதழில் மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்ஷா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து முதல் நீட் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் டிசம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீக்ஷா தனது தந்தை பாலச்சந்திரனுடன் கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். இந்த மாணவி நீட் தேர்வில் 25 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த நிலையில் 610 மதிப்பெண் பெற்ற […]
கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். ஜனவரி 29-ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் மூன்றாவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை […]
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]
சென்னையில் நாளை 70 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தைப் பெற்று தான் பள்ளிக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கல்வி அலுவலர் முனியன் […]
கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள இருளாண்டி காலனியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது இரண்டு மகன்களும் வேலை தொடர்பாக வெளியூருக்கு சென்ற போது, 47 வயதான அந்தப் பெண் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் இருதயராஜ் என்பவர் மதுபோதையில் […]
மனைவியை பிரிந்த விரக்தியில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் திருநீர்மலை சாலையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண் குமாருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அருண்குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப் மூலம் தனது மனைவிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து குடும்ப பிரச்சினை காரணமாக […]
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வாலிபரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டையில் ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் என்ஜினியரான வசந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரின் திருமணமானது திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் பார்த்து நடைபெற்றுள்ளது. அதன் பிறகு அவர்கள் இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டனர். அதன்பின்னர் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள […]
ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்தவர்கள் எந்த கட்சியிலும் இணையலாம் என அம்மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை […]
இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்து சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “இறைச்சிக் கடைகளில் ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக கோட்ட சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடைகளில் […]
சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிரடி அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பைக்கில் செல்ல முதல் பத்து நிமிடத்திற்கு ரூபாய் 10 கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்கு 3 மாத பயண அட்டை, ஒரு நாள் பயண அட்டை, ஒரு மாத பயண அட்டைகளும் வழங்கப்படும் என […]
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அரசின் உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து காணும் பொங்கல் கொண்டாடுவதற்காக பொழுதுபோக்கு மையங்கள், கடற்கரை என பொது இடங்களுக்கு […]
சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், மன்னார்குடி,போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து போளூர், திருவண்ணாமலை, […]
போலி திருமண சான்றிதழ் தயார் செய்து கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் அந்தக் கல்லூரியில் இரண்டாமாண்டு விஷுவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவி மீது காதல் கொண்டுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி வந்த சதீஷ்குமார் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மாணவிக்கு தொல்லை கொடுக்க […]
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.18 ரூபாய்க்கும், ஒரு […]
கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு வாட்ஸ் அப்பில் காதல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அய்யப்பன்தாங்கல் என்ற பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து கொண்டிருக்கும் மாணவிக்கு சதீஷ்குமார் வாட்ஸ் அப் மூலம் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சதீஷ்குமார் தனக்கும் அந்த மாணவிக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொதுமக்கள் கூடி கடற்கரையில் பொழுதைக் கழிப்பர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், மற்றும் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகர் பகுதிகளிலும் பொங்கல் பானைகள் விற்பனையானது அதிகளவில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை, கொசப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான மண்பானைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. அதோடு ஓலைகள் மற்றும் விறகுகள் புறநகர் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு வீதிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் […]
விக் வைத்து ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றிய கணவர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மேட்ரிமோனியில் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் வரதட்சணை 50 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் மனைவியுடன் நெருங்கிப் பழகாமல் இருந்துள்ளார். இதனால் இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ராஜசேகர் […]
வருகிற 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாட உள்ள நிலையில் அன்று இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மாநகராட்சி கமிஷனர் ஜி. பிரகாஷ் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இறைச்சி கூடங்கள், இறைச்சிக் கடைகள் அனைத்தும் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருப்பதால் அரசு உத்தரவின்படி மூடப்பட வேண்டும். ஆடு மாடு மற்றும் இதர […]
காதலன் சரிவர பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் பவித்ரா என்பவர் வசித்துவருகிறார். இவர் போரூரில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக பணிபுரிந்தார்.இவரும் ஐயப்பன்தாங்கல் என்ற பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மோகன் பதட்டத்துடன் பவித்ராவின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மோகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பவித்ரா […]
சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்பட வேண்டும். ஆடு,மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் […]
இளம்பெண்களை குறிவைத்து ஆபாசமாக பேட்டி எடுத்து அதனை யூடியூப் சேனலில் பதிவேற்றிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பெசன்ட் நகர் பீச் பகுதியில் பிராங்க் என்ற பெயரில் பெண்களை பேட்டி எடுத்து நகைச்சுவையாக பேசுவது போன்று உரையாடி வீடியோ பதிவு செய்து அதை யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசியது போல் பதிவிடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் பெசன்ட் […]
சென்னையில் உள்ள திரையரங்குகள் அரசு விதியை மீறி 100% பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு […]
சென்னை போரூரில் செல்போன் சர்வீஸ் கடையில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையும் செல் போன் மூலமாகவே ஓடும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. அதனை தவறாக பயன்படுத்துவதால் சில ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போரூரில் […]
பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அதிகளவு மக்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் பயணித்து சென்றனர். பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையானது 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் இருக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில்களிலும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியது. […]
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 15ஆம் தேதி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி இறைச்சி கடைகளை திறக்க அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மக்கள் 15ஆம் தேதி இறைச்சி சாப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது. […]
பெண்ணிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணிடம் எடுத்த போட்டியானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்நிலையில் சென்னை டாக் சேனலின் உரிமையாளர் தினேஷ்குமார், ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, செய்தியாளர் அசன் பாட்சா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்த கல்லூரி மாணவர் தாயாருக்கு பயந்து பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை மாவட்டத்திலுள்ள எம்ஜிஆர் தெருவில் சின்னத்தம்பி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வன் என்ற ஒரு மகன் உள்ளார்.இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் இவர் அருகில் உள்ள ஒரு தனியார் […]