தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் ஒவ்வொரு வருடம் 100 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இங்கு எம்.எஸ், எம்.டி ஆகிய முதுநிலை படிப்புகளில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற பாடப்பிரிவுகள் இருக்கிறது. மேலும் இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, முதல் நிலை மருத்துவ பாட பிரிவை தொடங்க இந்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
Category: தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள புளியமரம் ஒன்றில் பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் தங்கி உள்ளன. அந்த பகுதி மக்கள் அவ்வழியாக வரும்போது அவர்கள் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்கி தின்று அங்கேயே மரங்களில் தங்கி வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சேட்டை நிறைந்த குரங்கு ஒன்று தன்னுடைய குரங்கு சேட்டையை காட்டியுள்ளது. மருத்துவமனைக்கு ஒருவர் கொண்டு வந்த பால் பாட்டிலை பிடுங்கிய குரங்கு […]
மாற்றுத்திறனாளி கொடுத்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள் அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமை என்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெறும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டமானது நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். நேற்று மொத்தம் 447 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொட்டுமாரன மாறானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனுசாமி என்பவர் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டுகோணாம் பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு […]
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி புதூர் கிராமத்தில் மாரியப்பன்-மாசிலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிஷ், கதிர்வேல் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹரீஷ் மற்றும் கதிர்வேல் ஆகிய 2 பேரும் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் ஹரீஷ் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாசிலாமணி மற்றும் கதிர்வேல் ஆகிய […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி கம்பைநல்லூர்- கிட்டம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அக்கம் பக்கத்தில் […]
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் மாணவியுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் 14வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து சிலம்பரசன் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது சிலம்பரசனின் பெற்றோர் […]
கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சோளிகவுண்டனூர் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வெளியே வந்தது. இதனை பார்த்ததும் தெரு நாய்கள் புள்ளிமானை விரட்டி சென்றுள்ளது. அப்போது தெரு நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய புள்ளி மான் செந்தில் குமார் என்பவரது விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி முதல் அருவியில் தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழை நின்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் குறைந்து […]
தேர் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 13-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென தேர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த மனோகரன், சரவணன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயமடைந்த 4 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
ஆற்றில் கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணல்திட்டு பகுதியில் காவிரி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னமல்லிபட்டி கிராமத்தில் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி, உதவி பொறியாளர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கிளை செயலாளர் செல்வகுமார், நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]
சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியூர் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாது என்பவர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய மாதுவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மோளையானூரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் பெண்களும், மாணவ மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த […]
தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சூழலில் சிக்கி தினேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மோட்டார் சைக்கிள் கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மெனசி கிராமத்தில் கூலித் தொழிலாளியான விநாயகம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மோளையானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் நண்பர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
தாய்-மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள செந்தில் நகர் அருகே இருக்கும் தண்டவாளத்தில் நேற்று மதியம் ரயில் மோதி 2 பெண்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
தேர் கவிழ்ந்து 2 பேர் பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி இந்த கோவில் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அடுத்து மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர்நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் […]
ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தினம் தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது ஒகேனக்கல்லில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து எண்ணெய் மசாஜ் செய்து சினிபால்ஸ் மற்றும் காவேரி ஆற்றில் குளிக்கின்றனர். அதன்பின்னர் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பகுதியில் நவாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிராஜி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிராஜி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த நவாஷ் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை […]
தண்ணீரில் மூழ்கி புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுஜாதா(19) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஆவாரங்குட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சுஜாதா சென்றுள்ளார். அங்குள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுஜாதா தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்து வந்தது. இதற்கிடையே நீர்வரத்து திடீரென அதிகரித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அருவியில் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கடந்த 3 நாட்களாக தடைவிதிக்கபட்டிருந்த நிலையில், நீர்வரத்து குறையத்தொடங்கியதால் இன்று மீண்டும் அனுமதி வழங்கி […]
மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெங்குசெட்டிபட்டி பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சிவலிங்கம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிவலிங்கம் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் மணிவண்ணன்- சியாமளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறுசேமிப்பு திட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் சுமி உள்பட நூற்றுக்கணக்கான நபர்கள் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் 12 மாதம் சீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு இனிப்பு, காரம், தங்க நாணயம், பட்டாசு போன்றவை வழங்கப்பட்டன. இதனை அடுத்து தங்கத்தின் விலை அதிகரித்ததால் […]
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருவியில் பரிசல் இயக்கவும் தடை […]
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டின் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தும் எண்ணெய் மசாஜ் செய்து உள்ளனர். இதனால் நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் சுற்றுலா […]
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ 6.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி கார் இயக்கத்தினை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆரம்பித்து வைத்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிய பேட்டரி கார் இயக்கத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். டாக்டர் செந்தில்குமார் எம். பி., எஸ்.பி வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்வர் அமுதவல்லி, […]
