Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்றவர்… கண்டுபிடித்த போது 5 மாத கர்ப்பம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

சிறுமியை கடத்திச் சென்று ஐந்து மாத கர்ப்பமாக்கியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு ஒரு சிறுமி காணாமல் போனார். அந்த சிறுமியின் தாயார் தன் மகளை காணவில்லை என அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் கண்டுபிடித்து போலீசார் அவரது பெற்றோரிடம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்போலாம் அதிகமா இருக்கு… அங்கும் இங்கும் அலைந்த ஒற்றை யானை… அச்சத்தில் நடுங்கிய வாகன ஓட்டிகள்…!!

நீண்ட நேரமாக சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் ஏராளமான யானைகள் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் ஒற்றை யானை வெளியே வந்து வழி தவறி கொண்டை ஊசி வளைவு சாலைக்கு வந்து விட்டது. இந்த யானை அப்படியே புற்களை தின்றுகொண்டே  3-வது கொண்டை ஊசி வளைவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயிர்கள் ரொம்ப பாதிக்கப்படுது… சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சாயக்கழிவு நீர்… அதிரடியாக ஆலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்…!!

கலெக்டர் கருணாகரனின் உத்தரவின்பேரில் சட்டவிரோதமாக காலிங்கராயன் கால்வாயில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றி 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் கால்வாய் மூலம் சுமார் 14 ஆயிரத்து 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைகின்றன. மேலும் விவசாயிகள் இந்த கால்வாய் பகுதியில் வாழை, நெல், மஞ்சள் போன்ற பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக்கழிவு நீரை கடந்த சில வாரங்களாக காலிங்கராயன் கால்வாயில் வெளியிடுவதாகவும், விளைநிலங்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வறண்டுபோன வனப்பகுதி…. மளமளவென பற்றிய தீ…. நாசமான அரியவகை மரங்கள்… பல மணி நேர போராட்டம்…!!

4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வனப் பகுதியில் எரிந்த தீயை வனத்துறையினர் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியில் பல்வேறு அரிய வகை மரங்கள் இருக்கும் பாலமலை வனப்பகுதி அமைந்துள்ளது. மேலும் இந்த வனப்பகுதியானது கரடி, முயல், மான் போன்ற வனவிலங்குகளின் இருப்பிடமாக திகழ்கின்றது. இந்நிலையில் வெயிலின்  தாக்கத்தினாலும், கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லாத காரணத்தினாலும் வன பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து வரண்டு போய் இருந்துள்ளது. இதனால் நெருஞ்சிப்பேட்டை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு சந்தோசமான செய்தி… உங்களுக்கும் ரத்து செய்யப்படும்… அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு…!!

அமைச்சர் செங்கோட்டையன் சுய உதவி குழு கடன் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் திருமண உதவி தொகை, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் மின்னணு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியானது அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல், சுய உதவி குழுக்களின் கடன் ரத்து செய்யப்பட உள்ளது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு வேண்டாம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி… டாக்டர்களின் போராட்டம்…!!

தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈரோட்டில் இருந்து கரூர் வரை விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. மத்திய அரசு அறிவித்திருந்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள், அலோபதியில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என அறிவித்திருப்பதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு-பெருந்துறை ரோட்டில் ஐ.எம். ஏ சார்பில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல…. வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்… முற்றிலும் எரிந்து நாசம்…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது பேத்தியான சௌமியா என்பவர் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து குடிசையில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் மளமளவென பரவிய தீயானது அருகில் இருந்த செங்கோடன் என்பவரது குடிசை வீட்டிலும் தீ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எல்லாமே பண்ணியாச்சு…. சரி வர மாட்டங்குது…. கூலி தொழிலாளியின் விபரீத முடிவு…!!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பால குட்டை பகுதியில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடல் நலக்குறைவால் கடந்த மூன்று மாதங்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சௌந்தரராஜன் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சௌந்தரராஜன் விஷம் குடித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குஷியான குடிசை வாசிகள்… எல்லா வசதியும் இருக்கு… இனி எந்த கவலையும் இல்ல… திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் அசோகபுரி ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணுனா இதான் கதி… குற்றத்திற்குரிய தண்டனை… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக நீதிபதி குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணாடி புதூரில் பானுமதி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்குள் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பானுமதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காரணம் சீக்கிரம் தெரியவரும்… என்ன ஆச்சுன்னு தெரியல… இறந்து கிடந்த யானை…!!

