4 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தில் அர்வாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு டி.எடப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது 4 மர்ம நபர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து அர்வாசிடம் தகராறு […]
Category: கள்ளக்குறிச்சி
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என வணிக வளாகங்களில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றதா என ஆய்வு செய்யவும், விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் சரவணன் துணிக்கடைகள், அரசு மருத்துவமனைகள் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். பின்னர் முககவசம் அணியாதவர்கள் […]
மண்ணெண்ணெய் முறையாக வழங்காததால் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய உச்சிமேடு கிராமத்தில் 500-க்கும் அதிகமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் இவர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடையின் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடை விற்பனையாளர் அம்பிகா புது உச்சிமேடு ரேஷன் கடையில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பை […]
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மனு பெரும் நிகழ்ச்சிகளும் ரத்து […]
பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்று பயன்படுத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசப்பாடி கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக 120 ஏக்கர் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கொண்டுவரப்பட்ட நிலசீர்திருத்த சட்டத்திற்கு பிறகு கிராமத்தில் குடியேறிய ஆதிதிராவிடர் அல்லாத 32 நபர்கள் பஞ்சமி நிலங்களை சட்ட விரோதமாக கைப்பற்றி 1980-1990-ம் வருட கால கட்டங்களில் முறைகேடாக பட்டா […]
மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்திருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும், அரசு பள்ளி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை படிக்கும் கிறிஸ்துவர், சீக்கியர், புத்த, பார்சி, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் இருந்து 2021-2022 ஆம் வருடத்திற்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு வருவாய் மற்றும் தகுதி […]
வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வருகின்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஆனால் முன்னதாகவே அத்தியூர் ஊராட்சியில் 17 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு வெட்டும் பணி மற்றும் புதிதாக அமைக்கப்படும் நீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை […]
சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் இருந்து சங்கராபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஏழுமலை என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பெரியமணியந்தல் கிராமத்தில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவர் வழிமறித்துள்ளார். அதன்பின் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் தகராறு செய்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு பேருந்தில் இருந்த […]
புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த மளிகை கடையை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளரான ஏழுமலை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 85 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மளிகை […]
மன உளைச்சலால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு.கொணலவாடி பகுதியில் தவமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தவமணி தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தவமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் […]
நர்சிங் கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகுரும்பூர் கிராமத்தில் 19 வயது மாணவி தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மலைக்கோட்டாலம் பகுதியில் வசிக்கும் தனது தாத்தாவை சந்தித்து விட்டு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. ஆதலால் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் […]
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமுடையான் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று நபர்களுடன் தனது நிலத்தில் வேலை செய்துள்ளனர். அதன்பின் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குடிநீர் தேவைப்பட்டதால் வயலில் இருக்கும் கிணற்றில் ஐயப்பன் தண்ணீர் எடுத்து வருவதாக உடன் வேலை செய்பவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஐயப்பன் திரும்ப வராத நிலையில் சந்தேகமடைந்த சக […]
வாரந்தோறும் நடைபெறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி முட்டைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தவறாமல் புதன்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற பருத்தி சந்தையில் 240 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உற்பத்தி செய்த பொட்டு ரக பருத்தி 549 மூட்டைகள் மற்றும் எல்.ஆர்.ஏ ரக பருத்தி 64௦ மூட்டைகள் என மொத்தமாக 1,089 பருத்தி […]
அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி. அலம்பலம் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் அறுவடை இயந்திரத்தை வரதன் தனது பொறுப்பில் ரவி என்பவரின் நிலத்தில் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அப்போது விஜயகுமார் என்பவர் ரவியின் நிலத்தில் இருந்த நெல் அறுவடை இயந்திரத்தை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது வரதன் இயந்திரத்தை ராமர் எனது பொறுப்பில் விட்டு சென்று இருப்பாதாகவும், அவர் திரும்பி வந்ததும் […]
ஊக்கத் தொகையை வழங்க கோரி நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்திருந்த 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்க கோரி கிராம ஊராட்சிகளில் வேலை பார்க்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாநில இணை செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றி உள்ளனர். […]
கால்நடை மருந்தை சப்பிட்ட 8 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் சிவமணி உள்பட 8 சிறுவர்கள் காமராஜர் நகர் பகுதியில் விளையாடி கொண்டிருக்கும் போது சாலையோரத்தில் சர்க்கரை போன்ற வெள்ளை நிற பொருள் கீழே கொட்டி கிடந்ததை பார்த்த அவர்கள் அதை போட்டி போட்டு அள்ளி சாப்பிட்டுள்ளனர். அதன்பின் சிறுவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர் […]
சாலையில் அடிபட்டு கிடந்த குரங்கின் உயிரை காப்பாற்றிய நபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் செம்பாகுறிச்சி மற்றும் அனுமனந்தல் ஆகிய கிராம எல்லைப்பகுதியில் வீ. கிருஷ்ணாபுரம் காப்புக்காடு அமைந்திருக்கிறது. இங்கு இருக்கும் குரங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பழங்கள் மற்றும் உணவுகளை வழங்கி செல்கின்றனர். இதனால் உணவுக்காக குரங்குகள் காப்பு காட்டை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிவதை காணமுடிகின்றது. இதனையடுத்து சாலையில் சுற்றி திரிந்த […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் 2000 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த சாராய ஊழலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன், மணிவிளக்கு மற்றும் ரவிச்சந்திரன் […]
பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையூர் பகுதியில் இருக்கும் மின்மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழுதடைந்துள்ளது. இதை சீரமைக்க கோரி அப்பகுதி விவசாயிகள் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பழுதடைந்த மின்மாற்றியின் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே பகுதியில் வசிக்கும் தங்கராசு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிலப் பிரச்சனை காரணத்தால் தகராறில் ஈடுபட்ட 22 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற தங்கை உள்ளார். இந்நிலையில் இவரின் தங்கை குடும்பத்திற்கும் கக்கன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கக்கன் உள்பட 3 பேர் சேர்ந்து சுதாகரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது […]
