காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது நியாஸ். இவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். பணியில் இருந்த முகம்மது நியாஸ் இன்று காலை 6 மணி அளவில் டீ சாப்பிட மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென சட்டக் கல்லூரி பின்புறம் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை முகம்மது நியாஸை […]
Category: கோயம்புத்தூர்
கடைக்குள் புகுந்த லாரியிடமிருந்து 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலிருந்து பாலக்காட்டை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென பிரேக் பிடிக்காததால் சாலையோரம் இருந்த கடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாளையாறு சோதனைச் சாவடியை கடந்து வந்த லாரியை சாலையோரத்தில் நிறுத்த ஓட்டுனர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது மோதியுள்ளது. இதனால் பைக் சரிந்து விழுந்து லாரி […]
செல்போனை திருடி விட்டதாக எழுந்த சந்தேகத்தில் நண்பரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காட்டூர் தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் செல்வம் (வயது 60) மற்றும் இவர் நண்பரான பால்ராஜ் (வயது 40) இருவரும் கோவையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இந்நிலையில் குடிபோதையில் ஆட்டோ ரங்கன் வீதியில் இவ்விருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது பால்ராஜின் செல்போன் காணவில்லை. இதனால் பால்ராஜ் செல்வத்தை சந்தேகப்பட்டு கேட்டபோது இருவருக்குமிடையே […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சென்று தீக்குளிக்க முயன்றார். அப்போது அவர் தன் மீதும் பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊத்தியுள்ளார். இதில் குழந்தைகளின் கண்ணில் பெட்ரோல் பட்டதால் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் ஜீவானந்தம் […]
மது தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(60). இவர் அங்குள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் . கோவை சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ்(40). இவர் கூலி தொழில் செய்து வந்தார். செல்வமும் பால்ராஜும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்தது . இந்நிலையில் காட்டூர் ரங்கன் வீதியில் அமர்ந்து செல்வமும் பால்ராஜும் […]
நிலத்தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று ஜீவானந்தம் தனது குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களை தடுத்து குடும்பத்தினரின் மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஜீவானந்தத்தின் குடும்பத்தாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் […]
கோவை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே கணுவாய் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அவரது நண்பர் பிரபுவும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நர்சரி கார்டன் என்ற பகுதியில் செல்லும்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த காமராஜ் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதினர். இதில் மூவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இம்மூவரையும் அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு முன்பாக […]
பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஆழியார் பகுதியில் உள்ள சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன் வளர்ப்பு கடையில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் வன அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டபோது யானையின் இரண்டு தந்தங்களையும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த […]
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் செய்வதாக அவரது பெற்றோர்கள் நிச்சயித்தனர் . அதன் படி இன்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெண்ணின் பெற்றோர்கள் செய்து கொண்டிருந்தனர். நேற்று காலையில் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக மணப்பெண் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் […]
காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் சோளப்பயிர் தற்போது அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இதனால் காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிக அளவில் வெளியேறி ஊருக்குள் புகுந்து வந்தது. யானைகள் ஊருக்குள் புகாமல் இருப்பதற்காக வனத்துறையினர் ஆல்பா, பீட்டா ,காமா என மூன்று சிறப்புப் படைகள் அமைத்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். எனினும் உணவிற்காக யானைகள் […]
கோயம்பத்தூர் அருகே கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். நஞ்சேகவுண்டன்புதூர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மற்றும் முருகானந்தம் . இவர்கள் மூவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் வியாபாரத்திற்காக பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கெடிமேடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மீது பலமாக […]
சிறுமியை திருமணம் செய்ததற்கு மகனுக்கு உடந்தையாக இருந்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இவருக்கும் பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் பேருந்தில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணன் தனியார் நிறுவனம் ஒன்றில், ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், காதலாக மாறி இருவரும் மொபைல் எண்ணை […]
குடிக்கு அடிமையாகி வேலை செய்ய முடியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூரில் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவரால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனைத்தொடர்ந்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த கார்த்திக்கேயன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு […]
