தீர்த்தமலை கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் பாலாஜி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மலை மீது இருப்பதால் தமிழகம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். இந்தக் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் ஒருவரான 40 வயதுடைய பாலாஜி என்பவர் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த […]
Category: தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் திருடு போன 73 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து கடந்த 25ஆம் தேதி வரை நான்கு மாதங்கள் செல்போன்கள் திருட்டு, தொலைந்து போதல் போன்ற புகார்கள் அதிகமாக வந்துள்ள நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் 73 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ 10,70,000 இருக்கும் என்றனர். இந்த செல்போன்களை […]
பொய்யான வாடிக்கையாளர் சேவை மைய எண் மூலம் மளிகைக் கடைக்காரரிடம் அபேஸ் செய்த பணத்தில் ரூ 1 1/4 லட்சத்தை சைபர்கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் வசித்து வருபவர் பாபு(40). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருடைய கடைக்கு ஒரு வணிக வளாகத்தில் இருந்து பொருட்களை வாங்கி பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வந்துள்ளார். அப்போது திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு […]
லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை மேகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் கூலித் தொழிலாளர்களான தேவராஜ், ஹரி, தினேஷ், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லப்பனஅள்ளி கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு செல்வம் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அந்த 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று செல்வம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் […]
கணவனை இழந்த பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் உதவித்தொகை வழங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ரஜியா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் இறந்ததால் 3 குழந்தைகளுடன் மயானத்தில் ரஜியா வசித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இதுகுறித்து விசாரணை நடத்த தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி தாசில்தார் மேற்கொண்ட விசாரணையில் ரஜியா கணவனை இழந்து வறுமையில் வாடியது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரஜியாவை […]
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாக்லேட் விற்பனை நிலையங்களில் சோதனை செய்யுமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான குழு மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது குழந்தைகள் அதிகம் சாப்பிடும் சாக்லேட்டுகள், மிட்டாய் வகைகள், ஊசி போடும் சிரஞ்சில் விற்பனை செய்யப்பட்ட சாக்லேட்டுகள் […]
மதுபோதையில் வாலிபர்கள் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது நண்பர்களான மணிகண்டன், சந்தோஷ், மூர்த்தி, சேகர் ஆகிய நான்கு பேருடன் இரவு நேரத்தில் மது குடித்துள்ளார். இதனையடுத்து மதுபோதையில் வாலிபர்கள் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி தனது […]
தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு 800 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது போலீசாரால் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமாள், அருள், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் தர்மபுரி, புலிக்கரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் புலிக்கரை பகுதியில் நடத்திய சோதனையில் பாலக்கோடு அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர். இவர் […]
தர்மபுரி மாவட்டத்தில் தட்சணகாசி காலபைரவர் கோவிலில் உலக நன்மைகளுக்காக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் உலக நன்மைக்காக 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. முன்னதாக சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று இருந்தது. அதன்பின் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அடுத்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரத்தில் வசித்து வரும் மாதேஸ்வரன்-மங்களம்மாள் என்ற தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த பெண் குழந்தை ஐந்தரை மாதத்தில் 600 கிராம் எடையுடன் குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் நுரையீரலில் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து crowd Funding-ல் நிதி திரட்டி, பின்னர் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தயின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக நான்கு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் தனது மூன்று வயது ஆண் குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் […]
மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரண்டாஅள்ளி அருகில் எம்.செட்டிஅள்ளி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி(35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கெண்டையனஅள்ளி கிராமத்தில் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து வந்துள்ளார். இந்நிலையில் மஞ்சளை நேற்று அறுவடை செய்து டிராக்டரில் ஏற்றி கொண்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எம்.செட்டிஅள்ளி அருகே வரும்போது டிராக்டர் திடீரென சாலையோரம் இருந்த ஓடையில் […]
12ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியார் பள்ளி விடுதியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி தங்கி 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மாணவிக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு கால் முறிந்துள்ளது. இதுதொடர்பாக […]
நாகர்கூடல் அருகில் பாலம் இல்லாததால் இறந்த முதியவரின் உடலுடன் கிராம மக்கள் ஆற்றை நீந்தி கடந்து சென்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் 80க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் நாகாவதி அணைக்கு செல்லும் நீர்வழி பாதையில் பாலம் இல்லாததால் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆத்து கொட்டாய் கிராமத்தில் 80 வயது முதியவர் ஒருவர் இறந்துள்ளார். அவரை கிராம மக்கள் நாகாவதி […]
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வருகின்ற ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு தர்மபுரியில் தே.மு.தி.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோரை விமர்சித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் மீது தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டன. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு […]
முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ உபகரணங்களை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு பயிலும் 93 மாணவ மாணவியர்களுக்கு வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ படிப்பிற்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி வழங்கியுள்ளார். இதில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 மாணவ, மாணவியர்களும் அடங்கும். அவர்களுக்கும் வெள்ளை […]
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ராஜா, ராமசாமி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் […]
மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தொழிலாளியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் அப்பகுதியில் இருக்கும் வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்த சண்முகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தனூர் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்தி மோட்டார் சைக்கிளில் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வடக்கம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சக்தியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 57 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமான 17 வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த காவல்துறையினர் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
சாலையை கடக்கும் போது சரக்கு வேன் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் இம்ரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில்இருக்கும் ஒரு பழகடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 10 வயதுடைய ஷேக் அமானு என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷேக் அமானு தனது தந்தையை பார்ப்பதற்காக பாலக்கோட்டிற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக […]
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவபிரகாசம்(61) கடந்த வருடம் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்ததால் இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்று உள்ளார். ஆனால் அவருடைய மகன், இந்த கவுன்சிலிங்கில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் நீங்கள் மருத்துவர் ஆனால் 10- 15 வருடங்கள் தான் மருத்துவராக வேலை பார்க்க முடியும். இதுவே வேறொரு அரசு மாணவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் 40 ஆண்டுகள் பணியாற்றலாம் என்று மகன், தந்தையிடம் கூறியுள்ளார். ஆகவே நீட் […]
மருத்துவ படிப்பு இடத்தை விட்டுக் கொடுப்பதாக 61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் அறிவித்துள்ளார். தர்மபுரியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்.. 61 வயதான இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதற்கு பிறகு தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.. இந்த தரவரிசையில் 249ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார் சிவப்பிரகாசம்.. ஏற்கனவே இவர் 13 ஆண்டுகாலம் அரசு ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றாலும், மருத்துவ படிப்பை […]
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவபிரகாசம்(61) கடந்த வருடம் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்ததால் இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்று உள்ளார். ஆனால் அவருடைய மகன், இந்த கவுன்சிலிங்கில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் நீங்கள் மருத்துவர் ஆனால் 10- 15 வருடங்கள் தான் மருத்துவராக வேலை பார்க்க முடியும். இதுவே வேறொரு அரசு மாணவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் 40 ஆண்டுகள் பணியாற்றலாம் என்று மகன், தந்தையிடம் கூறியுள்ளார். ஆகவே நீட் […]
வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் தங்க நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மட்லாம்பட்டி கிராமத்தில் வெங்கிடியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டிற்குள் சென்று வெங்கிடியம்மாவை மிரட்டி மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து வெங்கிடியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சுண்டக்காப்பட்டி கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக வேடியப்பன் நிலைதடுமாறி உள்ளே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த வேடியப்பன் தண்ணிரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேடியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
சீராக குடிநீர் வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 நாட்களுக்கு 1 முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது . இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் […]
சட்டவிரோதமாக லாரியில் குட்கா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திற்கு பாலக்காடு வழியாக லாரியில் சட்டவிரோதமாக குட்கா வருவதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் காவல்துறையினர் பஞ்சப்பள்ளி பகுதியில் வைத்து ஒரு லாரியை மடக்கிப்பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் 50 தேங்காய் முட்டையில் குட்காவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் லாரியை காவல்நிலையத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர். மேலும் […]
குளிக்க சென்ற மாணவி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மனூரில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லக்கிளி என்ற மகன் இருந்தார். இவர் ஜிட்டாண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கு மாணவி செல்லக்கிளி குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை […]
தந்தை சமாதியான இடத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீராசனூரில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய தந்தை ரவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தீராத கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பெங்களூரில் குடியேறினர். இந்நிலையில் பெங்களூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு அரவிந்தன் வந்துள்ளார். இந்த நிலையில் அரவிந்தன் தனது தந்தை சமாதியான […]
பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி திடீரெனகாணாமல் போய்விட்டார். இதனால் மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ஓசூர் பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தங்கள் மகளை கடத்திச் சென்றிருப்பதாக […]
வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் இருந்து தர்மபுரிக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தர்மபுரி ஒட்டப்பட்டி அருகில் அவ்வைவழி பிரிவு பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் எ.ஜெட்டி அள்ளியை சேர்ந்த வேன் டிரைவரான சித்தன் மற்றும் காரில் வந்த தர்மபுரியை சேர்ந்த ஆனந்தன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. கண்டன போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், அதிமுக, திமுகவினரையும், முன்னாள் […]
டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கதிர்நாயக்கனஅள்ளி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் கவிஸ்ரீ என்ற மகன் இருந்தார். இதில் அருள்மொழியின் சகோதரர் சிவகுமார் ஸ்கூட்டரில் சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து வந்தார். இதனையடுத்து வீட்டிற்கு அவர்கள் மீண்டும் சென்று கொண்டிருந்தனர். அப்போது தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் நல்லாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிரைவர் திடீரென்று […]
சந்தன மரத்தை கடத்திய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டர் பங்களா ஆகிய இடங்களிலிருந்து 4 சந்தன மரங்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. அந்த மர்ம நபர்களை கைது செய்வதற்காக போலீஸ் சூப்பிரண்ட் கலைச்செல்வன் தனிப்படை அமைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள காலி நிலத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்த 5 பேரை […]
ரயிலில் அடிபட்டு இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொங்கனூர் அருகிலிருக்கும் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் வசித்த காளியப்பன் என்பது […]
மாணவர்களை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சதீஷ்குமார் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் சரியாக படிக்கவில்லை என்று சில மாணவர்களை அடித்துள்ளார். இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்திலிருந்து பிஸ்கட் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருச்சிக்கு சென்றது. இந்த லாரியை பீகாரை சேர்ந்த குலாம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது தொப்பூர் கணவாய் முதல் வளைவில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் குலாம் சிறு காயங்களுடன் […]
பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தர்மபுரி அருகே உள்ள ஒரு பகுதியில் 15 வயது மாணவி 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் பெற்றோர் கூறியிருப்பதாவது “பூவரசன் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று இருப்பதாக” அவர்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக […]
மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி 2-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனியர் மாணவர்கள் சரவணனை ராக்கிங் செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் இருக்கும் மருத்துவ கல்லூரி கமிட்டிக்கு சரவணன் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் […]
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தர்மபுரியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின்படி காவல்துறையினர் ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் பயணிகள் கொண்டு வந்த பொருட்களை சோதனை மேற்கொண்டனர். இதேபோன்று ரயில் நிலைய பிளாட்பாரங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தர்மபுரி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் […]
சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொன்னகுட்டஅள்ளி பகுதியில் தொழிலாளி பிரகாஷ் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் வருடம் பிரகாஷ் பள்ளிக்கு சென்று வந்த ஒரு சிறுமிக்கு மிரட்டல் விடுத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் சிறுமிக்கு, பிரகாஷ் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி […]
நிலத்தகராறில் விவசாயியை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெங்குசெட்டிப்பட்டி பகுதியில் விவசாயி ரங்கநாதன் வசித்து வருகிறார். அதே பகுதியில் விவசாயி ஜெயவேல் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ரங்கநாதன், ஜெயவேல் ஆகிய இருவருக்கும் இடையில் மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயவேல், ரங்கநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயவேலை கைது செய்தனர்.
சரக்கு வேனை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வசந்த் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் ராஜ்குமார் தன் வீட்டிற்கு வெளியே வேனை நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் ராஜ்குமார் வந்து பார்த்தபோது வேன் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேனை திருடி […]
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத சினிமா தியேட்டர் மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், ரமன சரண் போன்றோர் தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத […]
சிறுவன் தொண்டையில் சிக்கியிருந்த நாணயத்தை மருத்துவர்கள் நவீன கருவியின் மூலமாக வெளியே எடுத்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள வீரப்பநாய்க்கன்ப்பட்டியில் முனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரிஷ்வந்த் என்ற மகன் இருக்கிறார். இதில் சிறுவன் ரிஷ்வந்த் தனது தாயாரிடம் 5 ரூபாய் வாங்கி கொண்டு கடைக்கு சென்றார். இந்நிலையில் சிறுவன் வாயில் வைத்து இருந்த 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டார். இதுகுறித்து சிறுவன் தனது தாயாரிடம் […]
வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பாடியில் சின்னமுத்து மனைவி சசிகலா வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா வீட்டை அடைத்துவிட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்காக சேலம் சென்றார். இதனையடுத்து கடந்த 27-ஆம் தேதி சசிகலா மீண்டும் தன் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சசிகலா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மோதிரம், […]
லாரி கவிழ்ந்த விபத்தில் கிளீனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் திருச்சூருக்கு புறப்பட்டது. இந்த லாரியை பாகிமானூர் பகுதியில் வசித்து வரும் சிதம்பரம் என்பவர் ஓட்டினார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் கிளீனராக உடன் இருந்தார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய கிளீனர் சந்தோஷ்குமார் […]
சட்டவிரோதமாக சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் கோபால்கொட்டாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாடி கொண்டிருந்த குமார், சதீஷ், ஆனந்தன் உட்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 2 கார் மற்றும் 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் போன்றவற்றை […]