கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு பணீந்திர ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமாண பணீந்திர ரெட்டி கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நகராட்சி பகுதிகளிலும் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குள் குடம் மற்றும் கொளக்குடி பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலங்களில் வடிகால்களை தூர்வாரி […]
Category: கடலூர்
கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமரியாதை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தின் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ் போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் பெண் ஊராட்சி தலைவராக பணியாற்றி வரும் திருமதி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் நடந்த ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஊராட்சி துணை தலைவர் […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம். சிதம்பரம் அருகில் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திரு சந்திரசேகரன் சகாமுரி உறுதிபடத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தலைமறைவாக உள்ள துணைத் […]
சிதம்பரம் அருகே ஆதிதிராவிட ஊராட்சி மன்ற தலைவரை கீழே அமர வைத்த விவகாரத்தில் கடலூர் கூடுதல் ஆட்சியர் இராஜகோபால் சுங்காராவ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டாய் பஞ்சாயத்து துணைத்தலைவராக ராஜேஸ்வரி என்பவரும் துணைத்தலைவராக உள்ள மோகன் என்பவரும் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து கூட்டம் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த ஊராட்சியில் துணைத்தலைவர் ஊராட்சி செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் ஜூலை 17-ஆம் தேதி ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் […]
கடலூர் மாவட்டத்தில் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். அந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி […]
கடலூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் துணைத் தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலில் வகுப்பைச் சேர்ந்த திருமதி. இராஜேஸ்வரி இருந்து வருகிறார். கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது திருமதி. ராஜேஸ்வரி தரையில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. தெற்கு திட்டாய் […]
கடலூரில் பஞ்சாயத்து தலைவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக துணை தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தின் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராஜேஸ்வரியை தரையில் அமர்ந்து வைத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் துணை தலைவர் மோகன் தான் இதை செய்ததாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியின் ஆதரவாளர்களும் இன்று காலை புவனகிரி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்கள், புகாரின் […]
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. 2020 அன்று நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த புகார் வந்ததும் காவல்துறை உடனடியாக அவர்களை அழைத்து புவனகிரி காவல் நிலையத்தில் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே நெய்வேலி சுரங்கப் பகுதியில் வெளியேறிய நீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. நெய்வேலி பகுதிகளில் பெய்த மழை காரணமாக நெய்வேலி இரண்டாவது சுரங்க பகுதியில் மண்மேடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கியது. இதனால் அப்பகுதி நெல்வயல்கள் 50 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கியது. நெய்வேலி சுரங்கம் மண் மேடுகளில் இருந்து வரும் மழை நீரினால் […]
பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் உரிய சேவையை வழங்க முடியவில்லை என புகார். பொது விநியோகத் திட்டத்தில் தொழில் நுட்ப குறைபாடுகளால் உரிய சேவையை வழங்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறைபாடுகளை சரிசெய்ய கோரி வரும் 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளுக்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளிக்க சென்ற போது வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லை என்றும் […]
காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அமைந்த நெல்லிக்குப்பம் அருகே கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த மாவட்ட காவல்துறையினர் அந்த லாரியை சோதனையிடுவதற்கு தனிப்படை காவல் துணையிருக்கு உத்தரவிட்டனர் . அதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை சோதனையிட்டனர் . அப்போது லாரியில் காய்கறி மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளில் காய்கறிகள் அடுக்கி […]
கரூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலியை தொலைத்த அச்சத்தில் பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பரமத்திகுளம் என்ற பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக பூபதி என்பவர் இருக்கிறார். அவருக்கு 18 வயது உடைய தீபக் என்ற மகன் உள்ளார்.அவர் அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் தனது கையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்றை அணிந்திருந்தார்.அவர் நேற்று தனது […]
கடலூரில் தனது மூன்று வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சகுப்பம் ஜெகதேவ் நகரில் செல்வகுமார் என்பவர் அவரது 31 வயதுடைய மனைவி நவீனா என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கின்றது. இதனையடுத்து செல்வகுமார் மஸ்கட் நாட்டிற்கு வேலை பார்ப்பதாக சென்றுள்ளார். அதனால் நவீனா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் இருக்கும் மகனை காண மனைவியுடன் கடந்த சனிக்கிழமை புறப்பட்ட அவர் வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அண்ணன் மகன் ஜோசப் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று […]
குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொன்னால்லகரம். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக காலை மாலை என இருவேளையும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக காத்திருந்தனர். அச்சமயம் எப்போதும் போல் இல்லாமல் குடிநீர் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து யாரும் அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் […]
கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. அப்போது மேலும் பல பயணிகள் அந்த பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் இருக்கைகள் நிரம்பியதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்ற பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து பயணிகள் திடீரென பேருந்தின் முன்பு […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்கம் அதிவேகமாக பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக உரம், பூச்சிமருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும் என பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கிறது வீராணம் ஏரி.. இந்த ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின் சடலம் கரையோரம் மிதந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு புத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏரியின் கரையோரம் மிதந்து […]
கடலூர் மாவட்டத்தில் ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய […]
அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 2000 கல்வி உதவி தொகையாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெற்றோர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது . கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 350 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனைக் கண்ட கல்வி அதிகாரிகள் அப்பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் […]
தன்னைக் கிண்டல் செய்தவரை வாலிபர் ஒருவர் கோபமடைந்து கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான கார்த்திபன். இவரை 38 வயதான சிதம்பரம் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் அடித்துள்ளார். இதனால் கோபமடந்த கார்த்திபன் கள்ளுக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணகுமாரின் கழுத்தை தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமார் கத்தியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் […]
கடலூர் அருகே தேசியக் கொடியை அவமதித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பார்த்த கட்சியை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை அடுத்த புவனகிரி என்னும் பகுதியில் பெரியார் சிலை அருகே திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக என அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜகவினர் அப்பகுதியில் கூடி பாஜக […]
தங்களை விவசாயிகள் என்று கூறி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 12 லட்சம் மோசடி செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்படி சிறு குறு விவசாயிகள் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூபாய் 6000 தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின்கீழ் விவசாயி அல்லாதவர்களும் பயன் பெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. அந்த வகையில், […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவன் போஸ்டர் அடித்து நன்றி சொல்லியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால் 6 கட்ட நிலையில் கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலானோர் […]
கடலூரில் பத்தாம் வகுப்பை சேர்ந்த மாணவன் பாஸ் பண்ண வைத்ததற்கு முதல்வருக்கு நன்றி என போஸ்டர் அடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் […]
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர் தனது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை காவலராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எக்கேலா கணபதி (33) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சந்தோஜி (24) என்ற மனைவி இருந்தார்.. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் இந்த தம்பதியர் […]
கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில் முன்விரோதம் காரணமாக 25க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட தோடு,பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக, இரு கோஷ்டியினர் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து தாழங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 25க்கும் […]
கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அவ்வப்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டு மக்கள் அரசின் […]
கோவிலில் பெண்ணின் சடலம் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அய்யனார் கோவிலில் உடலில் காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில் அந்த பெண் கல் பூண்டில் அருகிலுள்ள வனகராபூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மனைவி கருப்பாயி என தெரியவந்தது. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கீலகல் பூண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.. மாநில அரசுகள் பாதிப்பு பகுதிகளின் தன்மையை பொறுத்து இந்த முடிவினை எடுத்து கொள்ளலாம் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இதை பின்பற்றியே தமிழக அரசும் ஊரடங்கு, கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே நேரத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை பொறுத்து அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தொகை நோய் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக […]
பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இரண்டு அரசு ஆசிரியைகள் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்த சமூக இடைவெளியுடன் பாடங்கள் கற்பித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சிகள் மூலம் கல்வி வீடியோ பாடல்களை ஒளிபரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து பெற்றோர் ஒதுக்கித் தரும் இடத்தில், […]
சிறுமிகளின் ஆபாச படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு பின்னர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் இளவரசன் என்ற நபரை கடலூர் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கடலூர் எஸ்.என்.சாவடிரட்சகர் என்ற நகரில் கண்ணன் என்பவரும் அவரது மகன் இளவரசனும் வசித்து வருகின்றனர். இளவரசன் ஒரு பொறியாளர். அவர் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது பார்க்கும் […]
சிதம்பரத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நபரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே இருக்கின்ற பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் அக்னிவீரன்(52) என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார்.. அதனைக் கண்ட சிறுமியின் தாய் அக்னி வீரனை திட்டிவிட்டு சிறுமியை […]
ஊரடங்கு காலத்திலும் மாணவர் நலன் கருதி செயல்படும் ஆசிரியரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் தேர்ச்சி பெற்று நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக வேலை பார்க்கும் படி புதிய புதிய பல செயல்கள் மூலம் புதுவிதமான கல்வியை மாணவர்களுக்கு செலுத்தி வந்தனர். இது போன்ற விஷயங்களை நாம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கண்டு வருகிறோம். இந்த ஊரடங்கு நேரத்திலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையர் உள்பட 13 ஊழியர்களுக்குக் கொரோனா உறுதியானதால் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து கட்டுப்பாட்டுப் […]
முகக் கவசம் அணியாமல் மீன் வியாபாரிகளுக்கு கடலூர் மாவட்ட காவல்துறையினர் இலவச முகக்கவசம் வழங்கியுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டிகந்தன்பாளையத்தில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள் பெரும்பாலானோர் முக கவசம் அணிவது இல்லை. எனக் கூறப்படுகிறது போலீசார் பல முறை அறிவுறுத்தியும் வியாபாரிகள் முக கவசம் அணியாமல் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து முககவசம் அணிவதற்கான அவசியம் குறித்து அப்பகுதியில் பேனர் வைத்த போலீசார் வியாபாரிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினர். அதன்பின் காவல் துறையினர் பேசுகையில் “மற்றவர்களுக்கு […]
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகமுள்ள பகுதிகளில் முழு கட்டுப்பாடு, தளர்வின்றி பொதுமுடக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் கடலூர் மாவட்டமும் இணைந்துள்ளது. கடலூரில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு கடையடைப்பு […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
பண்ருட்டி அருகே செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு புதுக்காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் ஆதித்யா (வயது 10) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பாரதி (வயது 6).. இவர்கள் இருவரும் தன்னுடைய அத்தை சுமதியுடன் ஆடு மேய்க்கும்போது உடன் சென்றிருக்கின்றனர்.. அப்போது எஸ்.கே.பாளையம் அருகேயுள்ள செங்கல் சூளையில் […]
கொரோனாவால் தன் வேலையை இழந்ததால் அன்றாட தேவைகளையும், செலவுகளையும் பூர்த்திசெய்ய முறுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஷ்வரன். இதுபற்றி அவர் கூறியதாவது, நெய்வேலி தான் எனக்கு சொந்த ஊர். தற்போது தனக்கு 30 வயது ஆகிறது. 2 வருடத்திற்கு முன் திருமணமாகி தற்போது ஆறு மாத கைக்குழந்தை ஒன்று தனக்கு உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்து முதுகலைப் பட்டம் பெற்று கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தலைவர் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (24). இவர் பி.இ முடித்து சென்னை ஐடி கம்பேனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஷோபனா (வயது 21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாகி விட்டது.. ஷோபனாவின் பெற்றோர் 50 பவுன் தங்க நகைகள், ரூ 2 லட்சம் ரொக்கப் பணம் […]
கடலூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து வேன் பிடித்து வந்த 20க்கும் மேற்பட்டோரை கிராம மக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை அடுத்த காராமணிகுப்பம் கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் என்னும் பகுதிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றனர். பின் பணி முடிந்ததும், அங்கிருந்து அரசின் அனுமதியைப் பெற்று இ பாஸ் மூலம் மீண்டும் காராமணிகுப்பத்திற்கு வேன் […]
கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு இல்லை என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு என செய்தி பரவியது. இதற்க்கு நகராட்சி […]
சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவிவந்த கொரோனா வைரஸை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை மூலம் கையாண்டு சென்னையை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஆயிரத்து 200க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் நேற்று சென்னையில் மட்டும் தொற்று கண்டறியப்பட்டது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட […]
வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த மங்கலம்பேட்டை அண்ணாசிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு உள்ளது. இதை அடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தனது உமிழ்நீரை […]