பட்டதாரி இளைஞர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவை மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(27). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . கார்த்திகேயன் கல்லூரியில் படிக்கும் பொழுது சக மாணவி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த மாதத்திற்கு முன்பு அந்த மாணவி கோவைக்கு சென்று கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார். மேலும் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர் . இதனிடையே செல்போனில் பேசும் […]
கையால் மலம் அள்ளுதல் தடை சட்டத்தை அரசு இயற்றி இருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வெறும் கையால் மனித கழிவுகளை அகற்றும் கொடுமை நடந்து வருகிறது. பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட மாநகராட்சி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை 174 பேர் மனிதக் கழிவுகளை அகற்றும் போது […]
கோவையில் கணவன் மனைவிக்கு இடையே நடந்த குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், கருமலைசெட்டிபாளையம் அஜய் முக்ரிஜி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக மீண்டும் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு […]
கோவையில் வாலிபரின் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் , பீளமேடு கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டை பகுதியில் வசித்து வருபவர் வில்சன். 20 வயதுடைய இவர் ந.வ 4 தேதி ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த வாலிபர் திடீரென வில்சனின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.270-ஐ பணத்தை பிடுங்கி கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதில் உஷார் அடைந்த வில்சன் பொதுமக்களின் உதவியுடன் கொள்ளையனை மடக்கி […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அதிமுக பெண்கள் சபதம் எடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாநிலம் முழுவதும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவைபுதூர் மைதானத்தில் அதிமுக ஆட்சி தொடர 2 ஆயிரம் விளக்குகளை ஏற்றி பெண்கள் சபதம் ஏற்றனர். தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 2 ஆயிரம் விலக்குடன் மிளிர்ந்த கோவை புதூர் மைதானத்தில் பொதுமக்கள் […]
கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தையை குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றன. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவப்பு பிரிவான விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சை […]
கோவை அருகே ஆள்மாறாட்டம் செய்ய ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜவேல்-மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்கள் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்ப எண்ணிய ராஜவேல் தன் மனைவி இறந்து விட்டதாக போலி […]
பல்வேறு மாநிலங்களில் கார் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 11 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். கோவை மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதிகள் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பதிவு எண் இல்லாமல் வந்த காரினை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முயன்றனர். அப்போது காரில் இருந்த 6 பேரில் 3 பேர் தப்பி ஓடினர். பின்னர் பிடிபட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுக்கரையை சேர்ந்த […]
கோவையில் டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு வீடு திரும்பி இளைஞரை குத்திக் கொன்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடந்தது என்ன பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் கோவையில் தங்கி தனது உறவினரின் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு விக்னேஷ் விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வீடு திரும்பியபோது கஞ்சா போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் விக்னேஷை தடுத்து […]
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். கோவை, கிணத்துக்கடவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்புக்கு முன் கார் கவிழ்ந்து விழுந்தது. அதில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த நீரஜ் அலி மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் அம்பராம்பாளையம் தர்கா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் மலுமிச்சம்பட்டி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன […]
பொள்ளாச்சி அருகே தம்பியின் மதுப்பழக்கத்திற்கு காரணமான நண்பரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் வலசு பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது தம்பி ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மது குடிக்கும் பழக்கத்தை விட்டுவிடும்படி அண்ணன் சக்திவேல் ராம்குமாரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில்சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் அமர்ந்து ராம்குமார், தனது நண்பர் கருப்பசாமி என்பவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். இதை […]
மக்களிடம் 50 கோடி மோசம் செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர். போட்ட பணம் ஒரே ஆண்டில் இரு மடங்காகும் என ஆசை வார்த்தை கூறி மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிய நிதி நிறுவன பங்குதாரர்கள் ஆன கோவையை சேர்ந்த தாய், மகள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த 52 வயதான மணிகண்டன், ஆன்லைன் மூலமாக கிரீன் கிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் […]
