அரசு மருத்துவர் சரியாக பணி புரியாத காரணத்தினால் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இந்த மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவர் மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை எனவும் மருத்துவர் மீது பொதுமக்கள் […]
Category: கடலூர்
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு கண்டெய்னர் லாரி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் திட்டக்குடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரத்தை அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு , பொள்ளாச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வாக்கு எண்ணும் மையம் முன்பு நின்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுதிள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்வர் பீச்சுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை பற்றி அறியாத பொதுமக்கள் சிலர் […]
வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு கன்டெய்னர் லாரி வெகுநேரமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி மற்றும் விருதாச்சலம் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கபட்டுள்ளது. இதனையடுத்து அங்கு […]
குடும்பத்தினர் வெளிஊருக்கு சென்றிருக்கும் நேரத்தில் மர்மநபர்கள் பீரோவில் இருந்த 24,000 ரூபாய் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் பகுதி சர்ச் தெருவில் நாராயணன்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் நாராயணன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார் . இதனால் முத்துலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி தனது கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி வெளியூருக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம […]
கடலூர் அருகே மதுபாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி திடீரென கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகரில் மொத்த டாஸ்மாக் குடோன் ஒன்று இருந்து வருகிறது. நேற்றைக்கு அங்கிருந்து மதுபானங்களை லாரியில் ஏற்றி அதே பகுதியில் இருக்கக்கூடிய மதுபான கடைகளுக்கு சரக்குகளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மதுபானம் கடைக்கு அருகில் செல்லும்போது, திடீரென ஒரு லாரி மதுபானங்கள் ஏற்றி செல்லும் லாரி மீது மோதியது. இதனால் அந்த லாரி வாய்க்காலில் சரிந்து விழுந்து, லாரி டிரைவர் […]
வறுமையால் வாடிய பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் பாபு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இவர் பழங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அந்த வியாபாரத்தில் குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்காததால் பாபுவின் குடும்பம் கடந்த சில நாட்களாகவே வறுமையில் வாடியது. இந்நிலையில் மனமுடைந்த பாபு விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் […]
கொரோனா அச்சம் காரணமாக அறுவடை செய்த பலா பழங்களை விற்க முடியாமல் பண்ருட்டி பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பண்ருட்டி பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பலாப்பழம் சாகுபடியை ஆண்டுதோறும் விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சுமார் 1000 ஏக்கர் மேலாக அறுவடை செய்த பலாபழங்களை விற்க முடியாமல் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் எதிர்பார்த்ததைவிட அமோக விளைச்சல் பலாப் பழம் சாகுபடியில் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. […]
மாடுகளுக்கு கட்டி இருக்கும் கொட்டகைக்குள் 500கிலோ எடை கொண்ட முதலை புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அடுத்துள்ள வீரமுடையாந்தம் என்ற கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு பக்கத்தில் கொட்டகை அமைத்து அதில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் காலையில் மாடுகளுக்கு தீனி போடுவதற்கு கொட்டகைக்கு சென்ற ஆறுமுகம் மாடுகள் கட்டி வைத்திருந்த இடத்திற்கு பக்கத்தில் முதலை ஒன்று இருந்ததை பார்த்தது அதிர்ச்சி அடைந்தார். இந்த […]
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு விளங்குகிறது. வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை விவசாயத்திற்கு முக்கிய பாசனமாக இருக்கிறது. குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் குறிஞ்சிப்பாடி, வடலூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், 59 ஊராட்சிகளும் உள்ளன. 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 9 முறை திமுகவும்,4 முறை அதிமுகவும் வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏவாக திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னிர்செல்வம். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,35,885 […]
சந்தேக புத்தியால் மனைவியையும் மாமியாரையும் மாற்றுத்திறனாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சலங்குகார தெருவை சேர்ந்த தம்பதிகள் ரவி – பூங்கொடி. இவர்களது மகள் மீனா. இவருக்கும் சேலம் குப்பத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான நம்புராஜ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் நம்புராஜ் – மீனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நம்புராஜிக்கு தனது மனைவிக்கும் வேறு நபருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தீவிரவாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவிலில் ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் ஹெலிகாப்டரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் […]
மயக்க ஊசி போட்டு உறவினர்கள் வீட்டில் கொள்ளையடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திட்டக்குடி சேர்ந்த தம்பதிகள் கிருஷ்ணமூர்த்தி – ராசாத்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தியின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனிடையே சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தியின் தந்தையின் சிகிச்சை முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது வழியில் அவரின் உறவுக்கார பெண்ணான பெரம்பலூரை சேர்ந்த சத்யாவை சந்தித்துள்ளார். அதன்பின்னர் அதே […]
கடலூரில் பெண் ஒருவர் தான் திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே திட்டக்குடி சேர்ந்த தம்பதிகள் அசோகன் -செல்லம்மாள். இவர்களது மகள் அன்புச்செல்வி. இவர் தான் திருநங்கை என்பதை மறைத்து வெளிநாட்டில் வேலை செய்து வரும் செல்வம் என்பவரை கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து திருமணம் முடிந்தவுடன் அன்புக்கரசி தனது கணவரிடம் நான் 2 வருடம் மேற்படிப்பை முடித்துவிட்டு, விளையாட்டு பிரிவில் அரசு வேலை […]
