குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அருகாமையில் இருக்கும் விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனால் கோபமடைந்த […]
Category: கள்ளக்குறிச்சி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, தென்மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக , நீலகிரி திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]
பேருந்தில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் இருக்கும் அத்திப்பாக்கம் சோதனைச் சாவடியில் மணலூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் பயணி ஒருவரிடம் இருந்த சாக்கு மூட்டை, மூன்று அட்டைப் பெட்டிகளை சந்தேகத்தின் அடிப்படையில் திறந்து பார்த்த போது அதிகமான புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் […]
பள்ளி வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சு.ஒகையூர் கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் தன்னுடைய மாடுகள் மற்றும் கன்றுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிய பின் கன்றுக்குட்டிகள் தனது வீட்டிலும் மற்றும் பசு மாடுகளை வீட்டின் அருகாமையில் இருக்கும் பயன்பாட்டில் இல்லாத அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும் […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது தவறி விழுந்த பெண் மீது லாரி ஏறி தலை நசுங்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர் நடுத்தெருவில் ரத்தினாம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினாம்மாள் ராவத்தநல்லூர் பகுதியில் இருந்து மணலூருக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளார். அப்போது பிரம்ம குண்டம் அருகாமையில் வந்து கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த லாரி மீது […]
மழை குறைந்த காரணத்தினால் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக நடவு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணத்தினால் பெரும்பாலான குளங்கள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை குறைந்துள்ளதால் வீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றனர். இதனையடுத்து வயலில் […]
மீன் பிடிப்பதற்காக வலை கட்ட சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடமாம்பக்கம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புத்தநந்தல் தடுப்பணை பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை கட்ட சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]
கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் அதிகமான நீர்நிலைகள் நிறைந்து வருகின்றது. இந்நிலையில் குஞ்சரம் கிராமத்தில் வசிக்கும் அருணாச்சலம் என்பவர் அதே பகுதியில் இருக்கும் பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க சென்ற போது எதிர்பாராவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே சரவணா ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவு சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் சங்கராபுரம் அடுத்த பாண்டலம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர் மனைவி கலைவாணி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஹோட்டலில் லெமன் சாதம் வாங்கி கொண்டு சென்றுள்ளார். அதனை பிரித்த மகன் ஆகாஷ் (8), மகள் லோசனா (10) […]
பெண்ணிடம் 2 மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தில் அம்சவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விருத்தம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விருத்தம்பாள் தனது சொந்த கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயதுடைய மர்மநபர்கள் 2 பேர் கடையில் பொருட்கள் வாங்க வந்தது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க […]
பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மும்முனை சந்திப்பு சாலையில் பட்டாசு, மளிகை கடை ஆகிய 2 கடையையும் செல்வகணபதி என்பவர் நடத்தி வருகிறார். இவர் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் செல்வகணபதிக்கு சொந்தமுடைய பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளர் உள்பட […]
போராட்டத்தின் போது பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பகண்டை கூட்ரோடு மும்முனை சந்திப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் செயலாளர் அமல்ராஜ் தலைமையில், மாநிலத் துணைத் தலைவரான மணிகண்டன் உள்பட 50-க்கும் அதிகமான பா.ம.க கட்சியினர் திடீரென அவ்வழியாக செல்லும் வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு பேருந்தின் […]
பேருந்து நிலையத்தில் இருந்த கட்சிக் கொடி கம்பத்தில் தமிழ்நாடு கொடியை ஏற்றியதால் 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் அமைந்திருகிறது. இந்நிலையில் இந்த கொடி கம்பத்தை ஓதியத்தூர் கிராமத்தில் வசிக்கும் டோமிக்ராஜா தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு கொடியை திடீரென ஏற்றியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாம் தமிழர் […]
கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஒருவர் தீக்குளிக்க முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த கொட்டகையை தொழிலதிபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கேட்ட போது குணசேகரனை தொழிலதிபர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கி கொலை மிரட்டல் […]
இடிந்து விழுந்த வீட்டை சரி செய்து தருமாறு நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகர் பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பில் 100-க்கும் அதிகமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக அரசால் கட்டி தரப்பட்டிருக்கும் இந்த குடியிருப்பில் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. அதனால் இதை சீர் அமைத்து தருமாறும் இல்லையென்றால் குடியிருப்புகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய வீடு கட்டித் […]
விஷ வண்டு கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேடநத்தம் ரோடு பகுதியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகாவிஷ்ணு வீட்டின் அருகாமையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது விஷ வண்டு கடித்ததாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் மகாவிஷ்ணுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அவரின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் […]
