தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயமடைந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக அந்த பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நாய்கள் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி கடிக்கிறது. நேற்று முன்தினம் தெரு நாய்கள் கிராமத்தை சேர்ந்த ஜோதி, சின்னக்கண்ணு உள்பட 8 பேரை கடித்து குதறியது. இதனால் காயமடைந்த […]
Category: தர்மபுரி
தேனீக்கள் கொட்டியதால் 30 ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வழக்கம்போல பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அருகில் இருந்த மர சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். அப்போது மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து தொழிலாளர்களை விரட்டி கொட்டின. இதனால் […]
தர்மபுரி மாவட்டத்தில் வீரமணி என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். வீரமணிக்கும் அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் வீரமணியை உடன் பிறந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த வீரமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் வீரமணி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]
தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் பகுதி வழியாக கேத்துரெட்டிப்பட்டி வரை அரசு டவுண் பேருந்து இயங்கி வந்தது. இந்த பஸ்ஸை பில்ருதி வரை நீட்டுப் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடத்தூர் வழித்தடத்தில் டவுண் பேருந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா பில்பருத்தி பகுதியில் வைத்து நடைபெற்றது. இதில் தர்மபுரி அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் எம்.பி செந்தில் குமார் புதிய வழித்தடத்தில் […]
விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் என 6 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர […]
விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கோணங்கிஅள்ளி பகுதியில் முனுசாமி என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மின் மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இவரின் சத்தம் கேட்ட அக்கப் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை […]
சரக்கு வேன் மோதிய விபத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய நேகா ஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று காலை நேகா ஸ்ரீ வீட்டுக்கு அருகே விளையாடிக் […]
நாய்கள் குரைத்ததால் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வே.முத்தம்பட்டி கனிகாரன் கொட்டாய் பகுதியில் மாதம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் தனது சகோதரி ராஜம்மாள் வீட்டிற்கு மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது தெரு நாய்கள் அச்சுறுத்தும் வகையில் மாதம்மாளை பார்த்து குரைத்ததால் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தர்மபுரியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் டாக்டரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை நம்பிய டாக்டர் குறுந்தகவலில் இருந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஓ.டி.பி எண் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சத்து 70 ஆயிரத்து 829 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் […]
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் 2002-23 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 13-18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் என்ற ஏதாவது ஒரு வகையில் சிறப்பான தனித்துவமான […]
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரங்காட்டுகொட்டாய் பகுதியில் எம்.எஸ்.சி பட்டதாரியான சுவேதா(21) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக சுவேதாவும், அதே பகுதியில் வசிக்கும் பரத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுவேதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து புதுமணத் […]
தனியார் பள்ளி மாற்று வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியில் அலமேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி அருகே நடந்து சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளியின் மாற்று வேன் கட்டுப்பாட்டை இழந்து அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூமரத்தூர் கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் குமார் குணநந்தினி(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குணநந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை உடல் […]
மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்துல் ரகுமான் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் சீனியர் பிரிவில் அதே பள்ளியில் படிக்கும் மாணவன் பாசில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 24 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் […]
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வந்தது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1981-82 ஆம் ஆண்டு 55 மாணவர்கள் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர். பின்னர் மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளி மாவட்டங்களுக்கும், பிற பள்ளிகளுக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் அரசு பணிகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மாணவர்களில் ஒருவரான வீரமணி என்பவர் தொலைபேசி மூலம் அனைவரையும் தொடர்பு கொண்டு […]
தமிழகத்தில் இருக்கும் சில சைவ மடங்களில் திருவோடு மரம் அரிதாக காணப்படுகிறது. பொதுவாக இந்த மரங்கள் குளிர்ச்சி நிறைந்த வட மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, சாமியார்கள் திருவோடுகளை தேர்வு செய்து பயன்படுத்த முக்கிய காரணம் இருக்கிறது. மரத்தின் ஓட்டில் உணவை வைப்பதன் மூலம் விரைவில் கெடாமல் இருப்பதோடு, அதனை உண்ணும் போது உடலுக்கு சக்தியையும் கொடுக்கும் தன்மை உடையது. எனவே தான் திரு என்ற அடைமொழியுடன் இந்த மரத்தை அழைக்கின்றனர். இந்த […]
