சென்னையில் கொரோனாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கததாக கூறி ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளுதே தவிர பாதிப்பு குறைந்து விட்டதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் மக்கள் இதனை உணராமல் தொடர்ந்து அலட்சியப் போக்கில் […]
Category: சென்னை
சென்னையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் குறும்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னை மவுண்ட்ரோடு போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை தயாரித்து வருகின்றனர். இதற்கான காட்சிகளை சென்னை ஆலந்தூர் தபால் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தன. விபத்து காட்சியை படம் பிடித்து கொண்டிருந்தனர்.மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் உண்மையில் விபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதோ என்று […]
தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் டெல்லியை சேர்ந்த ஆரிப் கான், வஷித் கான், சந்தீப் குமார் அவர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவசங்கர் என்பவர் www.timeforjob.com என்ற இணையதளத்தில் மூலம் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். வேலைவாய்ப்பு நிறுவனத்தில் மூவாயிரம் ரூபாய் கட்டி பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். சிவசங்கர் பணம் செலுத்திய பின்னரும் வேலை பற்றிய எந்தவித தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் […]
சென்னை சூளைமேடு பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை வாடகைதாரர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை சூளைமேடு அருகே ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெயிண்டர் வேலை பார்த்துவரும் நாராயணன் என்பவர் இரண்டு மகன்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கொரோனா கால ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கடந்த ஐந்து மாத வாடகை பாக்கியை நாராயணன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. […]
சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருந்த சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது அவரவர் மொபைல் போன் தான். மக்கள் அடிக்கடி இந்த மொபைல் போன் […]
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. சென்னை வில்லிவாக்கம் அடுத்து நியூ ஆவடி சாலையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலை சேமிப்பு கிடங்கில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிடங்கில் இருந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கு தேவையான அனைத்து எலக்ட்ரிக்கல் உதிரிபாகங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் […]
புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவது பல்வேறு பலன்களை தரும் என்பது ஐதீகம். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான நேற்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் கூடினர். முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க பட்டனர். பக்தர்களுக்கு […]
இன்று முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கீழ்க்கண்ட விஷயங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பல செயல்களுக்கு அரசு சார்பில் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளின் அடிப்படையில் மக்கள் சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கிவிட்டனர். […]
எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் செய்தியாளர்கள் உட்பட 5 பேரிடம் செல்போன் திருடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் எஸ்பிபியின் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்த திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறையினரும் குவிந்திருந்தனர். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் கைப்பேசி உட்பட 5 […]
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடலை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குனரான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் சினிமா ரசிகர்களை இத்தனை வருட காலமும் தன்னுடைய இனிமையான குரலால் தாலாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மீள தூக்கத்தில்அவர் ஆழ்ந்துவிட்டார்.விலை மதிப்பில்லாத இந்த இசைகலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்றுதான் அவருக்கு தரும் சரியான அங்கீகாரம் ஆகும். அந்த அறிவிப்பை செயல்படுத்திய முதலமைச்சருக்கு கலை உலகின் […]
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதுமையாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் பதவியேற்கவுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்களை உயர்நீதிமன்றம் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ள நிலையில் அந்த பத்து பேரில் இருவர் கணவன்-மனைவி […]
இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவரை கொலை செய்ததற்காக தாய்-மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் உள்ள திருவேங்கட கிருஷ்ணா நகரில் வசித்து வரும் குப்புசாமி என்பவரின் மகன் ஸ்ரீராம். 19 வயதான அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குப்புசாமியின் வீட்டில் சில வருடங்களாக ராஜா என்பவர் குடும்பத்துடன் லீசுக்கு வசித்து வருகிறார்.அந்த வீட்டிற்கு ராஜாவின் மகனான சங்கர் (28) […]
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,845 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 101 ஆண்கள், 47 பெண்கள்,2 […]
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விளக்கியுள்ளது. இந்த பானத்தை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நிலுவையில் […]
பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக திரு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் திரு எஸ்.பி.பி. சரண் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திரு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் […]
கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருந்த விக்ரமராஜாவின் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். கோயம்பேட்டில் கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருக்கும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் திரு விக்கிரமராஜா மீது விசாரணை கமிஷன் மற்றும் வெள்ளை அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அருண்குமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகளும் வியாபாரம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு ஒரு முறை […]
மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். பின்னணி பாடகர் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் மருத்துவமனைக்கு சென்று எஸ்.பி.பி. யின் உடல் நிலை குறித்து விசாரித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது எஸ்.பி.பி. நல்ல உடல் நிலையில் இருக்கிறார் […]
திருட வந்த இடத்தில் போதையில் தூங்கியதால் இன்ஜினியர் வசமாக காவல்துறையிடம் சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அருகே அடையாளம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். 53 வயதான இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.வசித்து வரும் வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்ற காரணத்தால் பிளம்பரை வரவழைத்தார். வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கி இருப்பதை கண்டு நீ யார்? எனக் கேட்டார் சற்றென்று அந்த வாலிபர் வீட்டு மாடியில் […]
பேரறிவாளனக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு வழங்கக்கோரி அவரது தாயார் திருமதி. அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மகன் இருக்கும் புழல் சிறையில் 50 கைதிகள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்புகள் உள்ளதால் கொரோனா தொற்று […]
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விலகி உள்ளது. இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் […]
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்தில் நேரடியாக வந்து தேர்வு எழுதுவது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பேட்டி அளித்த மாணவர்கள் b.ed, m.ed போன்ற படிப்புகளுக்கு கூட இறுதித் தேர்வு ஆன்லைனில் நடத்தும் போது தங்களுக்கு நடத்த முடியாதா என வேதனை தெரிவித்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முப்பது நாட்கள் விடுப்பு அளித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மனு கொடுத்திருந்தார். கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் தன் மகனுக்கு ஏற்கனவே உடல் சம்பந்தமான கோளாறு இருப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று […]
தே.மு.தி.க. தலைவர் திரு விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெரிதளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு […]
சென்னையில் விரைவில் புறநகர் ரயில் போக்குவரத்தை தொடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார். கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கிய போதிலும் புறநகர் ரயில்சேவை மட்டும் இன்னும் தொடங்கபடாமலேயே உள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வேத்துறை டிஐஜி அருள்ஜோதி விரைவில் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கும் என கூறினார். அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் […]
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மோடி பெயரில் வாழ்நாள் சிறப்பு மோடி விருது 2020 வழங்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, செரிபா, அஜிஸ், சுபைதா, அஸ்கர் அலி, டாக்டர் பிரகாஷ், எம் சுவாமி, தேசிய ஊடக வேளாளர் நலச் சங்க பொதுச் செயலாளர் ஜெய கிருஷ்ணன் ஆகிய […]
சென்னையில் இருந்து தெலுங்கானாவிற்கு சென்ற கண்டெய்னர் லாரியில் இருந்து 2.5 கோடி மதிப்புடைய செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் வைத்து சென்னையில் இருந்து கண்டெய்னரில் கொண்டுவரப்பட்ட செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . இதேபோல் கடந்த 20 நாட்களுக்குள் 2 சம்பவம் நடைபெற்றது. அதாவது முன்னதாக சென்னையில் இருந்து வேறு பகுதிக்கு சென்ற கண்டெய்னர் ஓட்டுனரை தாக்கி விபத்து ஏற்படுத்தி 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கடதத்ப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு […]
தமிழகத்தில் நேரிட்ட சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]
அத்தியாவசிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும் … “கேமரா பொருத்துங்க” உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!! சென்னை ஐகோர்ட்டில் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது,தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மொத்தம் 32, 722 ரேஷன் கடைகள் உள்ளன அதில் 1,97, 82, 593 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக […]
2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 2ஜி ஊழல் வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனுக்கள் தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை […]
பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் திமுக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கட்சி இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறு கைகலப்பாக மாறியதில் திமுக நிர்வாகி சந்திரன் என்பவர் தாக்குதல் நடத்தியதில் பாஜகவை சேர்ந்த சிலர் காயம் அடைந்தனர். திமுகவின் இந்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் பல இடங்களில் பாஜக […]
கல்வி கட்டண சலுகை கோரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கொரோனா காலத்தில் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு சட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு கணக்கின்படி […]
அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]
