பராமரிப்பு இல்லாத வாகனங்களில் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் பள்ளி வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி தாளவாடி, சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்களை கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது வாகனங்களில் அவசரகால கதவுகள் சரியாக இயங்குகிறதா? முறையான […]
Category: ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களில் உலா வந்தது. இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி வந்த […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் பாலதேவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து பாலதேவகுரு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தை கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதிவிட்டு, மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பாலதேவகுரு லேசான காயத்துடன் […]
கிணற்றுகள் விழுந்த நாய்க்குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் புது காலணியில் ஒரு கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டு நாய்க்குட்டிகள் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி 2 நாய்க்குட்டிகளையும் பத்திரமாக மீட்டனர்.
காசோலை கொடுத்து மோசடி செய்த நபருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விவசாயியான வசந்தம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெருந்துறை ஈரோடு தங்கம் நகரில் வசிக்கும் பரணிதரன் என்பவர் வசந்தத்திடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுப்பதற்காக பரணிதரன் 5 லட்ச ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். ஆனால் காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் […]
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிவதோடு, வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் கடுமையான பனிமூட்டத்துடன் குளிர் நிலவுகிறது. இதனால் காலை நேரங்களில் வெளியே வரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதனையடுத்து வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். […]
காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜஜினா (23) என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஜஜினாவும், அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா மணி என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லதா தனது மொபட்டில் வீட்டிலிருந்து அந்தியூர் செல்ல புறப்பட்டுள்ளார். இவர் பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி லதாவின் மொபட் […]
தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் ராஜசேகர்- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் பாரதி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாரதி பாச்சாமல்லனூரில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர் ஒருவருடன் பாரதி கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீச்சல் தெரியாத பாரதி முதலில் கிணற்றில் இறங்கியதும் தண்ணீரில் மூழ்கினார். […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், இரவு நேரத்தில் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9 மணி வரை கடுமையான பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாக சென்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி மற்றும் சித்தோடு பகுதியில் வசிக்கும் 2 பெண்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் பரிசு விழுந்ததாக கூறி தங்களிடம் சிலர் பண மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின்படி வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கள்ளக்குறிச்சி சேலம் பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல நடித்து பகல் […]
55 லட்ச ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்கம்பேட்டை கேட் மற்றும் நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் 5 லட்சம், 10 லட்சம் என பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தியுள்ளனர். இவர்களை நம்பி பவானி ராணா நகர் பகுதியில் வசிக்கும் வேணி உட்பட 4 பேர் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதுவரை வேணி 11 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏல […]
மர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் இறந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல சக்திவேல் நேற்று மாலை ஆடுகளை வெளிப்புறத்தில் கட்டியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் கடித்து குதறிய நிலையில் 16 ஆடுகள் […]
வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவர் மூலம் கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் அமைச்சர் ஒருவரை நன்கு தெரியும் எனவும், கட்சியில் பொறுப்பாளராக இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து […]
லாரி மோதிய விபத்தில் 2 மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுநர் வாகனத்தை வலது புறமாக திருப்பியுள்ளார். இதில் பள்ளிக்கூடம் முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த மாணவிகள் கூட்டத்திற்குள் லாரி புகுந்ததால் 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் லாரி சாலையோரம் இருந்த தடுப்பு கல்லை […]
இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின் பெயர் தான் ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA). இது மார்ச் 2009 இல் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் திறமையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சம உரிமை ஆகியவற்றுக்கான நிலைமைகளை வழங்குவதற்காக 2009-2010 இலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவது மற்றும் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் ஊத்துக்குளி ரோடு பகுதியில் டெய்லரான செங்காவேரி(24) என்பவர் வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 3/4 பவுன் தங்க சங்கிலி, இருசக்கர வாகனம், ஆகியவற்றை அடமானம் வைத்து 1 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். அதற்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி இதுவரை 48 ஆயிரம் ரூபாய் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி ஓம் சக்தி நகரில் கோவிந்தராசு(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலங்கப்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராசுவின் நெருங்கிய நண்பர் ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரவிக்குமார் தனது கனவில் வந்து கூப்பிடுவதாக கோவிந்தராசு அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார். நேற்று முன்தினம் வெங்கமேடு மணியக்காரர் தோட்டம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கோவிந்தராசு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து […]
ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் நந்தகோபால். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரோடு ஐந்து வருடங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் இது எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதாக நினைத்து அந்த பெண் தனது கள்ளக்காதலனுக்கு போன் போட்டு வீட்டிற்கு அழைத்து […]
பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் மில் தொழிலாளியான மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவாகர்(13), ஜீவா(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் திவாகர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திவாகர் இன்று காலை குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்து கொண்டிருந்தார். தொடர்ந்து மற்ற மாணவர்களை […]
லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலிருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு முத்தூர் நோக்கிய லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளக்கேத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் இரண்டு சக்கரங்களும் சிக்கி ஒரு புறமாக சாய்ந்தது. மேலும் அப்பகுதியில் அடுத்தடுத்து இருந்த 5 மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் […]
கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வளந்தாங்கோட்டை பகுதியில் வசிக்கும் 7 பேர் கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் க.ஒத்தக்கடை அருகே சென்ற போது ஈரோடு நோக்கி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக், செந்தில், […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரிகியம் மலை கிராமத்தை சேர்ந்த சித்துமாரி (55) என்பவர் உடல் நலகுறைவு காரணமாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சித்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உறவினர்கள் ஆம்புலன்ஸில் சித்துமாரியின் உடலை மாக்கம்பாளையம் நோக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் குரும்பூர் பள்ளம் வரை சென்றது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் குரும்பூர் பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பேருந்து பயணிகளுடன் பண்ணாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தின் மேற்கூரையில் இருக்கும் துவாரம் வழியாக மழைநீர் சொட்டு சொட்டாக வழிந்து இருக்கைகள் நனைந்ததால் பயணிகள் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். பேருந்துக்குள் அனைவரும் நின்று கொண்டே பயணித்த காட்சியை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அறிந்த சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை பார்வையிட்டு அதன் தகுதி சான்றை […]
யானைகள் பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூரில் அடர்ந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வந்து விடுகிறது. நேற்று இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 3 யானைகள் கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. அப்போது மைசூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை இரண்டு காட்டு யானைகள் வழிமறித்தது. இதனையடுத்து பேருந்தின் மேல் பகுதியில் […]
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் கடக்கல் பகுதியில் பல் டாக்டரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று தீபக் கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார். அதே ரயில் பெட்டியில் 3 வாலிபர்கள் 3 இளம்பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது பல் டாக்டர் தீபகுக்கும், 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாலிபர்கள் தீபக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து […]
இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலிருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக துரைசாமி என்பவர் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்தபோது கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும், முட்டை லோடு […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் பகுதியில் தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் தீபக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். கடந்த மாதம் சிறுமிக்கு பெண் குழந்தை […]
கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் கல்கொத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது தையல் கடை பவானிசாகர் மார்க்கெட் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தையல் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு சுமார் ஒரு […]
கிணற்றில் தவறி விழுந்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளிதிருப்பூர் குரும்பபாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல பிரியா என்ற மகள் இருந்துள்ளார். பிஇ பட்டதாரியான கோகுல பிரியா கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரியா 60 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்ததால் சத்தம் போட்டுயுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனியில் கூலி தொழிலாளியான தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வெற்றிவேல்(13), சக்திவேல்(12) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் வெற்றிவேல் 8-ஆம் வகுப்பும், சக்திவேல் 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளி இறந்துவிட்டதால் வெற்றிவேலும், சக்திவேலும் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஆதார் எண் பெறுவதற்கு ஆதார் மையம் மற்றும் […]
யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடகநல்லி மலை கிராமத்தில் சித்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சித்து காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பெருமடுவு பள்ளம் அருகே […]
முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் அவர்கள் வழங்க இருக்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் சட்ட விதிகளின்படி காவல் துறையால் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. அந்த யானை 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு மைசூரில் இருந்து தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற லாரியின் வலதுபுறம் பேருந்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த […]
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமி பாளையம் வடக்கு வீதி மதுரை வீரன் கோவில் பகுதியில் தூய்மை பணியாளரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிசங்கர்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிசங்கர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் வசித்த 17 வயது சிறுமி கடந்த 2- ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார்(26) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வார சந்தையில் தூய்மை பணியாளரான கோபால் என்பவர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு குப்பையில் கிடந்த மணிபர்சை கோபால் பிரித்து பார்த்தபோது அதில் ஏடிஎம் கார்டு, மோட்டார் சைக்கிள் சாவி, செல்போன் ஆகியவை இருந்தது. இதனையடுத்து கோபால் அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம் மணிபர்சை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மணிபர்ஸ் தங்கப்பாளையம் பகுதியில் வசிக்கும் கீதா என்பவருக்கு சொந்தமானது […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையம் ஆர்.ஜி.கே புதூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் புஷ்பா, மனைவி கீர்த்திகா(29) ஆகியோர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் 7 பேர் கொண்ட கும்பல் தோட்டத்திற்குள் நுழைந்து எனது மனைவி மற்றும் தாய் முகத்தில் மயக்க மருந்து தெளித்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை நடத்திய போது 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எந்தவித பதிவேடுகள் இல்லாமலும், அரசு அனுமதி இல்லாமலும், போதுமான பணியாளர்கள் இல்லாமலும் சிறுவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்த […]
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உடனடியாக நிலுவை தொகையினை செலுத்த வேண்டும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களை குறைவான மாத சந்தா தொகையில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த சேவையை தமிழக அரசு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகரில் இருக்கும் இலங்கை தமிழர் முகாமில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை நவீன்குமார் காதலித்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்ததால் மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை பூசாரி தோட்டத்தில் கட்டிட காண்ட்ராக்டரான மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தகர கொட்டகையின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான இந்திரங்களை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையம் காமராஜர் நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணா(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தனுஷா(6), ஹரிஷா(4), அபி(2) என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கிருஷ்ணா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம்பாளையம் புதூரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா(57) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜா இறந்து விட்டதால் சாந்தா பெருந்துறை சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருடைய மகன் கார்த்திக்கும் தாயுடன் இரவு நேரத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் மகன் இருவரும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகினர். அவ்வபோது இருவரும் சண்டை போடுவதும் உண்டு. நேற்று […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியில் ரங்கசாமி- மைலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மைலாக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கிட்டாபாளையம் வனப்பகுதியில் சென்றபோது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக சத்தியமங்கலம் […]
குழியில் விழுந்த டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவளகுட்டை பகுதியில் விவசாயியான வேலு என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை வேலு தனது டிராக்டரை பவளகுட்டையில் இருந்து அந்தியூர் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய டிராக்டர் கிணறு போல இருந்த சாலையோர குழிக்குள் பாய்ந்தது. உடனடியாக வேலு டிராக்டரில் இருந்து வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை அடுத்து குழியில் இருந்த தண்ணீரை அகற்றிவிட்டு டிராக்டரை மீட்கும் […]
வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கம்பெனியில் தங்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நாயக் என்பவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான பாபு நாயக் திடீரென வயிறு வலியால் அலறி துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது மது அருந்திய போது கழிவறையில் இருந்த கிளீனரை தண்ணீர் என நினைத்து […]
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியின் உத்தரவின்படி, ஜவுளிசந்தை, பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். அதில் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. மேலும் ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு திட்டம், மாதத் தவணையில் வீடு மற்றும் மனை வாங்கும் திட்டம், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூர், நெருஞ்சிப்பேட்டை, குருவரெட்டியூர், சின்ன பள்ளம் போன்ற பகுதிகளில் மிக முக்கியமான 7 பள்ளங்கள் அமைந்துள்ளது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கடந்த 3 ஆண்டுகளாக பாலமலையில் மழை பெய்யாததால் பள்ளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கனமழை காரணமாக சிறு சிறு திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதுகுறித்து பாலமலையில் இருந்து வந்த மக்கள் கூறியதாவது, சின்னபள்ளம் வழுக்குப் பாறையில் இருக்கும் அருவியில் 60 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து […]