2 சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் புது காலனியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் ஆகாஷின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது தினேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் வீரமுத்துவின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரமுத்துவை அருகில் இருந்தவர்கள் […]
Category: கள்ளக்குறிச்சி
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கோணம் பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இதில் அனிஷா வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் திருமணமான 10 மாதத்தில் அனிஷா வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை […]
மீன் வியாபாரம் செய்யும் பெண் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னதுரை மீனவ கிராமத்தில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடப்பதால் அதில் கலந்து கொள்ள தனது வீட்டை பூட்டி விட்டு மரியம்மை ஆலய விழாவிற்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். […]
கோவிலின் கூட்ட நெரிசலில் வைத்து பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டித் தெருவில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலம்பாள் என்ற மனைவி உள்ளார். இவர் கோட்டாரில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டதை பயன்படுத்தி சாமியை தரிசனம் செய்ய வந்த நீலம்பாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். […]
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ஒரு லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சாலையின் அருகாமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மர வியாபாரி என்பதும், மரம் வாங்குவதற்காக காரில் வேலூருக்கு சென்றதும் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் காவல்துறை சரகம் ஆதிச்சனூர் துரிஞ்சல் ஆற்றின் கரையோரத்தில் காவல்துறையினர் தீவிர அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதை தரையில் கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்டம் பாளையத்தில் வசிக்கும் சுரேஷ் மற்றும் குமார் ஆகிய […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகரசபையை அ.தி.மு.க 3-வது முறையாக தக்க வைத்துக் கொள்ள தயாராகி வருவதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 1962-ஆம் வருடம் தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 11.64 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இந்த பேரூராட்சி 1993-ஆம் வருடம் அ.தி.மு.க ஆட்சியின் சிறப்பு நிலை பேரூட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்பின் 2004-ஆம் வருடம் 21 வார்டுகளுடன் 3-ஆம் நிலை நகராட்சியாக உருவான இம்மாவட்டம் […]
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூட போவது யார் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி கடந்த 1953-ஆம் வருடம் முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. கடந்த 2011-ம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த பேரூராட்சியில் 4,952 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவற்றில் 18,605 நபர்கள் இருகின்றனர். இந்த நகரின் மொத்த பரப்பளவானது 11.69 சதுர கிலோ மீட்டர் என கூறப்படுகிறது. இதனையடுத்து தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மேம்படுத்தப்பட்ட […]
2 விடுதிகளில் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் விசாரணையில் சாத்தப்புதூர் கிராமத்தில் வசிக்கும் உஷா என்பவர் விடுதி மேலாளர் பிரகாஷ் என்பவரின் உதவியுடன் உதயமாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கு 3 பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரின் என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடுவனூர் பகுதியில் இருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளது. அப்போது சிறுவள்ளூர் அருகாமையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்த என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் என்ஜினுக்கு அடியில் சிக்கி சேதமடைந்துள்ளது. இது பற்றி […]
வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார் கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பச்சையப்பன் தனது வீட்டில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ குறித்துள்ளார். அதன்பின் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பச்சையப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது […]
புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட மருதூர் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 225 கிலோ எடையுடைய புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக ஆனத்தூர் கிராமத்தில் வசிக்கும் சித்திக்அலி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முட்புதரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் பதுங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை விசாரணை நடத்தியதில் அவர்கள் கனகசபாபதி தெருவில் வசிக்கும் குமரேசன் மற்றும் விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]
தேர்தலை முன்னிட்டு 2 பறக்கும் படைகள் அமைத்து 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் கல்வராயன்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுராஜா மற்றும் மண்டல தாசில்தார் மனோஜ் முனியன் ஆகியோர் தலைமையில் இரண்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]
ஊரக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மண்மலை ஊராட்சியில் திரவ கழிவு மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஊரக சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து இவற்றிற்கு மாவட்ட கவுன்சிலர் அகிலா பானு, அருள் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேட்டை தெருவில் நெல் வியாபாரியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் தனது இருசக்கர வாகனத்தில் தியாகத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் வீரமங்கலத்திற்கு நெல் வியாபாரத்திற்காக சென்றுள்ளார். அப்போது திருமலை பிரிவு சாலை அருகாமையில் சென்ற நிலையில் தனக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் […]
பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அலை மோதியதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமாக தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையும் மற்றும் கல்லூரிகள் திறக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளி கல்லூரிக்கு முககவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை […]
