கேட்பாரற்று கிடந்த முதியவரின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்து பொதுமக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு […]
Category: கடலூர்
ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதி வேகமாக பரவுவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது உணவு விடுதிகள் மற்றும் சிற்றுண்டிகள தங்களது சொந்த வாகனத்தில் வாடிக்கையாளரின் வீடுகளுக்கு சென்று உணவுப் பொருட்களை வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திட்டக்குடியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் உணவகங்களில் பார்சல் சர்வீஸ் மட்டும் […]
மீன் வாங்குவதற்காக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து செயல்பட்ட பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் மற்றும் கொரனோ தோற்று பரவலைத் கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடுவது, ஹோட்டல்கள், பேருந்துகள், தியேட்டர், கடைகள் ஆகிய இடங்களில் 50% பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும். இதில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் […]
தியேட்டரில் 50 சதவீத நபர்கள் அனுமதிக்க அரசு உத்தரவிட்டதை பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பேருந்துகள், ஓட்டல்கள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இம்மாவட்டத்தில் இருக்கும் 40 தியேட்டர்களிலும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து 50 சதவீதம் மக்கள் மட்டுமே […]
லாரி ஓட்டுநரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எழுமேடு அகரம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் களிஞ்சிகுப்பம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வடிவேல் சென்று கொண்டிருக்கும் போது 2 நபர்கள் திடீரென்று வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]
முககவசம் அணிவதன் கட்டாயம் குறித்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டி.எஸ்.பி சிவா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.பி சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் ஆகியோர்களை அழைத்து முககவசம் அணிவதன் கட்டாயம் மற்றும் தடுப்பூசியின் பலன்கள், தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். அப்போது டி.எஸ்.பி சிவா பொதுமக்களிடம் கூறியதாவது, தென்னாப்பிரிக்கா மற்றும் […]
போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றி சென்றதால் காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிக அளவில் பாரம் ஏற்றி கொண்டு வந்த கனரக வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வரி பெறப்பட்டுள்ளது. இதில் 2 லாரிகள் தகுதிச்சான்று பெறாமலும், அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்து வந்தது அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தகுதிச் […]
சேதமடைந்து இருக்கும் சிமெண்ட் கட்டைகளை உடனுக்குடன் சரி செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிபுலியூர் பகுதியில் வணிக வளாகங்கள், நகைக்கடைகள், மார்க்கெட் மற்றும் துணிக்கடைகள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவந்திபுரம் வழியாக பண்ருட்டிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுப்பராய செட்டி தெரு வழியாக சென்று வருகின்றது. இதில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியாகச் செல்கின்றனர். ஆனால் பாதாள சாக்கடையில் மூடப்பட்டுள்ள […]
விவசாயி கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள அப்பியம்பேட்டை அங்காளம்மன் கோவில் பகுதியில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த ஜெயசூரியா நண்பர்கள் சிலருடன் அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஜெயசூரியா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக […]
சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகுமட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் தனது சைக்கிளில் சம்பந்தம் கிராமம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது லாரி ஒன்று மோதியது. இதில் படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் நடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலியில் அரசுக்கு சொந்தமுடைய நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நடேசன் தனது மனைவியுடன் வீணங்கேணியில் இருக்கும் மகளைப் பார்ப்பதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது வீணங்கேணி பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கு உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்நேரம் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த […]
கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சாலையோரம் இருக்கின்ற கட்டிடங்கள், வீடுகள், மரங்கள் அவற்றை அகற்றி சாலை விரிவாக்கம் மற்றும் சாலையின் இருபக்கமும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து மேல்பட்டாம்பாக்கம் பகுதி சாலையோரத்தில் ஒரு சில […]
ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் 35 வயது மிக்க வாலிபரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஜெயசீலன் என்பதும், சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை […]
ஆதார் சேவை மையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்ற ஆதார் சேவை மையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் நேரில் வந்து ஆதார் கார்டில் பெயர் நீக்கல், தொலைபேசி எண் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் சேர்த்தல் போன்ற திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பாக தொழிலாளர் நல வாரியத்தில் 18 வயது முதல் 59 வயது வரை பதிவு செய்யலாம் […]
மழை வெள்ளத்தில் பாதிப்படைந்த நெற்பயிருக்கு 30,000 ரூபாய் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் விவசாய […]
கூடுதலாக பேருந்து வேண்டி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் இருக்கும் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அமைந்திருக்கிறது. இந்த கல்லூரிக்கு சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கல்லூரி நேரங்களில் தங்களுக்கு போதிய அளவில் பேருந்து வசதி இல்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர். அதன்பின் குறிப்பாக உளுந்தூர்பேட்டை மற்றும் விருதாச்சலம் மார்க்கமாக இயங்கும் அரசு பேருந்துகள் சரி வர இயங்காத காரணத்தினால் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும் மீண்டும் […]
