மாவட்ட கலெக்டரிடம் பேருந்து வசதி கேட்டு கோவிந்தசாமி எம்.எல்.ஏ மனு கொடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ கோவிந்தசாமி கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை கிராமத்தில் 600 குடும்பங்களும், பால் சிலம்பு கிராமத்தில் 170 குடும்பங்களும் என மொத்தமாக 770 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 16 கோடி ரூபாய் செலவில் சாலை […]
Category: தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனை, தேசிய அடையாள அட்டை பெறுதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், அரசு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் கண் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.
வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலை ஊராட்சி மன்றத்தில் தலைவராக கஸ்தூரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வார்டு உறுப்பினர்கள் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, கள ஆய்வாளர் சசிதரன், ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் சம்பவ […]
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்டும் வகையில் வருகிற 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது எனவும் அரசு நிறுவனங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
2 லாரிகள் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி இரட்டை பாலம் சாலையில் பாலு என்பவர் மத்திய பிரதேசத்தில் இருந்து லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்த லாரியில் கிளீனராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் பாலுவின் லாரி திடீரென அவ்வழியாக வந்த மற்றொரு லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் பாலு, சீனிவாசன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். […]
உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் 40 நாட்களுக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் சத்யபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி பரமேஸ்வரி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் […]
வயிற்று வலி காரணமாக பிளஸ் ஒன் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாநூல அள்ளி இன்னும் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பூரண பிரதாஷ்(17). இவன் ஏலகிரி அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகின்றார். இந்தநிலையில் மாணவனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. […]
டயர் வெடித்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் காயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ராஜசேகர்(34) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன் சக்கரம் வெடித்து தாறுமாறாக ஓடியது. அப்போது பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் மீது விழுந்தது. இதில் துரைசாமி(40), நவீன்குமார்(38), கிருஷ்ணமூர்த்தி(23), முனுசாமி(52), சின்னபையன்(59), […]
சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பெண் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து நிலையம் அருகே சிலர் மது குடித்துவிட்டு போதையில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பென்னாகரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் குடிபோதையில் இருந்த முதியவரை அடித்து உதைத்துள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததால் அந்த முதியவர் […]
அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னபாப்பா(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனைக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பேருந்து மூதாட்டி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி […]
தமிழக முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையம் குறித்து ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக திருத்தப்பட்ட தேர்வு மையம் விபரத்தை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 242 தேர்வு மையங்களில் சுமார் 66,800 தேர்வர்கள் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு […]
செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிப்பேட்டை பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகள் நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ளது. இந்த இடத்தில் பல வருடங்களாக சோலையப்பன் என்பவர் 9 கடைகள் கட்டி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் சோலையப்பன் கடைகளுக்கு சில ஆண்டுகளாக முறையான வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதனைதொடர்ந்து […]
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக தென் மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்வது நின்றதாலும், அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நீர்வரத்து […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகில் பூதனஅள்ளி பெரியகரடு வன ப்பகுதியில் 2 பேர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரின் உடல்களிலும் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களின் பாக்கெட்டுகளில் 2 செல்போன்கள், ஆதார் கார்டுகள், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், மலையாள மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றவை இருந்தது. மேலும் […]
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. அத்துடன் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரிமாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தினை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் […]
அரூர் அருகே மகனை துப்பாக்கியால் சுட்ட போது குண்டு பாய்ந்து தெருவில் விளையாடி 5 சிறுவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சித்தேரி நலமங்காடு பகுதியைச் சேர்ந்த காரிய ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி. காரியராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த காரியராமன் மனைவியிடம் தகராறு செய்திருக்கின்றார். இதை அவரது மகன் ஏழுமலை தடுத்துள்ளார். அப்போது தந்தைக்கும் […]
டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதியமான் கோட்டையில் மது கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த டாஸ்மாக் பார் சாலையோரம் செயல்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இடையூறாக இருக்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக்கை மூடக் கோரி டாஸ்மாக் பார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு […]
சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 44வது ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சேஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையார் அரசு […]
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் என்ற அரசாணை 149 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தியும், தற்காலிக ஆசிரியர் நியமித்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரியும் 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் சென்னை டி.ஐ.பி. வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் […]
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அரூர் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிம்பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி நேற்று மதியம் வந்தனர். அப்போது திடீரென இரண்டு பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு மற்றும் போலீசார் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்எல்ஏக்கள் கூறியது, அரூர் […]
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற 10 தினங்களுக்கும் மேலாக தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போது மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. […]
பொது மக்களுக்கு தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் படிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதோடு கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இங்கிருந்து தண்ணீர் காவிரி பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வருகிறது. இந்த அருவிக்கு […]
காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 எனும் இலக்கினை எட்ட அரசு மேற்கொண்டு வருகிற பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரால் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட 23 நடமாடும் வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டன. இதில் ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தர்மபுரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் வாயிலாக காசநோய் கண்டறியும் சேவையை தர்மபுரியில் கலெக்டர் சாந்தி துவங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து கலெக்டர் கூறியிருப்பதாவது “தர்மபுரியில் காசநோய் ஏற்படும் […]
ஃபேன்சி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஃபேன்ஸி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊர் ஊராக ஃபேன்ஸி பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் முனியப்பனும் விடிவெள்ளிநகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்ற தொழிலாளியும் உறவினர்கள். […]
