Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. மும்முரமான பணியில் விவசாயிகள்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!

வங்கக்கடலில் சூறை காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட 5 மாவட்டங்களில் தற்போது பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இரவு ஆரமித்து காலை நேரம் வரை நீட்டித்து இருக்கிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. இதனையடுத்து தொடர் கனமழையால் விவசாயிகள் தங்கள் விவசாய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் குறைகேட்பு கூட்டம்…. செல்போனில் முழ்கிய அதிகாரி…. கடலூரில் பரபரப்பு….!!

அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரி ஒருவர் யூடியூப்பில் சமையல் பற்றிய வீடியோ பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பின் தற்போது பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் கூறும் கோரிக்கைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது மொபைல் போனில் மூழ்கிய நிலையில் யூடியூப்பில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திரண்டு வந்த பொதுமக்கள்…. விறுவிறுப்பாக நடைபெற்ற வியாபாரம்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

பொதுமக்களின் நலன் கருதி தொற்று ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகமானோர் கடைகளுக்கு திரண்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மீனவர்களிடம் நேரடியாக தேவைக்கேற்ப மீன்களை வாங்கி கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இறைச்சிக் கடைகளின் முன்பாக பொதுமக்கள் முககவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதால் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. அதன்பின் குருவன்குப்பம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் விவசாய ஒருவரது வயலில் மணிலா அறுவடை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கும் விரைவில் போடப்படும்…. சிறப்பாக நடைபெறும் தடுப்பூசி முகாம்…. ஆட்சியரின் தகவல்….!!

14 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதாக முகாமை ஆய்வு செய்த கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நான்காவது கட்ட தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற 739 தடுப்புசி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் புனித வளனார் கல்லூரி வளாகம் மற்றும் நகராட்சி பள்ளி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விழிப்புணர்வு வாகனம்…. அதிகாரிகளின் பங்கேற்பு…. நீதிபதியின் செயல்….!!

கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனத்தை நீதிபதி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வளாகத்தில் வைத்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் மற்றும் 25-வது தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஆணைக்குழு செயலாளரான பாக்கியம் வரவேற்றுள்ளார். அதன்பின் விழிப்புணர்வு நீதிபதி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பலரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் இயக்க வேண்டும்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு…. நிர்வாகிகளின் கோரிக்கை….!!

அதிகம் பயன்படுத்தும் பயணிகளின் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து நாளொன்றிற்கு இரு மார்க்கத்திலும் மூன்று முறை இயக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் இந்தியா முழுவதும் சாலை பொது போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்த காரணதினால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் வழியாகவும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படி காணாம போச்சு…. அதிகாரி பணியிடை நீக்கம்…. சூப்பிரண்டு உத்தரவு….!!

கவனக்குறைவாக இருந்த ஏட்டு ஒருவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த பெட்டி கடையில் சோதனை நடத்திய போது புகையிலை புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் திடீரென காணாமல் போய்விட்டது. இது குறித்து காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் தீவிர […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி இல்லை…. திரண்டு வந்த பக்தர்கள்…. போலீஸ் மறுப்பு….!!

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு கோவிலில் இருக்கும் ஆற்று கரையில் பக்தர்களை நேத்திக்கடன் செய்ய விடாமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவந்திபுரம் பகுதியில் பிரசித்தி வாய்ந்த தேவநாதசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்ற நிலையில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பக்தர்கள் சிலர் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதினால் தேவநாத […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென கதறி அழுத பெண்…. தீவிரமாக நடைபெற்ற கிராம சபை கூட்டம்…. உறுதி அளித்த கலெக்டர்….!!

கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் ஆசிரியர் ஒருவர் கூலி வேலை செய்வதாக கூறி கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒரு பெண் திடீரென கலெக்டர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவரது காலில் விழுந்து கதறி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் கௌதமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் கௌதமன் மன உளைச்சலில் இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தில் மயக்க மருந்தை கலந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிகமாக சேர்க்க வேண்டும்…. அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

இந்த வருடம் கல்லூரிகளில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் அரசு கல்லூரில் மாணவர் சேர்க்கை முடியும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த வருடம் பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கின்றது. இதனை அடுத்து அனைத்து கல்லூரிகளிலும் சுழற்சி முறையை அமல்படுத்தி அதிகமான மாணவர்களை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்ய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சதித்திட்டம் தீட்டிய கும்பல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சதித்திட்டம் தீட்டிய கும்பலை சேர்ந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாமலை நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேம்பாலத்திற்கு கீழே இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரி அருகாமையில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அதன்பின் அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்ததால் சந்தேகத்தின் பேரில் அவர்களை விரட்டிச் சென்ற நிலையில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜெயசீலன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சமமாக வழங்க வேண்டும்…. விவசாயிகள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

விளைநிலங்களை சமப்படுத்தும் பணிக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். புதுச்சேரி,நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர் இடையே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 61 கிராமங்கள் வழியாக இந்த சாலை செல்கின்றது. அதன்பின் இந்த சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து முடிந்த நிலையில் அனைவருக்கும் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் கையகப்படுத்தப்பட்டு இருக்கும் விளைநிலங்களில் சாலை அமைப்பதற்காக சமபடுத்துதல் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு இன்ஜினியர். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில் விஷ்ணுவரதன் வித்தியாசமான முறையில் முடிதிருத்தம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் விஷ்ணுவரதனை பெற்றோர் கண்டித்ததால் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த விஷ்ணுவரதன் வீட்டில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இது புளிச்ச கீரை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

2 வாலிபர்கள் இணைந்து கஞ்சா செடிகளை வீட்டில் வைத்து வளர்த்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் இரண்டு வாலிபர்கள் தங்களின் வீடுகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய 2 பேர் வீடுகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் தங்கள் வீடுகளில் புளிச்ச கீரை வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வழிமறித்த தொழிலாளிகள்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் உத்தரவு….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 தொழிலாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டிற்கு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து விட்டு திரும்பி வரும் போது வழியில் ஜெய்சங்கர் மற்றும் குணசேகரன் ஆகிய 2 தொழிலாளிகளும் சிறுமியை வழிமறித்துள்ளனர். அதன்பின் சிறுமியை இரண்டு பேரும் சேர்ந்து கடத்திச் சென்று அருகில் இருந்த கோவிலுக்கு பின்புறம் வைத்து பாலியல் பலாத்காரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த சோதனை…. கைவசம் சிக்கிய ஆவணங்கள்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்பட பல பணிகளுக்கு அலுவலர்கள் மற்றும் சார்பதிவாளர் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல்துறை சூப்பிரண்டு தலைமையில் அதிகாரிகள் அங்கே சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் சோதனை செய்த நிலையில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த தகவல்…. அலுவலகத்தில் திடீர் சோதனை…. கடலூரில் பரபரப்பு….!!

ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பீடர் ரோடு அருகாமையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருவதால் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் மற்றும் வைப்பு தொகை உள்ளிட்ட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் காரணத்தினால் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான ஐந்து பேர் இணைந்த குழுவினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாங்க ஏன் பண்ண கூடாது…. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

கலெக்டரின் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது எனவும், நீங்கள் அனுமதி வாங்கிய இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமி…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை காதலிப்பதாகக் கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததால் வாலிபருக்கு நிதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள தீவளூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில் யாரும் இல்லாத சமயத்தில் சதீஷ்குமார் அங்கு சென்று சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவரை கண்டித்ததால் மன உளைச்சலில் சிறுமி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு விருப்பமில்லை…. புகார் அளித்த விவசாயி…. கடலூரில் பரபரப்பு….!!

15,000 ரூபாயை லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லை சில தினங்களுக்கு முன்பாக அறுவடை செய்துள்ளார். அதன்பின் அறுவடை செய்த 250 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த எழுத்தர் பாலமுருகன் என்பவரை ஆனந்தன் அணுகிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்…. உண்ணாவிரத போராட்டம்…. முதல்-அமைச்சருக்கு கோரிக்கை….!!

ஊழியர்கள் தங்களின் பணிகளை நிரந்தரம் செய்யுமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் ஊழியர்கள் 300-க்கும் அதிகமானோர் 12 வருடங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை கூறி கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. துறைமுகத்தில் கூண்டு ஏற்றம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணத்தினால் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடமேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு 640 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் மேலும் வலுவடைந்து வடக்கு ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே தற்போது கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூரில் உள்ள துறைமுகத்தில் புயலின் எச்சரிக்கைக்கான கூண்டை ஏற்றப்பட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த தந்தை…. மகன்களின் கொடூர செயல்…. கடலூரில் பரபரப்பு….!!

குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை 2 மகன்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கரைமேடு கிராமத்தில் ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி அம்பிகா என்ற மனைவியும், ரகுவரன் மற்றும் ராஜராஜன் என இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜவேல் மனைவி அம்பிகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரின் இரண்டு மகன்களும் ராஜவேலுவை தட்டி கேட்ட போது மூன்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடிரென தீவிர வேட்டை…. சோதனையில் சிக்கிய குற்றவாளிகள்…. டி.ஜி.பி உத்தரவு….!!

2 நாட்கள் நடத்திய சோதனையில் 20 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கணேசன் மற்றும் காவல்துறையினரும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்புடைய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் விமல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜாதி மாறி திருமணம் செய்த தம்பதி…. சி.பி.ஐ விசாரணையில் சிக்கிய 15 பேர்…. நீதிபதியின் தீர்ப்பு….!!

ஜாதி மாறி திருமணம் செய்ததால் 2 பேரை கொடூர கொலை செய்த 13 நபர்களுக்கும் நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார். கடலூரிலுள்ள ஒரு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கண்ணகி என்ற வேறு ஜாதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணகியின் உறவினர்கள் அவர்களை கொடூரமாக கொலைச் செய்து எரித்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு சி.பி.ஐ வசம் வந்த நிலையில் தற்போது அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்ததில் பதினைந்து நபர்களை அதிகாரிகள் குற்றவாளியாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை மாற்ற வேண்டும்…. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

தனி வார்டை பொது வார்டாக மாற்ற கோரி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பெரங்கியம் பகுதியில் 9-வார்டு பொதுவாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது இப்பகுதி தனி வார்டாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து உள்ளாட்சித் தேர்தலை வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர். அதன்பின் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வராத காரணத்தினால் ஒன்பதாவது வார்டு பொது வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவற்றில் போட்டியிட தற்போது மூன்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. செடியில் அழுகும் பழங்கள்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

தொடர்ந்து பெய்யும் மழையால் அதிகமான எலுமிச்சை பழங்கள் செடியிலே அழுகி வருவதால் விவசாயிகள் வருத்தத்தில் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் எலுமிச்சை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்பின் எலுமிச்சை பழங்கள் மரங்களிலேயே அழுகியும், பின் கரும்புள்ளி நோய் தாக்குதலினால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டும் இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தைக்கு இறுதி சடங்கு செய்த மகன்…. திடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை இறுதி சடங்கில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ரெட்டி குப்பம் பகுதியில் நரசிங்கு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் நரசிங்கு திடீரென உயிரிழந்ததால் அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அப்பகுதி மக்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இறுதி சடங்கை செய்து கொண்டிருந்த சுரேஷ்குமார் […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: முருகேசன்- கண்ணகி ஆணவக்கொலை… பரபரப்பு தீர்ப்பு… ஒருவருக்கு தூக்கு… 12 பேருக்கு ஆயுள்!!

ஆணவக்கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நீதிமன்றம் அதிரடி… 2003-ம் ஆண்டு நடந்த சம்பவம்… முருகேசன்- கண்ணகி ஆணவக்கொலை… குற்றவாளிகள் 13 பேர் யார் யார்?

புதுப்பேட்டையில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற முருகேசன்- கண்ணகி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் ஊற்றி உறவினர்கள் எரித்து […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை… 13 பேர் குற்றவாளிகள்… நீதிமன்றம் அதிரடி!!

சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குப்பநத்தம் புதுகாலனியை சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி தம்பதி 2003 ஜூலை 8ஆம் தேதி உறவினர்களால் ஆணவ கொலை செய்யப்பட்டனர்.. மூக்கு காது வழியாக விஷயத்தை ஊற்றி 2 பேரையும் கொன்றதுடன் சடலங்களும் எரிக்கப்பட்டதாக  வழக்கு தொடரப்பட்டது.. ஆணவ கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. இந்த நிலையில் நீதிமன்றம் 13 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே முன்விரோதம் இருக்கு…. இளம்பெண்ணை சிறை வைத்த தி.மு.க பிரமுகர்…. கடலூரில் பரபரப்பு….!!

இளம் பெண்ணை வீட்டில் பூட்டி சிறை வைத்த தி.மு.க பிரமுகரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பழமலைநாதர் நகர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.புதூர் கிராமத்தில் இருக்கும் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நாற்பத்தி மூன்று லட்சத்திற்கு தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பிரமுகர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் வாழ்கிறோம்…. அலுவலகம் முன்பாக போராட்டம்…. கலெக்டருக்கு மனு….!!

செங்கல் சூளை பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்ததை கைவிட கோரி தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 150-க்கும் அதிகமானவர்கள் திரண்டு வந்துள்ளனர். அன்பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயற்சி செய்த போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டரை சந்திக்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அப்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஒரு வருடம் ஆகிட்டு…. கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள்…. போலீஸ் விசாரணை….!!

கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்கள் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகாமையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைந்திருக்கிறது. இதை ரமேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இம்மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலையத்திற்கு வந்து அதனை வாகனம் நிறுத்தும் இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து விட்டு பேருந்துகளில் வெளியூர் சென்று வருவதை பொதுமக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்காக ரமேஷ் வாகன உரிமையாளரிடம் குறிப்பிட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மேற்கு பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டில் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 9 கிராம் தங்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை போல் கதிரேசன் என்பவர் வீட்டிலும் கொலுசு மற்றும் டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்போல் சக்திவேல் என்பவர் வீட்டிலும் 88 கிராம் தங்கமும், பூராசாமி என்பவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதுல இதுவா கிடந்துச்சு…. மயங்கி விழுந்த குழந்தைகள்…. கடலூரில் பரபரப்பு….!!

அங்கன்வாடியில் பல்லி விழுந்த சாப்பாட்டை அருந்திய குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்‌ அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் அனைவரையும் பெற்றோர்கள் கொண்டு வந்து அங்கே விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மத்திய உணவுக்காக குழந்தைகளுக்கு ஊழியர்கள் சாப்பாட்டை பரிமாறிய போது அதில் பல்லி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னே உணவுகளை சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து ஊழியர்கள் குழந்தைகளை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மதிய உணவில் பல்லி…. அடுத்தடுத்து வாந்தி எடுத்த குழந்தைகள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் அருகே உள்ள அங்கன்வாடி பள்ளியில்,  பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடியில் மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தயாரிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து, அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர். அதனால் மதிய உணவு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இனி வர வேண்டாம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் ஒருவரை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குப்பங்குளத்தில் ரவுடி கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் குற்ற வழக்கு காரணத்தினால் கிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அவரின் மனைவியை சாலையில் வைத்து மூன்று பேர் சேர்ந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாபெரும் தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள்…. கலெக்டரின் ஆய்வு….!!

தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலமாக 20 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் இம்மாவட்டத்தில் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் முகாம் 140 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை போல் பி. உடையூர் உள்பட இரண்டு பகுதிகளில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர்…. சரமாரியாக வெட்டிய கும்பல்…. பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!

பெண்ணை சாலையில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குப்பங்குளத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி இரவு நேரத்தில் கிருஷ்ணன் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து வீராங்கன் என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சதித்திட்டம் தீட்டிய மனைவி…. ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு தெரு பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கீழ்மாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் கோவிந்தராசுக்கும், நித்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முறைகேடாக அமைத்த குழாய்…. பொதுமக்கள் வாக்குவாதம்…. ஆணையாளரின் உத்தரவு….!!

முறைகேடாக அமைத்த குடிநீர் குழாய்களை துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி சார்பாக இப்பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் மஞ்சக்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் நகராட்சி அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் படி குடிநீர் குழாய் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. கோவிலில் சிறப்பு வழிபாடு…. போலீஸ் பாதுகாப்பு….!!

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி வாய்ந்த தேவநாதசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று அதிகாலையில் சாமியின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுள்ளது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்த நிலையில் மகா தீபாராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவிலில் பிரம்ம உற்சவம் தொடங்கி 7-வது நாள் என்பதால் வெண்ணை தாழி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற கணவன்…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மனைவியை பார்க்க சென்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி நகர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தர்மராஜனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் தனது மனைவியை பார்க்க தர்மராஜன் வீட்டை பூட்டி விட்டு அவரின் ஊருக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பேசிய எஸ்டேட் அதிபர்…. திடீரென நடந்த கொடூர சம்பவம்…. நீதிபதி தீர்ப்பு….!!

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ரியல் எஸ்டேட் அதிபரை 4 பேர் சேர்ந்த கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மந்தவெளி பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி தனது நண்பர்களுடன் தெருவில் நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தந்தை…. சரமாரியாக வெட்டிய மகன்…. போலீஸ் நடவடிக்கை….!!

தூங்கிக் கொண்டிருந்த தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராம்தாஸ் நகர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி அம்சவல்லி என்ற மனைவியும், சுமதி என்ற மகளும், அறிவுசுடர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மகாலிங்கம் விவசாய நிலத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து குற்ற சம்பவங்கள்…. இரு தரப்பினர் மோதல்…. கலெக்டரின் உத்தரவு….!!

குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லஞ்சேரி பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அய்யனார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் இரண்டு நபர்களும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மலட்டாறு பகுதியில் அய்யனார் அவரது கூட்டாளிகளை தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று கத்தியால் வெட்டிவிட்டு நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது […]

Categories

Tech |