பொது இடங்களில் புகைப்பிடித்த 6 நபர்களுக்கு சுகாதாரத்துறையினர் தலா 100 ரூபாய் அபராதம் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொது இடம் மற்றும் பேருந்து நிலையங்களில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின் படி வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார துறையினர் தீவிர ஆய்வு செய்துள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைப் பிடித்த 6 நபர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் […]
Category: கள்ளக்குறிச்சி
நகை அடகு மற்றும் நகை கடை உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து காவல்துறை சார்பாக நகை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு நகைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் துணை சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமை தாங்கி கூறியதாவது, நகை அடகு மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையில் வெளிப்புறம் மற்றும் […]
சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேஷசமுத்திரம் ஏரிக்கரை அருகில் சாராய விற்பனை செய்த ராமர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து இதே போல் கொசப்பாடி கிராமத்தில் வீட்டின் அருகாமையில் சாராயம் விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து […]
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புகையிலை தோட்டப் பகுதியில் உதய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். அதன்பின் உறவினர்கள் பல பகுதிகளில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றில் உதய பாரதி இறந்து சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உதய […]
வீட்டில் வேலை செய்யாமல் இருப்பதற்கு தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவடி கிராமம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா அரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என இவரது தாய் திட்டிய காரணத்தினால் விமலா அரசி மன […]
விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்திராம்பட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் சொர்ணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்திருக்கிறார். இவரது கணவர் மற்றும் மகன் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சொர்ணம் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்பின் தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு […]
சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாடி பேருந்து நிறுத்தம் அருகாமையில் இரண்டு அரசு பேருந்துகள் அடுத்தடுத்து சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால் இரண்டு பேருந்துகளில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இது […]
பேருந்து நிலையத்தில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் பள்ளிக்கூடங்கள் முடிந்த பிறகு மாணவர்கள் பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் சிலர் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வெள்ளாற்றில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தி விற்பனை செய்து வந்த ஆனந்தன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லா.கூடலூர் கிராமத்தில் வல்லரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் கிணற்றின் நீருக்குள் மூழ்கி மோட்டாரை வெளியே எடுத்து வரும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது வெகு நேரமாகியும் வல்லரசு வெளியே வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் கிணற்றில் குளித்து தேடிப் பார்த்ததில் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]
சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.கூட்டு ரோட்டிலிருந்து விருதாச்சலம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. இதில் கீழ்குப்பத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடியில் முதல் கட்டணம் வசூலிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதை அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துச் சுங்கச்சாவடியின் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அண்டம்பள்ளம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் வீரபாண்டி மற்றும் சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் […]
தொழிலாளி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாடியந்தல் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யராஜ் திடீரென தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சத்யராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு […]
கழிவுநீர் கால்வாயை தூர்வாராமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாய் தூர் வாராமல் இருப்பதினால் அதில் செல்லும் நீர் கால்வாயில் செல்லாமல் பேருந்து நிறுத்தத்தின் வழியாக ஆண்டிமடம் செல்லும் சாலை ஓரத்தில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி புகார் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வருடம்தோறும் பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை மூலம் மீன் குத்தகைக்கு விடப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது. தமிழக அரசுத் துறைக்கு சொந்தமான நீர்நிலைகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது அவர்களை சார்ந்த தனிநபர்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளை மீறி, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொது ஏலம் விடுபவர் மற்றும் மீன் பிடிப்பவர் ஆகியோர் மீது அபராதம் […]
குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொது விநியோகத் திட்டத்தின் சார்பாக மாதாந்திர நுகர்வோர் பாதுகாப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் குடிமைப்பொருள் தனி தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி பேசியதாவது, இம்மாவட்டத்தில் பிரதான சாலையோரம் இருக்கும் […]
மின் ஊழியர் வீட்டில் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகளை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரிமளா என்பதும், தற்போது வாணியந்தல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருவதும், பின்னர் […]
மன உளைச்சலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண்ணை ஏமாற்றியதாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மதியழகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் விஷம் குடித்து விட்டு அதை முகநூலில் பதிவிட்டு மயங்கி விழுந்ததாக தெரியவந்துள்ளது. […]
சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி அங்கு தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வருவதுடன், வருவாய்த் துறையினர் உதவியுடன் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புகையிலைப் பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்பவர்களை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனை அடுத்து திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் இருக்கும் மண்டபம் […]
சட்ட விரோதமாக 1௦௦௦ லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குரும்பலூர் கிராம ஓடையில் இரண்டு பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1௦௦௦ லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் கோபி என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சட்ட விரோதமாக சாராய ஊழலை பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மல்லிகை பாடி வனப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே கிராமத்தில் வசிக்கும் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் இருக்கும் வெள்ளிமலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனை தடுக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கல்வராயன்மலையில் நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கல்வராயன்மலை தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனை […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 குழந்தைகளுக்கு தாயான பெண் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருபாலபந்தல் பகுதியில் தென்னரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சிவசக்தி திடீரென தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொசப்பாடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை விசாரணை நடத்தியதில் அவர் செல்லம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பரத் என்பதும், சங்கராபுரத்தில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்களை வாங்கி வந்ததும் […]
இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முகையூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வயல்வெளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சுப்பிரமணியன் என்பவரின் வயல்வெளி அருகாமையில் வந்த நிலையில் முருகன் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே […]
