இன்று கொரோனா பாதித்த 96 பேரில் 26 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக ஈரோட்டில் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் […]
Category: ஈரோடு
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே திடீரென்று பெய்த கனமழையால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நீர் பிடிப்புகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 42 அடி நிரம்பியதும். அடித்து வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், வினோபா நகர்,கலியம்பாடு என்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் கரையூரில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் […]
கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தங்கி, அங்கிருக்கும் மக்களிடம் மதபோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர்களுக்கு ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
திருப்பூர் தொடர்ந்து ஈரோட்டிலும் கிருமிநாசினி சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைக்கு வரும் மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக ஐந்து வினாடிகள் சென்றாலே வைரஸ் அழிந்துவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரோட்டில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். கொரோனா தமிழகத்தில் பாதித்த மாவட்டங்களில் அதிகம் இருக்கக்கூடிய மாவட்டங்களான ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் 32 பேர் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 28 பேர் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் […]
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் […]
ஈரோட்டில் கொரோனா அச்சம் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பல ஆண்டுகளாக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ரேஷன் கடைக்கு அருகிலேயே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இது கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு சில நாட்களாகவே காய்ச்சல் அதிகரித்து வந்த […]
144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் குட்டிகரணம் போட வைத்தனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதனை கடைப்பிடித்து வரும் இந்த சூழ்நிலையில், வெளியே சுற்றி வரும் மக்களுக்கு ஆங்காங்கே காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை அளித்து வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை குட்டிகரணம் அடிக்கவைத்து காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.
திருச்சி : திருச்சியில் 4 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரையை சேர்ந்த 54 […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். தமிகத்திலும் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவ போடப்பட்ட நிலையில் நாளை […]
மாநிலம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைவரையும் வியக்க வைக்கும் விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகின்றது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனவை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய கடைகள் , திரையரங்குகள் , […]
கொரோனா வைரஸ் நமது மாநிலங்களில் பரவாமல் தடுக்க அண்டை மாநிலங்களுக்கு மக்கள் அடுத்த 15 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இது தமிழகத்திலும் பரவாமல் தடுப்பதற்காக எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து செய்தி குறிப்பு […]
கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி– செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் 5 நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் […]
ஈரோடு அருகே தனது மரணத்திற்கு கணவர் தான் காரணம் என்று தாய்க்கு மெசேஜ் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை அடுத்த நஞ்சனபுரம் ஏரியாவைச் சேர்ந்தவர் சத்யா. இவருக்கும் ஆர்எஸ் குளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்யா அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் […]
ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பவானி வட்டம் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவரும் குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் மூலம் திருமணம் நடந்துள்ளது. பிறகு சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் வீட்டில், செல்வனும் இளமதியும் தங்கியுள்ளனர். இருவரும் வெளியே […]
ஈரோட்டில் மணமகனை தாக்கிவிட்டு மணமகளை கடத்தல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் மற்றும் இளமதி. ஒரே நிறுவனத்தில் பணி செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் இருவரும் மாற்று சமுதாயம் என்பதால் இருவரின் பெற்றோர்கள் எதிர்ப்பு இருந்ததால் செல்வன் ஈஸ்வரன் என்பவரின் உதவியை நாடினார். பின்னர் அங்குள்ள கொளத்தூரின் குளக்கரை பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து நேற்று […]
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக,திமுக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி மறைமுக தேர்தல் டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் விஜயலக்ஷ்மி போட்டியிட்டார். இதில் அவர் 6 வாக்குகள் அதிகமாக பெற்று ஒன்றிய குழு தலைவராக விஜயலக்ஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை, பொறுத்து கொள்ள முடியாத திமுகவினர், திமுக […]
விருந்தில் தலைக்கறி குடல்கறி வைக்காத காரணத்தினால் நண்பனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் ஐயன் காடு பகுதியை சேர்ந்தவர் துரையன் உமா தம்பதியினர். துரையனது ஊரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அவரது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார். கிடா விருந்து போடப்பட்டு விருந்து முடிந்ததும் நண்பர்களுடன் நெறிமேட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார் துரையன். அப்போது நண்பர்களிடையே விருந்தின் தொடர்பாக பேச்சுவார்த்தை எழுந்து “ஏன்டா எனக்கு தலைக்கறி வைக்கல..?, “ஏண்டா […]
திடீர் சோதனையை நடத்திவரும் வருமான வரித்துறையினரால் வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர் தற்போது மத்திய அரசின் வருமான துறையினர் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் ஈரோட்டில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனமான பரணி டெக்ஸ் கம்பெனிக்கு சொந்தமான விற்பனை நிலையம் மற்றும் உற்பத்தி கூடம் உட்பட நான்கு இடங்களில் திடீரென 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். ஈரோட்டில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ள நிலையில் எதிர்பாராத சமயத்தில் நடந்த இந்த சோதனை பலரது […]
