கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டிமடை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜன் கோவையை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். எனவே அவர்களிடம் கூற வேண்டாம் என ராஜன் மாணவியிடம் கூறியுள்ளார். இதனால் மாணவி யாரிடமும் நடந்தவற்றை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த […]
Category: கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம்நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கி கடன் உதவி பெற்று தரும் பங்குதாரர். இவரிடம் திருவேங்கடசாமி என்பவர் கேரளாவை சேர்ந்த 2 பேர் கருப்பு பணம் வைத்துள்ளனர் எனவும், அதனை மாற்றுவதற்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் தருவார்கள் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் அம்பராம்பாளையம் சென்ற போது அங்கு வந்த மர்ம நபர் 1 […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அமைந்துள்ளது. இங்கு சீனியர் வேளாளராக வெள்ளைச்சாமி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாலிகிராமத்தை சேர்ந்த சக்திவேல், தரகர் பொம்மையா என்பவரது உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் விவசாய கடன் பெற்றுள்ளார்m இதற்கு வெள்ளைச்சாமி உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாய கடன் பெற்று தொகையை […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனதால் பெற்றோர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அடிக்கடி சிறுமியுடன் செல்போனில் யார் பேசியுள்ளனர் என ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.. இதனையடுத்து […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரொட்டிக்கடை லோயர் பாரளை எஸ்டேட் பாறைமேடு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நேற்று நின்று கொண்டிருந்தது. அந்த இடத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்நிலையில் மதியம் 12 மணிக்கு கடை திறந்தவுடன் மது பிரியர்கள் மதுபாட்டில் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது யானைகள் சோலைக்குள் நின்று கொண்டிருந்தது. மதியம் 2 மணி அளவில் இரண்டு காட்டு யானைகளும் மதுபான கடைக்கு வந்தவர்களை விரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் […]
கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் பிரதாப் அமைத்த குழுவினர் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி கிழக்கு மண்டலம் 55வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஐ.எஸ்.எஸ் காலனி சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீடுகள், வணிக கட்டடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் போன்றவற்றை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை காலி செய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் […]
புத்தாண்டையொட்டி கோவை முழுவதும் 45 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஹாரன்களை ஒலிக்க செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 31, நள்ளிரவில் மேம்பாலங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியை சேர்ந்த 25 பேர் ஒரு வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அந்த வேனை குமாரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தேவியாகுறிச்சி பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மேலும் தருண், பாரதி, வளர்மதி, சிவக்குமார் உட்பட 12 […]
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று சப் கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணி வார்டு போன்ற பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். மேலும் மருத்துவமனையில் தேவையான அளவு […]
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை தற்போது தனிப்படைப்பு அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றார்கள். கோவையை சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா, சனோஃபர் அலி ஆகிய இரண்டு பேரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றனர். கண்டக்டராக உதயகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இரண்டு பேர் பேருந்தில் ஏறி ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததால் சக பயணிகள் முகம் சுழித்தனர். இதனை கவனித்த ஓட்டுநரும், கண்டக்டரும் பேருந்தில் அமைதியாக பயணிக்கும்படி இருவரிடமும் கேட்டுக் கொண்டனர். அதனை கண்டு கொள்ளாமல் இரண்டு பேரும் தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் நெகமம் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜடையம்பாளையம் பகுதியில் விவசாயியான முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(55) கடந்த 21-ஆம் தேதி வீட்டில் கழுத்து அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்த நகைகளும் காணாமல் போனது. இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற கல்லூரி மாணவனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி புதூர் பகுதியில் விக்ரம் சுதாகர் என்பவர் நண்டுவிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாப்பில் இருக்கிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர், பங்கஜ் மித்தல் ஆகிய இருவரும் இயற்கை உரத்தை வாங்கி பஞ்சாபில் விற்பனை செய்து தருவதாக திருநாவுக்கரசிடம் தெரிவித்தனர். இதனை நம்பி திருநாவுக்கரசு அவர்களை விக்ரம் சுதாகருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இயற்கை உரத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அங்கு குளுகுளு சீசன் தொடங்கி விட்டதால் நீரார் அணை, கூழாங்கல் ஆறு பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களில் அத்துமீறி நடப்பவர்களை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என […]
கொப்பரை தேங்காய் கிலோவிற்கு ரூபாய் 150 க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை , அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் விதமாக விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கோவை வேளாண் விற்பனைக்குழு கொப்பரை தேங்காய் 105.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் சுமார் 18000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் 185 […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம் நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கிகளில் கடன் உதவி பெற்று தரும் பங்குதாரராக இருக்கிறார். இவர் மூலம் கடன் பெற்ற திருவேங்கடசாமி என்பவர் தனக்கு கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் தெரியும். அவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளனர். அதனை மாற்றுவதற்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் கிடைக்கும் என பிரவீன் குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் இணைந்து […]
பொள்ளாச்சி உடுமலை சாலையை சேர்ந்த டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் உள்ள ஒரு கேஸ் விற்பனை நிலையத்தில் தனது காருக்கு கேஸ் நிரப்ப வந்துள்ளார். அங்கு அவரது காருக்கு ஊழியர்கள் கேஸ் நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்துள்ளனர். இந்நிலையில் கார் […]