ஹோட்டல் சாம்பாரில் செத்த எலி கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருடைய தம்பி கார்த்திகேயன் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திவ்யா சம்பவத்தன்று சாப்பிடுவதற்காக அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் ஓட்டலில் ஆப்பம் மற்றும் சாம்பார் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அதை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து இருவரும் சாப்பிட தொடங்கிய போது சாம்பாரில் கருப்பு நிறத்தில் ஏதோ […]
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாம்பாரில் எலி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். அவருடைய தம்பி கார்த்தி கேயன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திவ்யா நேற்று காலை தனது தம்பிக்கு சாப்பாடு தருவதற்காக அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் […]
விதவைபெண் ஒருவர் தன் காதலன் தன்னுடன் பேசாததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி. திருமணமான இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். எனவே புவனேஸ்வரி தன் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது முகநூல் மூலம் காஜா மொய்தீன் என்ற நபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கணவனை […]
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த கேஎல்எஸ் நகரில் வசித்து வந்தவர் புவனேஸ்வரி. இவருக்கு திருமணமாகி 13 வயதில் மகன் உள்ளார். இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து அதே கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தீன் என்ற வாலிபருடன் முகநூல் மூலம் புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த அவர் புதிய துணை கிடைத்து விட்டதாக எண்ணி அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து […]
இந்தியாவைப் பொருத்தவரையில் பள்ளியை தாண்டி மாணவர்கள் டியூஷன் இன்ஸ்டியூட்டில் அதிகம் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். பெற்றோர்களும் அதிகமாக பொருட்செலவு செய்து நல்ல இன்ஸ்டியூட்டில் தங்களது பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள். ஆனால் இப்படி எந்த ஒரு வசதியும் இல்லாமல், மிகவும் ஏழ்மையான நிலையில் அரசுப்பள்ளியில் படித்து அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை புரியக்கூடிய மாணவ மாணவிகளை ஒவ்வொரு ஆண்டும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்த அரசுப் பள்ளி மாணவி […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் பழகிய நண்பர் தன்னுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சி தொழில்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கணவன் உயிரிழந்த நிலையில், தமது 13வயது மகனுடன் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு, முகநூல் வழியாக பொள்ளாச்சியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், காஜாமைதீன் புவனேஸ்வரியுடன் […]
கோவையில் தனியார் வங்கி ஒன்றில் இன்ஜினியர் ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கப்பக்கொடை நாடு அடுத்துள்ள நஞ்சநாடு பகுதியில் ஹிந்தேஸ் ஆனந்த் (33) என்பவர் வசித்து வருகிறார். அவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையை அடுத்துள்ள வடவள்ளி அருகே ஓணம் பாளையம் என்ற […]
தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த குரங்குக் கூட்டத்தை மலையடிவார கிராம மக்கள் புலி பொம்மை வைத்து கட்டு படுத்தியுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியை சேர்ந்த மலையடிவார கிராம மக்களின் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் எழுந்தது. சிலர் இதனை இடையூராக நினைக்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து வனத்துறையினரிடம் குரங்குகளைப் பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் புகார்கள் அடிக்கடி வரும் பகுதிகளில் கூண்டு வைத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து […]
இடையர் பாளையத்தில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியில் ராஜன் மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிய நிலையில், குழந்தை எதுவும் இல்லை. சிந்துவுடன் அவரின் தாய் செல்வி (58) மற்றும் தம்பி இந்தியன் (23) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். சிந்துவின் தாய் செல்வி தனது கணவர் […]
போதையில் இருந்த நபர் அரசு பேருந்தை ஒட்டி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ஈரோடு கொடுமுடி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று தீபாவளிக்காக சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கரூரில் இருந்து திருச்சி வந்த பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டி வந்துள்ளார். பின்னர் திருச்சி வ.உ.சி. சாலையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பேருந்தை சரவணக்குமார் ஓரமாக நிறுத்தி டீ குடித்து விட்டு நேரக்காப்பாளர் அறைக்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த […]
முக்கூடல் பகுதியில் பெண்களை ஏமாற்றும் மர்ம கும்பல் இளம் பெண்ணின் கணவருக்கு ஆபாச படத்தை அனுப்பி வசமாக மாட்டிக் கொண்டனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இருக்கின்ற கண்டபட்டி என்ற பகுதியில் சாலமோன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (24) மற்றும் மனோசேட் (27) ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 3 பேரும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அதனால் வேலைக்கு செல்லாமல் இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி […]
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 102 வயது மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை காரமடை சிக்கரம்பலயம் என்ற பகுதியில் 102 வயது செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவர் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் மூதாட்டியை சோதனை செய்த போது சிறிய கேன் ஒன்றில் மண்ணெண்ணெய் இருப்பதை கண்டனர். இதனையடுத்து போலீசார் மூதாட்டியிடம் இருந்து மண்ணெண்ணெய் பறிமுதல் செய்தார்கள். அதன் […]
அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 50 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை பீளமேடு சின்னசாமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன். 37 வயதுடைய இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மார்ச் மாதம் முதல் அதே பகுதியில் சர்வ ஹைடெக் சொல்யூஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு […]
மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டினுள் இருந்த நகை மற்றும் பணம் திருடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே சுப்பிரமணிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்(67) – சந்தியா(60). இவர்களின் 2 மகள்கள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் திருச்சியிலுள்ள தங்களுடைய மகளை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். இதனிடையே நேற்று காலையில் அவர்களுடைய வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் […]
கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் 6 மணி நேரத்தில் கையும் களவுமாக பிடித்தனர். கோவையில் பீளமேடு அருகே உள்ள லட்சுமி கார்டன் என்ற பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க வேலு என்பவர் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அவரின் வீட்டின் ஜன்னல் திரை சீலைகள் கிழிந்து விட்டன. அதனால் அதனை மாற்றுவதற்கு முடிவு செய்தார். அதற்காக பெரியநாயக்கன்பாளையம் அருகே இருக்கின்ற ஜோதி புறத்தில் சேர்ந்த வீட்டு உள் அலங்கார […]
அடுத்து வரும் 20 நாட்கள் முக்கியமான காலகட்டம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கொரோனா செயலாளர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம் கோவையில் […]
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல 50 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு சிவகாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன் இவர் கடந்த மார்ச் முதல் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஒரு லட்சம் ரூபாய் பணம் முதலீடு செய்தால் தினமும் இரண்டரை சதவீதம் வட்டி அல்லது இரட்டிப்பு பணம் தருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை நம்பி பலரும் அவரது […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்ததால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையையில் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவரின் மகன் ஜீவானந்தம் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பழுது சரி செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுவது வழக்கம். ஆனால் இது அவருடைய மனைவிக்கு பிடிக்காததால் அவரை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் வெல்ல முடியாத விரக்தியில் கோவையில் மேலும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. கோவை சுந்தராபுரம் மச்சாம்பாளையம் ரௌண்ட்ரோடை சேர்ந்த ஜெய்சந்திரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பெற்றோர் இறந்து விட்ட நிலையில் உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது இதய அறுவை சிகிச்சைக்காக அதிக அளவு கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி […]
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரி விடுமுறை என்பதால் இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் காதலிப்பது பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பெண்ணின் தந்தை ” இது நமது குடும்பத்திற்கு சரியாக […]
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்களை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்துள்ள வேடபட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 14 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள் இரண்டு பேரும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் விளையாடலாம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அனைவரும் நடந்த சம்பவம் குறித்து தங்களின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். […]
கணவன் மற்றும் மகன் இறந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவியும் விஷம் அருந்தி இறந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் பகுதியில் வசித்து வருபவர்கள் ஜெயபால்-லீலாவதி (வயது 45) தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயபால் இறந்துவிட்டார். இதனால் லீலாவதி தனது 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் இவரது மூத்த மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே கணவன் […]
மு.க.ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசன் நக்கீரன் பத்திரிக்கை மற்றும் கலைஞர் டிவிக்கு எதிராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்து மானநஷ்ட வழக்கு ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஒரு கோடி ரூபாய் மானநஷ்டம் கோரி மு.க.ஸ்டாலின், சபரீசன், நக்கீரன் பத்திரிக்கை மற்றும் கலைஞர்-டிவிக்கு எதிராக பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி அழைத்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் அங்கு சென்றபோது இரண்டு மாணவர்களும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமிகள் கூறிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை […]
மூன்று வாலிபர்கள் குடிபோதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது. கோவை கணபதி அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தமிழரசன், உண்ணி என்ற பிரவீன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கோபிநாத்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ வைத்து எரித்துள்ளனர். […]