கலெக்டர் அலுவலகத்தில் அண்ணன், தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ண கவுண்டனூர் கிராமத்தில் வசிக்கும் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் மனு கொடுக்க சென்றுள்ளார். அப்போது கந்தசாமியின் மகன்களான குமார், நடராஜன் ஆகிய இருவரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் […]
அனைவருடைய வாழ்க்கையிலும் பொதுவாக பள்ளிப்பருவம் என்பது மறக்க முடியாத ஒன்றாக தான் இருக்கும். பள்ளியில் படிக்கும் அந்த அழகிய நாட்கள் மீண்டும் வாழ்க்கையில் திரும்ப கிடைக்குமா என்று பலரும் ஏங்குவர். சமீப காலமாகவே பல அரசு பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி சந்திக்கும் அழகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏலகிரி அரசு பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழைய மாணவர்கள் ஒன்று கூடி பள்ளி […]
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் மணல்திட்டு, மெயின் […]
சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாக்கனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 120 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் விவரத்தை தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மாணவர்களுக்கு புதிதாக முட்டைகள் வழங்கப்பட்டது. இந்த […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது […]
மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்ததன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று முதல் புதிய அபராதம் விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதிகாரப்பட்டியில் கூலித் தொழிலாளியான ராஜா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜா நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து ராஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு பள்ளி ஆசிரியரின் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சென்னப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னப்பன் டியூஷனுக்கு சென்ற தனது மகனை அழைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மகனுடன் அய்யம்பட்டி ஆத்துப்பாலம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலைகவுண்டன்கொட்டாய் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பூவரசன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறுவர்கள் மாது என்பவரது விவசாய கிணற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் பழகிய பூவரசன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் ஊருக்கு சென்று […]
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள களியூர் பகுதியில் விவசாயியான சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சின்னதுரை தனது குடும்பத்தினருடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சின்னதுரை உடனடியாக தனது குடும்பத்தினருடன் வெளியே வந்து விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டில் எரிந்த தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இந்த […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியானா கார்த்தி(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கட்டிட தொழிலாளியான விஷால் என்பவரும் நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் கார்த்தி, விஷால் ஆகிய இரண்டு பேரும் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனை அடுத்து விழா முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் […]
டேங்க் ஆபரேட்டர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகளை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிடலகாரம்பட்டி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சின்னப்பனஅள்ளி ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவசங்கரின் வீட்டிற்கு முன்பு மாசிலாமணி- சஞ்சீவி தம்பதியினர் விறகுகளை கொட்டி வைத்தனர். அதனை அகற்றுமாறு கூறியபோது சிவசங்கருக்கும், சஞ்சீவிக்கும் இடையே வாக்குவாதம் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லகாரம்பத்தி கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் சங்கர் வீட்டிற்கு முன்பு விறகு கொட்டி வைத்துள்ளனர். அதனை அகற்ற […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நேற்று தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் இனிப்பு பலகாரங்கள் முறையாக தயாரிக்கப்படுகின்றதா என ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். அதன்படி இனிப்பு மற்றும் கார வகைகள் தரமான எண்ணெயில் செய்யப்படுகின்றதா? வண்ணம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றதா? என சோதனை மேற்கொண்டார்கள். […]
மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை சிபி காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வந்த குட்டியப்பன் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு மயானத்தில் புதை புதைக்கப்பட்டது. இந்த நிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட குட்டியப்பனின் உடலுக்கு ஈம சடங்கு செய்வதற்காக அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈமச்சடங்கு செய்யும் போது ஊதுபத்தியை ஏற்றியுள்ளனர். இந்த ஊதுபதியிலிருந்து வெளிவந்த அதிகப்படியான புகை அருகில் உள்ள மரத்தில் கூடுகட்டி வசித்து வந்த தேனீக்கள் மீது பட்டுள்ளது. இதனால் […]
கனமழை எதிரொலியாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்கின்றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்துள்ளது. இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, வனப்பகுதிகளில் சென்ற சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றது. […]