மாணவர்களுக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பு.உடையூர் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் சிறுவர்களுக்கு மது வழங்குவதாக அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் மது கடைக்கு சென்று மது வாங்கி அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று […]
பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள முதுநகர் பகுதியில் சேகர் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கலா. சேகர் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கலாவிடம் பேசுவதற்காக வீட்டிலுள்ள செல்போனுக்கு உறவினர் தொடர்பு கொண்டபோது அதை யாரும் எடுக்கவில்லை. அதனால் அந்த உறவினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிற்குள் சென்று […]
இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கரும்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பரான மதியழகன் என்பருடன் இருசக்கர வாகனத்தில் கரும்பூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிரே வந்த மினி லாரி ரவிச்சந்திரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். இதில் ரவிச்சந்திரன் […]
பிளஸ்-2 மாணவி குளிப்பதை செல்போனில் படம் எடுக்க முயன்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி கிராமத்தில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மாணவி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாணவி குளிப்பதை தனது செல்போனில் படம் பிடிக்கும் […]
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலக்கரை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பழமலைநாதர் நகரில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சரிவர குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மாவட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சீவ்காந்தி. இவர் சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் சஞ்சீவ்காந்தியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 300 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சஞ்சீவ்காந்தி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
குளத்திற்கு நண்பர்களுடன் குளித்த சென்றபோது மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார், புஷ்பராஜ், சதீஸ். இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ராம்குமாரும் சதீஷும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அருகில் உள்ளவர்களிடம் தகவல் அளித்துள்ளனர். […]
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை குப்பையில் தூக்கி வீசுவதும் கொடூரமான முறையில் கொலை செய்வதும் அரங்கேறி வருகிறது. இப்படிப்பட்ட கொடூரர்களுக்கு கன்னத்தில் அறைந்தது போல் ஆண் குரங்கு ஒன்று நாய் குட்டியின் மேல் அதிகளவிலான பாசத்தை காட்டி எடுத்துக்காட்டாக இருக்கிறது. வேலூர் மாவட்டம் மேல்புளியங்குடி என்ற கிராமத்தில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அந்த குரங்கு அந்த பகுதியில் அனாதையாக கிடந்த நாய் குட்டி ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு […]
கோடை காலத்தில் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.58 அடியாகும். இந்த ஏரியால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் வீராணம் ஏரி நிரம்பி வழிந்தது. அதனால் உபரி நீர் அப்படியே […]
உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 4 1/2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தாசில்தார் விஜயா தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் […]
கடலூர் மாவட்டத்தில் 40 ரவுடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பெயரில் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், கடலூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 5 […]
மாணவியின் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சியின் கீழ் வழக்குப்பதிவு செய்துத்துள்ளனர் . அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி, வேளாண் புலத்தில் தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . நேற்று மாலை நேரத்தில் ஏ.டி.எம் மில் பணம் எடுப்பதற்காக மாணவி விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். மருத்துவ […]
1 1/2 மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கே நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழில் பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக கடந்த 22ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து […]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை கடத்திச் சென்றதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வாலிபர் கைது செய்யப்பட்டது எப்படி ? கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்த நல்லூர் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் கார்த்திகேயன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். பதின் பருவத்தில் இருந்த சிறுமியும் கார்த்திகேயன் விரித்த காதல் வலையில் விழுந்துள்ளார். […]
விவசாய தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழை கொள்ளை கிராமத்தில் சேரன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த 10 மாதமாக இவரால் சீட்டு பணம் கட்ட முடியவில்லை. இந்நிலையில் சேரனின் வீட்டிற்கு வந்த அந்த தனியார் நிறுவன மேலாளர் சீட்டு பணத்தை கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேரன் தனது […]
வரதட்சணை கொடுமையால் நர்ஸ் தற்கொலை செய்த வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் காலனி பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் பேராசிரியராக ஆப்பிரிக்க நாடு எத்தியோபியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரியும் செந்தமிழ்செல்வி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 30 […]
லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு கிராமத்தில் பிரகாஷ் என்பவரின் மகனான பிரவீன்குமார் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இங்கர்சால் என்பவரின் மகனான ஜெயசூர்யா என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி முடிந்து செங்கமேடு பகுதிக்கு பிரவீன் குமாரும் சூர்யாவும் மோட்டார்சைக்கிளில் […]
17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பூவேந்தன் நல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இதனையடுத்து தனது மகளை காணவில்லை என காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்து விட்டார். அந்த புகாரின் பேரில் […]
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவேந்தநல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் தாயார் இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சேத்தியாதோப்பு காவல்துறையினர் […]
800 ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள உச்சிமேடு, நெல்லிக்குப்பம், தாழங்குடா, நாணமேடு, திருமாணிகுழி, நடுவீரப்பட்டு, புதுப்பாளையம், கட்டார் சாவடி, வானமாதேவி ஆகிய இடங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட காய்கறி வகைகள், நெற்பயிர்கள் அங்கு பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கி விட்டது. மேலும் அங்கு 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து விட்டன. இதனையடுத்து அங்கு பயிரிடப்பட்ட […]
கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி 91 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை முறியடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாக கனமழை பெய்துள்ளது. அதன்படி வரலாற்றுச் சாதனையாக கடலூரில் இந்த கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, புதுச்சேரி மற்றும் கடலூர் போன்ற இடங்களில் பெய்த கனமழை புதிய வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது என […]
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாமல் கிடங்கில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நினைந்து நாசமான விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கொளக்குடியில் இயங்கிவரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கோட்டகம் மேட்டுக்குப்பம் உள்ளிட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டுவந்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால் விவசாயிகள் விடிய விடிய பெய்த மழையில் அத்தனை மூட்டைகளும் நீரில் மூழ்கி விட்டதாக கூறியுள்ளனர். மூட்டைக்கு […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது, மனமுடைந்த சுந்தரமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூரில் உள்ள கும்பகோணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முந்திரி கொட்டையின் மேல் உள்ள தோட்டில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு அந்த எண்ணெயிலிருந்து மாற்றுப் பொருளாக பவுடர் தயார் செய்யப்படுகிறது. அதன் பின்னர் இந்த பவுடர் வாகன டயர்கள், பெயிண்ட் பிரைட்னஸ் போன்றவைக்கு முக்கிய மூலப்பொருளாக உபயோகப்படுகிறது. […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்திருக்கிறது. நாளை மறுநாள் வரை தமிழகம் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் […]
சிதம்பரத்தில் பிறந்த குழந்தை தனது சாயலில் இல்லை என்று தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜீவ்-சிவரஞ்சனி. இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சம்பவத்தன்று சிவரஞ்சனி குழந்தையை தனது கணவரிடம் கொடுத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை தனது சாயலில் இல்லை என்ற கோபத்தில் இருந்த ராஜீவ் குழந்தையின் தொப்புள் கொடியை இழுத்து தரையில் அடித்து கழுத்தை நெரித்து கொலை […]
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என வக்கீல்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஒருவரை ஒருவர் கைகளை கோர்த்தபடி நீண்ட வரிசையில் நின்று கொண்டு மைக்கல் அம்பேத்கர் தலைமையில் பட்டி முருகன், பூமாலை குமாரசாமி, சிவாஜி, புஷ்ப […]
செல்போனில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்த்த குற்றத்திற்காக எலக்ட்ரீசியன் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ் கடம்பூர் பகுதியில் சத்யராஜ் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வருகிறார். இவர் குழந்தைகளின் ஆபாச படங்களை தனது செல்போனில் பார்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சைபர் செல் போலீசார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]
அரசு விடுதியில் சரியாக உணவு வழங்கப்படாததால் கோபம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திட்டகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் திட்டக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டும் உணவு கொடுத்து விட்டு மீதமுள்ள […]
சட்டவிரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கங்கனாகுப்பம் பகுதியில் அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாராயம் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்திய குற்றத்திற்காக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் வசிப்பவர் அமராவதி (60). இவருடைய மகள் ருக்குமணி (40). இந்நிலையில் அமராவதி வீட்டில் ருக்குமணி மற்றும் பேத்தியுடன் சம்பவத்தன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அமராவதியின் முன்பக்க கதவை தட்டியுள்ளனர். இதனால் பயந்து அவர்கள் பின் கதவை திறந்து பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் வந்த கும்பல், அமராவதி உள்பட 3 பேரின் வாயில் துணியை திணித்து அங்கு உட்கார […]
சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்து 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 380 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக பீமாராவ் நகரில் வசித்து வரும் வனிதா, குயவன் குளம் பகுதியில் வசித்து வரும் அலெக்ஸ், சுத்து குளம் […]
பெண் போலீசாருக்கு பயன்படும் வண்ணம் சானிட்டரி நாப்கின் எந்திரத்தை காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு சானிடரி நாப்கின் வெல்டிங் எந்திரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டார். எனவே ஆயுதப்படை பிரிவு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் […]
குழந்தை தனது சாயலில் இல்லாததால் சந்தேகமடைந்த தந்தை பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜீவ்-சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பார்த்து, ராஜீவ் தனது முக சாயலில் இல்லாததால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். அதன்பின் சிவரஞ்சனி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றார். ஒரு வாரம் கழித்து மனைவியின் தாய் வீட்டிற்கு வந்த […]
மனைவி மீது வந்த சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை அவரது கணவர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காக்கங்குடி பகுதியில் ராஜி என்கின்ற ஏழுமலை வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜி வீட்டிற்கு மது அருந்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததால் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிறந்து 8 நாளே ஆன ஆண் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஏழுமலை மற்றும் சிவரஞ்சனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தன் மனைவி சிவரஞ்சனி மீது அடிக்கடி சந்தேகம் கொண்டு சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தனது மனைவி கர்ப்பம் ஆனதை அறிந்து சந்தேகம் அடைந்தார். அந்த சந்தேகத்தில் குழந்தை பிறக்கும் வரையில் இருவருக்கும் இடையே அடிக்கடி […]