சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நேற்று வார சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தையில் காய்கறி, பழங்கள் உட்பட பல பொருட்கள் விற்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த வார சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 100 முதல் 130 வரை விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயத்தின் விலை உயர்வுக்கு காரணம் வடமாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரவு […]
Category: தர்மபுரி
வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் சாவுளூர் மேம்பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் பாலாஜி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றள்ளது. இதனால் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை […]
ஊமத்தை காய் சாறை கலந்து மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாட்லாம்பட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கரியமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் உத்தரன்கொட்டாய் கிராமத்தில் ராமன் என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ராமனை பிடித்து விசாரிக்கும் போது அவர் போலி மதுபானம் தயாரித்து […]
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அந்த ஆசிரியை அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் இருந்த மற்ற ஆசிரியர்களுக்கும் வகுப்பில் இருந்த மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். இதனையடுத்து அந்தப் பள்ளியில் கொரோனா தொற்று பரவாத வகையில் பாதுகாப்பு பணிகள் […]
புடவையில் தொட்டில் கட்டி விளையாடும் போது கழுத்து இறுக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாகல்பட்டியை சார்ந்தவர் பன்னீர்செல்வம்-தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். பன்னீர்செல்வம் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவியான தமிழரசி கூலிவேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்ற பிறகு மூன்று பிள்ளைகளும் புடவையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது புடவை செல்வராணி என்ற குழந்தையின் கழுத்தில் […]
தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டி பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரையில் புரண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பெரியாம்பட்டி அடுத்துள்ள ஏ. சப்பானிப்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற இந்த விழாவில், அம்மன் கரகத்தை தூலால் ஆற்றங்கரையில் வைத்து ஒரு பகுதியில் ஆண்களும், மற்றொரு பகுதியில் பெண்களும் அமர்ந்து கொண்டு […]
மகளின் தவறான உறவை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிடமனேரி பகுதியை சார்ந்தவர் செல்வம்-சிவகாமி தம்பதியினர். செல்வம் மீன் வியாபாரியாக தொழில் செய்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த நான்கு வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். சிவகாமி தனது மூத்த மகளான ஜெயப்பிரியா மற்றும் அவருடைய கணவர் திருப்பதியுடன் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். செல்வம் கடந்த 30ஆம் தேதி தனது மகளை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரிக்கு […]
பைபாஸ் சாலையில் ஆண் பிணம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை சாலைப் பகுதியின் ஓரத்தில் கடந்த 2 ஆம் தேதி ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் லாரி டிரைவர் சுரேஷ்குமார் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுரேஷ்குமாரை கொலை செய்தவர்கள் யார் ? கொலை செய்ததற்கான காரணம் […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகளாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். அரசுத் […]
பேருந்தை இயக்கிய போது எதிர்பாராத விதமாக அதில் அடிபட்டு 3 வயது பெண் குரங்கு இறந்துவிட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து அந்த மாநில அரசு பேருந்து இரவு நேரத்தில் புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த டிரைவர் பிலிகுண்டுலு பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு வனப்பகுதி சாலையில் நின்று கொண்டிருந்த குரங்குகளுக்கு பழங்களை கொடுத்துள்ளார். அதன்பின் பேருந்தை இயக்கிய போது, பேருந்தில் மூன்று வயதான பெண் குரங்கு […]
பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகமரையை சார்ந்தவர் சின்னமுத்து. இவருடைய மகன் விஜய் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியை விஜய் கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த […]
சந்தன மரம் வெட்டியவரை வனத்துறையினர் அதிரடியாக மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சீரானபுரம் காப்புக்காட்டில் அருணா என்ற வனவர் வசித்து வருகிறார். அவருடன் சேர்ந்து வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மாதேஷ் என்பவர் சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். மாதேஷ் வன காவலர்களை கண்டதும் அவர்களிடமிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்பு வனத்துறையினர் மாதேஷை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ […]
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரங்கா புரத்தைச் சார்ந்த விவசாயி குமார். இவர் கடந்த 27ஆம் தேதி விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பியதும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 81/2 […]
பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலக்கோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் பகுதியைச் சார்ந்தவர் பிரஷாந்த்-சங்கீதா தம்பதியினர். பிரசாந்த் போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். சங்கீதா அப்பகுதியில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் சங்கீதா மிகுந்த […]
ஆற்றில் பள்ளி மாணவி மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பத்தல அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்-காவிரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மணிகண்டன் மதியழகன் மற்றும் முத்துலட்சுமி என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். முத்துலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். கடந்த 28ஆம் தேதி காவிரியம்மாள் முத்துலட்சுமி மற்றும் அவரது தோழியான சஞ்சனா இருவரையும் அழைத்துக்கொண்டு நாகாவதி ஆற்றுக்குத் சென்றுள்ளார். அந்த ஆற்றில் கால்வாய் அமைப்பதற்காக ஆங்காங்கே […]
அனுமதியின்றி ஊர்வலத்தில் ஈடுபட்டதால் 200 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஊர்வலம் உரிய அனுமதியின்றி நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 200 பேர் மீது […]
நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வேன் ஒன்று கேரள மாநிலத்தை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சென்றது. பிரவீன் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். அவருடன் தக்காளி வியாபாரியான அணில்குமார் வந்துள்ளார். இருவரும் தொப்பூர் கணவாய் வளைவில் நேற்று முன்தினம் வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நின்றுள்ளனர். அந்த சமயத்தில் பின்னாலிருந்து மீன் பாரம் […]
விளையாடிவிட்டு வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான சந்தோஷ் அதே பகுதியிலிருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தது. இந்த நிலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்தோஷ் வீடு திரும்பியவுடன் ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் […]
கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பகுதியில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் வேலு-கல்பனா தம்பதியினர். கூலித் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வேலு நீண்ட நாளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து […]
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் இருக்கும் செம்மநத்தத்தை சார்ந்தவர் கௌரி செட்டி. இவருடைய மகன் நடராஜன் என்பவர் பாலக்கோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். நடராஜன் அவருடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய எண்ணி பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டும் கொடுக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மனமுடைந்த நடராஜன் நேற்று வீட்டில் தனியாக […]
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் சடலத்தை அம்பேத்கர் சிலை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன்(19). இவர் கடந்த 13ஆம் தேதி சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிவர்மனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் […]
தீக்குளித்து இறந்ததாக கூறப்படும் பெண்ணின் உடலில் திராவகம் ஊற்றி எரிக்கப்பட்டதாக கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் இரட்டை இலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக ஏற்கனவே சண்டை நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பெயரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாலக்கோடு போலீசாருக்கு பைரவி […]
திருமணம் முடிந்த ஒன்றரை வருடங்களில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகள் அப்ரோஸ். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அராஃபத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரசவத்திறகாக அப்ரோஸ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் […]
மாட்டு கொட்டகையின் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மேலும் மாட்டு கொட்டகையின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் அட்டையை அவர் மாற்ற முயன்ற போது திடீரென்று செல்வராஜ் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் […]
தமிழகத்தின் வடமேற்க்கில் உள்ள தொகுதியான பாலக்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன். இவர் அதிமுக கட்சியில் ஒரு கிளை செயலாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு கட்டங்களுக்கு உயர்ந்தவர். உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக தற்போது இருப்பவர். பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றி பெற்றார்.போற்ற கள்ளி சிவன் கோயில், சென்றாய பெருமாள் சுவாமி கோவில்,கொலு மலை கோயில் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற வழிபாட்டு தளங்களை கொண்ட ஒரு தொகுதி பலகோடுடகும். கேசர் குளி, தும்பல […]
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அரசு பாலியல் கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் காமக் கொடூரர்கள் தொடர்ந்து இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. […]
தர்மபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பவே பெற்றோர்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பொண்ணாகரம் அருகே ரேஷன் கடை பணியாளர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு […]
மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ருபாய் 27 லட்சத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வரதராஜன்-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். இவர் மருத்துவ படிப்பில் சேர பலமுறை முயற்சித்தும் அதில் சேர முடியவில்லை. இதற்கிடையில் திருப்பத்தூரில் வசித்து வரும் ஹோமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு […]
காவிரி ஆற்று சுழலில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அஸ்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் திவாகரன்(17). கோவிந்தசாமியும் அவரது மகனும் பொன்னகரம் மாங்கரை கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு திவாகரன் தனது உறவினர்களுடன் ஒகேனக்கல் அடுத்து உள்ள ஊட்டமலை காவிரி ஆற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். திவாகரன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் . இதை பார்த்த […]
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேவன் கொட்டாய் என்ற பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சிலம்பரசனுக்கு கமலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சிலம்பரசன் தும்பல அள்ளி அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணைக்குள் இருந்து மண் எடுத்து வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த […]
தும்பலஅள்ளி அணையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரிமங்கலம் அருகே உள்ள சேவன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிலம்பரசன்-கமலா. இத்தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சிலம்பரசன் அங்குள்ள பேக்கிரியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் தும்பலஅள்ளி அணையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார் . அங்கு அவர் மண்ணை எடுத்து விட்டு வருவதாக கூறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் தண்ணீரிலிருந்து வெளியே வரவில்லை. […]
மின்வேலி அமைத்த விவசாயிக்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 55). விவசாயம் செய்து வந்த இவர் வயலில் எலி தொல்லை அதிகம் இருந்ததால் வயல்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கிணற்றின் அருகே உள்ள கொட்டகையில் படுத்து இருந்த துரை அதிகாலை எழுந்து வயலை சுற்றி பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வெலியின் மின்சாரம் தாக்கியதால் […]
மாரடைப்பால் உயிரிழந்த இரண்டாம் நிலை காவலரின் உடல் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராஜசேகர். ராஜசேகர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்த பிறகு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி என்ற பகுதியில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை […]
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மேஸ்திரி ஒருவர் சிறுமியை திருமணம் செய்த காரணத்தால் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் காசி என்பவர் தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் அன்பு என்பவர் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி சென்றிருந்தபோது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுமி […]
ராங்க் நம்பர் என்று கூறி பல பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தர்மபுரியை பகுதியை அடுத்த நூலஅள்ளி பகுதியில் வசிக்கும் ரவி என்பவர் தன்னுடைய செல்போனில் தொடர்பு கொண்டு மூன்று தினங்களாக ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நம்பர் என்று கூறி போன் மூலம் ஆபாசமாக மெசஜ்கள் […]
மது போதையில் மூதாட்டியை கொன்று விட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள்-மதிமுனியம்மாள். பெருமாள் இறந்துவிட்டதால் அவருடைய மனைவி மதிமுனியம்மாள்(90) மட்டும் தனியாக வசித்து வந்தார். மூதாட்டிக்கு தேவையான உதவிகளை அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் செய்து வந்தார் . இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜா மது அருந்திவிட்டு மூதாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த மூதாட்டியிடம் ராஜா நகையை பறிக்க […]
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் இந்த ஆண்டு மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே இரட்டை பாலம் பகுதியில் நேற்று நடந்த கொடூர விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அணிவகுத்து நின்ற வாகனங்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். […]
ஒன்றன் பின் ஒன்றாக பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்று பிற்பகல் தர்மபுரி மாவட்டம் எல்லை பகுதியில் பயங்கர விபத்து நடைபெற்று உள்ளது. அதாவது ஒன்றன்பின் ஒன்றாக சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான வாகனங்கள் அப்பளம் போன்று நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை அதிக விபத்து நடக்கும் இடமாகவே […]
மொரப்பூர் அருகே அ.ம.மு.க.-அ.தி.மு.க. க்கு சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் தம்பி செட்டிபட்டியில் உள்ள தனியாருக்கு உரிமையான சுவர் ஒன்றில் அ.ம.மு.க நிர்வாகிகள் விளம்பரம் செய்தனர். அதே நேரத்தில் தம்பி செட்டிப்பட்டி பகுதி அ.தி.மு.க கிளை செயலாளர் ஆறுமுகம், 60 வயதுடைய இவர் இந்த இடத்தில் ஏற்கனவே விளம்பரம் நாங்கல் எழுவதற்கு அனுமதி பெற்று உள்ளோம் என்றும், நீங்கள் […]