தர்மபுரி மாவட்டத்தில் தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு நேற்று காலை 108 வகை நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து 1008 ஆகம பூஜைகளும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராஜ அலங்கார சேவையும் மகாதீபாரதனையும் சுவாமிக்கு காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து சுவாமியை வழிபட்டுள்ளனர். […]
தர்மபுரி மாவட்டத்தில் ஜருகு கிராமத்தில் 45 ஏக்கரில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் பல வருடங்களாக நீர் நிரம்பியதே இல்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமலையின் காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஏரி நிரம்பியதால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி தலைமையில் ஏரிக்கு சென்று மலர் தூவி தண்ணீரை வரவேற்று மரியாதை செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் […]
தர்மபுரி மாவட்டத்தில் ஓடும் சின்னாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் மூலமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வசதியும் இந்த ஆற்றின் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. இதனை அடுத்து இந்த ஆறு பஞ்சப்பள்ளி, அத்தி முட்லு, அமானி மல்லாபுரம், கோடுபட்டி, வழியாக சென்று ஓகேனக்கலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பஞ்சப்பள்ளி முதல் ஒகேனக்கல் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்தவித தடுப்பணைகளும் […]
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கார் சேதமடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலம்பை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் ஆசிரமத்தின் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த கார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்து செல்லப்பட்டு பலத்த சேதமடைந்தது. மழையினால் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் மழை பெய்ததால் பள்ளியின் மேற்கூரைகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகி பள்ளிக்கூடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமப்படும் மாணவ மாணவிகள் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் […]
பல லட்ச ரூபாய் மோசடி செய்த வேளாண் விரிவாக்க மைய இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தா.குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிர்மலா பட்டதாரியான தனது மகனுக்கு வேலை தேடிய போது தர்மபுரி வேளாண் விரிவாக்கம் மையத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் நிர்மலாவுக்கு அறிமுகமானார். அப்போது ஆறுமுகத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி நிர்மலா தனது மகனுக்கு ஹைகோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணி வாங்கி கொடுப்பதற்காக […]
10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு வரதன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்த விஷ்ணுவரதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணுவரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி சின்னாறு அணை தொடர் மலை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் வினாடிக்கு 4200 கன அடி உபரி நீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாரண்டஹள்ளி வழியாக செல்லும் சனத்குமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நதிகளை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் துணி துவைக்கவோ, ஆறுகளில் குளிக்கவோ, கால்நடைகளை கரையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் புது டெல்லியில் இருக்கும் திகார் சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு விக்னேஷுக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது நிவேதாவின் பெற்றோர் 2 லட்ச ரூபாய் பணம், 33 பவுன் தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷின் குடும்பத்தினர் கூடுதலாக 40 பவுன் நகை மற்றும் ஒரு காரை வரதட்சணையாக கேட்டு […]
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடியாக 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 15 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அந்த பணம் இங்கு எப்படி வந்தது? யாரிடமாவது இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் லஞ்ச […]
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு அறுவை சிகிச்சை துறை தலைவர் பானுரேகா தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறியதாவது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் மோமோகிராம் பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வாறு மார்பக புற்றுநோய் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமனூர் ஜீவா நகரில் அருணகிரி- சுகுணா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் 1 1/2 வயதுடைய தேன்மொழி. இந்நிலையில் சுகுணா அடுப்பில் இருந்து சாம்பார் பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் தூக்க கலக்கத்தில் கண்விழித்து வந்த தேன்மொழி நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பாருக்குள் தவறி விழுந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சுகுணா தனது […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல்லிநகர் பகுதியில் ராஜா(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக சொந்த வேலை காரணமாக ராஜா வெளியூருக்கு சென்ற பிறகு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ராஜா அந்த வீட்டிற்கு […]
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ராகேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி தனது குழந்தையை தேடி பார்த்த போது […]