மனைவி திட்டியதால் கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் மேற்குத் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர் தனது மாமியார் வீட்டில் வசித்து வருகின்ற மனைவியையும், ஒரு வயது மகளையும் பார்ப்பதற்காக குடிபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரேவதி கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதர் தனது வீட்டில் பூச்சி […]
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தேர்தலை முன்னிட்டு முதன்மை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கலெக்டரின் அலுவலகத்தில் செயல்பட்டு வருகின்ற தேர்தல் கணினி அறையில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரம் மூலமாக வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆதலால் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் […]
தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் ஏமப்பேர் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த சோதனையில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் எதுவும் அதிகாரிகளுக்கு […]
35 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விரியூர் காட்டுக்கொட்டாய் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஞானபிரசாத் மற்றும் சேஷசமுத்திரம் கிராமத்தில் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]
குடிநீருடன் கலந்து கழிவுநீர் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் 900 நபர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடு மற்றும் பொது இடங்களில் இருக்கும் குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது குழாய்களில் பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது குடிநீருடன் கழிவுநீர் கலந்து சோப்பு நுரை போன்று வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
வழிபாதை பிரச்சனையில் உடன்பாடு ஏற்படாததால் கோபமடைந்த கிராம மக்கள் காவல்நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஈரியூர் கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் அய்யாதுரைக்கும் இடையே கிராம சாலையில் வழிபாதை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் கோபமடைந்த ஜெயப்பிரகாஷின் ஆதரவாளர்களான கிராம மக்கள் […]
கிராமத்தில் வசிக்கும் நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஊராட்சி தலைவர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகள் இருக்கின்றது. இந்நிலையில் முன்மாதிரி கிராமமாக மண்மலை ஊராட்சியை ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளது. அதன்பின் இந்த ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டம், குடிநீர், […]
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் பொது இடங்களில் இருக்கும் கட்சிக் கொடிக் கம்பங்கள் மற்றும் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சங்கராபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 26-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 5 பேரூராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த குழுவினர் […]
பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் 490 பேரூராட்சிகள், 31 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளதால் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல் நாள் வேட்புமனு […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதற்கு பிரபாகரன் மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த கவிதா […]
மழைக்கு ஒழுகும் நூலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி தருமாறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சையது குளம் அருகாமையில் கிளை நூலகம் ஓன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த நூலகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் 30-க்கும் அதிகமான வாசகர்கள் செய்தித்தாள்கள், மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் ஆகியவை படிப்பதற்காக வந்து செல்கின்றனர். அதன்பின் 100-க்கும் அதிகமான உறுப்பினர்கள் சந்தா செலுத்தி நூலகத்தில் இருக்கும் பல புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் […]
சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் பகுதியில் முத்தையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்தையன் முடியனூர் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பின் அவரது உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்தையனை அருகில் இருந்தவர்கள் […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் விரியூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் வயல்வெளிப் பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து அவர் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்து கீழே கொட்டி […]
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தின விழா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா தலைமை தாங்கியுள்ளார். இதில் அனைத்து மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ஆகியோர் முன்னிலை […]
200 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் இருக்கும் இருளர்புரம் கல்லாங்குத்து பகுதியில் சாராய வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவற்றை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது தொடர்பாக அருணாபுரம் கிராமத்தில் வசிக்கும் பிரபாகரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்டெய்னர் லாரி மோதி 15 ஆடுகள் உயிரிழந்துள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள இடையத்தான்குடி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டை அருகில் இருக்கும் அலங்கிரி-செம்பியன்மாதேவி பகுதியில் பட்டி அமைத்து தனக்கு சொந்தமான ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் முத்துக்குமார் ஆடுகளை மேய்ச்சலுக்காக உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒட்டி சென்று கொண்டிருந்திருக்கிறார். அந்நேரம் அந்த வழியாக அதிவேகமாக சென்ற லாரி மோதி 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி வழக்குப்பதிவு செய்த […]
எரிசாராயம் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பதும், 15 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் சாராயம் ஆகியவற்றை […]