பெட்டிக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் இருக்கின்ற பெட்டிகடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு விற்பனைக்காக புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து இது சம்பந்தமாக கடை உரிமையாளரான துரை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ரோட்டில் அமைந்திருக்கும் மண்ணாங்கட்டி என்பவரின் பெட்டிகடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் 11 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது சம்பந்தமாக கடை உரிமையாளரான மண்ணாங்கட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 16 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தனியார் மண்டபத்தில் வைத்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2022-ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இவற்றில் பொருளாளராக கோகுல்ராம், செயலாளராக ராஜாராம் மற்றும் தலைவராக செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டைமன்ராஜா வெள்ளையன் கூறியதாவது, புகையிலைப் பொருட்கள் மூலமாக சிறு […]
ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி மன உளைச்சலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம்நத்தம் கிராமத்தில் குமாரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதன்பின் இதற்கு குமாரவேலு அடிமையாகி இருந்த நிலையில் பணத்தையும் அதிக அளவில் இழந்து வந்திருக்கிறார். இதனையடுத்து ரம்மி சூது விளையாட்டில் இருந்து மீள முடியாத அவர் உறவினர்கள் மற்றும் […]
இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு காவல்துறையினர் 50 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்த 50 நபர்களுக்கு காவல்துறையினர் தலா 50 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர். இதனை அடுத்து வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி முககவசம் வழங்கியுள்ளனர்.
கோழி கடையின் பின்புறத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோழி கடையின் பின்புறமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் மதுபாட்டில்களை விற்பனை செய்த ரகு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
தன்னை வேலைக்கு அழைத்து செல்லாத காரணத்தினால் நண்பனை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் மெயின் ரோடு பகுதியில் சிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கொத்தனார் மேஸ்திரி சுமன் என்பவரும் இவரும் தொழில் ரீதியாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனால் இருவரும் வேலைக்கு சேர்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நண்பர் சுமனை கொத்தனார் வேலைக்கு சிராஜ் […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். அதன்பின் மீதமிருக்கும் 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர்கள் ரமேஷ் சதிஷ்குமார் மற்றும் 18 வயது சிறுவன் என்பது […]
லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கட்டகோபுர வீதி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் பாலாஜி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 40 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகளில் திருக்கோவிலூர் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதிகளில் பாலா மற்றும் ஆதி ஆகிய 2 நபர்கள் சட்ட விரோதமாக லாட்டரிச் சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 28 லாட்டரி சீட்டுகளையும் […]
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஏமப்பேர் புறவழிச்சாலை பகுதியில் காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் இரண்டு பேர் கஞ்சா வாங்கி உள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குமரேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]
சட்ட விரோதமாக பெட்டி கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகாமையிலிருக்கும் பாடியந்தல் கிராமத்தில் இருக்கின்ற பெட்டிகடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடை உரிமையாளரான ராஜரத்தினம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 260 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சைலோம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தாவீதுராஜா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கெடிலம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகாமையிலிருக்கும் ஆத்தூர் கிராமத்தில் வசிக்கும் பாண்டியன், சஞ்சீவ் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் […]
பொதுமக்களுக்கு பண்டிகைகளை பாதுகாப்பான முறையில் கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் கூட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்துள்ளார். இதில் இனி வரும் […]
2,200 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் 2,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அதை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே பகுதியில் வசிக்கும் ராமு என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பேருந்தில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் வாலிபர் ஒருவர் வைத்திருந்த இரண்டு பைகளை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது 20 கிலோ எடையுடைய 975 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து விசாரணையில் அந்த வாலிபர் […]
பிரசவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையுடன் தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு அருகில் இருக்கும் திருவடுத்தனூர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசினா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அசினா பிரசவத்திற்காக மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அசினாவை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார […]
பெட்டிக் கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை காவல்துறையினர் அப்பகுதி கடைவீதியில் இருக்கும் ஒரு பெட்டிக் கடையில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து கடை உரிமையாளர் விஷ்ணு தாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 11 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திடீரென வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் நாயக்கர் பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அதன்பின் கடந்த 2 தினங்களாக இவரின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது உடல் அழுகிய நிலையில் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் ரகோத்தமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் டிராக்டரில் கரும்புக் கட்டுகள் ஏற்றிக்கொண்டு தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார். அதன்பின் ரகோத்தமன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ […]
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதன்பின் வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் […]
பெட்டிக் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.புதூர் கிராமத்தில் இருக்கும் பெட்டி கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மீனா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 21 புகையிலை பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் முன்னிலையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவளம் பகுதியில் பெரமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் என்பவருக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து பெரமன் தண்ணீர் இறைத்த போது அவரை அருணாச்சலம் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் […]
பெட்டி கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விளக்கூர் பகுதியில் பெட்டி கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சையத் அப்சல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 26 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
நுரையிரல் நோயால் அவதிப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பின் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]
தீராத வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அவ்வப்போது குடித்து வந்துள்ளார். அதன்பின் சக்திவேல் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக […]
சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் சாராயம் விற்பனை செய்த சாந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.