பணமோசடி செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொங்கனூர் கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரை சந்தித்து பேசிய செந்தில்குமார் என்பவர் ஜெகநாதனின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக 50 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெகநாதன் செந்தில்குமாரிடம் 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை செந்தில் குமார் எந்த வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் ஜெகநாதன் தான் கொடுத்த பணத்தை […]
தர்மபுரி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் இளைஞர் திறன் திருவிழா வரும் இன்று நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை […]
ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்பவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மும்தாஜை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவருக்கு சொந்தமான வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் […]
செங்கல் சூளை உரிமையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகில் சின்னம்பள்ளி கோவள்ளி கோம்பை பகுதியில் வசித்து வந்தவர் செங்கல் சூளை உரிமையாளர்கள் கந்தசாமி (53). அதே பகுதியில் வசித்த 30 வயதுடைய விவசாயி குபேந்திரன். இவருக்கும் கந்தசாமிக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், ராமச்சந்திரன், ஏட்டு செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக […]
ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் ஒசஅள்ளி பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவருடைய மகன் 20 வயதுடைய ஹர்சா. இவர் டிப்ளமோ முடித்து பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். இவர் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகில் தனது சொந்தக்காரரான ராஜா என்பவருடைய வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார்கள். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ஹர்சா பொம்மனூர் ஏரியில் குளிக்க […]
சிறுத்தை கடித்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் சிறுத்தை புகுந்து வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடுகளை பிடித்து செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆடுகள் சம்பவ இடடத்திலேயே […]
அண்ணனை தம்பியே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகில் சங்கிலி நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் மாது. இவருடைய மகன் 45 வயதுடைய வெங்கடேசன். இவர் கோவை, ஈரோடு பகுதியில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தம்பி 40 வயதுடைய விவசாயியான குமார். இவர் இரண்டு மாடு கன்றுக் குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். இந்த இரண்டு மாடு கன்று குட்டிகளும் சமீப காலத்தில் இறந்து […]
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கனஅடி குறைந்தால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்த கன மழையால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. இதற்கிடையில் கடந்த 19ஆம் தேதி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக வந்தது. இதனால் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து […]
தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் நலனை கருதி 6 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கத் தொடக்க விழா பொன்னகரம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இவர் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ஜி.கே மணி எம்.எல்.ஏ முன்னிலை வகித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் […]
விவசாய நிலத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று பாலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கோழிகளை அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து திடீரென கோழிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட வெங்கடாஜலம் அங்கு சென்று பார்த்தபோது […]
கலெக்டர் அலுவலகம் முன்பாக மகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னகரம் அருகில் மடம் பகுதியில் வசித்து வருபவர் மேஸ்திரி முனிராஜ். இவருக்கு வினிதா என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளார்கள். வினிதா நேற்று தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த போது வாசலில் நின்ற காவல்துறையினர் வினிதா வைத்திருந்த பையை சோதனை செய்ய கேட்டார். அப்போது வினிதா பையிலிருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். இதனையடுத்து மண்எண்ணெய்யை […]
அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சினம்பட்டி கிராமத்தில் இயற்கை அங்கன்வாடி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, வேளாண் வணிக துறை துணை இயக்குனர் கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, உதவி இயக்குனர் சசிகலா, தாசில்தார் ராஜராஜன், விற்பனை குழு செயலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் அர்ஜுனன், தோட்டக்கலை அலுவலர் அசோக்குமார், உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் […]
மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகில் நல்லாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன்(52). இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ள நிலையில் அதில் நெல் சாகுபடி செய்து வந்துள்ளார். நல்லாம்பட்டியை சுற்றி வனப்பகுதி இருப்பதால் அங்கு காட்டு யானைகள், பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களில் நுழைந்து பயிர்களை தின்று காலால் மிதித்து அட்டகாசம் செய்து வந்துள்ளன. இதன் காரணமாக வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்கு சீனிவாசன் […]
டியூஷன் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெல்லுஅள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரகாசம்(32) என்ற மகன் இருந்துள்ளார். டியூஷன் ஆசிரியரான சிவப்பிரகாசம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவப்பிரகாசம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே சிவப்பிரகாசரின் உடலை எரித்து […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குரும்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன. தர்மபுரி மாவட்டம், சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. இங்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதற்கிடையே ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த நீர் வரத்தை பிலிகுண்டுலுவில் இருக்கின்ற மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் விடுமுறை […]
கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1,000-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி, கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் காட்சி தொடர்பு ஊடகவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவிகள் பயின்று வருகின்றனர். தர்மபுரி, […]
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ 50 லட்சத்தில் கல்வி சீர்வரிசை பொருட்கள், அலுவலகம், கலையரங்கம் கட்டிக் கொடுக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகில் உம்மியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள், அலுவலகம், கலையரங்கம் ரூ 50 லட்சத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதை கட்டுவதற்கு உதவிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் நரசிம்மன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற […]
சாகுபடிக்காக சேமித்து வைத்திருக்கும் விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று விதை பரிசோதனை அலுவலர் கூறியுள்ளார். தர்மபுரி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பயிர்களைப் பராமரிப்பதற்கு நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் விதை செலவு குறையும். புறத்தூய்மை பரிசோதனை செய்யும்போது மற்ற பயிர் விதை மற்றும் களைச்செடி கலப்புகள் இருக்கின்றதா? என்று கண்டுபிடிக்கபடுவதால் விதைகளின் தூய்மை உறுதி செய்ய முடிகிறது. […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சில தினங்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு வருகின்ற நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணபடுகிறது. இதற்கிடையில் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான ஓசூர், பிலிகுண்டுலு, அஞ்செட்டி, ராசிமணல், நாட்றாபாளையம், கேரட்டி உட்பட பல பகுதியில் பெய்த தொடர் மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த 30ஆம் தேதி ஒகேனக்கல்லில் வினாடிக்கு […]
கோடைகாலம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் நேற்று மே தினத்தை முன்னிட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது ஒரு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா […]
3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்த விழாவில் கட்டுமான தொழிலாளர்களின் நலன் தலைவர் பொன்குமார் கலந்து கொண்டார். இவர் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். […]