திருமணம் முடிந்து எட்டு நாளில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் சூலூர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மகள் பவித்ரா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். படிப்பு முடிந்ததும் இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் குடும்பத்தினரால் செய்யப்பட்டது. இதனையடுத்து வேல்முருகன் என்பவருக்கு கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பவித்ராவை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் வீட்டிற்கு சென்ற பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து […]
Category: தர்மபுரி
அரூர் அருகே பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பிள்ளைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவருடைய மகள் செல்வி (30) . இவரது கணவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நிஷிதா(5) என்ற மகளும், சென்னகேசவன் என்ற 5 மாத ஆண் குழந்தையும் இருந்தது . செல்வி தனது இரு குழந்தைகளுடன் பெற்றோர் […]
பள்ளி மாணவியை கோவைக்கு கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர் . தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியில் மைனர் பெண்ணான 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து கொண்டிருந்தார் . வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வெகுநேரம் ஆகியும் வரவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . பின்னர் அவரை கும்பார அள்ளியை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவர் கடத்தியது தெரியவந்ததை அடுத்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் . […]
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர் வரத்து 20,000 கன அடியாக குறைந்துள்ள நிலையில் அருவியில் நீராடவும் பரிசலில் சவாரி செய்யவும் சுற்றுலாப்பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சுற்றுலா மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தளரவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏழு மாதத்துக்குப் பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும் மசாஜ் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சின்னாறு முதல் கோத்திகள் வரை பரிசல்களை இயக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி அளித்துள்ளார்.
புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பத்து பைசா கொடுத்து பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பொன்னகரம் அடுத்து உள்ள ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரு மற்றும் சென்னை பகுதிகளில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது புதிதாக உணவகம் தொடங்கிய இவர் வாடிக்கையாளர்களை கவர முதல் நாளில் அதிரடி ஆஃபர் ஒன்று அறிவித்தார். சற்று வித்தியாசமாக பாலாஜி பத்து பைசா கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற […]
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]
இளம்பெண் ஒருவர் தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் சொத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு கடைமடை பகுதியை சேர்ந்தவர்கள் குமார்-தொட்டியம் தம்பதியினர். இந்த தம்பதியினரின் மகள் லட்சுமி தனியார் கல்லூரி ஒன்றில் எம் காம் படித்து வந்தார். இந்நிலையில் லட்சுமியின் தாய் சமீபத்தில் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆனால் லட்சுமி வேலைக்கு சென்ற பிறகுதான் திருமணம் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் கடைமடை […]
தர்மபுரி அருகே வீட்டுத் தகராறால் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியை அடுத்த திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவரது மனைவி செந்தாமரை. இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், லாவண்யா, மோனிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுந்தரேசன், செந்தாமரைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினமும் அவர்கள் […]
குடும்ப தகராறில் 5 வயது மகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அடுத்த முதுகம்பட்டி தின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவர் மனைவி செந்தாமரை. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு லாவண்யா(7), மோனிகா (5) என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த […]
ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலை நிறுத்தியதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் பாலைக் கீழே ஊற்றியும் ஆவின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டும் போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள சின்ன கவுண்டம்பட்டி பொம்பட்டியில் 150 பால் விவசாயிகள் உள்ளனர். தங்களது பகுதியில் உற்பத்தி செய்யும் பாலை கூட்டுறவு நிர்வாகம் மூலம் விற்பனை செய்து வந்தனர். கடந்த இரு தினங்களாக எந்த அறிவிப்பும் இன்றி திடீரென பால் கொள்முதலை ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக […]
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45 ஆயிரத்து 668 கன அடியிலிருந்து 72 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 72 ஆயிரத்து 92 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரியில் […]
தர்மபுரி அருகே அழிவின் விளிம்பில் நிற்கும் பச்சைக் கிளிகளை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருவது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பண்ணந்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டுப்போன பனைமர பொந்துகளில் ஏராளமான பச்சைக்கிளிகள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பச்சை கிளிகள் எங்கும் செல்லாமல் இருக்க இப்பகுதி மக்கள் பனை மரங்களை வெட்டாமல் அப்படியே விட்டுள்ளனர். இங்கு வாழும் கிளிகள் வெடி சத்தம் கேட்டால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விடும் […]
கிராமங்களுக்கு ஒதுக்கப்படாத நிதியை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பல ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மூக்கா ரெட்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 19 பஞ்சாயத்து ஊராட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்படாத நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, பாதக்கூடு, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சந்தைகளுக்கு விற்பனைக்கு வரக்கூடிய தக்காளி சேலம், ஈரோடு, கோவை, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளுக்கு விற்பனைக்காக வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்திற்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதத் தொடக்கத்தில் சந்தைகளில் 28 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி கூடையின் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து கிராம பஞ்சாயத்துகள் பொறுப்பேற்றது முதல், கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்க மருப்பதாக குற்றம்சாட்டி ஊராட்சி பஞ்சாயத்து பெண் தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட 32 கிராம பஞ்சாயத்துகளுக்கு தற்போது வரை மாவட்ட ஆட்சியர் நிதி ஏதும் ஒதுக்காததால் 32 ஊராட்சித் தலைவர்கள் நேற்றுமுன்தினம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சாயத்து தலைவர் திருமதி […]
தர்மபுரி மாவட்டத்தில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அருகே எட்டி யாம்பட்டி என்ற பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருடைய 15 வயது மகள் ஜெயந்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தற்போது பதினொன்றாம் வகுப்பு படிக்க உள்ளார். இந்நிலையில் ஜெயந்தியின் தாய் பழனியம்மாள் அவரை கடுமையாக திட்டியுள்ளார். அதனால் மனமுடைந்த ஜெயந்தி தனது […]
காதல் கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவியும் தூக்கிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான விஜய் என்பவர் ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர்களது திருமணத்துக்கு ராஜேஸ்வரியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து 6 மாதமாக பிரித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி விஜய்யை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அப்பெண்ணின் […]
பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வாணியாறு அணையில் புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள வாணியாறு அணையில் சடலம் ஒன்று மிதப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அணையிலுள்ள சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டி மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் சக்தி (வயது 30) என்பதும், அதுமட்டுமில்லாமல் சக்திக்கு பண்டாரசெட்டிப்பட்டி பகுதியைச் […]
தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், நிலச்சரிவு ஆறுகளில் காட்டாறு வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகள் மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பவானி சாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை […]
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் மீனவரை தாக்கி கொன்ற முதலை ஊட்டமலை காவிரி ஆற்றில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு அருகே முசல்மடுவு பகுதியில், சென்ற 3ம் தேதி காவிரியில் காட்ராஜ் என்பவர், மீன்பிடிக்க சென்றுள்ளார். அதன் பின் அவர் திரும்பி வராத நிலையில் கரையோரம் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலில் வேறு எந்த ஒரு காயங்களும் இல்லாத நிலையில், குடல் முழுவதும் வெளியே சரிந்து இருந்து உள்ளது. […]
தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையடைந்த தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி செந்தில் நகர் அடுத்துள்ள நீச்சல் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ஜனரஞ்சனி பிரியா என்ற மகள் இருக்கிறார். ஜனரஞ்சனி கோவையில் ஓமியோபதி மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வருகின்றார்.. அதேபோல தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள பொச்சாரப்படி அன்பழகன் என்பவரின் மகன் விஜய். இவரும் […]
தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரின் மாமனாரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியின் ஒட்டர் திண்ணை என்ற கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.அவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்டு மறுநாள் ஊருக்கு வந்த போது, ராஜேஸ்வரியின் பெற்றோர் […]
தர்மபுரி அருகே மருமகனை மாமனாரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை அடுத்த திண்ணைப் பகுதியில் வசித்து வந்தவர் விஜய். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிக்கன பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பாக இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட […]
