கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை அவரது தாய் தூங்க வைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கதவை தட்டி கூச்சலிட்டார். உடனடியாக அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ரஞ்சித் என்பவர் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் […]
Category: கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலை பார்த்த போது முருகன் அவரது மனைவி செண்பகத்திடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். பின்னர் முருகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து செண்பகம் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியந்தக்கா கிராமத்தில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவகாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அலமேலு என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக மின் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று அலமேலுவும், அவரது கணவரும் இணைந்து சிவகாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள துலாம்பூண்டி கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு துளசி(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த துளசி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துளசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரியநத்தம் கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இதற்கு இன்ஜினியரான பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான உதயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் பிரபு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பச்சமுத்து தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சாலையோரம் மர்மமான முறையில் பிரபு இறந்து […]
கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் பி.ஜி அக்னி பாலம் என்ற பெயரில் ஆனந்தன், தனசேகரன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் அமுதா என்பவர் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார். மேலும் தனசேகர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி அமுதா 20 பேரை சேர்த்து விட்டு பணம் கட்ட வைத்ததாக தெரிகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு வரை 1 3/4 கோடி சீட்டு பணம் கட்டியதாகவும், நிதி நிறுவனத்தினர் குறிப்பிட்ட காலம் முடிந்த […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கவரத்திரை பகுதியில் கூலி வேலை பார்க்கும் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கோபி கடந்த 15 வருடங்களாக வீட்டுக்கு செல்லாமல் கூலி வேலை பார்த்து சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சோமண்டார்குடியில் இருக்கும் தடிக்கார சாமி கோயில் அருகே இருக்கும் மரத்தில் கோபி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதல்வரின் முகவரி துறை சார்பில் சிறப்பு குறை தீர்வு வார விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 50 மாற்று திறனாளிகளுக்கு 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிரத்யேக செயலியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா கோயம்புத்தூரில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சூர்யா தனது ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா 60 அடி உயர பாலத்தில் இருந்து […]
கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து சின்ன சேலத்திற்கு காலை 9 முதல் 10 மணி வரை 2 டவுன் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட இரண்டு பேருந்துகளில் தான் அனைத்து மாணவ மாணவிகளும் கல்லூரிக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வேறு வழியின்றி படிகட்டிகளில் தொங்கிய படியும் பயணம் செய்கின்றனர். அதிக மாணவிகளை ஏற்றி செல்லும் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஈருடையாம்பட்டு கிராமத்தில் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கும், மரியமதலேயம்மாள் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மரியமதலேயம்மாள், அவரது கணவர் இம்மானுவேல் ராஜ் இருவரும் இணைந்து சசிகலாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தம்பதி மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் சின்னபிலவேந்திரன்(85) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயராஜ் என்ற மகனும், செல்வராணி என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முதியவரை சகாயராஜ், செல்வராணி, மரிய செல்வத்தின் மனைவி மரிய ஸ்டெல்லா ஆகிய மூன்று பேரும் இணைந்து ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அண்ணாமலை மோட்டார் சைக்கிளில் செல்போன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அதை கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரீசார்ஜ் செய்து மீண்டும் மோட்டார் சைக்கிள் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பத் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி பூஜை செய்வதற்காக சம்பத் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து சம்பத் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கோவிலுக்கு சென்ற சம்பத் கோவில் வளாகத்தில் 500 மற்றும் 100 […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் கிராமத்தில் ஆறுமுகம் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் நேற்று ஆறுமுகத்தின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்தது. அப்போது ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நாய் கடித்து குதறியதில் 20 குட்டிகள் உட்பட 24 ஆடுகள் இறந்து விட்டதாக தெரிகின்றது. இதுகுறித்து ஆறுமுகம் போலீசில் புகார் அளித்துள்ளார். […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு கொல்லக்குடி பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அனில்குமார் தனது தாய் தங்கத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகனுக்கு மகனுக்கு திருமணம் செய்ய தங்கம் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் சரியான வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அனில்குமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் மகன் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவந்தூர் கிராமத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, மாற்றுத்திறனாளியான எனக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். 2 மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். எனது மனைவி பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் எனது […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து விருதாச்சலம் மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் யாரோ சிறுவத்தூர் ரயில் நிலையம் அருகே ஈரப்பதத்துடன் உள்ள களிமண்ணை கட்டியாக உருட்டி தண்டவாளத்தில் வைத்துள்ளனர். இதனால் டிராலி வழுக்கிய படி நீண்ட தூரம் இழுத்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையிலான போலீசார் தண்டவாளத்தை ஒட்டி […]
வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பிள்ளை தெருவில் இருக்கும் தனியார் பள்ளியில் பின்புறம் விவசாய கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]
சிலிண்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் ரீட்டா நகரில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மாரியம்மாள் ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென கியாஸ் வாசனை வருவதை உணர்ந்த மாரியம்மாள் எழுந்து பார்த்த போது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிமங்கலம் கிராமத்திற்கு அருகே மணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றுக்கும், ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் மணிமுத்தா ஓடைக்கும் இடையே விவசாய நிலம் இருப்பதால் ஓடையை கடந்து விவசாயிகள் விளைநிலத்திற்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் அதே ஊரில் வசிக்கும் விவசாயிகளான மகாலிங்கம், வீரமுத்து, அவரது மனைவி கொளஞ்சி, ராஜமாணிக்கம் ஆகியோர் ஓடை வழியாக கால்நடைகளை ஒட்டி விவசாய நிலத்திற்கு சென்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் மாலையில் வீடு திரும்ப முயன்ற […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கருங்குழி கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது உமா, பெரியம்மாள் ஆகிய இரண்டு பேரை மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாகலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக் மேட்டுப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை அசோக் சொந்த வேலை காரணமாக தனியார் பேருந்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அசோக் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் கச்சிராயபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கொளஞ்சியின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் அரிசி வேண்டும் என கூறியுள்ளார். அந்த நபர் கொளஞ்சியிடம் மளிகை பொருட்கள் அடங்கிய துண்டு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளம்பெண்ணுக்கு முகநூல் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார். தாமோதரன் என்கிற ரவிக்குமார் என்ற பெயரில் அறிமுகமான வாலிபர் தான் சினிமா துறையில் வேலை பார்ப்பதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் நீங்கள் சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என ஆசை வார்த்தைகள் கூறியதால் அந்த பெண் சினிமாவில் நடிக்க என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் விதவிதமான ஆடையில் உங்களை போட்டோ […]
கள்ளக்குறிச்சியில் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் கல்வராயன் மலை அடிவாரப்பகுதியான புதுப்பட்டு, மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசு பேருந்து மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேராப்பட்டு பகுதியில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் வேறு வழி இல்லாமல் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருகே காரனூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் வெளிநாடு செல்ல போவதாக செந்தில் தனது மனைவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்ததால் […]
80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போன் மூலம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது மகன் மனோஜ் குமாருக்கு சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு படிக்க ஏற்பாடு செய்கிறேன் என சுதர்சன் கூறியுள்ளார். அதற்கு 80 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என கூறியுள்ளார். அதனை […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் வனப்பகுதியில் கபிலர் தொன்மை ஆய்வு மைய தலைவர் சிங்கார உதயன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்நிலையில் சந்தப்பேட்டையில் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பத்தை கள ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், பண்ருட்டி இமான், அன்பழகன், முருகன், ராஜமுருகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, தனி பலகை கல்லில் புடைப்புச் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜமாணிக்கம் என்பவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் பசுங்காயமங்கலம் சாலையில் ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராஜமாணிக்கம் 5- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அறைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து “நான் தான் விஷ்ணு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தும்பை கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் சுவாதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை […]
கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பேருந்து கீழ்பாடி வழியாக லாலாபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் மேல தேவனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது சேர்ந்தாங்கல் மற்றும் கோமாளூர் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். ஓடும் பேருந்தில் மாணவர்கள் தகராறு செய்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு ஆண்கள் பள்ளி, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 5 பெட்டி கடைகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபலட்சுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 22-ஆம் தேதி லட்சுமிக்கு சுக பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைகளை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என டாக்டர்கள் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுநெமிலி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றொரு விவசாயியான குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே சென்ற போது சாலையில் பை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த 2 பேரும் மோட்டார் சைக்கிள் ஓரமாக நிறுத்திவிட்டு பையை எடுத்தனர். இதனையடுத்து பையை திறந்து பார்த்தபோது அதில் சில ஆவணங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு […]