பவானிசாகரில் இருக்கும் அய்யம்பாளையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து சாமியை வழிபடும் திருவிழா வினோதமாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இருக்கின்றது விளாமுண்டி வனப்பகுதி. இந்த பகுதியில் இருக்கும் அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தொட்டம்மாள், சின்னம்மாள் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன், பொம்மி கோயில் திருவிழா ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியன்று நடைபெறும். அங்கே வரும் பக்தர்கள் தங்களுக்கு தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் வினோத நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், […]
ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 18 வீடுகள் அகற்றப்பட்டன. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த ஆவுடையார் பாறை பகுதிக்கு முன்பாக உள்ள சாலையில் தன்னாசியப்பன் கோவில் அருகில் உள்ள நிலமானது நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இதை சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி குடியேறினர். பின் இதுகுறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டு ஒரு மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளை அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட […]
ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மனைவி உயிரிழக்க கணவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கங்காபுரம் பகுதியை அடுத்த கொளத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் இருவருக்கும் வினித், விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்றையதினம் ரமேஷ் மற்றும் வினித்க்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடைக்கு சென்று வாங்கி விட்டு பின் டீ போடுவதற்காக சமயலறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவருக்கு கேஸ் கசிந்தது தெரியவில்லை. தீ பற்ற […]
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மற்றும் கலெக்சன் பணிகளை செய்து வந்த ஒருவரை நேற்று இரவு நிறுவனத்தில் இருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சக ஊழியர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு […]
நான்கு மாத கைக் குழந்தையின் தாய் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்ட பங்களாபுதூர் சேர்ந்தவர் சம்பத் மஞ்சுளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து நான்கு மாதக் கைக்குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற மஞ்சுளா நேற்று மதியம் வீட்டின் அருகில் இருந்த ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக மஞ்சுளா நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் […]
திருமணமான 3 மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள கஸ்தூரி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவி சிவக்குமாரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் சிவக்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் தந்தை வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ள சமயம் விரக்தியில் […]
லாரி மோதிய விபத்தில் சூப்பர்வைசர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் திருநீலகண்டர் நீதியை சேர்ந்த ராஜா இவர் தனியார் நூல் மில் ஒன்றில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்துள்ளார். ராஜா நேற்று இரவு ஆப்பக்கூடல் அடுத்த வாடி புதூரில் தனது நண்பர் ஒருவரை இறக்கி விட்டுவிட்டு அந்தியூர் நோக்கி திரும்பி வந்துள்ளார். அப்போது ஆப்பக்கூடல் இலிருந்து அந்தியூர் நோக்கிவந்த ஈச்சர் லாரியை பாலரமேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சென்னிமலை கவுண்டன் புதூர் […]
திடீரென குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தால் சிலிண்டர் வெடித்து பெண் மரணமடைந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருங்காடு வீதியை சேர்ந்தவர் ரமேஷ் நந்தினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நந்தினி இவர்களது குடிசை வீட்டில் இருந்துள்ளார். கணவர் ரமேஷ் வீட்டின் வெளிப்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டரும் வெடித்துள்ளது. வீட்டில் தீ பிடித்தது பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மனைவி […]
வாய் தகராறு காரணமாக பழ வியாபாரி வாலிபர்கள் இருவரை கத்தியால் குத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பூச்சநாயகம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி மற்றும் கணேசன் கூலித் தொழிலாளர்களான இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். கோவில் திருவிழா நடந்து வரும் நிலையில் நேற்றிரவு கணேசன் மற்றும் கார்த்தி இருவரும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். கோபியை சேர்ந்த பாபு என்கிற மேகநாதன் என்பவர் தள்ளுவண்டியில் அண்ணாச்சி பழம் வைத்து வியாபாரம் செய்து வருபவர். கார்த்தியும் கணேசனும் அவ்வழியாக சென்ற போது […]
சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் நவீன்(20). இவர் கடந்த 9ஆம் தேதி அந்தியூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் நோக்கிச் சென்றுள்ளார். சத்தியமங்கலம் காமதேனு கலைக்கல்லூரிக்கு அவர் சென்றுகொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் […]
குடிபோதையில் நடத்துனரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்ய வலியுறுத்தி அரசு பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகளை சாலையில் நிறுத்தி தங்களது எதிர்பை தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து காவிலிபாளையத்துக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நகர்ப்புற பேருந்து ஒன்று புறப்பட்டது. அதிலிருந்த நடத்துனர் ரமேஷ் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கியபோது குடிபோதையில் இருந்த பயணி கனகராஜ் என்பவர் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டார். பயணி கனகராஜ் டிக்கெட் வாங்காமல் தொடர்ந்து பயணித்தையடுத்து அரியப்பம்பாளையம் – பெரியூர் சந்திப்பில் […]
திம்பம் மலைப்பாதையில் மினி லாரி மீது டிராவலர் வேன் மோதி விபத்திற்குள்ளானது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் மைசூர் நோக்கி பயணிகளுடன் வந்த டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று, எதிர் திசையில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசானக் காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த […]
வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஈரோடு அடுத்துள்ள திரிவேணி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி. இவர் சித்தோடு பகுதியில் சொந்தமாக பிவிசி குழாய் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தெய்வசிகாமணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தை வழக்கமாக […]
நண்பனின் பிறந்த நாளை கொண்டாட சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து மரணம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அலெக்சாண்டர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அலெக்சாண்டர் உடன் படிக்கும் சக மாணவருக்கு பிறந்தநாள் காரணமாக பள்ளி முடிந்து மாலை 5 மணி அளவில் தோட்டத்திற்கு கேக் வெட்டி கொண்டாட சென்றுள்ளனர். கொண்டாட்டம் முடிந்ததும் சட்டையில் ஒட்டிய கேக்கை சுத்தம் செய்ய கிணற்றில் இறங்கியுள்ளார் அலெக்சாண்டர். குனிந்து […]
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தில் காந்தி சிலை முன்பு இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, ஒற்றைக் […]
சாயக்கழிவு நீரை கால்வாய்களில் வெளியேற்றிய பத்துக்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் மின் இணைப்புகளை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாநகரத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட சாய சலவை மற்றும் தோல் ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. கழிவு நீரை முறையாக சுத்திகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறையின் சார்பில் இந்த ஆலைகளுக்கு தொடர்ந்து அறிவுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில ஆலைகள் அப்படி செய்வதில்லை. அவ்வாறு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுரைகளை பின்பற்றாமல், சாய கழிவுகளை நீர் […]
ஈரோட்டில் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய காவல்துறை அதிகாரியே திட்டம் போட்டு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியையடுத்த சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அதிமுக பிரமுகரும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த மூன்றாம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த […]
ஓடும் பேருந்தில் பயணம் செய்தவரிடம் இருந்து பணத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் கருங்கள்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஈரோடு செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பயணித்த பேருந்து காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பையாவின் பின்புறம் நின்ற 2 மர்ம நபர்கள் திடீரென கருப்பையாவின் பாக்கெட்டிலிருந்து 1000 ரூபாயைய் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கருப்பையா திருடன்.. திருடன்.. என அலறி உள்ளார். பேருந்தில் இருந்த […]
தமிழகத்திற்கு மிகச் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது எனவும் அந்த ஆளுமை கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் கவிஞர் சினேகன் கூறியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் மண்டல நகர ஒன்றிய செயலாளரை அறிமுகபடுத்தும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் கவிஞரும் மாநில இளைஞரணி செயலாளருமான சினேகன் கூறியதாவது, மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகளாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நான் ஈரோட்டிற்கு வந்திருந்த பொழுது கண்ட எழுச்சியை இப்போதும் என்னால் காணமுடிகிறது. நமது ஒரே […]
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் நிலையில் மனமேடையிலையே கையெழுத்திட்டுள்ளனர் புதுமண தம்பதியினர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவரணியின் அமைப்பாளர் சபீர் அன்சில் மற்றும் சஜிதா பர்வீன் என்பவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமேடையில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]
5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பதை வரவேற்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, தமிழ்நாடு […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோரத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது இதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குசென்று விட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டது. இன்று காலை திருஈங்கோய்மலை என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு மாவட்டம் கொளம்பலூரை சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன் (27) மயில்சாமி (35) என்ற இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த பயணிகள் […]
கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் மர்மமான முறையில் இறந்துகிடந்த 14 மயில்களை வனத்துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமம் பாரதிநகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் சோளம் போன்ற பல வகையான விவசாயப் பயிர்களை பயிர்செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பால்காரர் ராமசாமி – குப்புலட்சுமி தம்பதியினருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில், ஏழு ஆண் […]
அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்திடும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மாவட்டத்தில் நோய் பாதிப்புக்குண்டான அறிகுறிகளுடன் நோயாளிகள் கண்டறியப்படவில்லை என்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஞானக்கண் பிரேம்நவாஸ் தெரிவித்துள்ளார். சீன நாட்டில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் […]
ஈரோட்டில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மாதம்தோறும் காலிங்கராயபுரம், கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது குறைகளை சொல்ல நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளில் ஒருவர் பேசியபோது, நிர்வாக அலுவலர்கள் சரியாக […]
விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் புகார் மற்றும் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கைகளை […]
விஏஓ என்றால் வெட்டி ஆபிசர் என்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசியதை கேட்ட அலுவலர்கள் ஆத்திரமடைந்து விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் அளிக்கும் புகார் மற்றும் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கைகளை […]