தர்மபுரியில் இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரியானது முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக கிராம மக்கள் ஆடை பலியிட்டு வழிபாடு செய்தனர். தமிழகம் முழுவதும் வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக இலக்கியம்பட்டியில் உள்ள ஏரியானது முழுக்கொள்ளவை எட்டியதோடு உபரிநீரும் வெளியேற தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கொண்டு ஏரி நிரம்பி […]
Category: தர்மபுரி
அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை முன் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழைக் காரணமாக இப்பள்ளியில் உள்ள வகுப்பறை முன் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வகுப்பறைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில்தான் நடந்து செல்லவேண்டியிருக்கிறது.மேலும் மழைநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் […]
தர்மபுரியில் டெங்கு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்த 4 நிதி நிறுவனங்களுக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வண்ணம் தூய்மைப் பணியை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சுத்தம் செய்யும் பணியிலும் சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது […]
தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் 7 கிராமங்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மரங்கள் தென்னைகள் சேதமடைந்துள்ளது. தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பஞ்சாயத்து ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம்பட்டி, தேமங்கலம், குட்டூர், புதூர் சவுளுக்கொட்டாய், கோடியூர் ஆவாரங்காட்டூர் ஆகிய 7 கிராமங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்டுள்ளன. சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் மின் கம்பங்கள் சாய்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் […]
ஒகேனக்கலில் தொழிலாளர் தினம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் தர்மபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம், மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்இந்நிலையில் இன்று கோடை விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். வருகை தந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல், படகு சவாரி செய்தும், மெயினருவியில் குளித்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தன.மேலும் […]
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடி என 10 வாக்குச்சாவடிக்கு மறுவாக்குபதிவு நடத்த தேர்தலை ஆணையத்தை தமிழக தேர்தல் அதிகாரி வழியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18_ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் சில இடங்களில் முறைகேடாக கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்ததையடுத்து தமிழக தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தமிழக தேர்தல் […]
தருமபுரியில் கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குளியனூரிலிருந்து- ஏரியூருக்கு கட்டிட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இதில் சிமெண்ட் மற்றும் கற்களை கலக்கும் கலவை எந்திரமும் ஏற்றப்பட்டிருந்தது. குமாரசாமிப்பேட்டையின் மேம்பாலம் அருகே மின்னல் வேகத்தில் சரக்கு லாரி சென்ற போது கலவை எந்திரத்தின் அதிக எடை காரணமாக ஓட்டுனரின் […]
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி. 27 வயதான இவர் கடந்த 2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் . மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில் அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் […]
பிரச்சாரத்தின் போது கண்ணீர் மல்க அழுத அன்புமணியை பொதுமக்கள் சமாதானம் படுத்திய சம்பவம் மனதை நெகிழவைத்துள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தர்மபுரி மக்களவை தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள […]
கள்ள காதலனுடன் வாழ ஆசைப்பட்டு சொந்த கணவனே மனைவியை கொலை செய்தது தருமபுரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணி என்பவரது மகன் வெங்கடேசன் கட்டிட தொழிலாளியான இவர் முனியம்மாள் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார் . மாமியார் வீட்டில் விருந்து தனது வீட்டிற்கு புறப்பட்ட வெங்கடேசன், தனது மனைவியுடன் மோட்டார் […]
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் 11’ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் பிரதீப்குமார் பதினேழு வயதான இவர் ஒத்தஅள்ளி அரசு பள்ளியில் 11’ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் பிரதீப்குமார் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் டவுணில் இருந்து சர்வீஸ்ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்ற போது எதிரெ வந்த கனரக வாகனம் ஓட்டுனரின் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளி […]