ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை இருகூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அருகே சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் ஜான்சன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒண்டிபுதூர் இருகூர் இடையே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இவற்றைப் பார்த்த காவலர் ஜான்சன், அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் ஜான்சனிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகத் […]
Category: கோயம்புத்தூர்
கோவை அருகே காவல்துறை அதிகாரியை அவதூறாக திட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜான்சன் என்பவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் 3 மர்ம நபர்கள் நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவலர் அவர்களிடம் விசாரணை மேற்கொள்கையில், மூவரும் காவல்துறை அதிகாரி என்றும் காவல்துறை அதிகாரி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டி […]
குனியமுத்தூரைச் சேர்ந்த இளைஞருக்கும், திருநங்கைக்கும் நடைபெற்ற திருமணம் பதிவு செய்யப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட மாற்றுப் பாலின திருமணம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26) என்ற இளைஞர், சுரேகா என்ற திருநங்கையை காதலித்து 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் பிரிவுப் பகுதியில் உள்ள ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் அவர்களின் திருமணம் நடந்துள்ளது. இருவரும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தற்போது வசித்து […]
பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. கூலி வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தித் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்ததில், அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது […]
கோவையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர் கட்டிட பணியின் போது அங்கே வந்த 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மத்திய சிறையில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் சிறையில் வலிப்பால் […]
குழந்தை இல்லாததை தொடர்ந்து குடும்ப தகராறில் மனைவி தற்கொலை கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்தவர் ராஜா கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியும் கௌசல்யா கர்ப்பம் ஆகாததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கவுசல்யா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா விரக்தியடைந்து டீசலை உடலில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். நீ உடல் […]
நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை கொண்டாட உள்ள நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட காத்திருக்கும் வேளையில் இந்து முன்னணி அமைப்பினர் காதலர் தினத்தை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினத்தை எதிர்க்கும் விதமாக கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்காக வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ஆண் நாயும் மற்றொரு […]
தொண்டாமுத்தூர் பகுதி உலியம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து சாதனைப் படைத்துள்ளார். கோவை கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், மோனிஷா. சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர் ஓவியத்தில் புதுமை படைக்க, உண்ணும் முட்டையில் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். பள்ளிப் பருவத்தின் போது முட்டையின் ஓட்டில், மகாத்மா காந்தியின் ஓவியம் வரைந்துள்ளார். அது அருமையாக வரவே அவரது தாய், தந்தை அளித்த ஊக்கத்தில் […]
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை முயற்சி செய்த கணவன் கோயம்புத்தூர் போத்தனூர் சேர்ந்தவர் நாகராஜ் லட்சுமி தம்பதியினர். கடந்த சில தினங்களாக மனைவி லட்சுமியின் மீது சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்துள்ளார் நாகராஜ். என்றும் போல் குடிபோதையில் வந்த நாகராஜ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். சண்டையில் கோபமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் போராடிய லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அக்கவுடனான காதலை கைவிடக்கோரிய தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த தாமரைக் குளத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் தம்பி மணிகண்டனுக்கும், தினேஷ்குமார்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தினேஷ்குமாரை நேரில் சந்தித்த மணிகண்டன் அக்கா உடனான […]
கோவை அருகே வீட்டில் நகை பணம் ஏதும் இல்லாததால் காரை திருடியதோடு ஆத்திரத்தில் வீட்டு சுவரை இடித்து தள்ளி திருடன் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் நரசிம்ம பாளையம் பகுதியை அடுத்த ஜோதி காலனியில் வசித்து வருபவர் ஹென்றி. இவரது மனைவி குன்னூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மகள் ஜென்னி தாயுடன் ஒரே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜென்னிக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தை […]
பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் வற்புறுத்தியுள்ளதாக நடவடிக்கை.. கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே இருக்கும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் அருந்ததி காலனி சேர்ந்த மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர். இந்த பள்ளியில் குமரேஸ்வரி தலைமை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவர்களை […]
அக்காவை காதலித்த காரணத்தால் உறவினர் என்றும் பாராமல் கொலை செய்த தம்பி. கோயம்புத்தூர் மாவட்டம் தாமரைக் குளம் சேர்ந்தவர் தினேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் மணிகண்டன். தினேஷ்குமார் மணிகண்டனுக்கு அண்ணன் முறையில் வரும் வகையில் மணிகண்டனின் அக்காவும் தினேஷ்குமாரும் இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மணிகண்டன் தினேஷ்குமார் இடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இருந்தும் தினேஷ்குமார் காதல் தொடர்ந்து உள்ளது இதனால் பலமுறை மணிகண்டன் எச்சரித்துள்ளான். பின்னரும் தொடர்ந்த காதலினால் […]
பொள்ளாச்சி அருகே அரசு துவக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் என்பவர் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்கள் செய்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, கிராம மக்களுடன் இணைந்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் […]
கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானத்திற்கு வந்த உறவினரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் இடையார் பாலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவியிடையே இருந்து வந்த குடும்ப பிரச்சினையின் காரணமாக சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார் தனலட்சுமி.மனைவியின் சகோதரி இல்லத்திற்கு சென்ற ராஜேந்திரன் மனைவி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்க்கு மறுப்பு தெரிவித்த தனலட்சுமியிடம் ராஜேந்திரன் தகராறு செய்துள்ளார். தகராறில் தனலட்சுமியின் சகோதரியின் கணவன் சௌந்தர்ராஜன் இடையில் வரவே கோபம்கொண்ட […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின் மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஹரிணி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பிளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் ஹரிணியின் உடலை […]
கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மணமக்களுடன் உறவினர்கள் பதாகைகளை ஏந்திய படி எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. புளியமுத்தூரில் இஸ்லாமியர் வீட்டு திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் முகம்மதுகனி மற்றும் அபிரினா அவர்களின் குடியுரிமை கருத்து சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து பதாகைகளை ஏந்தி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதேபோல தேசிய மக்கள் பதிவுவேடு சட்டங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கேரளாவில் கடந்த […]
சேலம் அருகே ஆம்ணி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ1,00,00,000 மதிப்பிலான தங்க வைர நகைகள் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் BMG ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கௌவுதம் என்பவர் சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள தலைமை கிளையில் இருந்து சுமார் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டு ஆம்னி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை […]
அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்திய வழக்கில் கைதான கே சி பழனிச்சாமி ஜாமின் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததை தொடர்ந்து அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த […]
கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான மகன் கைது செய்யப்பட்டார். இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். […]
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று தேர்வீதி உலா நடைபெற்றது. இதில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மஞ்சள் பட்டு உடுத்தி அருள்பாலித்த மாசாணி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனையடுத்து […]
கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத கார்த்திகேயன் […]
விபத்தில் தனது காலை இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார். கோவை மாவட்டம் அவினாசி ரோட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று கோல்ட்மின்ஸ் எனும் இடத்தில் சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் ஸ்கூட்டரில் பணிக்கு சென்ற பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் பெண்ணின் பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் ராஜேஸ்வரியின் இடது கால் நசுங்கிய நிலையில் அவரை உடனடியாக […]
பாப்பம்பட்டி ஊராட்சியில் பழைய ஆவணங்களுடன் தேசிய கொடிகளையும் சேர்த்து எரித்த ஊராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே போதிய கட்டட வசதியின்றி பாப்பம்பட்டி ஊராட்சி அலுவலகம் சமுதாய நலக் கூடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. ஊராட்சியில் உள்ள ஆவணங்களை அருகில் உள்ள சத்துணவு அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அந்த அறையை சுத்தம் செய்யச்சென்ற ஊராட்சி ஊழியர் மதுபோதையில் அங்கிருந்த ஆவணங்களை எடுத்து அறையின் அருகிலேயே […]
கோவையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி காயமடைந்தவர்களை தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோரிப்பாளையம் அருகே வேகமாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாளையத்தை சேர்ந்த கோபால் மற்றும் பச்சை பாளையத்தை சேர்ந்த தங்கவேலு ஆகியோர் காயம் அடைந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தன்னுடைய சொந்தப் […]
கோவையைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் கல்லூரி படிப்பை படித்து வரும் மாணவன் தயாநிதிக்கும் இடையே முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து மாணவன் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் […]
வால்பாறை வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனவிலங்குகள் வேட்டை தடுப்பு காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை, புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதில் வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, புலி, சிறுத்தை போன்றவை தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், வால்பாறை சேக்கல்முடி எஸ்டேட் அருகே உள்ள தேயிலை […]
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற நபரை ரகசிய கண்காணிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். கோவையில் உள்ள சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவையில் அனைத்து பொது இடங்களிலும் ரகசிய கண்காணிப்பு படையினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று கோவை ரயில் நிலையம் அருகே காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான ஒருவரை வழிமறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் […]
கோவை அருகே பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அடித்த ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பகுதியை அடுத்த சுண்டக்காமுத்தூர் இல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அந்த கிராமங்களைச் சுற்றியுள்ள 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தினால் அவரது வகுப்பு ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த வேறு வகுப்பின் ஆசிரியர் ஒருவர் மாணவனை வீட்டுப்பாடம் […]
கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் தனியார் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த […]
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காமம் திறந்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக சாலைப்போக்குவரத்து பாலத்தில் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், அவினாசி சாலையில் […]
கோவையில் புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியை அடுத்த சேத்துமடை பழைய சர்க்கார்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்வித்யாசங்கர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு கால்நடைகளை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. குறிப்பாக இவர் ஊரில் யாரிடமும் இல்லாத அரிய வகை கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அதன்படி இவரிடம் அரிய ரக வெள்ளாடுகள், காங்கேயம் காளைகள் அதன் கன்று குட்டிகள் […]
காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் சகோதரிக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்துவருகிறார். இவரும் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்தப் பெண் ரூபனிடமிருந்து விலகி, காதலிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் […]
பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஷவர்பாத்தில் யானைகள் நீண்ட நேரம் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன … கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் மறுவாழ்வுமையத்தில் 28 கோவில் யானைகளுக்கு சமச்சீர் உணவுகள் , பசுந்தீவனங்கள் மற்றும் நடைப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது . பவானி ஆற்றங்கரையில் மின்மோட்டார்கள் மூலம் இயங்கும் சவர்களில் யானைகள் தினமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றன . இந்த நிகழ்வுகளை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கண்டுகளித்து வருகின்றன .
சீனாவில் இருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோன பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு பாதிப்பு இல்லை என தெரிந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னை சேர்ந்த இருவர் என எட்டு பேர் சீனாவில் இருந்து பெங்களூர் வந்து அங்கிருந்து சென்னை வந்தனர். அவர்களை தீவிரமாக பரிசோதித்து பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் பாதுகாப்பு […]
டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நாளை முதல் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை முற்போக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு போதிய நீர் இல்லாத காரணத்தினால் ஆகஸ்ட் 13-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட போதிலும் சம்பா தாளடி சாகுபடியில் […]
கோவை சிங்காநல்லூர் அருகே தொழிலதிபர் ஆதம் ஷா என்பவரது வீட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதம் ஷா கோவையில் சிங்கநல்லூரில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய ஆதம் ஷா வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் படுக்கை அறையில் இருந்த பீரோ […]