இறந்து கிடந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அது புதைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வனப் சரகத்திற்கு உட்பட்ட புதுபீர் கடவு வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனைத்தொடர்ந்து பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் போன்றோர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எவ்வளவு தைரியம் இருந்தா இங்க வருவ… சித்தியுடன் கள்ள தொடர்பு… கையால் அடித்து கொல்லப்பட்ட மகேந்திரன்…!!

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுண்டன் பாளையம் பகுதியில் மகேந்திரன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் அல்லிமுத்து என்ற கூலித் தொழிலாளியும் வசித்து வருகிறார். இந்த இருவருக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதில் அல்லி முத்துக்கு வசந்தி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் வசந்திக்கும் மகேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதுபற்றி அல்லிமுத்துக்கு தெரியவர, அவர் தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டென வந்த சிறுத்தை… நடுங்கிய வாகன ஓட்டிகள்… அச்சமூட்டும் வன சாலை…!!

வனப்பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, பவானிசாகர் போன்ற பத்து வன சரகங்கள் இருக்கின்றன. அங்குள்ள வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, மான், யானை, புலி மற்றும் கரடி போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இரண்டு பேர் இரவு 9 மணி அளவில் காரில் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் காரில் அருகே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நானே கண்டுபிடிச்சிட்டேன்… இவன் தான் அதை பண்ணுனான்… கையும் களவுமாக பிடிபட்டவர்…!!

மொபட்டை திருடியவரை கையும் களவுமாக பிடித்து உரிமையாளரே காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தன் காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்த போது, அவருடைய மொபட்டை மர்மநபர்கள் யாரோ திருடி விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… என்ன பண்ணாலும் சரியாகல…கூலி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

தீராத நோயால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியில் சீனிவாசன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சீனிவாசன் அப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த பஞ்சுகள்… மளமளவென பரவிய தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளாம் பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அரவை மில்லானது சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளிமேடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் டி-ஷர்ட்கள் மற்றும் பனியன்கள் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவுகள் மறுசுழற்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கவன சிதறலால் ஏற்பட்ட விளைவு…. ஓட்டுனருக்கு நேர்ந்த துயரம்… கைதான மற்றொரு ஓட்டுனர்…!!

பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் சக்தி நகரில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லதா என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் அந்தியூர் கரட்டு பாளையத்தில் உள்ள பணிமனையில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்வதற்காக கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல… பற்றி எரிந்த பஞ்சுகள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கால் மிதியடி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளம்பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் பழைய துணிகளை மறுசுழற்சி செய்து பஞ்சாக மாற்றும் நிறுவனம் ஆகியவற்றை சித்தோடு பச்சபாலி வசுவபட்டி என்ற கிராமத்தில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த கம்பெனி திடீரென தீப்பிடித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேறு வழியில்லாமல் நம்பி வந்தவர்களை…. பேத்தி என்றும் பாராமல்…. தாத்தா செய்த மோசமான செயல்…!!

சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணுக்கு, கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் தனது மாமனார் மாமியார் பராமரிப்பில் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சொந்த தாத்தாவான சுப்ரமணியன்(72) தனது 10 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கிழக்கு சீமையிலே பட பாணியில் ” தங்கை மகள்களுக்கு தாய்மாமன் சீர்…. டாக்டரின் தரமான சம்பவம்…!!

டாக்டர் ஒருவர் தனது தங்கை மகள்கள் சடங்கிற்கு செய்துள்ள தாய்மாமன் சீர் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று நடத்தி வருபவர் ராஜா. இவருக்கு சில வருடங்களுக்கு திருமணமாகி அவருடைய மனைவியும் டாக்டராக பனி புரிந்து வருகிறார். இவருடைய தங்கை மோகனப்பிரியாவுக்கு திருமணமாகி ரிதன்யா, மித்ரா ஸ்ரீ  என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த இரண்டு பெண்களுக்கும் தற்போது சடங்கு செய்யும் நிகழ்வு மோகனபிரியா – முத்துக்குமார் அவர்களின் விவசாய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மிதித்து கொன்ற யானை… விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர்…!!