சாலை விபத்தில் முதியவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இம்மாவட்டத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரியில் துறை தலைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காரில் உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் மேட்டத்தூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி நடந்து சென்ற முதியவர் மீது இடித்து விட்டு சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் […]
தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊத்து ஓடை வனப்பகுதியை ஒட்டி மாரிமிக்கேல் என்பவருக்கு சொந்தமான மரவள்ளி தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இவர் தனது தோட்டத்தை பார்வையிட சென்ற போது அங்கு 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு மாரிமிக்கேல் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காப்பாளர் […]
உரிய அனுமதியின்றி அதிக அளவில் பட்டாசுகளை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியிலிருக்கும் காய்கறி கடை ஒன்றில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காய்கறி கடைக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகமான பட்டாசு பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளர் சுந்தர் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேந்தநாடு கிராமத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடையைப் பூட்டி விட்டு அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது […]
40 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லமேடு கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமங்கலம் தெற்குப்பகுதியில் வைத்திலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி அனுராதாவுடன் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே வைதிலிங்கம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அனுராதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் […]
தீபாவளியை முன்னிட்டு கடலூர் அருகே உள்ள வேப்பூர் வார சந்தையில் இன்று 4 மணி நேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. திட்டக்குடி அடுத்து வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில் வேப்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்ததால் ஆட்டுச்சந்தை களைகட்டியது. இந்த நிலையில் அதிகாலை 4 மணி முதல் காலை 8 […]
கலெக்டர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவியை எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த வினிதா என்பவர் பொய்யான ஜாதிச் சான்று பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவரின் ஜாதிச் சான்றிதழை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ரிஷிவந்தியம் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அவர்களின் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிடம் […]
பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளரின் தாய் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செல்வகணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக பட்டாசுகளை வாங்கி தன் கடைக்கு பின்னால் இருக்கும் குடோனில் வைத்திருந்திருக்கிறார். அதன்பின் மின்கசிவு காரணமாக பட்டாசுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அருகாமையிலிருந்த பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் ஒன்றின் பின் ஒன்றாக […]
சுடு கஞ்சி கொட்டி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டூர் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், யோகஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ராஜகுமாரி இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்து தற்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன்பின் ராஜகுமாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் யோகஸ்ரீ அவரது பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் அருகாமையில் […]
மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்திருக்கிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணத்தினால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து […]
சாராயம் காய்ச்சுவதற்காக வெள்ளத்தை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாழ்மதூர் கிராமத்தில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லம் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் கொட்டகையில் சாராயம் காட்டுவதற்காக 30 கிலோ எடையுடைய 20 மூட்டை வெல்லத்தை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் […]
பாதை ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மாடுகளுடன் மனு கொடுக்க சென்ற தாய் மற்றும் மகனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு க. மாமனந்தல் பகுதியில் வசிக்கும் தங்கராஜ் மனைவியான காமாட்சி மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவரும் மாடுகளுடன் மனு கொடுக்க வந்துள்ளனர். அப்போது கலெக்டரின் அலுவலக நுழைவாயிலில் செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் […]
தொடர் கனமழை காரணத்தினால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்ததில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனை அடுத்து கல்ராயன்மலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்த காரணத்தினால் முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த வாரம் […]
மன உளைச்சலில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்கவாடி நடுத்தெருவில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலைக்கும் அவரின் மனைவி பூங்கொடிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு […]
சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.கே.எஸ்.கார்டன் பகுதியில் ஒருவர் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தினகரன் என்பவரின் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாட்டு துப்பாக்கியை அனுமதியின்றி அவர் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து தினகரனை கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த நாட்டு […]
விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகாமையில் இருக்கும் பஞ்சாயத்து சந்து தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், பாபு மற்றும் செல்லத்துரை என இரு மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த முருகனை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக […]
சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரை கடத்திய ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம்-பூட்டை செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் உர மூட்டைகளுக்கு இடையை 120 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரை மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முருகன் […]
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டிருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவராயன் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் ஆட்டோவில் வந்த மூன்று நபர்களை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சுரேந்தர், விக்னேஷ், ரகுராம் என்பது […]
சாலையில் கிடந்த ஆணின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் குறுக்கு சாலை பகுதியில் 45 வயது உடைய அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாடல் காலனி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்த […]
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை சுமார் 11 வருடம் கழித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலத்தில் வசித்து வரும் பட்டு-சிவமலை தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சிவமலை தனது மகனான ஏழுமலையின் குடும்ப விவகாரத்தை தீர்த்து வைப்பதற்காக மூரார்பாளையத்திற்கு சென்ற போது அங்கு அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சங்கராபுரம் காவல்துறையினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் […]
மன உளைச்சலில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மையகரம் மேற்குத் தெருவில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக அரியலூர் மாவட்டத்தில் ஏலக்குறிச்சி கிராமத்தில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதினால் மஞ்சுளா தினமும் பேருந்தில் சென்று வந்துள்ளார். இதனால் ஒரு நாளைக்கு 5 […]
கூலி தொழிலாளி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலூர்பேட்டை கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான இவர் வீட்டின் அருகாமையில் இருக்கும் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது ராமச்சந்திரன் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட கிராம மக்கள் அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பின்னர் நீண்ட நேரம் போராடிய […]
குடும்பத் தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகாமையில் அத்திப்பாக்கம் கிராமத்தில் அஞ்சலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விமல்ராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலை, அவரது இரண்டு மகன்களும் ஒரே வீதியில் தனித் தனியே வசித்து வந்திருக்கின்றனர். அதன்பின் விமல்ராஜ் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றார். இதனையடுத்து விமல்ராஜின் மனைவி ராஜலட்சுமிக்கும் அஞ்சலைக்கும் இடையே அடிக்கடி தகராறு […]
மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாளகுப்பம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அம்சவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்சவள்ளி உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அம்சவள்ளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் பூமி பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையாகிய பூமி பாலன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அறிந்த அவரின் உறவினர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]
முன்விரோததால் வக்கீலை கொலை மிரட்டல் விடுத்த கட்சி நிர்வாகி உள்பட 13 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனகநந்தல் கிராமத்தில் வக்கீல் செம்மலை என்பவர் வசித்து வருகிறார். அதன்பின் அதே ஊரில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமசாமி தோல்வி அடைந்திருக்கிறார். […]
விவசாயி பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழதாழனூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான ஏழுமலை தனது வீட்டில் நெற்பயிருக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த ஏழுமலையின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
பேருந்து ஓட்டுனர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டீ.கே மண்டபம் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு தங்களின் சொந்த பெட்டிக்கடையில் இருந்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் அவரின் […]
முடிவுகளை மாற்றி அறிவித்ததால் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சியில் மூலக்காடு உள்பட 7-க்கும் அதிகமான துணை கிராமங்கள் இருக்கின்றது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் சின்னகண்ணு உள்பட 4 பேர் போட்டியிட்டனர். இவற்றின் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்தது 25 வாக்கு வித்தியாசத்தில் மகேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு மணி நேரத்திற்குப் பின் சின்னகண்ணு வெற்றி பெற்றதாகவும், மகேஸ்வரி தோல்வி […]
தேர்தல் முடிவு வெளியிட்டதில் தவறு இருப்பதாக கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இதயத்துல்லா உள்பட மொத்தமாக ஆறு நபர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இதயத்துல்லா மற்றும் பஷீர் ஆகிய 2 பேருக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்துள்ளது. அப்போது வாக்கு எண்ணிக்கையில் இதயத்துல்லா மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத பஷீர் வாக்கு எண்ணும் மையத்தை […]
தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெருக்கள் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. அதன்பின் குளம் மற்றும் ஏரி கரைகளில் மலை காரணத்தினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இதனால் மூங்கில்துறைப்பட்டு, அதன் சுற்றுவட்டாரங்களில் மூன்று […]
ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றதில் மொத்தம் 19 வார்டுகளிலும் தி.மு.க அமோக வெற்றி பெற்றிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் இருக்கும் 19 வார்டுகளில் 115 நபர்கள் போட்டியிட்டுள்ளனர். அதன்பின் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் ஆரம்ப சுற்று முதலிலேயே அனைத்து வார்டுகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னணியில் இருந்துள்ளனர். பின்னர் விடிய விடிய நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை […]