Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,859 கோடம்பாக்கம் – 2,431 […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,156 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,149ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,146 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 5 மண்டலத்தில் 2,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,502 பேர் குணமடைந்துள்ள நிலையில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,717 கோடம்பாக்கம் – 2,323 திரு.வி.க நகரில் – […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 29 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறை தகவல்!!

தமிழகம் முழுவதும் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1146 பேர், செங்கல்பட்டில் 95 பேர், திருவள்ளூரில் 80 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 3 பேர், கடலூரில் ஒருவர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் 5 பேர், விழுப்புரத்தில் 6 பேர், தூத்துக்குடியில் 14 பேர், மதுரையில் 7 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 5 பேர், விருதுநகரில் 4 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா ….. பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் இதுவரை 15 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத 115 சிறப்பு மையங்கள் அமைப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னை மாநகரில் கொரோனா பாதித்த பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லாமல் அவர்களுக்காக இந்த சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அதிகமான இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ராயபுரம் மண்டலம் தான். இங்கு தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நோய் தொற்றின் பரவல் அதிகரித்தபடி உள்ளது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மொத்தம் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் நேற்று மட்டும் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,156 பேர் குணமடைந்துள்ள நிலையில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,552 கோடம்பாக்கம் – 2,245 திரு.வி.க நகரில் – 1,958 அண்ணா நகர் – 1,784 தேனாம்பேட்டை – 2,470 […]

Categories
அரசியல் சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காலையே குஷியான செய்தி…!” நிம்மதி அடைந்த ஸ்டாலின்” உற்ச்சாகத்தில் உப்பிக்கள் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நிலை நல்ல முன்னெச்சம் பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நேற்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அன்பழகனும் 80 % ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்தில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் திக் திக் ….. ”மரணத்தின் பிடியில் சென்னை” காலையே 7 பேர் மரணம் …!!

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உச்சம் பெற்றதை போல, உயிரிழப்பும் இரட்டை இலக்கத்தில் பதிவாகி மக்களை நடுங்கச் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவல் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த மேலும் 7 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் மாலையில் தான் கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

டக்குனு…! ”உடைச்சிட்டு வாறாங்க” அலேக்கா தூக்கிடுவோம் – எச்சரித்த ராதாகிருஷ்ணன் …!!

தமிழகத்தில் இறப்பை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS கூறுகையில், ஒரு நபரிடம் இருந்து உடனே 10 பேருக்கு கொரோனா பரவுற மாதிரி ஒரு சவால் இருக்கும் போது, இப்போ என்ன வழி ? நம்ம மருத்துவ வல்லுனர்கள் என்ன சொல்றாங்கன்னா ? கொரோனா பாதிக்கப்பட்டவரை உடனே கண்டறிய வேண்டும். அவுங்க குடும்பத்தில் இருப்பவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

முதல்வர் சொன்னாங்க…! ”ஒரு மாசம் அப்படி இருங்க” கண்டிப்பா கட்டுப்படுத்தலாம் …!!

முதலமைச்சர், தலைமைச் செயலாளர் நேரடியாக ஆய்வு செய்து, மூத்த அமைச்சர்களும் களப்பணியை கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கு பின்னர் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட  நேற்று வரை 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். பொதுமக்களிடம் நாம் இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். தினமும் எண்ணிக்கை கூடும் போது அச்சம் ஏற்படுகின்றது. சென்னையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் – அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே …!!

சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் முன்பதிவு நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் இருக்கக்கூடிய சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், சென்னை பீச,  திருமயிலை, மாம்பலம், தாம்பரம், திண்டிவனம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் மார்ச் மாதம் 30ம் தேதி வரை ரிசர்வ் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதே போல ஏப்ரல் 1லிருந்து 14 வரை ரயில் டிக்கெட் புக் செய்தவர்கள் 12ம் தேதியிலிருந்து  பணத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சொல்லி பார்த்தோம், யாரும் கேட்கல… அதான் இப்படி முடிவு எடுத்தோம்… அதிரடி காட்டிய தமிழக அரசு …!!

இனிமேல் வீடுகளில் தனிமைபடுத்துவது கிடையாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000யை தாண்டிய நிலையில் உயிரிழப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகியது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 25,872ஆக உயர்ந்து உயிரிழப்பு 200யை தாண்டியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 17,587ஆக இருக்கும் நிலையில் இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி வீடு கிடையாது முகாம் தான் ….. சாட்டையை சுழற்றிய சென்னை …!!

சென்னையில் வீட்டில் தனிமைபடுத்தப்படும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் பல்வேறு முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார்கள். சென்னையில் வீட்டில் தனிமைப் படுத்தப் படுவது அல்லது கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுவது ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில்  தடையை மீறி, பாதுகாப்பு இல்லாமல் வெளியே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 17,598ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை17,598 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த 2 பேர், துபாய் – 13, குஜராத் – 3, கர்நாடக – 4, டெல்லி – 5,மஹாராஷ்டிரா – 14 பேருக்கும் என வெளிநாட்டில் இருந்து வந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,506 பேர் குணமடைந்துள்ள நிலையில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,060 கோடம்பாக்கம் – 1,921 திரு.வி.க நகரில் – 1,711, அண்ணா நகர் – 1,411, தேனாம்பேட்டை – 1,871, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தலைமைச்செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா…. பணியாளர்களை குறைக்க கோரிக்கை!

சென்னை தலைமைச்செயலகத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச்செயலகத்தில் அரசு பணிகளுக்காக சுமார் 50% பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை தலைமைச்செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,136 பேர் குணமடைந்துள்ள நிலையில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,935 கோடம்பாக்கம் – 1,867 திரு.வி.க நகரில் – 1,651, அண்ணா நகர் – 1,341, தேனாம்பேட்டை – […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று கொரோனாவுக்கு 12 பேர் பலி…..! சென்னையில் தொடரும் சோகம் …..!!

கொரோனாவால் சென்னையில் மட்டும் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்றுவரை 23 ஆயிரத்து 495 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு,  13 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 10 ஆயிரத்து 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு நாட்டிலே குறைந்த இறப்பு வீதத்தில் உள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளதில், அதிகபட்சமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை என அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,851 பேர் குணமடைந்துள்ள நிலையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 2,737 கோடம்பாக்கம் – 1,798 திரு.வி.க நகரில் – 1,556, அண்ணா நகர் – 1,237, தேனாம்பேட்டை – 1,662, […]

Categories
சென்னை

சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 760 பேர் சென்னை, செங்கல்பட்டு, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாள் நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மேலும் 609 பேருக்கு கொரோனா உறுதி, 5 பேர் உயிரிழப்பு என தகவல்!

சென்னை மாநகராட்சி பகுதியில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இந்த நிலையில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர். ஒமந்தூரார் மருத்துவமனையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது பெண், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 6,869 பேர் குணமடைந்துள்ள […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனிடையே அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கட்டுள்ள நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை – ஆறு மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தகவல் அளித்துள்ளது. மீனவர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான இறுதிகட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான இறுதிகட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் 3000 மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு காய்கறிகள், பூ, பழம் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேரு மாநிலங்களில் இருந்து இங்கு காய்கறிகள் வரவழைக்கப்பட்டு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. சென்னை உட்பட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அண்ணா நகர் மண்டலத்திலும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் 89 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை – மருத்துவமனையில் பரபரப்பு!

சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்துள்ளார். ராயப்பேட்டை பாலாஜி நகர் பகுதியை சேர்த்த 57 வயதான நபர் 25ம் தேதி கோரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11,640ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் இன்று மேலும் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,500-ஐ தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கு மேல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை, சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,131 ஆக இருந்தது. அதில், தற்போது வரை 5,331 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 83 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு… கொரோனவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை!!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகரில் மட்டும் ராயபுரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மணலியில் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் இவர். நேற்று மதியம் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூளைமேட்டில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர்கள் சடலம் …!!

சென்னை சூளைமேடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாக வயதான தம்பதியர் இங்கு வசித்து வந்திருக்கிறார். ஜீவன் என்ற 80 வயது உடையவர், அவரின் மனைவி தீபா (70). இவர்களை யாரும் பார்த்துக் கொள்வதற்கு இல்லை என்ற காரணத்தால் தனிமையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இறந்த  நிலையில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகாமையிலிருந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கடந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் பிரபல நடிகர் நடத்தி வரும் ஆதரவற்றோர் விடுதியில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பணிப்பெண்கள் இருவர் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு இல்லாதவர்களை வேறு இடத்தில் தங்க வைக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். இதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நான்கு அரசு மருத்துவமனைகளில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 587 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளில் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 , அரசு ராயபுரம் மருத்துவமனையில் 45 , கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 , […]

Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை to சேலத்திற்கு விமான சேவை 27ம் தேதி முதல் தொடக்கம்!!

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட விமான சேவை 27ல் மீண்டும் துவங்குகிறது. சென்னையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்தில் 8.25க்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் காலை 8.55 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி…பாதிப்புகள் 2,000-ஐ தாண்டியது!!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் ராயபுரம் மண்டலத்தில் 2071 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் ராயபுரத்தில் நோய் தொற்று குறைந்த அளவே கண்டறியப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி வருகிறது. தமிழகம் முழுவதும் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் தான் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று காலை சென்னை மாநகராட்சி வெளியிட்ட மண்டலவாரியாக […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சில தளர்வுகளுடன் அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பு – அமைச்சர் தகவல்

சில தளர்வுகளுடன் அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுபடுத்த மத்திய அரசு 4 கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 16,277 பேருக்கு தொற்று உறுதியாகி இந்தியாவிலே 2ஆம் இடத்தில தமிழகம் உள்ளது. இந்த நிலையில் ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பாண்டியராஜன், கொரோனவை பொறுத்தவரை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னை மாநகர பகுதியில் இன்று புதிதாக 565 பேருக்கு கொரோனா உறுதி என தகவல்!!

சென்னை மாநகர பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 11,141 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வரமாக சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு 500-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனிடையே, ஊரடங்கில் பல்வேறு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களை விடாதா கொரோனா…. இன்று சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழப்பு என தகவல்!!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கே.எம்.சி மருத்துவமனையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள், திருவள்ளூரை சேர்ந்த 50 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார் பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,781 பேர் குணமடைந்துள்ள நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 10,340 ஆண்களும், 5,932 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று […]

Categories

Tech |