பாரதிய ஜனதா கட்சி விரித்திருக்கும் வலையில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார் குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு துக்ளக் தர்பாரை மிஞ்சி விட்டதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது துக்ளக் தர்பார் தலை நகரத்தை மாற்றியது ஆனால் இவர்கள் ஒரு மனிதனுடைய குடியுரிமை மாற்ற நினைக்கிறார்கள் இது மிகவும் தவறு எனவும் […]
கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் பிளாஸ்டிக் கவர்: கோவையில் 13 வயது சிறுமி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்தபோது வயிற்றில் கட்டி போன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வயிற்றில் இருப்பது கட்டி இல்லை என்பது தெரியவந்தது. வயிற்றில் இருந்த அரை கிலோ எடையுள்ள தலைமுடி, ஷாம்பு மற்றும் […]
ஆனைகட்டி தடாகம் பகுதியையொட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி தடாகம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. புலிகள் அடர்ந்த வனப்பகுதியிலுள்ள நிலையில் அவ்வப்போது சிறுத்தைகள் மலையடிவாரத்தில் ஒட்டியுள்ள கிராமப் பகுதிக்குள் அவ்வப்போது வருவது வழக்கம். இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் இல்லாத சூழலில் சோமயம்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியிலுள்ள மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை […]
கேசி பழனி சாமியை பிப்ரவரி 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி அதிரடியாக நீக்கப்பட்டார். காரணம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தொடர்ந்து கட்சியில் இருப்பதாக […]
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க தீவிர முன்னெச்சரிக்கை, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்த பிறகு இதனை அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி பழனிசாமி கோவையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இன்று அதிகாலை 3 மணிக்கு பழனிசாமி வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்பு அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பழனிசாமி அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் முன்னாள் எம்பியாக கே சி பழனிச்சாமி நாமக்கல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற […]
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]
பிளாஸ்டிக் நாப்கின்களுக்கு பதிலாக புளிச்ச கீரை தண்டை கொண்டு நாப்கின்களைத் தயாரித்து இளம் தொழிலதிபர்களான நிவேதாவும்,கௌதமும் அசத்திவருகின்றனர். சாதாரண நேரங்களில் ஆண்களைவிட அதிக அளவில் வேலைசெய்துவரும் பெண்கள், மாதவிடாய் நேரங்களில் மட்டும் சுருண்டுபோவது இயற்கையே. பெரும்பாலான பெண்கள் இதனை ஒரு சாப கேடாகவே பார்க்கிறார்கள், அதற்கான காரணம் மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று கூறிய பழைமைவாத கருத்துகளே, தற்போது அதனை ஒரு உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியிருந்த போதிலும், அந்த சமயங்களில் உடல் வலியையும், […]
பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகந்தை கண்டித்து திராவிட கழகத்தினர் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தந்தை பெரியார் அமைப்பினர், வழக்கறிஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கோயம்புத்தூர் தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதில், தந்தை பெரியார் திராவிடர் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த […]
கோயம்புத்தூரில் சைக்கோ இளைஞன், பெண்களின் ஆடைகளை திருடுவது, படுக்கை அறைகளை பார்ப்பது போன்ற சைக்கோவின் தொடர் அட்டகாசத்தால் குடியிருப்புவாசிகள் கலக்கமடைந்துள்ளனர். அண்மையில் கோவை, துடியலூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நள்ளிரவில் சைக்கோ நபர் ஒருவன் படுக்கை அறை ஜன்னலை குறிவைத்து பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான சி சி டிவி , காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தணிவதற்குள், துடியலூரில் உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பில் பெண்களின் உள்ளாடைகள், காலணிகள் […]
பிளாஸ்டிக் நாப்கின்களுக்கு மாற்றாக புளிச்ச கீரை கொண்டு நாப்கின்களைத் தயாரித்துவரும் இளம் தொழில்முனைவோர் நிவேதா, கௌதம் அசத்திவருகின்றனர். அது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு… ‘மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும்’ என்ற அற்புதமான அர்த்தம் கொண்ட கவிமணியின் இக்கூற்றை அனைவரும் அறிந்திருப்போம். பெண்களைப் போற்றி கொண்டாடுதலே நம்முடைய கலாசாரத்தின் அடிநாதம் ஆகும். பெண்ணை இன்று சிங்கப் பெண்ணாக ஒப்பிடுகையில் உணர்ச்சிப்பூர்வமாக பெருமதிப்புடன் கொண்டாடி வருகிறோம். ஆனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களையும், அவர்கள் படும் துயரங்களையும் நாம் […]
பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடனால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை துடியலூர் மீனாட்சி கார்டன் குடியிருப்பில் 250 வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில் சமீபகாலமாக சுற்றி திரியும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை மட்டும் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த சைக்கோ திருடனால் இப்பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே நேரத்தில் பல பெண்களின் உள்ளாடைகளும், செருப்புகளும் காணாமல் போனது. […]