Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறந்த உடலில் இருந்து கொரோனா பரவுமா.? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்..!!

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலில் இருந்து தொற்று பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்ணாநகர் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கொரோனோவால்  இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு. ஒரு மருத்துவர் இருக்கிறார் நிறைய பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அவருக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது சென்னையில். உடனடியாக சோதனை செய்து பார்க்கிறார். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனோக்கு  சிகிச்சை எடுத்து வருகிறார். சிகிச்சை பலனில்லாமல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா…. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 303ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 303ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 613 இடங்களில் கொரோனா தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 613 மண்டலங்களில் உள்ள 38.24 லட்சம் வீடுகளில் நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது; தகனம் செய்வதை தடுக்காதீர்கள்- சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலில் இருந்து எந்த நோய்த்தொற்றும் பரவாது என்பதால் மக்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் கைது! 

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம்  தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     சென்னையில் கடந்த வாரம் ஆந்திராவை சேர்ந்த ஒரு மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த  சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இரண்டு மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை – மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 91 பேருக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு – 20 பேர் கைது …!!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பற்றுள்ளனர். சென்னையில் கொரோனா காரணமாக மருத்துவர் இறந்து போனார். அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய கீழ்பாக்கம் மையானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய அனுமதி பெற்று அங்கு அடக்கம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் திடீரென அந்த பகுதியில் கூடிய பொதுமக்கள் அங்கு வந்து இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதே போல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உணவின்றி யாரும் தவிக்க கூடாது… பாஜக சார்பில் மோடி கிட்..!!

சென்னையில் அமைப்புசாரா தொழிலார்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிட் எனப்படும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது. சென்னை நேரு பூங்கா குடிசை மாற்று வாரிய பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 300 பேருக்கு மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர்  L.முருகன் கலந்துகொண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிட் எனப்படும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வண்டி தான வேணும்….. ரூ600 கொடுங்க….. வக்கீல் வேடமிட்ட வாலிபர் கைது….!!

சென்னையில் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து வாகனத்தை திருப்பி வாங்கி தருவதாக கூறி வக்கீல்  வேடமிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதைத் தவிர தேவையின்றி வெளியே வருவோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விடுகின்றனர். அந்த வகையில் சென்னை மாதவரம் பால்பண்ணை காமராஜர் நகரைச் சேர்ந்த 10 நபர்கள் வாகனமும் காவல்துறை அதிகாரிகளால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தின் தலைநகரில்…. வயது வாரியாக…. கொரோனா நிலவரம்…!!

தலைநகரான சென்னையில் கொரோனா நிலவரம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். சென்னையில் இதுவரை 228 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. குணமடைந்து 24 பேர் வீடு திரும்பிய நிலையில், 196 பேர் சிகிச்சையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட ஒருவர் குணம் அடைந்துள்ளார். 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் பாலின வாரியாகப் பார்த்தால் ஆண்களில் 68 சதவிகிதமும் பெண்கள் 32 சதவிகிதமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வயது வாரியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

144…. ஒருத்தரையும் காணோம்…. பைக்கில் வலம் வந்த பெண்களிடம் செயின் பறிப்பு…. வாலிபர் கைது….!!

சென்னை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை திருமங்கலத்தில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது உண்டு. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. ஆகையால் பெண் சங்கிலி பறிப்பு அச்சத்தால் தனது சங்கிலியை கழற்றி கையில் வைத்திருந்ததாகவும் அதை கொள்ளையர்கள் பறித்து சென்றதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எங்க ஏரியால கொரோனா வார்டா…..? கூடவே கூடாது….. பொதுமக்கள் போராட்டம்….!!

சென்னை திருவெற்றியூர் மற்றும் எண்ணுரில் கொரோனா தனி வார்டு அமைக்க கூடாது என பொதுமக்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, காலியாக உள்ள மைதானங்கள், சமுதாய நலக் கூடங்கள், மண்டபங்கள் உள்ளிட்டவை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளால்  கையகப்படுத்தப்பட்டு அங்கு கொரோனாவிற்கான தனிமை வார்டு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

பைசா கிடையாது, இலவசமாக உணவு – ஆவடியை கலக்கும் அம்மா மெஸ் …!!

ஆவடியில் உள்ள அம்மா உணவகத்தில் கட்டணம் இன்றி சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசாங்கமும், சுகாதாரத் துறையும்  ஏராளமான அறிவுறுத்தலை வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் பொது மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. பலர் சாப்பிட உணவு இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி!

மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்த நிலையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி நடந்து தான் போகணும், பைக்_க்கு தடை போட்ட சென்னை – புது உத்தரவு …!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. கொரோனா நோய் தொற்றை தடுக்க மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, பல்வேறு உத்தரவுகளை மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக எச்சில் துப்பினால் அபராதம், மாஸ்க் அணிய வில்லை என்றால் அபராதம் என்றெல்லாம் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் ஊரடங்கு உத்தரவால் 79% குற்றங்கள் குறைந்துள்ளது – காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கால் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. கொலை வழங்கில் 44% கொள்ளை வழக்கில் 75% வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,85,896 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2.18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 30 பேர் டிஸ்சார்ஜ்… அசத்திய மருத்துவமனை!

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக அளவில் குணமடைந்து மக்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 30 பேர் கொரோனா பாதிப்புக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மார்ச் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் நேர அடிப்படையில் 105 மருத்துவர்கள் 110 செவிலியர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேரத்திற்கு சரியான உணவு, மருந்து ஆகியவற்றை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய நோய் பிரிவில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா உறுதி!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயது மருத்துவர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நற்செய்தி….. வரத்து அதிகரிப்பால், குறைந்த விலை….. கிலோ ரூ10 தான்….!!

கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் 10 முதல் 14 ரூபாய்க்கும், தக்காளி, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவை கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா விரைவு பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன!

கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவிகள் சென்னை வந்தடைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து கருவிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“DOOR டெலிவரி” நீங்க வர வேண்டாம்….. நாங்களே வாரோம்….. அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மக்களின் வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர் லெலிவரி செய்யும் வசதியை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மளிகைக் கடைகளிலே காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்ல, ஒரு சிலரோ அருகில் உள்ள மளிகை கடைகளில் விலை அதிகம் இருப்பதன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இனி தடையில்லை…… உயர்நீதிமன்றம் அதிரடி….!!

தமிழகத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வீடு மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்கள் உணவின்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா”மாஸ்க் இல்லைனா….. 6 மாதங்களுக்கு ரத்து….. மாநகராட்சி அதிரடி….!!

சென்னையில் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தால் அபராதம் விதிப்பதோடு  வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆறு மாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்; 6 மாதம் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து!

முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட 33 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னோட பைக் எங்க….. வாலிபர் அடித்து கொலை…. கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது….!!

சென்னையில் தனது பைக்கை திருடிய நபரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். 20 வயதான இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சென்ற பிப்ரவரி மாதம் இரு சக்கர வாகனம் காணாமல் போனது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினா ரூ.500 அபராதம்.. வழக்குப்பதிவு செய்வோம்: சென்னை காவல்துறை!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீங்க ஒன்னும் சொல்லுறீங்க….. அவுங்க ஒன்னு சொல்லுறாங்க …. குழம்பும் சென்னை வாசிகள்

வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியும் விவகாரத்தில் குழப்பம் எழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு மட்டும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்கும்போது வெளியே வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நேற்று  சென்னை  மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மருந்தகங்களில் முகக்கவசம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்து கைக்குட்டை, துண்டு, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

யார் சொல்லுறத கேட்குறது – தெரியாமல் திணறும் சென்னை மக்கள் …!!

முககவசம் அணியும் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சென்னை வாசிகள் குழம்பி தவிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கின்றது. அங்கு மட்டும் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்கும்போது வெளியே வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நேற்று  சென்னை  மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மருந்தகங்களில் முகக்கவசம் இல்லை என பொதுமக்கள் தெரிவித்து கைக்குட்டை, துண்டு, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடலானா ரூ. 500 வசூல்….. சென்னை போலீசார் நடவடிக்கை …!!

சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ 500 அபராதம் விதிக்கப்டுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தில்  சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று நேற்று உத்தரவிட்டபட்டது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய தவறும் பட்சத்தில் அவர்களுடைய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படி தான் வரணும்….. இல்லனா பைக் பறிமுதல் ….. சென்னையில் புது உத்தரவு ..!!

சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. அந்தக்ககையில் தற்போது சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் …!!

சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. அந்தக்ககையில் தற்போது சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு!

சென்னையில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் 58-பேர் குணமடைந்து வீடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று மட்டும் 9 பேர்… சென்னையில் 200ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!

சென்னையில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 208ஆக உயர்ந்தது இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்கின்றது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,075  ஆக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மருத்துவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நேற்று மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பீலா ராஜேஷ் தகவல் அளித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மருத்துவர் உயிரிழந்துள்ளார். ஆந்திராவை மாநிலம் நெல்லூரை சேர்ந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல்…. துணிந்து விரட்டிய இளைஞர்கள்!

 அம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கும்பலை, அப்பகுதி இளைஞர்கள் துரத்தியதில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினர். சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார் சத்தியராஜ். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இவர் குடும்பத்துடன் கடந்த 24ஆம் தேதி சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா: அரசு மருத்துவமனையை தனிமைப்படுத்த முடிவு!

சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ரேபிட் டெஸ்ட்” கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை – மாநகராட்சி ஆணையர்!

ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேமாக பரவி வருகின்றது. இதுவரை தமிழகத்தில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44 பேர் குணமடைந்த நிலையில், 9 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா… மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சீல்..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா – 84வயது மூதாட்டி குணமடைந்தார் …!!

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த செல்வி (54) , தேவ சேனா (84)  ஸ்ரீ ராம் (24 ) ஆகிய மூன்றுபேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, அதே போல அவர்கள் மூன்று பேரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்கள். இந்நிலையில் தற்போது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி – மாநகராட்சி தகவல்!

சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு – உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி…வெறிசோடிய தேவாலயங்கள்..!!

144 தடை உத்தரவால் புனித வெள்ளியான  இன்று தேவாலயங்களில் மக்கள் யாருமின்றி பிரார்த்தனை நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை சின்னமலை பங்குச்சந்தை லாரன்ஸ் ராஜ்  இணையதளம் வாயிலாக மக்களுக்கு போதனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை விட்டு நீங்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம் என தெரிவித்தார். உலகமெங்கும் இன்றைக்கு புனித வெள்ளியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த புனிதமான நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட சென்ற இடத்தில் இளம்பெண் பலாத்காரம்…இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு..!!

சென்னையில் நேபாளத்தை சேர்ந்த காவலாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்னன் பகதூர் என்பவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே குடியிருப்பில் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவலாளி அறையில் இருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்பேரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடை உரிமையாளருக்கு கொரோனா: கடைக்கு போனவங்க உஷார்!

சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நபரின் கடைக்கு சென்றவர்களின் விவரங்கள் குறித்து அரசு சேகரித்து வருகின்றனர். மேலும், கடைக்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்துமாறும், தானாக முன் வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உலகமே பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த நோயின் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கிருமி நாசினி சுரங்கப்பாதை” கிருமிகள் உள்ளே வந்தால் செத்துவிடும் – காவல்துறை அசத்தல்

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்காக காவல்துறை சார்பில் கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில, மத்திய அரசுகள் எடுத்து வருகின்றன. அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி மருந்து வைத்து வருபவர்களின் கைகளில் தெளித்து உள்ளே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர்களே முககவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை தயாரித்து பணியிலிருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

கோடையை மறக்கடித்த கனமழை – மக்கள் மகிழ்ச்சி

கோடை காலத்திலும் தமிழகத்தில் பல  இடங்களில் மழை பொழிந்து மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூரில் கடந்த 5 ஆம் தேதி காலை ஒரு மணி நேரம் வரை நல்ல மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா …!!

அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கி இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற்று குஜராத் சென்று அங்குள்ள அகமதாபாத்தில் இருந்து மதப்பிரச்சாரம் செய்ய சென்னை வந்த 39 பேர் தேனாம்பேட்டை, சுளை , பெரியமேடு பகுதிகளில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தாகவும், கொரோனா அறிகுறி தொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானதையடுத்து அவர்களை கண்டறியக்கூடிய பணியில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள். இந்நிலையில் 19 பேரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் மதுகிடைக்காததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை அயனாவரத்தில் மதுகிடைக்காததால்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் பலரும் இருந்து வருகின்றனர். மதுவுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடிகள் திட்டம் தொடங்கியது!

சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை விற்பனை அங்காடியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 5 ஆயிரம் தள்ளு வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏப்., […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கொரோனா ஊரடங்கு” தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டின் பருவத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டிற்கான பருவத்தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்தப் பருவத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைய சிறப்பு வாய்ப்பு ஒன்றை பல்கலைக்கழகம் அளித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆம் தேதி என அறிவித்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இருமல், சளி அறிகுறிகளுடன் 435 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

சென்னை மாநகரம் முழுவதும் உள்ள வீடுகளில் 4வது நாளாக களப்பணியாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இருமல், சளி அறிகுறிகளுடன் 435 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் அளித்துள்ளார். அதிக அறிகுறிகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். 435 பேரில் 106 பேருக்கு சாதாரண அறிகுறிகள் தான் காணப்படுகின்றது. மற்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துளளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனாவை மறைத்து 300 பேர் கூடி நல்லடக்கம்…. மக்கள் கண்டனம்…!!

கொரோனாவின் காரணமாக உயிரிழந்த நபரை மாரடைப்பால் இறந்தார் என்று இறுதிச்சடங்கை முடித்த சம்பவதிற்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பீலி ஜமால் முஹம்மது. தொழிலதிபரான இவர் சென்னையில் மண்ணடியில் வசித்து வந்துள்ளார். தொழில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் துபாய் சென்று சென்னை திரும்பிய ஜமாலை விமான நிலையத்தில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்த அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என முத்திரையிட்டு அனுப்பினர். கடந்த 2ஆம் தேதி கடுமையான […]

Categories

Tech |