ஈமு கோழி நிறுவன மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைப்புதூரில் ஏசியன் ஈமு ஃபார்ம் என்ற தனியார் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு செயல்பட்டது. இந்நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். இதனை நம்பி சுமார் 45 பேர் தலா 65 லட்சம் வரை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியும் கொடுக்காமல் […]
Category: கோயம்புத்தூர்
சேறும் சகதியுமாக உள்ள உழவர் சந்தையை சீரமைத்து தருமாறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் தற்போது போதிய வசதி இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக […]
ஒரு தலைக் காதலால் கல்லூரி மாணவியின் தந்தையை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சார்லஸ் ஜான்- செலின் ரோஸி. சார்லஸ் ஜான் அப்பகுதியில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி செலின் ரோஸி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி பெங்களூரில் வசித்து […]
கொட்டும் மழையில் கழிவு நீர் பள்ளத்தை அடைத்த குழந்தைகளை ஐபிஎஸ் அலுவலர் சைலேந்திரபாபு பாராட்டினார். கோயம்புத்தூரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் போது சாலையோரமாக இருந்த கழிவுநீர் பள்ளம் நீரால் நிரம்பி வழிந்ததை அவ்வழியாக சென்ற இரண்டு சிறு குழந்தைகள் இணைந்து கட்டைகள் வைத்து அடைத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. மாநகராட்சி செய்ய வேண்டிய இந்த பணியை இரண்டு குழந்தைகள் செய்த காட்சி மக்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வீடியோவினை […]
250 மி.கி தங்கத்தில் பொங்கல் பானை செய்து தமிழக அரசுக்கு பொற்கொல்லர் கோரிக்கை வைத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் யூ. எம் .டி ராஜா. இவர் பொற்கொல்லராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் மில்லிகிராம் அளவு தங்கத்தில் தத்ரூபமான சிற்பங்கள் செய்து அனைவரையும் அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவர் 250 மில்லி கிராம் தங்கத்தில் பொங்கலுக்கான சிற்பங்களை வடிவமைத்துள்ளார். […]
கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் பிரேக் பிடிக்காமல் சென்று விபத்து ஏற்பட்டது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இந்திராநகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து மதிய நேரத்தில் அரசு பேருந்து ஒன்று ஆனைகட்டிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து தண்ணீர் பந்தலில் இருந்து சின்னதடகம் சென்று கொண்டிருந்தபோது இந்திராநகர் பகுதியில் ஓட்டுனர் பிரேக்கை அழுத்திய போது பிரேக் பிடிக்கவில்லை. […]
முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு திடீரென்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து அலுவலகத்திற்குள் புகுந்து முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை அலுவலர் உஷா கூறுகையில், “கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தியாகி என்.ராமசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவம் என்பவர் மீது பள்ளி கட்டணம் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு சொந்தமான டாட்டா சுமோ பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் எட்டு பேருடன் வந்து கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டாட்டா சுமோ 250 அடி பள்ளத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர். […]
சாதிபவர்களைப் பார்த்து வாக்களியுங்கள். ஜாதியை பார்த்து வாக்களிக்க வேண்டாம் என்று கோவை துடியலூரில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக களத்தில் இறங்கி போட்டியிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் நல்ல வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே நம்பிக்கையோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையை […]
கோவையில் மருந்து குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உழவர் சந்தை அருகே பிரபல மருந்து கடையின் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மொத்தமாக வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென்று குடோன் முழுவதும் நெருப்பு பரவ தொடங்கியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோனின் காவலாளிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையம் […]
பூங்காவிற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி வனப்பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை ,கரடி, காட்டு யானை போன்ற பல்வேறு விலங்குகள் வசித்து வருகிறது. இங்கு வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆழியார் சோதனை சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே நுழைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக […]
கோயம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்துச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய விஜயலட்சுமி என்ற பெண் கோவை காரமடை காந்திநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அறுக்க முயற்சி செய்தனர். 5 பவுன் […]
குடியிருப்புக்குள் புகுந்த யானை வனத்துறை ஊழியரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் திரும்பி செல்லும் காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள வால்பாறை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டு மாடு,கரடி என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளது. சில நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும் உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வால்பாறை வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் விலங்குகள் […]
திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 7 லட்சம் வரை பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வாஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்டவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பது தெரியவந்தது. அவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி வேலை […]
பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே கோனூர் பார்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவருக்கு கௌஷிக் என்ற மகனும், வித்யபாரதி என்ற மகளும் உள்ளனர். சம்பவ தினத்தன்று பூபதி வேலைக்கு சென்ற நேரத்தில் கௌஷிக் மற்றும் வித்யா பாரதி அருகில் உள்ள குப்பை வைக்கப்பட்ட தீ அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காங்கேயம் சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் அதிகாலை நேரத்தில் அவ்வழியே காரை ஓட்டி வந்த மயில்சாமி லாரியின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த […]