மற்றொருவரின் ஆடுகளை திருடி வந்து சந்தையில் விற்பனை செய்வதற்காக சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஆடுகளுடன் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுச்செல்லூர் கிராமத்தில் வசிக்கும் தினேஷ் மற்றும் விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் கொண்டு வந்த ஆடுகள் கொம்பசமுத்திரம் பகுதியில் […]
சட்ட விரோதமாக சாராய ஊறல்களை பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மல்லிகைபாடி அருகில் இருக்கும் கோமக்காடு ஓடையில் 6 பேரல்களில் 1,200 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்த காவல்துறையினர் அதை தரையில் ஊற்றி அழித்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி […]
அரசு பேருந்தில் 40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் பக்கம் கிராமத்தில் இருக்கும் சோதனை சாவடியில் மணலூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த கர்நாடக மாநில அரசு பேருந்ததை நிறுத்தி சோதனை செய்ததில் வாலிபர் ஒருவரிடம் இருந்த பையை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை […]
தீராத வயிற்று வழியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடு பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். அதன்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானாங்காடு பிள்ளையார் கோவில் பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 13 கிலோ வெள்ளி பொருட்கள், […]
திருமணமாகி 4 மாதமான இளம்பெண் உயிரிழந்தது பற்றி கோட்டாட்சியர் சரவணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தால் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் சந்தியா என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் கடந்த இரண்டு மாதமாக சந்தியா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்த சந்தியாவிற்கு திடீரென வாந்தி ஏற்பட்டால் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். பிறகு அவரை […]
தனது ஆட்டை காப்பாற்ற சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகாமையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது தண்டவாளத்தில் அவரது ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்நேரம் அவ்வழியாக ரயில் ஒன்று வந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் உடனே அந்த ஆட்டை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத […]
டிராக்டர் மீது மோதியதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல்புரம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வடபொன்பரப்பியில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னதுரை டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக […]
திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கதறி அழுத ஊராட்சி மன்ற துணை தலைவர். கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிராமத்தில் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில், ராஜேஸ்வரி நேற்று மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து அழுதுள்ளார். இதை பார்த்து பதறிப்போன ஆட்சியர் ஸ்ரீதர், ராஜேஸ்வரியை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் துணைத் தலைவி ராஜேஸ்வரி, கடந்த 5-ஆம் […]
வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தியாகராஜபுரத்தில் வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்த அதே ஊரில் வசிக்கும் மொட்டையம்மாள் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை காவல்துறை சரகம் சு. கள்ளி பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சாக்கு மூட்டைகளுடன் வந்த மூன்று இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். அந்நேரம் மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு […]
லட்சுமி நரசிம்மர் கோவிலில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோவில் வளாகம், உள்பிரகாரம், பக்தர்கள் ஓய்வு மண்டபம் என அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று இருக்கிறது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரத்தில் இருக்கும் இரண்டு சிவன் கோயில்கள் மற்றும் ரயில் நிலையத்திலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி […]
அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் இருக்கும் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் பால், இளநீர், தேன் மற்றும் தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலில் வலம் வந்து மண்டபத்தின் நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு நடைபெற்றிருக்கிறது. […]
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தாலுகா அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தாலுகா அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கியுள்ளார். இதில் அமைப்பு செயலாளர் பெரியதமிழன், ஒருங்கிணைப்பாளர் வினோத், வட்ட பொருளாளர் பரக்கத்துன்னிஷா மற்றும் மாவட்ட துணை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளராக ஆனந்தன் வரவேற்றுள்ளார். […]
தொடர் மழையால் சேதமடைந்து இருக்கும் சாலையை அதிகாரிகள் ஊழியர்கள் மூலமாக சீரமைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகாமையில் இருக்கும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையால் சேதமடைந்த சாலைகளில் இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர் அதன் […]
ஒரே சமயத்தில் ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பொன்பரப்பி கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ஆடுகள் திரும்பவும் பட்டிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதன்பின் சிறிது நேரத்தில் தண்ணீர் வைப்பதற்காக ஆசைத்தம்பி சென்றுள்ளார். அப்போது ஒரே சமயத்தில் ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசைத்தம்பி இது பற்றி வருவாய் […]
மாணவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைச்சந்தல் கிராமத்தில் அரிகிருஷ்ணன் மற்றும் நிவேதா வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்துள்ளனர். அதன்பின் சோமண்டார்குடியில் இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதற்கிடையில் அரிகிருஷ்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கொள்ளியூர் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடன் பிரச்சினை அதிகம் இருந்து வந்திருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அப்போது ஆனந்த் திடீரென அதே பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி மாலை 7 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4,250 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், மணிமுத்தா நதி அணையிலிருந்து இன்று முதல் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளதாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து மணிமுத்தா நதி அணையிலிருந்து 79 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
தகராறை தட்டிக் கேட்ட கணவன் மற்றும் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பரத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அருணா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அருணா தேவிக்கும், செல்வகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அருணா தேவிக்கும் செல்வகுமார் இருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனை பக்கத்து வீட்டில் வசித்து […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவிற்கு பதில் அதற்கான பணத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் உள்பட 5 கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அருகில் இருக்கும் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். இதனை அறிந்ததும் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் உணவு வழங்கும் வகையில் தலா 20 ஆயிரம் […]
மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கும் பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற ஒன்றிய குழு தலைவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவங்கூரில் இருக்கும் சமத்துவபுரத்தை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதனால் அங்கு இருக்கும் வீடுகளில் வசித்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருகின்றனர். இதனைப் பற்றி அறிந்ததும் ஒன்றியக் குழுத் தலைவர் அலமேலு ஆறுமுகம் நேரில் சென்று சமத்துவபுரத்தை பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்பின் 2 பொக்லைன் எயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாய்க்கால் போல் […]
கள்ளக்குறிச்சியில் ஜெய்பீம் பட பாணியில் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சேர்ந்த 5 நபர்களை, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி வருவதாக அவர்களின் உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், 3 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தியாகதுருகம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 14ஆம் நாள் சின்னசேலத்தில் […]