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் சொத்து வரியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் தங்களின் […]
கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க பிரமுகரான கந்தசாமி என்பவர் மகள் நர்மதா வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரே நேற்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதில் அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக என்னால் இந்த பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான் வகிக்கும் நகர மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அதன் பின் […]
கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஐஏஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்களும் சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்க வேண்டும். அதன் பிறகு வணிக நிறுவனங்கள் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பு எண்ணை இணைப்பது கட்டாயம். இதனையடுத்து குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும். […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி சென்னியப்பன் வீதியில் ஆனந்தி, பாபு, செல்வி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் இணைந்து நடத்திய ஏலச்சீட்டில் 10-க்கு மேற்பட்டோர் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தவணை காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கு சீட்டு தொகை வழங்காமல் 3 பேரும் காலம் தாழ்த்தி வந்தனர். சுமார் 40 லட்ச ரூபாய் வரை 3 பேரும் இணைந்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகரில் ஹரிக்குமார் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்த போது சென்னையை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் உங்களது மகனுக்கு கனடாவில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என நவாஸ் அகமது கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு தவணைகளாக ஹரிகுமார் ரூ. 7,56,200 பணத்தை நவாஸ் அகமதுவிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபுதூர் பகுதியில் யோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு யோகேஸ்வரன் தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவர் வீட்டில் இருந்தபோது மாமியார் கிருஷ்ணவேணி தேவியை அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் யோகேஸ்வரன் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் குடியேறினார். இதனையடுத்து வரதட்சணையாக 5 லட்ச ரூபாய் வாங்கி வருமாறு யோகேஸ்வரனும், கிருஷ்ணவேணியும் தேவியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு தேவி தூக்கிட்டு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெய்கணேஷ் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பீளமேடு உள்ளிட்ட இடங்களில் எங்கள் வங்கியின் ஏ.டி.எம் மையங்கள் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மர்ம நபர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளார். இதனையடுத்து பணம் வரும் நேரத்தில் அந்த நபர் எந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் ஏ.டி.எம் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்க போவதாக மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். இதனையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் சுகுணாபுரம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த பீர் முகமது என்பது தெரியவந்தது. இவர் டாஸ்மாக் பாருக்கு சென்று ஓசியில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொட்டையாண்டி புறம்பு ஊராட்சி பகுதியில் ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெடி வைக்கப்பட்டது. அப்போது அருகே இருந்த வீடுகள் மீது கற்கள் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. இது தொடர்பாக சப் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்ததால் கடந்த சில மாதங்களாக கல்குவாரி செயல்படாமல் இருந்துள்ளது. நேற்று கல்குவாரியில் மீண்டும் பணிகள் தொடங்கியதால் கோபமடைந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் கோபிலதா, […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொங்கலப்பம்பாளையத்தில் விவசாயியான கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட ராஜகோபால் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது கடந்த 20 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் ராஜகோபாலின் இடது காலில் சைலன்சர் பட்டு படுகாயம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு ராஜகோபால் வெளியே புறப்பட்டார். இதனையடுத்து திரும்பி வந்தபோது தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்து […]
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 21 வயதுடைய வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை கோவைக்கு கடத்தி வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் மகளை காணவில்லை என […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரில் தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், வினைதீபக் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வினைதீபக் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி குஜராத்தில் இருக்கும் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக கவிதா சென்று விட்டார். கடந்த சில நாட்களாக தீபக் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியும் 17 வயதுடைய கல்லூரி மாணவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் தனது வீட்டில் வைத்து சிறுமையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். இதனையடுத்து அவர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவரை எச்சரித்து அனுப்புமாறு கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை பாரதிநகரில் கூலித்தொழிலாளியான செட்டியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகள் பவித்ராவுக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த எட்டு மாதங்களாக பவித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கியுள்ளார். இதனையடுத்து குழந்தை மற்றும் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சியில் பாலசுப்பிரமணியன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கு பணம் வழங்க சக்திவேல் என்பவரிடம் பாலசுப்பிரமணியன் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக்திவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சக்திவேல் பாலசுப்ரமணியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாலசுப்பிரமணியனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் […]