திருக்கோவிலூர் அருகே சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமை தாங்கி பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் சிறப்புரை ஆற்றினார். இந்த பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை, கல்வி மேலாண்மை குழு தலைவர், […]
போலியான சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த வழக்கறிஞராக வேலை பார்த்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜி.அரியூர் கிராமத்தில் அரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரன்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருக்கோவிலூர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நடத்தையில் சக வழக்கறிஞர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் ராஜ்குமார் வீரனிடம் படித்து முடித்ததற்கான சான்றிதழை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் வீரன் ஏதாவது […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள் தெரியாததால் அந்த வழியாக சென்ற இளைஞரை அழைத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரும் உதவுவது போல அவரின் நான்கு இலக்க ரகசிய எண்ணை கேட்டறிந்து பதிவிட்டு உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி கலைச்செல்வியை ஏமாற்றி அவரிடம் போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு உண்மையான கார்டை எடுத்துச் சென்றுள்ளார். […]
கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் சிங்கம்பட்டு காட்டுப்பகுதியில் இருந்து இரை தேடி காட்டெருமை வெளியே வந்தது. இந்நிலையில் மூலக்காடு கிராமத்தில் வசிக்கும் குமரேசன் என்பவரது விவசாய கிணற்றில் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. பின்னர் தண்ணீரில் மூழ்கி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த குமரேசன் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டெருமையின் உடலை கயிறு கட்டி […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் நெல் மற்றும் இயல் மூட்டைகளை வாங்கி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் சுமார் 8000 மூட்டை விவசாய பொருட்களை 62 லட்சத்து 64 ஆயிரத்து 628 ரூபாய்க்கு ஆனந்திடம் விற்பனை செய்துள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து மகேந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் […]
கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியான நிலையில், 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் பொன்னம்மாள் உள்பட குடும்பத்தினர் 7 பேருடன் குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை ஐயப்பன் என்பவர் ஓட்டி உள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் […]
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக விஜய் பாபு என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விஜய் பாபு சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவின் பொது மேலாளராக வேலை பார்த்த சத்திய நாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்ற சத்திய நாராயணனை வருவாய் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்வகுமார் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ், சூர்யா, சந்தோஷ் குமார் ஆகியோர் செல்வகுமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கண்ணன்(65) என்பவர் விளையாட சொல்லலாம் என கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரம்மகுண்டம் பகுதியில் சஞ்சீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷன்(7) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சங்கராபுரம் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். இந்நிலையில் சஞ்சீவ் காந்தியின் பக்கத்து வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக அலங்காரம் மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தர்ஷனை பெற்றோரும், உறவினர்களும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் இருக்கும் கூட்டுறவு நகர வங்கியில் பழனி என்பவர் உதவி கிளை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்து பழனி வேலையில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பழனி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் அவரை தற்காலிகமாக […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்து வில்லிவலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் பயணிகள் தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை மூடினர். ஆனால் பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக மழை நீர் ஒழுகி பயணிகள் மீது விழுந்தது. இதனால் சிலர் கைகளில் இருந்த குடைகளை […]
தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 4-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்தது. பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு ஊழியர்கள் தயார் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு வந்த சங்கர் ஓட்டுநர் உரிமத்தை கொண்டு செல்லாமல் மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு குவைத் சென்று விட்டார். இதனால் சங்கரின் தம்பி அருள் கள்ளக்குறிச்சியில் இருக்கும் கூரியர் நிறுவனத்திற்கு சென்று அண்ணனின் ஓட்டுநர் உரிமத்தை குவைத் அனுப்புமாறு கூறியுள்ளார். அப்போது 5 நாட்களுக்குள் கூரியர் செல்ல வேண்டுமெனில் 3500 […]
மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் கூட்டுரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். அப்போது அந்த வாலிபர் வாகனத்தை திருப்பி செல்ல முயன்றதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தில் வசிக்கும் ரகுராமன்(40) என்பது தெரியவந்தது. அவர் […]