திருமணமாகாத விருத்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் அமுல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அமுல்ராஜ்க்கு திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த 4 வருடங்களாக தீவிரமாக அமுல்ராஜ்க்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அமுல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கீழே கிடந்துள்ளார். இதை பார்த்த […]
குளத்தில் சடலமாக கிடந்த பெண் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவருக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜு தனது மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மன விருத்தியில் திடீரென காணாமல் […]
மூடுபனி அதிக அளவில் இருக்கிறதால் பொதுமக்கள் பலரும் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக மூடுபனி பெய்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்காக முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாக சென்றுள்ளனர். இதனையடுத்து மூடுபனியின் காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர். பின்னர் சூரியன் உதிக்க தொடங்கிய நிலையில் மூடுபனி […]
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ஒரே நாளில் 74 லட்ச ரூபாய்க்கு தானியங்கள் விற்பனையாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூரில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கடந்த ஒரு வார காலமாக நெல் வரத்து தொடங்கி இருக்கின்ற நிலையில் தற்போது ஒரே நாளில் 5000 மூட்டை வந்துள்ளது. இவற்றின் குறைந்தபட்ச விலையாக 980 ரூபாயும், அதிகபட்சமாக 1,480 ரூபாயுமாக இருந்துள்ளது. இதனையடுத்து எல்.இ.டி. 37 ரக நெல்லுக்கு குறைந்தபட்சம் 980 […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலத்தாழனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் ஆறுமுகம் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிழே கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த […]
6 வயது சிறுமிக்கு கூலித்தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது தாயாருடன் பண்ருட்டி பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கெடிலத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடி பயணம் செய்த தேவியானந்தல் கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான […]
முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் கிராமத்தில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் தனது உறவினரான சிவா என்பவருடன் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்ததாக இருக்கும் ராயப்பனூர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த […]
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக விசாரணை நடத்த இயக்குனர் சிவனேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மேல் மலை கிராமத்தில் வசிக்கும் கலியபெருமாள் உள்பட 2 விவசாயிகள் பெயரில் நகைக் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் இருவரும் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற வில்லை எனவும், தங்களது பெயரில் யாரோ மர்ம நபர் போலியாக கையெழுத்துப் போட்டு கடன் பெற்று இருப்பதாக […]
பாத்திரக்கடை வியாபாரியை கொலை செய்ய முயற்சி செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவனூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை பாத்திரம் மற்றும் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் ரயில்வே பாதையில் நடை பயிற்சி சென்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த விஜய் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன் உள்பட 5 பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து […]
சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லத்தை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்த போது அதிலிருந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அதன்பின் லாரி ஓட்டுனரை காவல்துறையினர் பிடித்து மினி லாரியில் இருந்த காய்கறி மூட்டைகளை சோதனை செய்துள்ளனர். இதில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் 120 லிட்டர் சாராயம் […]
நிதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதியினர் உள்பட 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரும்பூரில் காந்தாமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் ஜெயமூர்த்தி என்பவரும் கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வந்த கந்தாமணிக்கு நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஜெயமூர்த்தி, அவரது மனைவி […]
தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் வர்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரையாண்டு தேர்வில் வர்ஷா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவரை அவரது தாய் ரமணி ஏன் சரியாக படிக்கவில்லை என கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வர்ஷா வீட்டில் யாரும் இல்லாத […]
பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மும்முனை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பேருந்திலிருந்து இறங்கி வந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரை விசாரணை நடத்தியதில் அவர் சித்தால் கிராமத்தில் வசிக்கும் பச்சையம்மாள் என்பதும், புதுச்சேரி பகுதியில் இருந்து மதுபாட்டில்களை பேருந்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய இருந்ததும் காவல்துறையினருக்கு […]
பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வார சந்தையில் விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் இருக்கும் சந்தை மேட்டில் கால்நடை வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இதில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் வசிக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்வது வழக்கமாக இருக்கிறது. அதன்பின் இங்கு முக்கிய பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரம் அதிக […]
சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது பாறையின் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூட்டை ரோடு பகுதியில் பீட்டர் பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பீட்டர் பிரான்சிஸ் அவரின் நண்பர் ஜார்ஜ் ஆகியோர் தனித்தனி குடும்பத்துடன் 2 கார்களில் கல்வராயன்மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு அவர்கள் மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது பீட்டர் […]