யானை மிதித்து விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அட்டனை கிராமத்தில் பெரியசாமி மற்றும் சடையப்பன் என்ற இரு விவசாயிகள் வசித்து வந்தனர். அந்த கிராமத்தை ஒட்டி சடையப்பன் 5 ஏக்கர் பரப்பளவிலும், பெரியசாமி 3 ஏக்கர் பரப்பளவிலும் குச்சிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். அந்த தோட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அதில் பரண் அமைத்து இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் இவர்கள் இருவரும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

6௦ அடி ஆழம்…. தண்ணீரில் மூழ்கிய வாலிபர்…. நேர்ந்த துயர சம்பவம்…!!

கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எண்ணமங்கலம் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தனது ஊருக்கு வந்த பிரகாஷ் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொங்கலை கொண்டாட வந்தவர்…. கிணற்றில் குளியல்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

வாலிபர் கிணற்றில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் அந்தியூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே எண்ணமங்கலம் பகுதியை சார்ந்த தேவராஜ் மகன் பிரகாஷ். இவர் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அவர் தனது சொந்த ஊரான அந்தியூர் வந்துள்ளார். இதனை அடுத்து நேற்று முன்தினம் பிரகாஷ் சிறுவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொங்கல் கொண்டாட சென்ற குடும்பத்தினர்… நோட்டமிட்டு கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்… ஈரோட்டில் பரபரப்பு….!!

தொழிலதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- சிவகாமி. இத்தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் துணி பதனிடும் ஆலை நடத்தி வருகிறார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி நகரில் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக செந்தில்குமார்  தனது குடும்பத்தினருடன் கடந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இயற்கை முறையில் விதைப்போம் அறுப்போம்”… பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்த என்ஜினீயர்….!!

ஈரோடு மாவட்டத்தில் என்ஜினீயர் ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பொறியியல் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள இவர் வார விடுமுறை தினத்தில் வயலுக்கு வந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கும் வீட்டிலிருந்தே பணி செய்யும் கட்டாயமும் இவருக்கு விவசாயத்தில் மிகுந்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் தனக்கு சொந்தமான 11 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்… கைவரிசையை காட்டிய மர்ம நபர்… ஈரோடு அருகே பரபரப்பு….!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளப்பலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(42).  இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர்  விஜயலட்சுமி வீட்டிற்குள் நுழைந்துள்ளார் . பின்னர் மாட்டு தரகர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார். விஜயலட்சுமி அதற்கு பதில் சொல்ல முயன்றபோது அந்த மர்மநபர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… முகநூலில் போலி கணக்கு தொடங்கி… பொது மக்களிடையே பணம் பறிக்கும் மர்ம நபர்கள்….!!

முகநூலில் மென் பொறியாளரின் கணக்கு போலவே போலி கணக்கு தொடங்கி மர்ம நபர் 15,000 ரூபாய் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் புனேவில் உள்ள நிறுவனத்தில் மென்  பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது பெயரில் முகநூல் கணக்கை தொடங்கி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரது முகநூல் கணக்கு போலவே போலியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா…? உதவி பேராசிரியை எடுத்த விபரீத முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனி என்ற பகுதியில் பல் டாக்டரான இந்து என்பவர் வசித்துவருகிறார். இவர்  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவி பேராசிரியையாக வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பல்கலைகழக விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் இந்து தான் தங்கியிருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்க சொல்லுறத நம்ப முடில… இந்த இடத்தை விட்டு போகல… மாற்றுதிறனாளிகள் ஆவேச போராட்டம் …!!

கரடுமுரடான நிலத்தை சமன் செய்து தரக் கோரி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் 82 மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல கவுண்டன்பாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட அந்த இடம் கரடுமுரடான பாறையாக இருப்பதால் அதனை சமன் செய்து தரக்கோரி கடந்த நவம்பர் மாதம் நல்ல கவுண்டம்பாளையத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விடிய விடிய கடும் குளிரில்… போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்… ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு  கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடம் கரடு முரடாக இருப்பதாக சமன் செய்து தரக்கோரி கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் உயர் அதிகாரிகள் நடத்திய   பேச்சுவார்த்தையில் சமன் செய்து தருவதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுவனுக்கு… பெற்றோர் கண் முன்னே நேர்ந்த கொடூரம்… ஈரோடு அருகே பரபரப்பு…!!