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் முதல் முறையாக அங்குள்ள கடை ஒன்றில் போண்டாவை திருடியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு போண்டா ஆறுமுகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 39 வருடங்களாக இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தன்னுடைய நூறாவது திருட்டை வடிவேலு ஸ்டைலில் செய்துள்ளார். அப்போது செல்போன் திருட்டில் ஈடுபட்ட நிலையில் பிடிபட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.கே விதியில் சுப்ரதா பாரிக் என்பவர் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆர்டரின் பெயரில் தங்க கட்டியை வாங்கி சென்று தங்க நகையை வடிவமைத்து தரும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தபஸ் சமந்தா 22 லட்சம் மதிப்புள்ள 1/2 கிலோ தங்கக் கட்டியை வாங்கி […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி உதவி இயக்குனர் கமலக்கண்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் முத்து, ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாட்சா, கிராம நிர்வாக அலுவலர் மது கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொள்ளாச்சி சபையின் இன்ஸ்பெக்டர் பிரியங்கா முன்னிலை வகித்துள்ளார். மேலும் முகாமிற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலிபாளையம் ஆர்.வி.எல் நகரில் இன்ஜினியரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராம் நகரில் இருக்கும் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சங்கர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்ததாலும், கடன் இருப்பதாலும் தற்கொலை செய்து கொள்கிறேன் என சங்கர் எழுதியுள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் சங்கர் […]
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகரத்திற்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும், அம்பராம்பாளையம் ஆழியாறு மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஆற்றில் இருந்து நீரை எடுத்து அதனை சுத்திகரித்து பின்னர் பிரதான குழாய்கள் மூலமாக மார்க்கெட் ரோடு நீரேற்று நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று கோட்டூர் ரோடு கலைவாணர் வீதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது குழாயிலிருந்து வரும் நீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(29) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான சங்கர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடன் தொந்தரவால் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பேப்பர் அட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி குமார் படுகாயமடைந்தார் இதனை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்புரத்தில் பெயிண்டரான ஜாபர் அலி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பிளஸ்-டூ மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளை கண்டித்து வேறு இடத்திற்கு வீட்டை மாற்றினர். பின்னர் மாணவி ஜாபர் அலியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாணவி தனது தோழிகளுடன் தனியார் பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த பேருந்தில் ஜாபர் அலியும் இருந்துள்ளார். இதனை […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கோணம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஓடுகளால் வேயப்பட்ட வகுப்பறையின் மேற்கூரை சேதுமடைந்ததால் மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது. நேற்று அதிகாலை அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழை நீர் வகுப்பறைக்குள் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, எங்கள் பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சிறிய மழைக்கு கூட […]
கோவைப்புதூரில் புனேவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். முன்னதாக புனேவில் வசித்த போது தனியார் நிதி நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்த ராஜேஷ் செட்டி என்பவர் பெண் இன்ஜினியரிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் ராஜேஷுடன் பேசுவதையும், […]
ரேஸ்கோர்ஸில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்ட பணி நடைபெற்று வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலையில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியுள்ளதாவது, மழை நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கோவையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனப்பகுதியில் ஏராளமான மன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலுவின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு குடோனில் அதிரடியாக சோதனை நடத்தி தின்பண்டங்களை பேக்கிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். […]
பொள்ளாச்சியில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாணவர்கள் வில்லுப்பாட்டு பாடி அசத்தினார்கள். தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்காக தமிழக அரசு கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டது. அந்த வகையில் ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேற்று நடந்தது. இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை கல்வி […]
பொள்ளாச்சியில் பி.ஏ.பி கால்வாய் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் பி.ஏ.பி பிரதான கால்வாயில் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை துண்டிப்பதை நிறுத்த வேண்டும். காற்றாலையாகவும் தொழிற்சாலையாகவும் மாறி இருக்கும் நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலங்களாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு […]
அறிவியல் கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கல்லூரி இணைந்து நடத்தும் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றது. மேலும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். இதில் சிறந்த கண்டுபிடிப்புகளாக ஆனைமலை வி.ஆர்.டி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையற்றவர்களுக்கான கருவிகளும் கோவில் […]
கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி திப்பம்பட்டியில் இருக்கும் சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் மகன் விஷ்ணு பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாதிரி தேர்வு முடிந்ததும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதி அறையில் விஷ்ணு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
தந்தை மகனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சேகவுண்டன் புதூரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜி(18) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் ஒரே அறையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது பால்பாண்டி தனது மகனை தள்ளி படுத்து தூங்குமாறு கூறியுள்ளார். ஆனால் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் சின்னாறுபதி மலைவாழ் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு மக்கள் கம்பி மூலம் கற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால் இதுவரை யானை கிராமத்திற்குள் வரவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து […]