தர்மபுரியில் பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வெளிநாட்டு முதியவரிடம் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் டவுன் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அதை பார்த்த தர்மபுரி டவுன் காவல் துறை நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் டேவிட் என்றும், 68 வயதுயுடைய இவர் இங்கிலாந்து சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் ஆசிரியராக பணியாற்றியவர் என்றும் , பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி வந்ததும் தெரியவந்தது. […]
இளைஞர் ஒருவர் பைக்கின் குறுக்கே மாடு வந்ததால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், செம்பிறாவிளையை சேர்ந்தவர் அபிசோன். பொறியியல் பட்டதாரியான இவர் சம்பவத்தன்று மாலை தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில் திருவட்டரிலிருந்து சென்றபோது, பூவன்காடு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று பைக்கின் குறுக்கே வந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அபிசோன் சாலையில் உள்ள புளிய மரத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் […]
தர்மபுரி மாவட்டத்தில் 39 வயது பெண்ணுக்கு 100 வயது என ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 39 வயதுடைய பெண் ஒருவர் புதிதாக ஆதார் அட்டை பதிவு செய்து வாங்கியுள்ளார். அதில் அவரின் 39 வயதுக்கு பதிலாக 100 வயது என பதிவாகியுள்ளது. அதனை திருத்தம் செய்ய முடியாத அவர், அதில் நூறு வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசின் திட்டங்களை எதுவும் பெற முடியாமல் இரண்டு ஆண்டாக தவிப்பதாக […]
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நீராடியும் படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக கர்நாடகா புதுச்சேரியில் இருந்தும் அதிகளவில் பயணிகள் வருகை தந்தனர். ஒகேனக்கல் காவிரியில் சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. குறைவான நீர் […]
விவசாய கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்து யானையை மீட்பதற்கு முதலில் மயக்க ஊசி செலுத்தி வெளியில் கொண்டுவர திட்டமிடப்பட்டது. கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு யானைக்கு தேவையான உணவு கொடுக்கப்பட்டது. யானையை தூக்குவதற்கு கிரேன் வர காலதாமதம் ஆனதால் யானைக்கு இரண்டு […]
தர்மபுரி அருகே மாரண்டஹள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாலக்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட ஏழு குண்டூர் அருகே பஞ்சப்பள்ளி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. இறை தேடி சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. யானையின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரக பாலக்கோடு வனக்காவலர்கள் அலுவலர்கள் […]
தர்மபுரி மாவட்டத்தில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏழ குண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத முட்டை கிணறு ஒன்று உள்ளது. அங்கு அதிகாலை வந்த பெண் யானை ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. யானையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது 30 அடி ஆழக் கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் […]
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சந்தையில் தக்காளி விலை சரிவை அடுத்து தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு பென்னாகரம் மறந்தா அல்லி, வெள்ளிசந்தை புலிகரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் பாலக்கோடு தக்காளி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தக்காளியின் விலை மிக குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் வருத்தமடைந்த விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்த தக்காளியை கீழ […]
விபத்தில் கால்களை இழந்த இளைஞனுக்காக ட்விட்டர் மூலம் 5 லட்சம் நிதி திரட்டிய எம்பிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 5ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் சாயல்குடியை சேர்ந்த இளைஞர் முத்தமிழ்செல்வன் என்பவர் ரயில் விபத்து ஒன்றில் தனது இரண்டு கால்களை இழந்து விட்டதாகவும், அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டதால் தமிழ்ச்செல்வனுக்கு 5 லட்சம் மதிப்பிலான […]
தர்மபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தாள்.அப்போது மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மப்பன் வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் குரல் கேட்டு குடும்பத்தினர் எழுந்து அவரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த […]
பாலக்கோடு அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். மகேந்திரமங்கலம் அடுத்துள்ள பிக்கிலி நாயகன் அல்லி என்ற பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த காற்று கொள்ளையை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மபன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். உடனடியாக சிறுமி அலறியதால், சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்தனர். வீட்டுக்குள் நுழைந்த […]