லாரிகள்-கார், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு ஆயில் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திராவை சேர்ந்த டிரைவர் நரசிம்மையா ஓட்டி வந்துள்ளார். இவருடன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணன் மாற்று டிரைவராக உடன் வந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னால் சென்ற கார் […]
கல்லூரி மாணவியுடன் விஷம் குடித்து காதலனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் குளிக்காடு பகுதியில் வசிக்கும் தமிழரசு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை […]
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக தர்மபுரி மாவட்ட வேலை தேடுபவர்கள் பயனடையும் விதமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு […]
தர்மபுரி மாவட்ட பாலக்காடு அருகில் உள்ள ஜிட்டான்ட்அள்ளி கொல்லப்பட்டியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சினேகா(19). இவர் பாலக்காடு பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குளிக்காடு பகுதியில் முருகன் மகன் தமிழரசு தர்மபுரியில் உள்ள ஐடிஐ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் பஸ்ஸில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய […]
கர்நாடக மற்றும் கேரளமாநில பகுதிகளில் சென்ற சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 26 ஆயிரத்து 143 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 51 ஆயிரத்து 143 […]
வீட்டிற்குள் புகுந்த பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உங்கரானஅள்ளி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜகோபாலின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்தனர். அதன் பின்னர் […]
மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் சிகரலஅள்ளி மலைக்கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடிய விபத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் இருந்து லாரி ஒன்று இரும்பு காயில் ரோல் பாரம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டத்திலுள்ள கணை தொப்பூர் கணவாய் வழியாக பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் […]
தர்மபுரி அரசினர் தொழிற்கல்வி நிலையத்தில் மின் கம்பியாள் உதவியாளர் பணிக்கு தகுதி காண் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கடகத்தூர் மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஜூலை 26 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மின் வயரிங் தொழிலில் ஐந்து வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீரும் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி […]
தர்மபுரி மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது. […]
தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பேரூராட்சியில் ஏர்ரகொல்லனுர் முதல் எட்டியாம்பட்டி வரை நபார்டு நிதிஉதவியுடன் ரூ.69 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுண்டேசன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் வீரமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நிரோஷா முரளி, சுமித்ரா, சந்தோஷ், சுமதி வெங்கடேஷ், ஜெயக்கொடி, பச்சையப்பன், மோசின் கான், பவுன்ராஜ், ரேவதி லட்சுமிமணன், […]
மீன் விற்பனை நிலையங்களில் திடீரென நடந்த ஆய்வில் 10 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நகரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆனந்தன், கந்தசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆத்தோர வீதி, வர்ண தீர்த்தம், திரு.வி.க. நகர் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வில் கடைகளில் கெட்டுப்போன மீன்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கெட்டுப்போன […]
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தாசம்பட்டி, கோடுப்பட்டி, பவளந்தூர் ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்நிலையில் திகிலோடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து 2 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. இந்த யானைகளை கிராம மக்கள் விரட்டினர். இதனையடுத்து இந்த யானைகள் அருகில் உள்ள தாசம்பட்டி, பவளந்தூர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து கிராம […]
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி நேற்று கைது செய்தனர். இதனையடுத்து போலீசாரை கண்டித்து செம்பட்டி பஸ் நிலைய அருகில் ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சார்பில் மறியல் நடந்தது. இதற்கு மாற்றுத்திறனாக நல சங்கம் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கினார். இது குறித்து தகவல் அறிந்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை […]
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா சென்ற 3ஆம் தேதி துவங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியானது நடந்தது. இதையடுத்து மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. அதன்பின் திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நால்வர் திருவீதி உலாவும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடந்தது. பின் […]
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகில் உள்ள வகுத்துப்பட்டியில் மோகேஷ்(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமியன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மாலை இவரை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது அண்ணன் கலை அமுதன்(18) கிராமிய அள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மூன்று பேர் பெண்களை நோட்டமிடுவதாக கூறி அண்ணன், தம்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து மோகேஷின் உறவினர்கள் ராம்அள்ளிக்கு வந்து மோகேஷ் […]
மீன் மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்காக ஐஸ்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மீன்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 70 கிலோ இருந்தது. இதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாகும். இந்த […]
மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வானது மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், சிவ பிரசன்னா, நிஷாந்தினி, கோகிலவாணி, கயல்விழி, கமலி, ஜோதி ஸ்ரீ, பவதாரணி […]
பசுமை பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் சாலையில் ஏ.எஸ்.டி.சி காலனி அமைந்துள்ளது. இங்கு கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூபாய் 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது சுற்று சுவர் வசதியுடன், நடைபாதை வசதிகள், இருக்கைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், செடிகள் போன்றவற்றுடன் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. […]
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை தரகு கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்திற்கு கொண்டுவரமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மறைமுக ஏலம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும். இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டம் மற்றும் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, செங்கம் பகுதி பருத்தி வியாபாரிகள் பருத்தி அறவை மில் வியாபாரிகள் கலந்து கொள்கின்றார்கள். மேலும் […]
தர்மபுரி பி ஆர் சீனிவாச ராவ் தெருவில் ரகு என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்து இருக்கிறார். இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கு இடையே ரகுவின் பெரியப்பா கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்துள்ளார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான பொன்னாகரத்தை அடுத்த வண்ணாத்திப்பட்டிக்கு ரகு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில் மீனாவின் தந்தையான தர்மபுரி நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதயன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தர்மபுரியில் […]
மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் முகமதுபாயிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தடங்கம்-சோகத்தூர் சாலையில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமதுபாயிக் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் கடைக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் மருந்து பொருட்கள் திருட்டு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முகமதுபாயிக் […]
வாலிபரிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் விவசாயியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போனில் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் பாபுவிற்கு பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கான கட்டணமாக 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் கட்டுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பாபு அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை […]