கலெக்டர் அலுவலகம் முன்பு 3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நத்தமேடு பகுதியில் வெங்கடேஷ்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சத்யா தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி […]
Category: தர்மபுரி
தர்மபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ள புதூர் அருகே பெங்களூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில் திருச்சியை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . அதுமட்டுமல்லாமல் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எர்ரப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகன் இருந்தார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விடுமுறை என்பதால் ரவிச்சந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து ரவிச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு […]
16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பூர் கிராமத்தில் சச்சின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரின் மகள் ஒருவருக்கு குப்பூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 16 வயதான சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக சமூகநல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சமூகநலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு வெங்காயம் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேன் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அதன்பின் அவர்கள் 2 பேரையும் […]
ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கி செல்போன் மற்றும் மோட்டார்சைக்கிளை டிரைவர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஒன்றிய பிரதிநிதியுமான சங்கர் பூலாம்பட்டி ஏரி வழியாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் ஏரியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியை சங்கர் நிறுத்தி டிரைவரிடம் விசாரித்துள்ளார். அப்போது லாரி டிரைவர் குண்டுகல்லூரைச் சேர்ந்த பெரிச்சி என்பவர் ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு, அவரிடம் இருந்த செல்போன் […]
காரிமங்கலம் சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள சஞ்சீவிராயன் பெருமாள் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் முயற்சியால் சீரமைக்கப்பட்டது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, முதல் கால யாக பூஜை போன்றவை நடைபெற்றது. இதனையடுத்து விழாவில் யாகசாலையில் இருந்து புனிதநீர் கோவிலை […]
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி தர்மபுரியில் உள்ள சாலை விநாயகர் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதனயடுத்து சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து குமாரசாமிபேட்டை ஸ்ரீ செல்வகணபதி ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு […]
விநாயகர் சதுர்த்தியையொட்டி மார்க்கெட்டில் பூ விற்பனை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வீட்டில் சிலை வைத்து வழிபட்டனர். இதனையடுத்து விநாயகர் சிலையை அலங்கரிப்பதற்கான பூக்களை தர்மபுரி மார்க்கெட்டில் பெரும்பாலான பொதுமக்கள் வாங்கி சென்றனர். அங்கு சாமந்தி, கனகாம்பரம், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலினால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மாதம்மாள் நீண்ட நாட்களாக வயிற்று வழியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை மாதம்மாள் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மாதம்மாளை மீட்டு […]
தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மாதம்மாள் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு சிகிச்சை எடுத்தும் வயிற்றுவலி சரியாகவில்லை. இதனால் மாதம்மாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த மாதம்மாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை குடித்து […]
தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாப்பாரப்பட்டி பேருராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தவுலத்பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில் […]
பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த 2-ஆம் தேதி ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதனால் இளவரசன் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இதனையடுத்து இளவரசனின் […]
குடும்ப தகராறில் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சைகொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இதில் கார்த்திக் காரிமங்கலம் அருகில் உள்ள தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது இதனால் […]
மலைப்பாதையில் விபத்தினை தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார் . தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி முதல் தொப்பூர் வரை உள்ள மலைப்பாதையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகள் நடக்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் தற்காலிக தீ […]
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாளப்பள்ளத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கியதாக புகார்கள் பெறப்பட்டது. அந்தப் புகாரின்படி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கொட்டகையில் பதுங்கியிருந்த 1 டன் அரிசியை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதேபோன்று பாகலஅள்ளி பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஒரு குடிசையில் பதுங்கியிருந்த 1 டன் அரிசியை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]
சாலை வசதி வேண்டி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர் தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலின் போது அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி செய்து கொடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது […]
லாரி மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மீன் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த டிரைவர் சாயி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவர் மோகன் என்பவரும் இருந்துள்ளார். இதனையடுத்து லாரி தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகில் வந்தபோது […]
பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பத்தூருக்கு செல்வதற்காக தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறினார். அப்போது மணிமேகலை கையில் வைத்திருந்த 2,800 ரூபாய் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய பெண்ணை காவல்துறையினர் […]
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பண்ணா வலசு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 6 வயதில் அறிவழகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த மின் சுவிட்சை அறிவழகன் போட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அறிவழகனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். […]
ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறையில் வேலை பார்க்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் உள்ள வனப்பகுதியில் காவல்துறை சார்பாக துப்பாக்கி சுடும் பயிற்சி 1,400 நபர்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி 100 முதல் 150 வரையிலான காவல்துறையினருக்கு ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் துப்பாக்கி சுடும் […]
கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாது கொட்டாய் பகுதியில் கூலித் தொழிலாளி சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகன்கள்,, ஒரு மகள் இருக்கின்றனர். இதில் சங்கர் குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் இன்றி சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சங்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ செலவுக்கு பணமின்றி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்நிலை பகுதியில் மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இதனையடுத்து காவிரி நீர்நிலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்பின் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த 2 […]
சாக்கடை கால்வாய் அமைக்ககோரி தேங்கி நிற்கும் மழை நீரில் கிராமபெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேசம்பட்டி வன்னியர் தெரு மேல்வீதியில் இருக்கும் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் வீடுகள், சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. […]
பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அந்த வழிபாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுன சாமி கோவிலில் சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் சாமிக்கு பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதேபோன்று குமாரசாமிபேட்டை […]
ஏரியூர் ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தனபால் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டர் திவ்யதரிசினியிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவர் பொறுப்பில் இருக்கும் பழனிச்சாமி என்பவர் துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் கலந்தாலோசிக்காமல் தனியாக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து அவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவாய் இழப்பை […]
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு சங்க மாநில பொருளாளர் செட்டியப்பன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாநில பொருளாளர் சக்கரவர்த்தி கலந்து கொண்டு பேசியுள்ளார். இதில் வட்ட தலைவர் கிருஷ்ணன், வட்டச்செயலாளர் திம்மன், […]
பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற பெற்றோர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் நெடுமாறன் நகர் பகுதியில் உள்ள ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அந்த புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு பச்சிளம் குழந்தை துணியில் சுற்றி வீசப்பட்டு கிடந்தது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த குழந்தையை எடுத்து பார்த்தபோது பிறந்து 2 நாட்களே […]
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சின்னப்பாப்பா என்ற மனைவியும், சக்திவேல் நாகராஜன் என்ற 2 மகன்களும்இருந்துள்ளனர். இதில் முருகன் பன்றிகளை வளர்த்து வருகின்றார். இவருடைய மகன் சக்திவேல் திருப்பூரில் பணிபுரிகின்றார். இதனையடுத்து 2-வது மகன் நாகராஜன் விபத்தில் தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி சின்ன பாப்பாவுக்கும், […]
சாலை வசதி அமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கணாம்புதூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் அரசுப் பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கிராமத்திற்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கிறது. மேலும் மழைபெய்தால் சகதியாகவும் மாறிவிடுகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. […]
தர்மபுரியில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் தர்மபுரி மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் விவசாய சாகுபடிக்கு உறவு நடந்த நிலங்களில் மழையினால் ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இம்மாவட்டத்தில் மொத்தமாக 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் இதில் சராசரியாக 4.23 மில்லிமீட்டர் பதிவாகி இருக்கிறது.
மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக் கொன்றதால் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியில் பன்றிகளை வளர்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னபாப்பா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு நாகராஜன் மற்றும் சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சக்திவேல் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் 2-வது மகன் நாகராஜன் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி சின்னபாப்பாக்கும் […]
பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே விபத்தில் சிக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தானூர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மாணவன் பலத்த காயம் அடைந்துள்ளார். […]
கூலித் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள இண்டுர் அருகாமையில் இருக்கும் சோமனஅள்ளி பகுதியில் கமலேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் கமலேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
ஆடு மேய்க்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொந்துக்குட்டை கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திகாஸ்ரீ மற்றும் அனிஷாஸ்ரீ என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் ஆடு மேய்ப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது சகோதரிகள் 2 பேரும் ஏரி தண்ணீரில் குளிக்க இறங்கிய போது எதிர்பாராவிதமாக ரித்திகாஸ்ரீ தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அனுஷாஸ்ரீ சத்தம் போட்டு […]
அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடுவதினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதில் இரண்டு அணைகளில் இருந்தும் கூடுதலாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு […]
முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருவம்பட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 2 பேர் கம்பிகளை விரித்து முயலை வேட்டையாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் கண்ணன் மற்றும் ராம்தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வேட்டையாடிய குற்றத்திற்காக 2 […]
தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராஜாகொல்லஅள்ளி பகுதியில் காவேரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானமொழி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக ஞானமொழி தனது சொந்த ஊருக்கு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் […]
குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து வாகனம் மூலமாக பாலக்கோடு, பொன்னகரம், நல்லம்பள்ளி மற்றும் தர்மபுரி ஆகிய வட்டாரங்களில் ஒலிபெருக்கி மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் […]
குண்டும் குழியுமாக இருக்கும் தார் சாலையை சீரமைத்து தருமாறு பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள எரங்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் எரங்காடு பிரிவு சாலையில் இருந்து நடுநிலைப்பள்ளி வரை 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் தார் சாலையை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளார். […]
8 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எரிகோடிபட்டி கிராமத்தில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இதழினி என்ற 8 மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்தப் பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
குடும்பத்தகராறு காரணத்தினால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர் அண்ணாநகர் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கல்குவாரியில் தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணத்தினால் பழனியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் பழனியம்மாளின் […]
அணைகளிலிருந்து அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14, 000 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மற்றும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனையடுத்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து 16, 500 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் […]
9 மாதங்களாக கிராமத்திற்கு குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாண்டூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில காரணங்களினால் குழாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு […]
அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பாதுகாவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கியுள்ளார். பின்னர் அகில இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் கோவிந்தராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். அதன்பின் மாவட்டச் செயலாளரான முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் […]
உறவினரின் புதிய கிணற்றை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கன்னிப்பட்டி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினர் காவேரி என்பவரின் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிணற்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி தவறி உள்ளே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அக்கம்பக்கத்தினர் […]
வயதான தம்பதியை கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பில்பருத்தி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுலோசனா என்ற மனைவி உள்ளனர். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்களால் இவர்கள் இரண்டு பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்போது பில்பருத்தி பகுதியில் வசிக்கும் ஹரிஷ், மகேஷ், பிரகாஷ்ராஜ், […]
பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெட்டுபட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகா என்ற மகள் உள்ளனர். இவர் அதே ஊரில் இருக்கும் கலைக்கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கல்லூரியில் பன்னீர்செல்வம் என்பவரும் படித்து வருகிறார். பின்னர் இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது மகாவிற்கு […]
4-வதாக பிறந்த பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் புகார் அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனஅள்ளி கிராமத்தில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும், 3 பெண் குழந்தையும் இருகின்றனர். இந்நிலையில் அனிதாவிற்கு தற்போது 4-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அந்தக் பெண் குழந்தை எதிர்பாராதவிதமாக திடீரென உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் முனிவேல் காவல் […]