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் இறுதியில் நேற்று பாரியூர் கோவிலில் இருந்து புறப்பட்ட முத்து  பல்லாக்கு கோபிசெட்டிபாளையம் நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்திற்கு நேற்று அதிகாலை வந்தடைந்து. ஒவ்வொரு ஆண்டும் தெப்பக்குளத்திற்கு வரும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குறைஞ்ச விலையில வீடு கட்டி தர்றேன்” என்று கூறி… ரூ.6 1/2 கோடி மோசடி… கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது….!!

குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக கூறி 6 1/2 கோடி ரூபாய் மோசடி செய்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை காவல்துறயினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரை  சேர்ந்த தம்பதியினர் பரமசிவம் – மஞ்சுளா. மஞ்சுளா பவானியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 18 ம் தேதி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  மோசடி புகார் ஒன்று அளித்தார். அப்புகாரில், “ஈரோடு மாவட்டம் தாசம்பாளையம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

படிச்சு முடிச்சுட்டு வேலை இல்லையா… அரசு உதவி தொகை கிடைக்கும்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

படித்து முடித்து வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் அரசு வழங்கும் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் படித்த வேலைவாய்ப்பற்றோர்  கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.  படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும்  பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவன்… தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்… மறுவாழ்வு பெற்ற 7 பேர்…!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகன் ரோகித்கண்ணா(17). இவர் கடந்த 31ஆம் தேதி பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து  ரோகித்கண்ணா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். தன்னுடைய மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மற்றவர்கள் இந்த உலகில் வாழலாம் என்று கருதிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு… மருமகளிடம் கோபித்துக் கொண்டு… மாமியார் செய்த செயல்…!!

குடும்பத் தகராறில் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம் ஆற்று கரையோரத்தில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டுவேல் என்பவரது  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்பு வேணுமா…? 15 ஆயிரம் லஞ்சம் கொண்டு வா… பிளான் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்புதுறை…!!

குடிநீர் இணைப்புக்காக 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈ.பி.பி நகரைச் சேர்ந்த முரளி என்பவர் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி இரண்டாம் மண்டல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார். அவருடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்த ராஜபாளையத்தை சேர்ந்த செல்லத்துரை முரளியிடம் 15 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி முரளி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விளைநிலத்தில்… காவலுக்காக நின்ற விவசாயியை தாக்கிய காட்டு யானை… தொடரும் யானைகளின் அட்டகாசம்…!!

ஈரோட்டில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரி (53). இவர் விவசாய தொழில் செய்து வந்தார். மாரி  தன்னுடைய நிலத்தில் விளைந்த மக்காசோளத்தை அறுவடை செய்து  தோட்டத்தில் குவித்து வைத்திருந்தார். பயிர்களை பாதுகாப்பதற்காக மாரி நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் குடிசை அமைத்து படுத்திருந்தார். அப்போது நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மாரியின் தோட்டத்திற்குள் புகுந்து குடிசையை காலால் எட்டி உதைத்தது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… ஃப்ரீ பையர் கேம் விளையாட… உயிரை விட்ட வாலிபர்… !!!

ஈரோடு மாவட்டத்தில் சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்ற பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிகாஸ்திகா(19) என்பவர் தனது உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவர் நேற்று வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்ற நபருடன் செல்போனில் ஃப்ரீ பையர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஃப்ரீ ஃபயர்” கேம் விளையாட சிக்னல் இல்லை… உயரமான கட்டிடத்திற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்…!!

சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டடத்திற்கு சென்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எழுமாத்தூரில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று அமைந்துள்ளது. இந்த மில்லில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19)  என்ற இளைஞர் தனது  உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று மாலையில்  பணியை  முடித்துவிட்டு பிகாஸ்திகா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது உறவினர் ராஜேஷ் ஓரம்  என்பவருடன் பிகாஸ்திகா வீட்டிற்குள் இருந்து செல் போனில் ஃப்ரீ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

9ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்… இளைஞர் செய்த காரியம் .!!!

பவானி அருகில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானியை  அடுத்த அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 25 வயதுடைய அன்பரசு எனும் மகன் இருக்கிறார். அன்பரசு அந்தப் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். அதன்பின் அம்மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கூட்டி சென்று விட்டார். அன்பரசு மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொதுதேர்வு அட்டவணை வெளியீடு….? “முதல்ல அது வரட்டும்” அமைச்சர் கூறிய தகவல்…!!

அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் பொதுத் தேர்வு கால அட்டவணை தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி வெளியிட்ட பின்னர் தான் அறிவிக்கப்படும் என கூறி உள்ளார் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். அச்சமயம் அவர் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு குறித்து பேசியபோது, தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப் பட்ட பின்புதான் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்து தகவல் வெளியிடப்படும் என கூறியுள்ளார். அதோடு மலைப்பகுதிகளில் உள்ள தடை நீக்கப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் இலவச வீட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ஈரோட்டில் 10ம் வகுப்பு சிறுமியை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன் கொடுமை செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்(23). அவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி விவாகரத்து பெற்று இவரிடமிருந்து சென்று விட்டார். அதன்பின் லோகேஷ் தனியாக வசித்து வந்துள்ளார். அவருடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையின் அலட்சியம்… குடும்ப கட்டுப்பாடு பண்ண 10 மாதத்தில்..” 5 மாத கர்ப்பமான இளம்பெண்”..!!

சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு செய்த ஒரு பெண் மீண்டும் கர்ப்பம் ஆனதால் நஷ்ட ஈடு வழங்க முறையிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பக புதூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகத் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள் விபத்து

நேருக்கு நேர் மோதிய மொபட்-லாரி… தூக்கி வீசப்பட்ட மாணவன்…. நேர்ந்த சோக முடிவு…!!

லாரி-மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்உயிரிலாண்டித சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் தினேஷ்குமார் (19), மகள் அனுசியா. தினேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்தநிலையில் தினேஷ்குமார் கரூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு் நேற்று மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூர் அருகே சின்னப்பையன் புதூர் என்ற இடத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எச்சரிக்கையாக இருங்கள்”- யானைகள் நடமாட்டம் அதிகம்…! அரை மணி நேரம் தவித்த மக்கள்…!

வனப்பகுதி சாலையில் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் இருக்கின்றன. இவ் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான் உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளை கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளது.இந்நிலையில் பகல் 11:30 மணி அளவில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்… தாலி சங்கிலியை பறித்த இருவர்… காவல்துறையினரின் அதிரடி செயல்….!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது மனைவி தீபலட்சுமியுடன் அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கே.என்.கே சாலையில் சென்று கொண்டிருந்தபோது  இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் தீபலட்சுமியின் மூன்றரை பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து  சி சி டிவி காட்சிகளை ஆராய்ந்து திருப்பூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென்று வந்த பிரசவ வலி…” 108 ஆம்புலன்ஸில் இரட்டை குழந்தை”… தாயும் சேயும் நலம்..!!

ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவப்பா – அமுதா . அமுதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று அதிகாலை அமுதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது குரும்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அமுதாவிற்கு அதிக வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவ உதவியாளராக இருந்த தேவராஜ் அமுதாவிற்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் அமுதாவிற்கு முதலில்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி… எதிரே வந்த லாரி… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள ஏரப்பநாயக்கன்பாளையம்  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கனகராஜ் – ருக்மணி. இத்தம்பதியினருக்கு தனுஸ்ரீ, ரித்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. கனகராஜ் விவசாயம் செய்து வந்தார்.   சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் புங்கம்பள்ளி  வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குப்பந்துரை சாலையில்  சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு… ஈரோடு அருகே பரபரப்பு….!!

கடன் தொல்லை காரணமாக கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த தம்பதியினர்  விக்ரம் என்கிற கோதண்டராமன்- ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு ஹர்ஷிதா, ரக்ஷிதா என்ற 2 பெண்குழந்தைகள் உள்ளனர் . விக்ரம் அப்பகுதியில் ஸ்டீம் அயனிங் கடை நடத்தி வந்துள்ளார். விக்ரம் கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடையை திறக்காமல் இருந்துள்ளார். தனிநபர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை  நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டை வேண்டாம்… கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த மக்கள்… அலுவலகத்தில் பரபரப்பு…

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை வேண்டாம் என்று ஒப்படைக்க வந்த மக்களால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அரச்சலூர் அருகே உள்ள உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என். ஆர். வடிவேலு தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை தருவதற்காக திடீரென நேற்று வந்தனர். போலீசாரின் சமாதானத்தின் பெயரிலும் அவர்கள் அமைதி ஆகவில்லை. கலெக்டரை சந்தித்து தாங்கள் இந்த மனுவை […]

Categories

Tech |