மூதாட்டி மண்ணெண்ணை விளக்கை பற்ற வைக்க முயன்றபோது அவரது உடலில் தீப்பற்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் தாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைக்க முயன்றார். அப்போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனையடுத்து அவரது உடல் முழுவதும் தீ மளமளவென பரவி விட்டது. இதனால் சாயம்மாள் வலி […]
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுல் ரோஷன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் பாடம் படித்து […]
மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றார். இவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்ட அவரது மனைவி பாலசுப்பிரமணியத்தை கண்டித்துள்ளார். இதனையடுத்து அவரது மனைவி கோபத்தில் ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த முதியவர் […]
ரூ 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதோடு, பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேடபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திக்கொண்டு விசைத்தறி களுக்கு பாவு நூல் வழங்கி வருகிறார். இவரிடம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தனபால் என்ற இருவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு பாவு நூலை வாங்கி சென்று உள்ளனர். இவர்கள் […]
கோவையில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.இவர் தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியத்துக்கு அப்பகுதியில் உள்ள இரண்டு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை பாலசுப்பிரமணியத்தின் மனைவி கண்டித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள […]
கோவையில் தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சாயம்மாள்(85). சம்பவத்தன்று இவரது வீட்டில் திடீரென மின்சார நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்துள்ளார். மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து வந்த தீ எதிர்பாராதவிதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று அவரது உடல் முழுவதும் நெருப்பு பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் […]
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஹரிபுரத்தைச் சேர்ந்தவர் பட்டிலிங்கம் . இவருடைய மகன் ராஜசேகர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜசேகர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று ராஜசேகரும் சரவதியும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென்று இவரது வீட்டின் மண் சுவர் மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது. இதில் ராஜசேகரும் அவரது தாய் […]
ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கீதா. நேற்று காலையில் இத்தம்பதியர் பயணிகள் ஆட்டோவில் பேரூரில் இருந்து காளம்பாளையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். ஆட்டோ பச்சாபாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஆட்டோவை உரசியபடி சென்றது. இதில் ஆட்டோவில் தலையை வெளியே நீட்டி உட்கார்ந்திருந்த கீதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. […]
கோவையில் பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய மகன் பவுல் ரோஷன்(15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் மூலம் ரோஷன் பாடம் படித்து வந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அவர் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதனால் கடந்த […]
கோவையில் லஞ்சம் வாங்கிய வரி வசூல் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் உள்ள சுந்தராபுரத்தில் மாநகராட்சி வரிவசூல் மையம் உள்ளது. இங்கு வரிவசூல் அதிகாரியாக கவுஸ் மொய்தீன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் செந்தில் குமார் என்பவரிடம் வீடு அதிக பரப்பளவில் கட்டப்பட்ட இருப்பதாக கூறியுள்ளார். இதனால் வீட்டின் வரியை குறைவாக நிர்ணயம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று […]
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநர் மற்றும் கடலூரை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் மூலம் அவர் பாடங்களை படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அந்த மாணவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதியில் மாணவியை தேடியுள்ளனர்.ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மாணவி […]
சாலையில் இருக்கும் குழியை இரண்டு சிறு குழந்தைகள் கட்டையை வைத்து அடைக்கும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அதேசமயம் சாலையோரம் இருக்கும் குழிகளில் மழைநீர் நிரம்பி வழிகிறது . இதனால் மக்கள் சிலர் குழி இருப்பது தெரியாமல் குழிக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இரு குழந்தைகள் நடந்து வரும்போது சாலையோரம் […]
கிராமசபை கூட்டத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட தாக்குதல் குறித்து டி.ஜி.பி மற்றும் எஸ்.பிக்கு தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பூங்கொடி என்பவர் ஸ்டாலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணையும் அவருக்கு ஆதரவாக வந்த ராமன், முனி, மகேஸ்வரி ஆகியோரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் கோவை அரசு […]
கோவை அரசு கலைக் கல்லூரியின் பருவ தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரி தேர்வு நடைபெறும் தேதி குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி கூறியுள்ளார். அதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல் பருவத் தேர்வுகள் வருகின்ற 18ம் தேதி முதல் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வருகின்ற 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை முதலாம் மற்றும் இரண்டாம் பருவத் […]
கோவையில் 17 வயது சிறுமி இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமி பாலியல் […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ போலீசார் […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை அதிமுகவை சேர்ந்த 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. 2019 ஆம் வருடம் பிப்ரவரி 24ம் தேதியன்று பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த செயலை செய்தவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்தவர்கள் இல்லை என்று அதிமுக நிராகரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. […]
தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த பக்கத்து வீட்டுக்காரரையும் மனைவியையும் இரும்பு கம்பியால் தாக்கிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூரில் உள்ள சூலூர் கள்ளபாளையம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த தம்பதியான சுதர்சன் மற்றும் சத்தியா கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு. அவர்கள் அருகில் ரஞ்சித் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். ரஞ்சித்க்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த சுதர்சன் மனைவியை கண்டித்துள்ளார். […]
கோயம்புத்தூரில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளத்து ஏரி பகுதியில் துரை என்பவர் வயலில் சட்டவிரோதமாக அமைத்த மின் வேலியில் சிக்கி 22 வயது ஆண் யானை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி நேரடியாக மின்வேலியில் இணைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்த துரை மற்றும் நிலத்தின் […]
உயர் மின் அழுத்தம் தாக்கி யானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் தென்னமநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுச்சாமி. இவர் குளத்தேரிப் பகுதியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் போது யானை அல்லது காட்டுப்பன்றிகளிடமிருந்து நெற்பயிரை காப்பாற்ற தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் இருந்து 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு யானைகள் வெளியேறியது. […]
உயர் மின்னழுத்தம் பாய்ந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தென்னமநல்லூரில் துரை(எ)ஆறு சாமி வசித்துவருகிறார். இவர் குளத்தெரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கும் வண்ணம் அவரது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் யானைகள் போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து […]
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான் பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் ஒன்றிய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனைப்பற்றி சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா மற்றும் வட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியவர்கள் கூறியதாவது. ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நாரால் நீர் சேமிக்கும் கலன்களை நன்கு தேய்த்து கழுவி பின் தண்ணீர் பிடித்து மூடி வைக்க வேண்டும். இதை செய்வதினால் […]
53 வயது முதியவர் ஒருவர் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சம்பத்( 53). இவர் அதே பகுதியில் ஹாலோபிளாக் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட சில குழந்தைகள் இவருடன் விளையாடுவதற்காக வீட்டிற்கு செல்வது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு […]
கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி அருகில் வண்டிக்காரன் தோட்டப் பகுதியில் சுதர்சன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா எனும் மனைவி இருந்துள்ளார்.சுதர்சன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவர்களது வீட்டின் அருகாமையில் வசித்து வந்தார். இந்நிலையில் சத்யாவிற்கும் ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னம் பாளையத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூருக்கு சென்று விட்டார். இந்நிலையில் தனது ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூபாய் 1 […]
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதல் கணவரை மீட்டு தர கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அருந்ததி. இவர் கல்லூரியில் படிக்கும்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வினோத்குமாரின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் காதல் ஜோடி இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் . அதன் […]
காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. அதனை சுற்றி அடர்ந்த வனப் பகுதிகள் இருப்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களிலும் அதன் அருகில் வசித்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் 1வது பிரிவில் […]
கோவையில் நான்கு வயது மாற்றுத்திறனாளி குழந்தைக்கு பாலியல் சித்திரவதை கொடுத்த முதியவருக்கு வாழ்நாள் சிறை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் நான்கு வயதாகும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 51 வயது முதியவருக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 2017ஆம் […]
காட்டு யானை தாக்கி பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்ற பகுதியில் முகமது நிவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதமலை சாலையில் கட்டுமான பணி நடைபெறும் ஒரு தனியார் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முகமது நிவாஸ் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அச்சமயம் திடீரென எதிர்பாராவிதமாக அருகில் […]
தீம் பார்க்கில் குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் அஜித்குமார்(24). அஜித்குமாரும் அவருடைய நண்பரும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெண்ணந்தூர் அருகே சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் குளித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அஜித்குமார் நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]
நபர் ஒருவர் 8 மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு அபாயகரமான சாதனைகளை செய்து விருதை பெற்றுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மேஜிக் கலை நிபுணரான டிஜே வர்கீஸ். இவர் கடந்த 25 வருடங்களாக மேஜிக் செய்து வருகிறார். மேஜிக் கலையில் தனெக்கென்று ஒரு அடையாளத்தை வைத்து இருக்கிறார். இவர் தன்னுடைய கண்களை துணியால் கட்டிக் கொண்டு அபாயகரமான சாகசங்கள் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, யுனிவர்சல் புக் ஆஃ ரெக்கார்டு என்ற பல்வேறு உலக சாதனை […]
கோவையில் சொத்துகளை அபகரித்துவிட்டு பராமரிக்கத் தவறியதாகக்கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர், குப்பனூரை பகுதியை சேர்ந்த 97 வயதாகும் முருகம்மாள், தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை தனது மகன் ரங்கசாமி ஏமாற்றிவிட்டு எழுதி வாங்கியதாகவும், அவர் காலமான நிலையில், அவரது மனைவி தன்னை துன்புறுத்தி வருவதுடன், நிலத்தை வழங்க மறுப்பதாக, ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத […]
கோவை அருகே தங்கையின் திருமண செலவிற்காக பணத்தை ஈட்ட பகுதி நேர வேலைக்கு சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மாணிக்கவாசகன் என்பவரின் மகன் 25 வயதான யுவராஜ். ஐடி ஊழியரான இவர் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் பகுதி நேர வேலையை செய்து வந்தார். மாலையில் வேலைக்கு சென்று இரவு 10 […]