குறைகளை சொல்வதற்காக வந்த பணியாளர்களை அலுவலர் உள்ளே அனுமதிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சியில் நடக்கும் பல திட்டப்பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் மண்டல இயக்குனர் சசிகலா ஆகியோர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதிகாரிகளை சந்தித்து தங்களின் குறைகளை சொல்வதற்காக அலுவலகத்திற்கு 100-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களை நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி ஒருமையில் பேசி அதிகாரிகளை சந்திக்க விடாமல் தடுத்ததாக […]
தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை அருகாமையில் இருக்கும் சித்திரைசாவடி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன்பாக திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை மீட்டு […]
வருடந்தோறும் நடைபெறும் பகல்பத்து உற்சவத்தை பக்தர்கள் கண்டு களித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் வருடம்தோறும் பகல்பத்து உற்சவம் பத்து நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பகல்பத்து உற்சவம் தற்போது தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தேவநாதசாமி பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் திருமஞ்சனமும் நடைபெற்றுள்ளது. அதன்பின் தேசிகர் சாமி மற்றும் பெருமாள் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு […]
நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் துணிசிரமேடு உள்பட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். எனவே மழையால் சேதமடைந்த நெல் வயல்களை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் […]
தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம் உள்பட பல கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. அதன்பின் சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதில் நெற்பயிர்கள் சாய்ந்து அழகி மோசமடைந்துள்ளது. இதனால் […]
பொதுமக்களின் அடையாள அட்டைகள் குப்பை மேட்டில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான பிரிவு இயங்கி வருகின்றது. இங்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் முகவரி, பெயர் திருத்தம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாலுகா அலுவலகம் எதிரே இருக்கும் குப்பை மேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்துள்ளது. அதில் ஒரே […]
அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சாமிக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றுள்ளது. அதன்பின் 26 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 1008 வடைமாலை, பூமாலை மற்றும் துளசி மாலை ஆகியவை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.
மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 80,787 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 6 பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு நோய் […]
கனமழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் படகு சவாரி செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சுற்றுலா மையமானது 5000 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த நிலையில் இருக்கிறது. அதன்பின் இதில் அழகு கொஞ்சும் சதுப்பு நில காடுகளில் அதிகமான கிளை காடுகளும் இருக்கின்றது. இதனையடுத்து காடுகளில் உள்ள சுரபுன்னை மரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்தக் காடுகளைப் பார்த்து ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் வசிக்கும் […]
உரிமம் பெறாமல் இறைச்சி கடைகளை நடத்தி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கியுள்ளார். இக்கூட்டத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வதை தடுத்தல் மற்றும் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்த உணவுப்பொருட்கள் கண்டறிந்து எச்சரிக்கை செய்து அதை அழித்தல் […]
தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. அதன்பின் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனைத் தொடர்ந்து அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 68 மில்லி மீட்டரும் மற்றும் குறைந்த […]
பெட்டிக் கடைகளில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதிகளில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 பெட்டிக் கடைகளில் புகையிலை […]
தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழக கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் இம்மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பின் திடீரென கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனையடுத்து இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி உள்ளது. பின்னர் தாழ்வான […]
கோவில் உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதாமூர் பூந்தோட்டம் நல்லேரிக்கரை திரவுபதி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் பூசாரியாக அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பூஜைகளை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இரும்புக் கம்பிகள் மூலமாக பெயர்த்தெடுத்து […]
புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பேராசிரியராக பணிபுரிந்த எம்.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக வேளாண் குலத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்த எம். பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் தற்போது தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எம். பிரகாஷ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட எம். […]
கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தற்போது ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இவற்றை வரவேற்கும் விதமாக நள்ளிரவு முதலே பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் மற்றும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இம்மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் காவல்துறை சூப்பிரண்டு சக்தி கண்ணன் மேற்பார்வையில் கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் […]
இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி புதுத் தெருவில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் காமராஜர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இந்தக் காட்சியானது அப்பகுதியில் […]
தற்போது மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீராங்கனை மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கூடைப்பந்து கழகம் சார்பாக மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீராங்கனை மற்றும் விரர்கள் தேர்வு தற்போது அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்ட செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட தலைவர் அருளானந்தம், மூத்த துணைச் செயலாளர் இளங்கோவன், நடராஜன் மற்றும் துணைச் செயலாளர் அருள் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து இம்மாவட்டம் உள்பட 3 மாவட்டத்தின் […]
பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்களையும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவித்திருக்கிறார். இதன்படி பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து சென்று பொது இடங்களில் மது அருந்துவோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனையடுத்து இதுவரை 650 பேரை காவல்துறையினர் […]
பனிமூட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் செல்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் லேசான பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் காற்று தொடர்ந்து வீசி வருவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து திருவந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் […]
தங்கத்தில் செய்யப்பட்ட வேளாங்கண்ணி தேவாலயத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள இளமையாக்கினார் கோயில் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பொற்கொல்லரான இவர் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து இருக்கிறார். இதனை அடுத்து சிறிய அளவில் செய்த வேளாங்கண்ணி தேவாலயத்தை அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றுள்ளனர். இதனை போல் முத்துக்குமரன் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால் மற்றும் நடராஜர் […]
10 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்பாளையம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்பார்வையற்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் தனது மனைவியையும், குழந்தையையும் கவனித்துக் கொள்வதற்காக உறவினர் ஒருவரின் 10 வயது மகளை மணிகண்டன் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமியை மணிகண்டன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் […]
கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் 7 பேரை மீட்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருளரின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது எம். அகரம் பகுதியில் ஏராளமான இருளர் இன மக்கள் வசித்து வருகிறோம். இதில் 13 பேர் ராயபுரத்தில் இருக்கும் பால் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 பேர் பண்ணையில் இருந்து […]
கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் உள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சங்கொலிகுப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமமூர்த்தி, குமார் ஆகியோர் தனியார் கம்பெனியில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் சங்கொலிகுப்பம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]
கடலூரில் 70 மீட்டர் தூர இரும்பு கம்பியில் 87 வினாடிகள் தாவிக் கடந்து 4 வயது சிறுமி அசத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அடுத்த மணக்குடியான் கிராமத்தில் மோகன்- சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் அனுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இதில் அனுஸ்ரீ மரக்கிளை போன்றவைகளில் நீண்ட நேரம் தொங்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் 70 மீட்டர் தூர இரும்பு கம்பியில் ஏறத்தாழ 87 விநாடிகள் தாவி […]
பா.ஜ.க-வினர் தங்களது வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து விட்டதாக கூறி பா.ஜ.க நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருவதாகவும், இதை கண்டிக்கும் வகையில் பா.ஜ.க-வினர் தமிழகம் முழுவதும் மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பாக தி.மு.க-வை கண்டித்து வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் கே.பி.டி. இளஞ்செழியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் 50-க்கும் […]
கையில் கஞ்சா வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் குற்றப்பிரிவு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் காவல்துறையினர் ரயில்வே ஜங்சன் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் சின்னசேலம் பகுதியில் வசிக்கின்ற ராஜா என்பவர் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்திருக்கிறார். இதனை அடுத்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை பிடித்து விருதாச்சலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]
இனிப்புக் கடையில் பக்கோடாவிற்குள் சொத்தைப்பல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி அருகில் உள்ள ஒரு இனிப்பு கடையில் கொளஞ்சி என்பவர் பக்கோடா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பக்கோடாவிற்குள் வித்தியாசமாக ஏதோ இருப்பதை கொளஞ்சி கையில் எடுத்து பார்த்தபோது அது சொத்தைப்பல் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கொளஞ்சி கடை விற்பனையாளரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் […]
குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கோ. ஆதனூர் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமார் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் இருக்கும் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருக்கின்ற தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையினால் அந்த தடுப்பணையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அறியாத […]
பள்ளிக்கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை இருக்கும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்ட காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் தற்போது விரிவாக்கப் பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்த நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு […]
ஏலச்சீட்டு நடத்தியவரின் வீட்டை காவல்துறையினர் திறப்பதற்கு வந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்த 100-க்கும் அதிகமான நபர்கள் தங்களுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் மாரிமுத்துக்கு சொந்தமுடைய வீடு, ஏலச்சீட்டு அலுவலகம், இலுப்பை தோப்பு உள்ளிட்டவைகளை பூட்டுப் போட்டு பூட்டி உள்ளனர். […]
மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் ஆனந்தமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து விட்டார். இந்நிலையில் மங்கையர்கரசி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ம.பொடையூர் கிராமத்தில் வசிக்கும் 20-க்கு மேற்பட்டவர்கள் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொட்டாரம் நோக்கி வேனில் புறப்பட்டுள்ளனர். இந்த வேனை கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் அதே வேனில் மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆவட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ராஜி என்பவர் சாலையின் குறுக்கே நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் மீது […]