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பட்டுக்கூடு அங்காடி ஆக விளங்கிவரும் தர்மபுரி மாவட்டத்தில் பட்டு விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் வெண் பட்டுக் கூடுகளை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்கி வருகிறது. அங்கிருந்து பெருமளவில் வெண் பட்டுக்கூடுகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பட்டுக்கூடு இறக்குமதி தடைபட்டதால், இந்தியாவில் பட்டுக்கூடு விலை அதிகரித்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் […]
தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூரியல் பால் கொள்முதல் நிறுத்தப்படுவதை கண்டித்து விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். ஏற்கனவே பாலை குறைத்து வாங்குவதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் விவசாயிகள், முழுமையாக பால் கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே தர்மபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் […]
தர்மபுரியில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஓட்டத்தினை கிராமத்தை சேர்ந்த விஜி, அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆரம்பம் முதலே இந்த காதலுக்கு பெண் வீட்டார் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜேஸ்வரியை விஜி திருமணம் செய்துள்ளார். பெங்களூரில் […]
நிலப் பிரச்சனை காரணமாக விவசாயி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(47). இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர் சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார். அதில் ஐந்து ஏக்கர் நிலத்தை கோவிந்தன் என்பவருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியிருக்கிறார். இந்நிலையில் அந்த ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை கோவிந்தன் தனது பெயரில் மாற்றம் செய்து […]
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. அதில் சென்ற மாதம் 30 குழந்தைகளின் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற கலெக்டர் மலர்விழி பேசியபோது “பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம், என்ற உன்னத நோக்கத்தில் தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் பல்வேறு […]
நடவடிக்கை எடுக்காத காவலர்களால் மனமுடைந்த முதியவர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பழைய ரயில்வே லைன் பகுதியில் கோபால் என்ற முதியவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் சென்ற 2000 ஆம் ஆண்டு சம்பத் என்பவரின் வீட்டை விலைக்கு வாங்கி வசித்து வருகிறார். சில நாட்களுக்குமுன் மதிகோண்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் என்ற நபர் […]
பென்னாகரம் அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே நகரை சேர்ந்தவர் முனியப்பன்.. 75 வயது கூலி தொழிலாளியான இவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனின் மனைவி இறந்துவிட்டதால் தற்பொழுது அவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜூலை […]
உடும்பு கறி விற்பனை செய்ய முயன்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள திருமல்வாடி, ரங்கம்பட்டி, காப்புக்காடு, பகுதியில் உடும்புகளை மர்மநபர்கள் வேட்டையாடுவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் காப்புக்காடு பகுதியில் முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் 2 1/2 கிலோ எடையுள்ள உடும்பை பிடித்து அதை துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்ய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.. அதைத்தொடர்ந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட லாரி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் . தருமபுரி மாவட்டம் சிவாடிப் பகுதியில் இருந்து ரயில்வே இரும்பு பாலங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி நோக்கி சென்றது.. இந்த லாரி தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவு பகுதியில் திரும்பும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த கோர விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த […]
நாட்டில் சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடு பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் பழக வேண்டும்.. ஆனால் ஒரு சிலர் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிரித்து பார்க்கின்றனர். சில இடங்களில் சாதி ரீதியான தாக்குதல், மத ரீதியான தாக்குதல் அரங்கேறி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற தாக்குதல் அதிகம் நடக்கும்.. அதேபோல தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் சாதி, மத ரீதியான தாக்குதல் நடந்தேறி வருகிறது. அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் […]
தர்மபுரி அருகே மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அதகபாடி பகுதியில் வசித்து வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தர்மபுரியில் இருக்கக்கூடிய அரிசி ஆலை ஒன்றில் காவலாளியாக பணி செய்து வந்துள்ளார். இவரது 60 வயது மனைவிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளால் கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டிலேயே தனிமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அவரை தனிமைப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவங்கள் ஏதும் காவலாளியாக […]
மகேந்திரமங்கலம் அருகே 12 வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், அந்தபகுதியிலுள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.. அதேபோல இவரது சொந்தக்காரரரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த 24 வயது மூர்த்தி என்பவர் மாணவியின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த ஜூலை 1ஆம் தேதி வந்துள்ளார். அப்போது மாணவியை கடைக்கு அழைத்துச் செல்வதாக […]
12ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள தொப்பலாம்பட்டி பகுதியில் வசித்து வரும் பொறியாளர், பெங்களூரு சென்று விட்டு திரும்பியவர் மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து தருமபுரி நகர பகுதி காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் என 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பென்னாகரம் பேரூராட்சி 2ஆவது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டும், அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. தினமும் மாலையில் புதிய பாதிப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறை அதிகாரிகளால் வெளியிடப்படும். அதன்படி, இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னையில் அதிகபட்ச பாதிப்பாக 2716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தாண்டி […]
பென்னாகரத்தில் 5 வயது குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தையிடம் கல்லூரி மாணவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குழந்தையின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் தனியார் கல்லூரி மாணவன் மாதேஸ்வரன் என்பவரிடம் பென்னாகரம் […]
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,407, செங்கல்பட்டில் 127, திருவள்ளூரில் 72, காஞ்சிபுரத்தில் 19, திருவண்ணாமலையில் 20, ராணிப்பேட்டையில் 26, தூத்துக்குடியில் 6, வேலூரில் 12, மதுரையில் 20, அரியலூர் மற்றும் கோவையில் தலா 3, கடலூரில் 19, தர்மபுரியில் 1, திண்டுக்கல்லில் 11, கள்ளக்குறிச்சியில் 4, கன்னியாகுமரியில் 3, நாகையில் 16, நாமக்கல்லில் 1, பெரம்பலூரில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ராமநாதபுரத்தில் 10, […]
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஈரோட்டிற்கு சிமெண்டு மூட்டைகளை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 40 வயதுடைய லாரி டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.. நேற்று காலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தசமயம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பின் […]
தர்மபுரியில் பெற்றோர்கள் திருமணத்தை தள்ளி போட்டதால் காதல் ஜோடி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். அரூர் பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வசிக்கும் அதே பகுதியில் சோபியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள். இந்நிலையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனதை பரிமாறி காதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் […]
தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் […]
மூன்று ஏரிகளில் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் இருக்கும் தூள்செட்டி ஏரி, பிக்கனஅள்ளி ஏரி மற்றும் ராஜபாளையம் புதிய ஏரி என 3 ஏரிகளில் பிரதம மந்திரி கிருஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் அடிப்படையில் தூர்வாரும் பணி, பழுது நீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகள் போன்றவை 1.59 கோடி செலவில் மேற்கொள்ள இருக்கின்றது. இப்பணிக்கான பூமிபூஜை விழா மாவட்ட ஆட்சியர் மலர்விழி […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தங்குவதற்கான விடுதிகள் வரும் 11ம் தேதி முதல் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்காக வரும் 11ஆம் தேதி விடுதிகள் திறக்கப்பட இருப்பதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ஆம் தேதி முதல் 25-ம் தேதி நடைபெற உள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் […]
டிப்பர் லாரியில் இரண்டு சக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்திருக்கும் பி.பள்ளியாடியை சேர்ந்தவர் இளவரசன் என்பவர் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு இளவரசன் தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கடத்தூர் நோக்கி சென்ற பொழுது, பொம்மிடி மேம்பாலத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத சமயத்தில் இலவரசனின் இரண்டு சக்கர வாகனம் மோதியது. இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த இளவரசன் […]
தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என […]
தர்மபுரியில் 15 நாட்களுக்கு பின்பு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிய பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.கொரோனா இல்லாத மாவட்டமாக தர்மபுரி இருந்த நிலையில் தற்போது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் […]
தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று தருமபுரி திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உருகும் பாதிப்பு ஏற்படாமல் இருந்ததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இங்கு 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் 15 […]