எஸ்.பி.பி. சரண் தனது தந்தையின் உடல்நிலை தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டார். செப்டம்பர் 19-ஆம் தேதி காணொளி காட்சி மூலம் எஸ்.பி.பி யின் மகன் எஸ்.பி.பி. சரண், இதுவரை எனது தந்தை சீரான நிலையில் உள்ளார். அவர் தொடர்ந்து வெண்டிலட்டர் வைக்கப்பட்டுள்ளார். மற்றபடி அவரின் உடல் நிலை சீராக உள்ளது. எந்த வித தொற்றும் இல்லை. இருந்தாலும் அவரது நுரையீரல் மற்றும் மூச்சு விடுவதில் சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது. என் தந்தைக்கு துணையாக நிற்கும் மருத்துவர்கள் பணியாளர்கள் […]
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையின்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை. சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூ மார்க்கெட்டில் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையை மதித்து சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கொரோனா தொற்று காலத்திலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 250 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதாக எலும்புமுறிவு துறை தலைவர் மருத்துவர் தொல்காப்பியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்காப்பியன், இந்த கொரோனா பெரும் தொற்றின் கோரத் தாண்டவத்தின் இடையிலும் நமது கல்லூரி முதல்வர் வழிகாட்டில் கொரோனாயில்லாத நோயாளிகளுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் செய்துவருகிறோம். அதன்படி எலும்புமுறிவு துறையில் இந்த கொரோனா காலத்திலும் எந்த தடைகளும் இன்றி தினந்தோறும் ஆபரேஷன் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39,664 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4, 958 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் என்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லக்ஷ்மி வேலை முடித்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டுருந்தார். இவர் பார்த்தசாரதி கோவில் தெருவில் தனியாக நடந்து சென்றபோது இளைஞர் ஒருவர் நொடிப்பொழுதில் அவரது தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞர் மற்றொருவரிடம் செயினை ஒப்படைத்துவிட்டு மாயமானார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி […]
பூந்தமல்லியில் வயதான மூதாட்டியை ஏமாற்றி 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாடகைக்கு குடியிருந்த நபர் சொந்தமாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது சரோஜா என்ற மூதாட்டி. இவருக்கு 2 மகள்கள் . இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு தனக்கு வரும் பென்சன் தொகை மற்றும் வீட்டு வாடகை தொகையை வைத்து தனியே வாழ்ந்து வருகிறார். மூதாட்டி வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் […]
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 12 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அம்பலமாகியுள்ளது. சென்னை வளசரவாக்கம் பகுதியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைக்கப்பட்டு அசல் மற்றும் வட்டி செலுத்தப்படாத நகைகளை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதில் ஆளப்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் 440 கிராம் நகைகளை அடகு வைத்து 8 லட்சம் ரூபாயும், ராஜேஷ்வரன் […]
சென்னை திருவல்லிக்கேணியில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி அளித்தவர்களை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லட்சுமி நேற்று பார்த்தசாரதி சுவாமி தெருவில் நடந்து வந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை சிறுவன் ஒருவன் பறித்துச் சென்றான். இதுதொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஐசுஸ் பகுதி போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் விஜய், சக்திவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். […]
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோ காஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்களில் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அநீதியாக […]
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் கொரோனா காலத்தில் நீதிமன்ற பணியை அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பது சரி இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளதாகவும், தான் எப்போதும் […]
நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என்பது குறித்து நடிகர்கள் விஷால் தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி, மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு […]
பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோகாஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்கள் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். அநீதியாக பணிநீக்கம் […]
தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி. சேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் மீது எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் […]
ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீர் அழிப்பதாக சென்னை […]
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவிக்கிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் திரு எஸ்.பி.பி. சரண், எனது தந்தை உடல் நிலையில் சீராக இருக்கிறார். பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளித்து நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இனி எல்லாம் நன்றாக இருக்கும். உங்களின் அன்பிற்கும் நன்றி என சரண் […]
சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அவரது கள்ளக்காதலி ராணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி மார்க்கெட் சங்கர் அண்மையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் கள்ளக்காதலி ராணி, ராணியின் மகன் திலீப் குமார், சங்கரின் கூட்டாளி தினகரன் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் […]
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மே தின பூங்கா அருகில் போராட்டம் […]